Saturday, December 25, 2010

இது............................................

நன்றி நண்பர்களே..,

வெகுகாலத்திற்குப்பின் நானும் 250 பிந்தொடர்பவர்களை எட்டிவிட்டேன்.  பதிவுலகம் 2009ன் தொடக்கத்தில் 250 பிந்தொடர்பவர்களை பெற்றவர்கள் எல்லாம் மிகவும் சாதித்தவர்களாகவே இருந்தனர். அதே நேரத்தில் ஒரு நண்பர் மிக வேகமாக 100 நண்பர்களைப் பெற்று சாதனை படைத்து அதே வேகத்தில் ஓய்வும் பெற்றார். அவர் பெயர்காரணமாகவே நான் எனது பெயரில் ஊர் பெயரையும் சேர்த்துக் கொண்டேன் என்பது வேறு விஷயம். கடந்த சில மாதங்களாகவே கண்ணி முன் அமரும் நேரம் மிகக் குறைந்துவிட்ட காரணம் இருந்தாலும் அவ்வப்போது பதிவுலகத்தை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.  அலைபேசி மூலம் சில பல பதிவுகளை தொடர்ந்து வாசித்துக்கொண்டுதான் இருக்கிறேன். 

இப்போதெல்லாம் மிக விரைவில் அதிக நண்பர்களைப் பெற்று விடுகிறார்கள். நான் ஏறக்குறைய 100 நண்பர்களையும், 1 லட்சம் ஹிட்ஸ்களையும் இரண்டுநாட்கள் இடைவெளியில் பெற்றேன். அடுத்து அடுத்து என்று மிக நீண்ட நாட்களுக்குப்பிறகு  இப்போது 250 நண்பர்ரையும் பெற்றுவிட்டேன். 


இந்த நண்பர்களின் அன்புக்குத் தலைவணங்குகிறேன்.   இந்த நேரத்தில் யாராவது கழண்டு கொண்டால் மீண்டும்  250 பெறும்போது மீண்டும் இதை மீள்பதிவு போடுவேண் என்று எச்சரிக்கை செய்வதோடு நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால்


#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
#
டிசம்பர் மாத அரையாண்டு விடுமுறை வார வாழ்த்துக்கள்.


=================================================================
நேரம் இருப்பவர்கள் காதலுக்கு மரியாதையை ரீமேக் செய்து எழுதிய இடுகைக்கு ஒரு சென்று கருத்துக்களைக்கூறவும்.

Sunday, December 12, 2010

ரஜினி ரசிகர்கள் செய்யத் தவறிய வேலை நிறுத்தம்

எந்திரன் படம் பார்த்த்போது ஏற்பட்ட ஏமாற்றத்திற்கு அளவே இல்லை. படம் பிடித்துத்தான் இருந்தது. ஆனாலும் வசீகரனின் உழைப்பு மொத்தமாக வீணாகிபோவதுபோல படம் எடுத்து வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டார்கள்.

அதிபுத்திசாலி ரோபோ சமுதாயத்திற்கு ஆகாதாம். என்ன ஒரு பலவீனமான ஒருவாதம்.  படத்தின் ஆரம்பத்திலிருந்தே வசீகரனை காமெடியாக்கி  வைத்த இயக்குநரை என்னவென்று சொல்வது?

போக்குவரத்துவிதிகளின்படி வண்டி ஓட்டத் தெரிகிறது. முன்னால் போகும் வண்டியை ஓவர்டேக் செய்யத் தெரிகிறது.   கேட்டால் புரகிராம் செய்திருக்கிறார்களாம். அதேபோல் மனிதர்களின் குறிப்பிட்ட உறுப்புகள் வெளியே தெரியாவண்ணம் வெளியே வரவழைக்ககூடாது என்று புரகிறாம் செய்து விட வேண்டியதுதானே. அப்புறம் எதற்கு சிட்டியை கொஞ்சம் கொஞ்சமாக கழட்ட வேண்டும்.

உணர்வுகள் இல்லாததால்தான். ரகசியம் கேட்ட புரபஸரிடம் பதில் சொல்ல மறுக்கிறதா சிட்டி?  அழுத்திக் கேட்கும்போது  டாக்டரிடம் கேட்டுக் கொண்டுவந்து சொல்கிறேன் என்கிறதா?

ஐஸ்வர்யாவின் துப்பட்டாவை இழுக்கும்முன் காப்பாற்ற வருகிறதா?

சிந்திக்கும் செயல் இல்லாததால்தான்  வால்யூம் அதிகரித்து  சவுண்ட் சிஸ்டம் உடைக்கிறதா?   ஜிப்பைக் கழட்டி பேண்ட்டை உறுவுகிறதா?

தடுமாறும் ஐஸ்வர்யாவுக்கு ஜிப்ஜாப் மூலமாகவும் பின்னர் ஸ்கேன் மூலமாகவும் பிட் கொடுத்து உதவுகிறதா?

துறைத் தலைவரே பிரசவம் பார்க்க தடுமாறும்போது தேவையான தகவல்களை வரிடைப் படுத்தி, எதை உபயோகிப்பது எதை ஒதுக்குவது என்பதை பகுத்தாய்ந்து பிரசவம் பார்க்கிறதா?  (இது மிகத் திறமை வாய்ந்த அறிஞர்களாலேயே பல நேரங்களில் சாத்தியம் ஆவது இல்லை)

ராணுவத்திற்கு யார் தேவை?

மேலதிகாரியின் உத்தரவை அப்படியே பின்பற்றும் போர்வீரனைத்தான் பெறும்பாலான தளபதிகள் விரும்புவார்கள். அரசுப் பணியில் முதலில் கட்டளையை நிறைவேற்று. பின்னர் எதிர்ப்பை தெரிவி, என்றுதான் சொல்கிறார்கள்.

எதிர் நாட்டு மக்களுக்கும் நம் மக்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் அழித்துவிடும் என்கிறார்கள். இதுவரை எந்த யுத்தத்தில் நல்லவன் கெட்டவன் பார்த்து போர்வீரர்கள் செயல்பட்டு இருக்கிறார்.

எதிரிகளின் மேல் செலுத்தும் ஆயுதங்கள் செலுத்துபவர்களை பதம் பார்த்த சம்பவங்கள் யுத்த களத்தில் சாதாரணம். அதேபோல்  விலைபோன மனிதர்கள், எதிரிக்காக செயல்பட்ட நபர்களும் அதிகம்.  ஆனால் இது போன்ற ஒரு சொத்தைக் காரணத்தைக் காட்டி சிட்டியை நிகாரித்துவிடுகீறார்கள்.


நாட்டின் பிரதமரையே மெய்காப்பாளர்களை வைத்து முடித்த சம்பவங்களையெல்லாம் பார்த்து விட்டோம்.   இதில் சிட்டியால்தான் உலகம் அழியுமாம். என்ன கொடுமைடா சாமி?


முதல்வன்படத்தில் அர்ஜீனின் ஆட்சியால் தமிழகம் முன்னேறியதுபோல  சிட்டியின் சேவையால் உலக மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகக் காட்டி படத்தை முடித்திருக்க வேண்டும் இயக்குநர். படம் வெளியான அன்றே ரசிகர் அனைவரும் உலகம் தழுவிய வேலை நிறுத்தம் செய்திருந்தால்  ஒருவேளை இயக்குநரும், படத் தயாரிப்பாளர்களும் பணிந்திருப்பார்களோ?

ரசிகர்களின் வேலையே படம் பார்ப்பதுதானே?

 ஒவ்வொருவரும் அவரவருக்கு பிடித்த பத்து ரஜினி படங்களைப் பற்றி எழுதியபோது பத்து ரஜினி படங்களின் கதைகளை ஒரு குறிப்பிட்ட கோணத்தில் சொல்லி படங்களை கேட்டு ஒரு இடுகை போட்டிருந்தேன்.  அதில் மூன்று படங்கள் கண்டுபிடிக்கப் படாமல் இருக்கின்றன. நேரம் இருந்தால் கண்டுபிடியுங்களேன்

Saturday, December 11, 2010

இந்த ஹீரோக்களெல்லாம் யாருப்பா?

ரஜினியை அரசியலுக்கு யாரெல்லாம் கூப்பிடுறாங்க.  அப்படி கூப்பிடும் நபர்கள் எல்லோரையும் ரஜினிக்குத் தெரியுமா என்று கேள்விகேட்டால் அந்த கேள்விக்கு கிடைக்கும் பதிலை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

அவ்வப்போது பதிவுலகில் பலரும் இதே தலைப்பில் பதிவிட்டுக் கொண்டிருக்கின்றனர். எனக்கும் இந்த தலைப்பில் பதிவு போடவேண்டும் என்ற ஆசை.  எனனை யாராவது கூப்பிட்டே இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் என்னைக் கூப்பிட்ட அந்த நண்பருக்கு நன்றியையும் அவரது பதிவினைப் பார்க்காததற்கு  அவரிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டு இந்த இடுகையை ஆரம்பிக்கலாம்.

1. திரைப்படம் எண் ஒன்று

ஒரு வேலைக்காரன், விசுவாசமான வேலைக்காரன். அவனது முதலாளி ஆசைப் பட்டதற்காக  ஒருபெண்ணை தூக்கிக் கொண்டுவந்து கொடுக்கிறான்.
அந்தப் பெண்ணை முதலாளி கெடுத்து கொண்றுவிட  அந்த வேலைக்காரனுக்கு அந்தப் பெண் சிறுவயதில் தொலைந்துபோன தனது தங்கை என்று தெரிய  முதலாளியை பழிவாங்க சபதம் ஏற்று நண்டூறுது நரியூருது என்று பாடுவார்.  அந்த ஹீரோ யார்?

2. திரைப் படம் இரண்டு.

இரண்டு நண்பர்கள். முதல்நபர் அலுவலகத்தில் பெரிய பொறுப்பில் இருப்பவர். இன்னொருவர் அவரது அடிபொடிபதவியில் இருப்பர். பதவிக்காரர் ஒரு அஜால்குஜால் பேர்வழி.   அவரால் கெடுக்கப் பட்ட ஒருபெண்ணுக்கு வாழ்வு கொடுக்கிறேன் பேர்வழி என்று மணந்துகொள்கிறார். அந்தப் பெண்மணி இவரை தெய்வமாக வழிபடுகிறார். தெய்வத்திற்கு கரைப் பட்ட பூவைத் தரமாட்டேன் என்று  பலான விஷயத்திற்கு ஒத்துக்கொள்ள மறுக்கிறார். ஹீரோ அந்தரத்தில் ஊஞ்சல் ஆடுகின்றேன் நானும் என்று பாட்டுப் பாடுவார். அந்த ஹீரோ யார்?

3.திரைப் படம் எண் மூன்று.

முறைப் பெண்ணை திருமணம் செய்துக் கொண்டு ஒரு பெண்குழந்தை பெற்றுக் கொள்கிறார். முறைப் பெண் இவரை விட்டு விலகி விட அவரது தங்கையை திருமணம் செய்து கொள்கிறார். பழைய மனைவி பிற்காலத்தில் சுமார் இருபது ஆண்டுகள் கழித்து வர அவரை பெற்றவர்கள் முதல் அனைவரும் ஒதுக்கிவைக்கிறார்கள். அவர் இறந்த உடன் தனி நபராக ஈமச் சடங்குகள் செய்கிறார் ஒரு ஹீரோ.  அவர் யார்?   இதில் மகளாக நடித்தவர் பின்னர் ஜோடியாக நடித்தார். விரைவில் அம்மாவாக நடிக்கப் போவதாக பேச்சு அடிபடுகிறது

4. திரைப்படம் எண் நான்கு

40வயதைத் தாண்டிய ஒரு ஹீரொயின் அவரது வய்தை ஒத்த ஹீரோவை வைத்து ஒரு படம் எடுத்தார்.  அந்த ஹீரோவுக்கு சின்ன வயது தம்பி, நடக்கமுடியாத தங்கை, வயதான் தாயார். இப்படி இருக்கு மூளையில் கட்டி.  அந்த நேரத்தில் ஊரில் ஒருபிரமுகர் கொல்லப் பட அவரைக் கண்டுபிடித்தால் பரிசாக ஒருபெரிய தொகை அறிவிக்கப் பட தன் குடும்பத்தைக் காப்பாற்ற அவராக அதில் சிக்கிக் கொள்கிறார். சிறையில் இருக்கும்போது  மயக்கம்வர அவரது கட்டியைஅரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றி விடுகிறார்கள்.  இப்போது தன் வக்கீல் காதலியிடம் உண்மையைச் சொல்ல அவரை வெளிக் கொண்டுவர வழி தெரியாமல் தவிக்க  மைக்கேல் டிசௌசா ட்ரூ கிறிஸ்டியன் என்று அறிமுகம் ஆகி  சண்டையெல்லாம் போட்டு கடைசிக் கட்டத்தில் குண்டுகள் துளைக்கப் பட்ட நிலையில் வெகுநேரம் போராடி ஹீரோவைக் காப்பாற்றிய சின்ன ஹிரோ யார்?

5. திரைப்படம் என் ஐந்து
சென்ற படத்தில் ஹீரோ பெரிய அண்ணனாகவும், சின்ன ஹீரோ அடுத்த அண்ணனாகவும் இன்னொரு தம்பியுடன் நடித்த படம்.  சகோதரர் 2, 3 இருவரும் அண்ணியின் கொடுமை காரணமாக வீட்டைவிட்டு வெளியேற  காலங்கள் ஓடுகிறது, 2க்கு 1ஐ அடையாளம் தெரிந்தாலும் காட்டிக் கொள்ளாமல் இருக்கிறார். 2. ஒரு கொலைவழக்கில் மாட்டிக் கொள்ள 1 தனது நீதிபதி பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்து வாதாடி சகோவை காப்பாற்றுகிறார். அந்த நடு சகோதரர் யார்?


6 திரைப் படம் எண் 6, 7.
ஒரு முதலாளி, ஒரு தொழிலாளி. இரண்டு பெண்கள்.  ஒருஹீரோ. ஹீரோ தொழிலாளியை காதலிக்க முதலாளி ஹீரோவைக் காதலிக்கிறார்.

முதலாளியை திருமணம் செய்து கொண்டு பின்விளைவுகளை ஒரு படமாகவும், தொழிலாளியை திருமணம் செய்துகொண்டு ஒரு படமாகவும் தந்து மக்களை மகிழ்வித்த நடிகர் யார்?

7. திரைப் படம் எண்8
ஒரு நண்பன் அவன் மனைவிக்கு பேய்பிடிக்கிறது. நவீன முறையில் மருத்துவர் என்ற பெயரில் பேய் ஓட்டும் கதை. இவரைத் தவிர யார் ஹீரோவாக நடித்திருந்தாலும் அத்தோடு ஓய்வு பெற்றிருப்பார்கள். அந்த ஹீரோ யார்?

8. திரைப் படம் எண் 9
ஒரு சராசரி மனிதன். அவனது தந்தைக்கு வாக்குக் கொடுத்தபடி தனது மாற்றாந்தாய் குழந்தைகளை நல்ல நிலமைக்கு கொண்டுவர வாழ்க்கையை தியாகம் செய்துவிடுகிறார். அவர் அதில் வெற்றிபெறும் நேரத்தில் பல ஆண்டுகளுக்கு முன் சந்தித்த ஒரு நபரை பார்க்கிறார். அந்த மனிதர் நம் ஹீரோ பெரிய தாதாவாக நாயகன் கமலஹாசன் போன்று இருந்த காலத்தில் நன்கு அறிந்த்வர். நமது ஹீரோ மீது கொலை முயற்சியும் செய்தவர். சூழ்நிலை அவரது மகளையே நமது ஹீரோ திருமணம் செய்து கொள்ள நேரிடுகிறது.

இந்த ஹீரோ யார்?


9. திரைப்படம் எண் 10. 

சின்னத்தம்பி பிரபு மாதிரி ஒரு ஹீரோ. அவருக்கு கடவுள் அவரது வாத்தியார். பல வித்தைகளை வாத்தியார் கற்றுக் கொடுக்கிறார். ஒரு கால கட்டத்தில் அவர் கோபம், தாபம் பற்றியும் சொல்லிக் கொடுக்கும்போது  வாத்தியாரின் காதலியை இவர் காதலிக்க ஆரம்பிக்கிறார். ஆரம்பத்தில் சின்னத்தம்பி பிரபுதானே என்று அலட்சியமாக கொடுத்த பிரச்சனை ஆகிவிடுகிறது.  வாத்தியாரின் காதலியிடம் தன்னைக் காதலிக்குமாறு கெஞ்சும்போதும்,  வாத்தியாரிடம் தனக்காக காதலியை விட்டுக் கொடுக்குமாறு பேசும்போதும் ஒரு ரொமான்ஸ் ஹீரோவை நாடு இத்தனை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டதாகவே தோன்றும். பின்னர் அவரே வில்லனாகி காதலியை குழந்தை பெற்றுத் தருமாறு மிரட்டும்போது பகிரென்று இருக்கும். அந்த ஹீரோ யார்?


=====================================================================

ஹீரோ பேர் எல்லாருக்கும் தெரிந்திருக்கலாம். படத்தின் பேரைச் சொல்லுங்கள்.

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails