Saturday, February 28, 2009

கட்டைவிரல் உயர்த்திப் பிடித்த கூட்டம்

வழக்கமாக இடுகை எழுதி முடித்த பின்னர்தான் தமிழ்மணக்கட்டைவிரல் பற்றீயும் அதிலும் மேல்நோக்கிய கட்டைவிரலில் க்ளிக் செய்து வாசகர் பரிந்துரையில் முதல் ஓட்டை நமக்குநாமே போட்டு எப்படியாவது முகப்பில் இடம்பிடிக்க படாதபாடு படுவோம். இந்த இடுகை அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தஅந்த கட்டைவிரல் பற்றியதுதான்.


ஒருபள்ளியின் நடைபெற்ற ஆண்டுவிழாவில்தான் இந்த கருத்துக்களைக் கூறினார்கள்.

குழந்தைகளைப் படிக்கச் சொல்லிவிட்டு டி.வி. பார்க்கும் பெற்றோர்களைப் பற்றியும் நாம் பார்க்கும் காட்ட்சிகள் நம்மை எப்படி ஆளுமை செய்கின்றன என்பது பற்றியும் அருமையாகக் கூறினார்கள்.

முதல் வரிசையில் வரிசைகளில் இருப்பவர்களை மட்டும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர். பின் வரிசையில் இருப்பவர்களை சாட்சியாக வைய்த்துக் கொண்டனர்.

அனைவரையும் ஆட்டிக் காட்டிவிரலை உயர்த்திக் காட்டுமாறு கேட்டுக் கொண்டனர். அதே நேரத்தில் இந்த அறிவிப்பு செய்தவர் தனது கட்டைவிரலை உயர்த்திக் காட்டினார். முன் வரிசையில் அமர்ந்திருந்தவர்களில் பெரும்பாலோரும் தங்களது கட்டைவிரலையே உயர்த்திக் காட்டினர். கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஆட்காட்டிவிரலை உயர்த்திக் காட்டியவர்கள் வெகு சிலரே.. செயல்முறையிலேயே
நாம் என்னதான் நினைத்தலும் எவ்வளவுதான் அறிவை வள்ர்த்து வைத்திருந்தாலும் நாம் பார்க்கும் காட்சிகள்தான் நம்மை பெருமளவு ஆளுமை செய்கின்றன.
என்பதை அழகாகக் காட்டினார்கள்...

.................................................................................................................................................

Saturday, February 14, 2009

முன்னொருகாலத்தில் எங்கள் காதலர்தின அனுபவம்

அது ஒரு காதலர் தினம்। நாங்கள் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலம் அது।। ஒரு வி।ஐ।பி। வருகிறார் என்று ஊரே பரபரப்பாக இருந்தது। எங்களுக்கும் ஒரு பரபரப்பாக இருந்தது। எங்கள் நண்பன் அரவிந்தசாமி, மணிஷாவிடம் காதலைச் சொல்லப் போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தான்। அவர்கள் காதலை சொல்லிக் கொள்ளவில்லையே தவிர மற்றபடி காதலர்கள்போல்தான் சுற்றிக் கொண்டிருப்பார்கள்।

அவர்களுக்கு அடிக்கடி பாடங்களில் சந்தேகம் வரும்। அதை சரி செய்ய இவர் இருக்கும் இடத்திற்கு அவரும் அவர் இடத்திற்கு இவரும் வருவார்। ஓரே வகுப்புதான்। ஆனால் செயல்முறை வேறுவேறு இடங்களில்।। அருகில் இருக்கும் எங்களிடம் எல்லாம் சந்தேகம் கேட்க மாட்டார்கள்। இவர்கள் ஒன்றாக படிப்பது எங்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத காரணத்தால் நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்தோம் என்றே நினைக்கிறேன்। பொதுவாக இது போன்று ஆரம்பிக்கும்போது மற்ற நண்பர்களை வெட்டி விடுவார்கள்।

லஷ்மி காம்ப்ளக்ஸில் என்னமோ வாங்க வேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றிருந்தான்। அரவிந்தசாமி। । கல்லூரி விடுதியில் மதிய உணவு எடுத்தபின் கிரிக்கட் ஒன்பிச் விளையாடிக் கொண்டிருந்தபோது காந்தி புரத்தில் குண்டு வெடித்ததாக செய்தி வந்தது। இவன் வேற அங்கதானே போயிருக்கிறான்। ஒன்றும் புரியவில்லை। யூனிட்ஸ்க்கு என்ன ஆச்சோ என்று என் ரூம்மேட் வேறு புலம்ப ஆரம்பித்தான்। மனிஷாவும் அவனுக்கும் ஒரே இடத்தில் செயல்முறை வகுப்பு இருப்பதால் அப்படி।

சிறிது நேரம் கழித்தபின் நிஜமாகவே எங்களுக்கு படபடப்பு அதிகம் ஆனது। நாங்கள் சென்று பார்த்து வர வேண்டும் என்றால் எங்கள் சீணியர் மாணவர்கள் அனுமதிக்கவில்லை। (யாரும் வண்டி கடன் கொடுக்கவில்லை)। மாலைப் பொழுது ஆனது। அவர்களைப் பற்றி ஒரு தகவலும் இல்லை। ஆனால் ஊரில் ஆங்காங்கே குண்டு வெடிப்பதாக மட்டும் தகவல் வந்து கொண்டே இருந்தது। இந்த நேரத்தில் அரவிந்தசாமி வீட்டில் இருந்து வேறு பத்திரமாக இருக்கிறீர்களா? என்று போண் வேறு செய்துவிட்டார்கள்। அப்போது செல்போன் கிடையாது।

மிகக் கொடுமையான நேரங்கள் அது। அந்தநேரத்தில் அடுத்த தகவல் வந்தது। மருத்துவ கல்லூரி மருத்துவ மனையிலேயே குண்டுவெடித்தது। செவிலியர்கள் பலி। மற்றும் படுகாயம்। யாரோ சொல்லிக் கொண்டிருந்தார்கள்। உலகப் போர் காலத்தில் கூட மருத்துவமனைக்குள் குண்டு வெடித்து கிடையாதாம்।

நாங்கள் என்ன செய்ய முடியும் அரவிந்தசாமியின் வீட்டிலிருந்து மீண்டும் போன் வந்தால் என்ன சொல்வது। கூப்பிடுகிறோம் என்று சொல்லி வைத்துவிட்டோம்। அதன்பிறகு போண் பிசியாகவே இருந்தது। எல்லா மாணவர்களையும் அவர்கள் வீட்டில் விசாரித்துக் கொண்டிருந்தனர்।। இரவும் வந்துவிட்டது। அப்போது மருத்துவ மனையை விசாரித்து ரெண்டும் இருக்கா என்றும் கேட்டோம்। ஒரு தகவலும் இல்லை।

மருநாள் காலை। கோவையில் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை। ஆனால் மருத்துவ கல்லூரி படுவேகத்துடன் இயங்கி கொண்டிருந்தது। வேகமாக மருத்துவ மனைக்குச் சென்று காயம் அடைந்தவர்கள் மரணம் அடைந்தவர்கள் என்று எல்லா பகுதிகளையும் சுற்றி சுற்றீ வந்தோம்। மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு பெரிய வேலை ஒன்றும் கிடையாது என்றாலும் அன்று பார்க்க வருபவர்களுக்கு கூட நிறைய வேலை இருந்தது।

ஒவ்வொரு முறை சுற்றும் போதும் தப்பித்து விட்டார்கள் என்று மனம் சந்தோஷப் படும்। அடுத்த வினாடியே இப்போது ஏதும் கொண்டுவந்திருப்பார்களோ நாம் சரியாய் பார்க்கவில்லையோ என்று துக்க பட வைக்கும்। உடனே மீண்டும் ஒரு சுற்று। நரக வேதணை என்பது அதுதான்। இப்போது கூட அன்று கண்ட காட்சிகள் குலைநடுங்க வைக்கின்றன। அடுத்த மூன்று நாட்களும் எல்லா வார்டுகளையும் சுத்தோசுத்து என்று சுத்தி ஒருவழியாக நிலமை கட்டுக்குல் வந்தது।

,

இவர்கள் என்ன ஆனார்கள்।? அங்கேதான் விதி।। காதலர் தினத்தை கொண்டாட முதலில் தேர்ந்தெடுத்த இடம்। ஈச்சனாரி பிள்ளையார் கோவில்। அவ்விடம் ஊரின் நுழைவாயிலில் இருக்கிறது। அங்கேயே செய்தி கிடைத்த உடன் அப்படியே அவனது பைக்கில் பொள்ளாச்சிக்கு (சொந்த ஊர்) போய் மணிஷாவையும் ஊருக்கு அனுப்பிவிட்டான்। மறுநாள் அவன் மாணவர் விடுதிக்கு போன் போட்டிருக்கிறான்। நாங்கள் பயிற்சி மருத்துவர்களுடன் இருந்திருக்கிறோம்।எங்களுக்கு மூன்று நாள் கழித்து தெரிந்தது.
எப்படியோ என்னோட ரூம்மேட்
யூனிட்ஸ்க்கு ஒன்னும் ஆகல
என்று மகிழ்ச்சியுடன் சுற்றிக் கொண்டிருந்தான்.


இது ஒரு மீள்பதிவு. ஏற்கனவே நவம்பரில் பதிவிட்டதுதான்.

மறக்காமல் தமிழ்மண மேல்நோக்கிய கட்டைவிரலிலும், தமிழீஷ் வோட்டிலும் க்ளிக் செய்து விடுங்கள்.

Saturday, February 7, 2009

விஜய் - தமிழ்ப்படம் - கேட்காமலே சில சிந்தனைகள்

எனது இந்த இடுகையைப் படிக்கும்முன் முரளிக் கண்ணன் அவர்களின்

விஜய் நம்பர்- 1 ஆக முடியுமா? படித்துவிட்டு பிறகு வாருங்கள்.

விஜய் அவர்களின் லட்சியம் செயல்பாடு ஆகியவற்றை நாம் கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால் ஒரு உண்மையைத் தெளிவாக அறிய முடியும்.

அதற்கு முன் எம்ஜியாரின் கால கட்டங்களையும் ரஜினியின் கால கட்டங்களையும் கொஞ்சம் ஆராய்ந்தால் முரளிக்கண்ணன் சார் அவர்களின் ஒப்பீடு போல வேறுசில விஷயங்களையும் அறியலாம்.

எம்ஜியாரின் கால கட்டத்திலேயே எஸ். எஸ். ராஜேந்திரன் (தமிழ்நடிகர்களில் முதன்முதலாக ச.ம.உ. ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.). ஜெமினி, ஆகியோர் இருந்திருக்கிறார்கள். பின்னர் முத்துராமன், ஜெயசங்கர் ரவிச்சந்திரன் ஆகியோர் இருந்திருக்கிறார்கள். சிவக்குமார் ஆகியோர் இருந்திருக்கிறார்கள்.

பாலச்சந்தரின் படங்களில் கூட ஆரம்ப கட்டங்களில் ஜெமினி , முத்துராமன் ஆகியோரின் இளமை போதாத கதாப்பாத்திரங்களுக்குதான் ரஜினி கமல் போடப் பட்டதாக பேசப் படுவதும் உண்டு.

எம்.ஜி.யாரையும் ரஜினியையும் ஒப்பீடு செய்தோமென்றால் எம்.ஜி.யாரின் காலத்தில் நடித்த நடித்த நடிகர்களையும் ரஜினி காலத்தில் நடித்த நடிகர்களையும் ஒப்பு நோக்குதலே சரியாக அமையும். ஜெய்சங்கரையோ, ரவிச்சந்திரனையோ, ஏ.வி.எம் ராஜனையோ அடுத்த நம்பர் 1 என்று அந்த காலகட்டத்தில் பேசியிருப்பார்களா? என்பது தெரியவில்லை. சிவக்குமாருக்கு கூட அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்திருக்குமா தெரியவில்லை. (ஒருவேளை ராமன் பரசுராமன் ஓடியிருந்தால் பேசப் பட்டிருப்பாரோ என்னமோ).

விஜயகுமார், எம்.ஜி.ஆர் ரசிகராகவே கூட நடித்துப் பார்த்தால் ஒருகதாப் பாத்திரமாகக் கூட அவரை ஒருமையில் அழைக்கத்தயங்கியவர் அவர். ( இன்று போல் என்றும் வாழ்க படத்தில் எம்.ஜி.யாரோடு சண்டை போடும்போது பேசும் வசனம்தான்0

அதே போல இன்று நடிக்கும் நடிகர்களையும் எடுத்துக் கொண்டால் அந்த காலக் கட்டத்தில் இருப்பது போன்ற சூழலோடு பொருத்திப் பார்க்கமுடிகிறது. எல்லா நடிகர்களும் அடிதடி, சராசரி இளைஞர்களை கவரும்படியான கதைகளையும் படமாக்கி வருகிறார்கள். இது பழைய காலகட்டத்தில் நடித்த இரண்டாம் வரிசை நடிகர்களின்பாணிதான். எத்தனை நடிகர்கள் ரஜினி பாணியில் நடித்தாலும் ரஜினி ரசிகனாக வேஷம் போட்டாலும் அது ரஜினியின் இடத்தைப் பலப் படுத்துமேதவிர இவர்களுக்கு உதவாது.

விஜய்க்கு கூட தனது இடம் பற்றி மிகத்தெளிவான கருத்து இருப்பதாகவே தோன்றுகிறது. அதனால்தான் வில்லு படத்தைப் பற்றிய பேச்சுகளில்கூட அது ஒரு ஜேம்ஸ்பாண்டு படம் மாதிரி ஒரு தோற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறார்.


பழைய தமிழ்நடிகர்களில் ஜேம்ஸ்பாண்ட் என்றால் அது ஒருவர்தான். எத்தனை ரகசிய உளவாளி படங்களில் நடித்திருந்தாலும் எம்.ஜி.ஆரை யாரும் ஜேம்ஸ் பாண்ட் என்று சொல்ல மாட்டார்கள். அந்த ஜேம்ஸ் பாண்ட் அவர் ஜெயசங்கர் ஒருவர்தான். எனவே விஜய் அடுத்த ஜெயசங்கராகவே கருதப் படுவார், கருதப் படுகிறார்.

எம்.ஜி.யார்ர்க்கு அடுத்த தலைமுறை நடிகர்களில் முதலிடம் பிடித்தவர். அதே காலகட்டத்தில் எம்.ஜி.யார் முண்ணணியில் இருந்தார்.அவர் ஜெய சங்கர்.

அதேபோல ரஜினிக்கு அடுத்த தலைமுறை நடிகர். அவரது தலைமுறையில் அவரே முதலிடம்.   அவர் விஜய்.

எம்.ஜி.ஆர், ரஜினி வரிசைக்கு இன்னும் பத்து(20) ஆண்டுகள் கழித்து புதிதாக நடிக்க வருபரால் முயற்சி செய்ய முடியும். அதற்கும் திரைப் படக் கலையின் வடிவம்கூட மாறிப் போய்விடும் வாய்ப்பு கூட இருக்கிறது.
===========================================================

இது ஒரு மீள்பதிவு
http://tamilshots.mywebdunia.com/images/vijay.jpg


===========================================================

இன்றைய அவரது பாணி எம்.ஜி.ஆர் பாணி படத்தலைப்புகளிலும், ரஜினி பாணியில் ரசிகர் மன்றங்கள் நடத்துவதிலும் செல்கிறது. இந்த இடுகை வெளிவந்த காலத்திற்குப் பிறகு படத்திற்கு பெயர்வைக்கும் போக்கும் ரசிகர் மன்றங்களை நடத்திச் செல்லும் போக்கும் பெருமளவு மாறியிருக்கிறது என்றாலும் அன்றைய சூழலை மீண்டும் ஒரு முறை நினைவு கூர்ந்து ரசிக்கவே இந்த மீள் பதிவு.http://static.webdunia.com/mwdimages/thumbnail/image/izizi//mywebdunia/UserData/DataV/vijayonline/images/vijaynewatmstillsn08.jpg

இந்த இடுகையைப் படித்துத்தான் விஜய் தனது பாணியை மாற்றிக் கொண்டார் என்றெல்லாம் நான் கூறமாட்டேன் என்பதையும் இந்த இனிய த்ருணத்திலே வலையுலகத்தின் முன் வைப்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்பதனையும் டிஸ்கியாக போட்டுக் கொள்ள இருக்கிறேன் என்பதையும் கூறிக் கொள்ள ஆசைப் படுகிறேன்

http://gallery.techsatish.net/d/53592-3/Vijay+and+his+fans+observe+fast+over+Sri+Lankan+Tamils+issue+_3_.jpg

மீண்டும் மீள்பதிவு

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails