Thursday, April 1, 2010

வெளிய வாடா............. 1.4.10

நான் சுமித்ராவப் பார்க்கணும்.

தீபக் குமார் விஜயாவிடன் கேட்டுக் கொண்டிருந்தான்.

தீபக் குமாருக்கு சுமித்ராவைப் பார்ப்பதை விட விஜயாவிடம் பேசுவது தான் அப்போதைக்கு முக்கியமாகப் பட்டது. ஆனால் விஜயா நிஜமாகவே சுமித்ராவிடம் பேசத்தான் தீபக் குமார் வந்திருப்பதாக நினைத்தாள். அவர்களுக்கு நேர் மேலே மாடிப் படியின் வளைவுகளில் அமர்ந்து சுமித்ரா, சவீதாவுடன் பேசிக் கொண்டிருந்தாள்.

கடந்த சில நாட்களாகவே  சுமித்ரா, ஆண்களுடன் பேசுவதையே தவிர்த்து வந்தாள். இந்த ஆண்டு முடிந்த உடன் மாணவர் தலைமைப் பதவியை விட்டு விலகி விடவும் முடிவு செய்திருந்தாள்.  கல்லூரிக்கு வந்தாமோ, படித்தோமா, டிகிரி வாங்கினோமா என்றிருப்போம். டரியல் செய்ய நினைத்தால் டரியல் ஆகியல் ஆகிவிடுவோம் என்ற பயம் வந்திருந்தது அவளுக்கு.

அவளுக்கு ஏன் அப்படி அந்த எண்ணம் வந்தது என்று அறியாதவர்கள் இந்தச் சுட்டியை அழுத்துங்கள்.

சுமித்ராவின் ஆரம்ப கால கல்லூரி வாழ்க்கை எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது என்று அறிய இந்தச் சுட்டி உங்களுக்கு உதவும்.

தீபக் குமாருக்கு மென்மையாகப் பதில் சொல்லி அவனை அனுப்பியிருக்கலாம். ஆனால் விஜயாவுக்கு தீபக் குமாரை சீண்டிப் பார்க்க நல்ல வாய்ப்பாக இருந்ததால் உடனே சொல்லிவிட்டா:ள்.

உன்னை மாதிரி பொறுக்கிப் பசங்களோட எல்லாம் சுமித்ரா பேச மாட்டாள்.

தீபக் குமாருக்கு சுறுசுறுவென கோபம் வந்தது. ஓ.., அதுதான் நீ பேசிட்டு இருக்கியா? சடாரென்று மடக்கினான். தீபக்

அவதான் உன்னவிட்டு விலகிட்டு இருக்கால்ல அப்புறம் ஏன் அவகிட்டயே பேசி ஆகனும்னு பார்க்கற..,  என்னவோ சொல்ல ஆரம்பித்தாள் விஜயா

தீபக் குமார் தனது கொள்கைப் படி எதாவது ஒரு காரணத்தைச் சொல்லி பேச்சை வளர்த்திக் கொண்டே இருந்தான். இருந்தாலும் கூட நல்ல பசங்க, பொறுக்கிப் பசங்க கான்செப்ட் வந்திருந்ததால் கொஞ்சம் டென்சனாகவே பேச ஆரம்பித்திருந்தான்.

தானே பேசி என்னவென்று கேட்டுவிடலாம் என்று நினைத்தாள் சுமித்ரா.., ஆனால்  மேல் மாடியிலிருந்து கீழ் மாடிக்கு சத்தம் போட்டுப் பேச கூச்சமாக இருந்ததால் நடந்து வர ஆரம்பித்தாள். ஒரு சுற்று சுற்றி படிதாண்டி வருவதற்கு சில நிமிடங்கள் ஆக ஆரம்ப்த்திருந்தது.

ஏன்.., அவ எங்கூட பேச மாட்டாளாமா?  நேத்துவரைக்கு கூடச் சுத்துனா? இன்னிக்கு பத்தினி ஆயிட்டாளா?
 

தீபக்கின் வார்த்தைகள் தடிக்க ஆரம்பித்திருந்தன.  அப்படியே சடன் பிரேக் போட்டது போல நின்றாள் சுமித்ரா.  என்ன செய்வது என்றே புரியவில்லை.

போ..,  நீ பண்றதப் பண்ணு சொல்லிவிட்டு எதிர்திசையில் நடக்க ஆரம்பித்தாள் விஜயா.  கோபத்துடன் எதிர் திசையில் சென்றான் தீபக்.

=================================================

டே வெளிய வாடா!  சுமனின் வாசல் கதவுகள் துடிக்க ஆரம்பித்தன.யார்ரா இவன் நேரங்கெட்ட நேரத்தில் கதவை உடைக்கிறவன். சுமன் இரியோடு வந்து கதவைத் திறந்தான். வெளியே  தீஃபக்கின் நண்பர்கள்.  கையில் ஸ்டம்ப் , பேட் போன்ற அதிபயங்கர ஆயுதங்களுடன்  வாசலில் நின்று கொண்டிருந்தனர்,


8 comments:

  1. நான் தான் பஸ்ட்டு ...நான் தான் பஸ்ட்டு ...
    ஆஹா...அதிரடியா முடிசுடீன்களே...அண்ணே..அடுத்து என்ன???அவசரமாய் தொடரவும்....

    ReplyDelete
  2. what next?

    மிஸ்டர் சீமான்கனி, நீங்க செய்றது உங்களுக்கே நியாயமா படுதா? வழக்கமாக நான் தான் அண்ணனின் பதிவுகளில் வந்து நாந்தான் முதலில் என்று கமென்ட் போடுவேன்.

    ReplyDelete
  3. கதை இன்ரஸ்டிங்கா போகுதே சார்.

    ReplyDelete
  4. //seemangani said...

    நான் தான் பஸ்ட்டு ...நான் தான் பஸ்ட்டு ...
    ஆஹா...அதிரடியா முடிசுடீன்களே...அண்ணே..அடுத்து என்ன???அவசரமாய் தொடரவும்....
    //

    நன்றி தல கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப் பட்டு விரைவில் அடுத்த பகுதி வெளியிடப் படும்

    ReplyDelete
  5. // King Viswa said...

    what next?
    //

    விரைவில் கணிணித் திரையில்..,

    ReplyDelete
  6. // மின்மினி said...

    கதை இன்ரஸ்டிங்கா போகுதே சார்.//

    முந்தைய பகுதிகள் முழுவதும் படித்துவிடுங்கள் தல..,

    ReplyDelete
  7. Kathai arumai. Thotarnthu padikiren ungal valaimanayay. Kalukureenga thala.

    Karthick
    http://eluthuvathukarthick.wordpress.com/

    ReplyDelete
  8. //Karthick ( biopen) said...

    Kathai arumai. Thotarnthu padikiren ungal valaimanayay. Kalukureenga thala.//

    நன்றி தல

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails