Sunday, June 12, 2011

அசைந்த திரை அஞ்சன விழிகள் - நான் ஒரு வாசகன்


சென்ற பகுதியில் சுங்க அதிகாரி இளையபல்லவனை தனியாக அழைத்து பேசுகிறார் என்ற சந்தேகம் வந்த்தல்லவா? கலிங்கத்தின் ஊழிய்ம் செய்தாலும் பிறப்பால் தமிழனாக இருந்த்தால் அந்த சுங்க அதிகாரி கருண்காரப் பல்லவனுக்கு உதவி செய்வதாக சொல்லுகிறார் ஆசிரியர். (உடனே நமது உள்மனது நம்ப்பிட்ட்டோம் நம்ம்ம்ம்ப்பிட்ட்ட்டோம் என்று உரக்கச் சொல்கிறது)  கருணாகரப் பல்லவனே சில கேள்விகளை கேட்கிறார். முறையான பயணமாக முறைப்படிக் கப்பலில் வந்து அரச முத்திரை மோதிரத்தைக் காட்டியவனை அனுப்பாமல் ஏன் தனியே அழைத்து வந்தீர்கள் என்று கேட்கிறார்.  அதற்கு சுங்க அதிகாரி தங்கள் கொண்டு வரும் பத்திரத்தில் கலிங்க துறைமுகங்களை சோழநாட்டுக்குச் சொந்தமாக்கும் வகையில் எழுதப் பட்டுள்ளதால்  தாங்கள் சிறையில் அடைக்கப் படுவீர்கள் என்றும் பின்னர் கொள்ளப் படுவீர்கள் என்றும் சொல்கிறார்.  பத்திரத்தில் எழுதப் பட்டுள்ளதை சுங்க அதிகாரி சொன்னதைக் கேட்ட்தும் இளைய பல்லவன் அதிர்ச்சி அடைந்த்தாக நாவலாசிரியர் சொல்கிறார். 


ஏற்கனவே நம்ப்பிட்ட்ட்ட்டோம் என்று நமது உள்மனது சொன்ன வார்த்தைகள் இப்போது எதிரொலிக்க ஆரம்பிக்கின்றன.
சோழநாட்டு ஒற்ற்ர்கள் இங்கு அதிக அளவில் உலவுவதாகவும், சோழநாடு கலிங்கத்தின் மீது போர் தொடுக்கும் வாய்ப்பு இருப்பதாக வதந்திகள் உலாவுவதாகவும் அதனால் சோழநாட்டவர்கள் பலரும் கைது செய்யப் பட்டுவருவதாகவும் சொல்கிறார்.


இந்த நேரத்தில் பாலூர் துறைமுகத்திற்கும், தமிழகத்தின் மற்ற துறைமுகங்களுக்கும் உள்ள வித்தியாசங்களை சாண்டில்யன் விளக்குகிறார். ஆங்கில நாவலாசிரியர்கள் பொதுவாக தங்கள் நாவல்களில் ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியே விளக்குவார்கள். 

குறிப்பாக ஒரு பைக் மெக்கானிக் பைக்கை ரிப்பேர் செய்வதாகட்டும் மருத்துவர் அறுவை சிகிச்சை செய்வதாகட்டும் ஒருவரியில் சொல்லாமல் அங்கும் நடக்கும் செயல்கள் நம் கண் முன்பே நடப்பது போல சொல்லுவார்கள்.  ஒவ்வொரு படியாக அதன சாதகபாதகங்கள் மாற்றுவழிகள் எல்லாவற்றையும் அலசுவார்கள். ஒரு நாவல் படிக்கும்போது பல்வேறு செய்திகளைப் பார்த்துப் பழகிய உணர்வினை வாசகனுக்கு ஏற்படுத்துவார்கள். தற்போதைய தமிழ் நாவல் ஆசிரியர்களில் தொழில்நுட்ப ரீதியாக வாசகனுக்கு கற்றல் அனுப்வத்தை கொடுப்பவர்கள் மிக்க் குறைவாக உள்ளனர். 


தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் இரவில் நடமாடுவது கூட கண்காணிப்பிற்க்கு உள்ளாக்கப் பட்டு இருப்பதாகச் சொல்லப்படுகிறது, அதுமட்டுமல்ல, அது மட்டுமல்ல என்ற ரீதியில் சிறிது நேரம் பேசி விட்டு சோழ நாட்டு இளவல் அம்மங்கா தேவியின் மகன் ராஜராஜ நரேந்திர செல்வனும் ( கவனிக்க சோழன் என்று சொல்லவில்லை ) கைது செய்யப் பட்டுள்ளதாக சொன்னதும்தான் சென்ற பகுதியின் கடைசியில் சொன்ன வாக்கியத்தை உணர்ச்சி வசப் பட்டு இளையபல்லவன் உச்சரிக்கிறான். (அத்தனை துணிவா கலிங்கத்து பீமனுக்கு)

சென்ற பகுதியிலேயே அதைக் கேட்ட வீர்ர்கள் இளையப்ல்லவனை நோக்கிப் பாய அவர்களை கொண்டுவிடுகிறான். அமளி துமளி கிளம்புகிறது. அராபியர் அங்கியுடன் இளையப்ல்லவன் தப்பிச் செல்கிறான். பின்னர் அந்த அங்கியைத்துறந்து பாலூரின் வீதிகளில் ஓடுகிறான். படிக்கும் நமக்கென்னவோ நாமும் சேர்ந்து ஓடுவதுபோலவே தோன்றுகிறது. அவனை கலிங்கத்து வீர்ர்கள் துற்த்துகிறார்கள்.


ஒரு வீட்டுக்குள் நுழைந்து ஒளிந்து கொள்கிறான். அந்த அறைக்கு ஒரு பெண் வருகிறார்கள் சாண்டில்யன் ரசிகர்களுக்கு உடனே நிமிர்ந்து உங்கார்ந்து கொள்வார்கள். வழங்கமான சாண்டில்யன் டச். ஆமாம் அந்தப் பெண் உடைமாற்ற தொடங்குகிறார். தமிழர் பண்பாட்டைக் காக்கும் வகையில் கண்களை மூடிக்கொண்ட இளைய பல்லவன் திறைச்சீலையைப் பிடிக்க சத்தம் கேட்டு அந்தப் பெண் இளையனைப் பார்க்க இந்தப் பகுதி அப்படியே அடுத்த பகுதிக்கு பயணம் செய்கிறது.


அந்தப் பெண் உடை மாற்றும் அழகை அப்படியே காப்பி பேஸ்ட் பாணியில் டைப் செய்யலாம். திரட்டிகள் நம் தளத்தை தடைசெய்து விட்டால் நாம் என்ன செய்வது என்ற அச்சத்தின் காரணமாக நாம் அதை ஒரே வரியில் முடித்து விட்டோம்.


இந்த பகுதியில் புதிதாக தப்பிப் போய் ஒரு பெண் உடைமாற்றும் மாளிகையில் ஒளிந்து கொள்வது மட்டுமே இணைந்துள்ளது.. மற்ற்படி சென்ற பாகத்தின்விளக்க உரையாக மட்டுமே இந்தப் பகுதி அமைந்துள்ளது..

இந்தப் பகுதியின் நமது சந்தேகங்கள். புதிதாக பெரியதாக் இல்லாவிட்டாலும் கூட இந்த நாவலின் கற்பனைக் கதாபாத்திரங்கள் எவை எவை என்ற எண்ணம் நமக்கு வருகிறது. பொதுவாக சரித்திர கதைகளில் சில கற்பனைக் கதாபாத்திரங்கள் உலவும். அந்த கதாபாத்திரம் இல்லாவிட்டால் அந்தக் கதையே நமக்குப் பிடிக்காமல் போய்விடக்கூடிய அபாயம் பல நாவல்களுக்கு நிகழ்ந்திருக்கிறது.

குறிப்பாக பொன்னியின் செல்வனில் ந்ந்தினி பாத்திரம் கற்பனை என்கிறார்கள்.  ந்ந்தினி இல்லாமல் பொன்னியின் செல்வனில் ஏதாவது கிக் இருந்திடுமா? குறைந்த பட்சம் ந்ந்தினி போன்ற கவர்ச்சி இல்லாவிட்டாலும் ஒரு கிழவியாவது இருந்திருந்தால்தானே பல இடங்கள் நகர்ந்திருக்க முடியும். சுத்தமாக ந்ந்தினியே இல்லையென்றால்......

சரி அதை அங்கேயே விடுங்கள் எனது எண்ணமெல்லாம் இதுவரை நாம் சந்தித்த எந்த எந்த பாத்திரங்கள் கற்பனை எவை உண்மை.  என்பதுத்தான். போகப் போகப் பார்ப்போம்.

3 comments:

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails