Showing posts with label புனைவு. Show all posts
Showing posts with label புனைவு. Show all posts

Monday, March 7, 2011

சங்க நிர்வாகியின் மனந்திறந்த கடிதம்( தொழில்வளர்ச்சியின் பொருட்டு)

அகில உலக கிரிக்கெட் கோப்பை நிர்வாகிகளுக்கு,

ஐயா,

எங்கள் நாட்டில் நாங்களும் கிரிக்கெட் சங்கம் வைத்து இருக்கிறோம். நீங்கள் சில பல ஆண்டுகளாக உலக்கோப்பை போட்டிகளை நடத்திவருவதைக்கண்டு மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் நாட்டில் நாங்களும் கிரிக்கெட் போட்டிகளை வளர்த்த விரும்புகிறோம். தரத்தினையும் வெகுவாக உயர்த்திட விரும்புகிறோம்.


உங்களுக்கு மகிழ்ச்சித் தரக்கூடிய செய்தி எங்கள் நாட்டில் சென்ற ஆண்டு மட்டும் 23 கிரிக்கெட் மட்டைகளும் 86 கிரிக்கெட் பந்துகளும் விற்பனை ஆகி உள்ளன. சென்ற ஆண்டைவிட இது மிக மிக அதிகம்.

நீங்கள் மனதுவைத்தால் எங்கள் நாட்டில் வளர்ந்து வரும் கிரிக்கெடை இன்னும் அதிகரித்துவிடலாம். எங்களுக்கும் எங்களைப் போன்ற வளரும் நாடுகளுக்கும் உலக் கோப்பை போட்டிகளில் வாய்ப்புத்தாருங்கள்.


நாங்கள் உள்ளே வந்தால் கிரிக்கெட்டில் மேலும் மேலும் பல சாதனைகள் புரிய உதவியாக இருப்போம். இந்த உலகக் கோப்பையையே எடுத்துக் கொள்ளுங்கள். மிக வேகமான சதம். அதிக ரன் குவிப்பு, குறைந்த ரன்களில் அவுட் ஆக்குதல் போன்ற பல பல பல சாதனைகள் எங்களைப் போல வளரும் நாடுகளுக்கு இடையேயான போட்டிகளில்தானே நடைபெறுகின்றன.

ரசிகர் எல்லோருக்குமே நாங்கள் விளையாடும் போட்டிகள்தான் பிடிக்கின்றன

அதைவிடுத்து ஏற்கனவே விளையாடிய நாடுகளிடையேயான போட்டிகளைப் பார்ப்பதற்கே வெறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  நாங்கள் களம் இறங்கினாலே எதிர் அணியினரின் கேப்டனுக்கும், பயிற்சியாளருக்கும் வாந்தி பேதி வருகிறதாம் .அந்த அளவிற்கு பயப் படுகிறார்கள்.

முக்கியமான செய்தி ஒன்று. எங்கள் நாட்டில் வீட்டிற்கு வீடு டி.வி. உள்ளது. எங்கள் கருத்தையும் மனதில் வைத்து.  அடுத்த உலகக் கோப்பையின் போது பதினாறு குழுக்களாகப் பிரியுங்கள். அதில் முதலிடம் பெறும் அணியை வைட்த்து ஒரு ஸ்வீட்16 நடத்துங்கள்.  பின்னர் வளக்கம்போல் போட்டிகளை நடத்திக் கொள்ளுங்கள்.  குழுவில் முதலிடம் பெற ஒவ்வொரு அணியும் கடுமையாக உழைப்பார்கள். எங்களோடு மோதும் போட்டியில் தோற்றால் எல்லாம் முடிந்து என்பதால் ஆட்டமும் நன்றாக இருக்கும்.  எங்கள் நாட்டுக் கிரிக்கெட்டும் வளர்ந்துவிடும்

நன்றி 

இப்படிக்கு
சப்ளிங் நாட்டு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள்
( தேசிய அளவிளான தனியார் அமைப்பு)

http://www.sufvillage.co.uk/content/images/Events/pw_history/cricket_field.jpg

Friday, May 8, 2009

ப்ரூஸ்லீயிலிருந்து ரஜினிக்குப் பின்னரும்

உலக வரலாற்றில் ஒரு உன்னதப் படமான enter the dragon பல வழிகளிலும் நமது உள்ளங்களிலும் உணர்வுகளிலும் கலந்து நின்று கொண்டிருக்கிறது. ப்ரூஸ் லீ அவர்களின் மார்ஷியல் ஆர்ட் கலையை அழகாக மார்க்கெட்டிங் செய்து வெற்றியடைந்திருப்பார்.

அவருக்குப் பின்னர் எத்தனை சண்டைக் கலைஞர்கள் திரையுலகில் நுழைந்திருந்தாலும் லீ யின் வெற்றியைப் பெற்ற கலைஞர்கள் குறைவு. பெரும்பாலான சண்டைக் கலைஞர்கள் தங்கள் திறமையைக் காட்டும் வண்ணம் நிறைய நடித்திருக்கிறார்கள். உண்மையாகவே சண்டை போட்டு அதைப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்கள். ஆனால் ப்ரூஸ் லீயின் வழி தனி வழி.. அவர் மக்களுக்குப் புரியும் வண்ணம் சண்டைகள் அமைத்திருப்பார். பெரும்பாலான கருப்பு பெல்ட் காரர்களுக்கு இந்த சூத்திரம் தெரியாததால் தோல்வி அடைந்திருக்கிறார்கள். ஜாக்கி சான் ப்ரூஸ் லீயின் வழியைப் பின் பற்றி அவருக்கென்று தனி காமெடி வழியைப் பின் பற்றிய பின்பே வெற்றி அடைய முடிந்தது.

எண்டர் தி டிராகன் படத்தில் ப்ரூஸ் லீயிடம் ஜாக்கி சான் அடிவாங்கும் காட்சி



எண்டர் தி டிராகன் படத்தின் கதை

சென்ற நூற்றாண்டில் பார்த்தது. அப்போது எனக்குப் புரிந்த அளவில் கதையைத் தருகிறேன்.


லீ ஒரு திறமையான குங்ஃபூ வீரர். அவருக்கு உலக அளவில் நடக்கும் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. http://www.blurayfreak.com/images/2007/04/17/bluray_movie_enter_the_dragon.jpgஅந்த போட்டியை நடத்துபவர் லீயின் குருவிடம் படித்தவர்தான். உலகின் பெரிய கொள்ளைக் கூட்டத்தலைவர்களில் ஒருவராக விளங்குபவர். அவரை அழிக்க வேண்டும் என்று குருநாதர் கேட்டுக் கொள்கிறார்.

அந்த நேரத்தில் அவருக்கு ஒரு தெரிகிறது. லீயின் தங்கையை கற்பழிக்க முயற்சி செய்த கூட்டம் இதே கொள்ளைக்கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான். அந்தப் போராட்டத்தில் லீயின் தங்கை தற்கொலை செய்து கொள்கிறாள்.

லீ வில்லனின் தீவுக்குள் சென்று வில்லனது மது,மாது தொழில் வகையறாக்களைக் கண்டறீந்து கடைசியில் வில்லனோடு சண்டைபோட்டு அழிக்கிறார். அவருக்கு வெள்ளைக்காரர் ஒருவர் உதவி செய்கிறார். ஆனால் டைட்டிலில் வெள்ளைக்காரர் பெயர்தான் முதலில் வந்ததாக நினைவு. ஒருவேளை இன்று படத்தைப் பார்த்தாலும் நமக்கு அவ்வளவுதான் புரியும்.

சில சண்டைக்காட்சிகள்


இந்தப் படத்திலிருந்து தமிழுக்கு பல படங்கள் எடுத்திருக்கிறார்கள். தங்கையின் தமக்கையின் மரணத்திற்குக் காரணமானவனைப் பழிவாங்கும் கதைகள் ராமாயணத்திலிருந்தே இருந்தாலும் பெரிய ஒற்றுமையோடு வந்த சில திரைப்படங்களை நாம் பார்ப்போம்

பாயும் புலி:-
ரஜினியின் கண்முன்னே ரஜினியின் தங்கை கொல்லப் படுகிறார். இந்த நிகழ்வு நடக்கும்போது ரஜினி சராசரி மனிதனாக இருக்கிறார். அதன்பிறகு குருகுலத்தில் சேர்ந்து சண்டைப் பயிற்சிகள் பெறுகிறார். இவர் போன்றே அந்த குருகுலத்தில் ஜெய்சங்கரும் இருக்கிறார். இருவருக்கும் இறுதிப் போட்டி நடக்கிறது.

பழிவாங்க ரஜினி வில்லனின் கோட்டைக்குள் நுழைகிறார். அங்கே வில்லனுக்கு உதவியாக ஜெய்சங்கர் இருக்கிறார். அடுத்த சிலகாட்சிகளில் ரஜினியைப் புரிந்து கொண்டு உதவ இருவரும் வில்லனை காலி செய்கிறார்கள். கதையை மிகவும் முயற்சித்து தமிழ் படுத்தி இருந்தாலும் மார்ஷியல் ஆர்ட் கற்றுக் கொடுப்பதாக காட்டி இருப்பார்கள். என்னைப் போன்ற சராசரி ரசிகனுக்கு தென்கிழக்கு ஆசிய நாட்டு படங்களில் காட்சிகளை அப்படியே காப்பி அடித்ததாகவே தோன்றியது. அதுவும் ராதாவின் உடை, குடும்பம் போன்றவை அந்த ஊர் கலாச்சார பின்னனியிலேயே அமைந்திருக்கும்.

நான் மகான் அல்ல:-

இதுவும் கூட ஒரு பழிவாங்கும் கதைதான். நீதி மன்றத்தில் ரஜினிகாந்த் அமர்ந்திருக்கும் காட்சி.
http://i13.tinypic.com/44j7hy1.jpg

இந்தப் படத்திலும் ரஜினியின் தங்கையை மானபங்கப் படுத்த முயல்வார்கள்.

இறுதிக்காட்சியில் ரஜினியும் நம்பியாரும் சண்டை போடுவார்கள். அந்தச் சண்டையைப் படிக்கும் முன் இந்தச் சண்டையைப் பாருங்கள்



ப்ரூஸ் லீ படத்தில் வில்லன் கத்திகளால் பின்னப் பட்ட கையுறை அணிந்து சண்டை போடுவது போல நம்பியாரும் கையுறை அணிந்துதான் சண்டை போடுவார். அதைப் போலவே கத்தியை எடுத்து வீசுவார். அது கதவில் குத்தி நிற்கும். பின்னர் கண்ணாடி மாளிகையில் சண்டை போடுவார்கள். ப்ரூஸ்லீ படத்தைப் பார்த்ததாலோ என்னவோ ரஜினி எல்லா கண்ணாடிகளையும் வேகமாக உடைத்துவிடுவார். பின்னர் நம்பியாரை ஓங்கிக் குத்த ப்ரூஸ்லீயின் வில்லன் போலவே நம்பியாரும் கதவில் குத்தி நிற்கும் ஈட்டியில் சிக்கி உயிரை விட்டுவிடுவார்.

நான் சிவப்பு மனிதன் படத்தில் கூட ரஜினியின் தங்கை கற்பழிக்கப் பட்டு தற்கொலை செய்து கொல்வது போல காட்சிகள் அமைந்திருக்கும் சிலகால இடைவெளியில் வந்த ரஜினி படங்கள் ஓரே படத்திலிருந்த காட்சிகளுடன் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தனுஷ்:-
இவரை சின்ன ப்ரூஸ்லீ என்று அவரது ரசிகர்கள் அழைக்கிறார்களாமே
http://im.sify.com/sifycmsimg/jan2008/Tamil/14584727_dhanushbody5a_375x500.jpg

Tuesday, April 7, 2009

அருந்ததி பாணியில் எந்திரன்

அ டி யே பொ ம் மா யி............

சமீப காலமாய் இளைஞர்களை தொல்லைப் படுத்திக் கொண்டிருக்கும் அருந்ததி படத்தின் விளம்பரங்களிலேயே ஆயிரம் சந்திரமுகி ஒன்றாய் வந்தது போல என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். திரையரங்கிற்கு ரசிகர்களை இழுக்கும் படங்களில் ரஜினி படங்கலுக்கு நிகராக அருந்ததி படம் ஓடிக் கொண்டிருக்கிறது. அதைப் பற்றி நாம் ஏற்கனவே எழுதிவிட்டோம்.

அதே பாணியில் ரஜினிக்கு ஒரு கதை யோசித்தபோது தான் நாம் ஏற்கனவே எழுதிய கதை நினைவுக்கு வந்தது. அதை உங்களின் பார்வைக்கு மீள்பதிவாகக் கொடுக்கிறோம். துளி கூட மாற்றி அமைக்காமல் அப்படியே ஒரு மீள்பதிவு.
==========================================================



எந்திரன் புத்தம்புதிய கதை

சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாள் பரிசாக இந்த பொற்காவியத்தை அவரது காலில் சமர்க்கிறோம்.

யந்திரன் entirely different entertainment

முதல் காட்சியில் நாயகன் சங்கராயனிலிருந்து இறங்கி வருகிறார். நாட்டிலேயே முதல்முறையாக பெரிய பெரிய படிப்பெல்லாம் படித்து விட்டு வருகிறார்.

அவரது பெற்றோர் அவருக்கு திருமண்த்திற்கு பெண் பார்க்கிறார்கள். இந்திய கலாச்சாரத்திற்கு தகுந்த பெண்ணாய் பார்க்கிறார். கேரளாவிற்குச் செல்கிறார். போகும் வழியில் பொள்ளாட்சி ரோட்டில் ஒரு பாட்டு. உடன் ஆட ஸ்ரேயா..


கேரளாவில் அவரை வில்லன் கூட்டத்தினர் கடத்தி விடுகின்றனர். தலமை மந்திரவாதி திலகன்,, தலைவரின் உடலில் ஒரு யந்திர தகட்டை வைத்து விடுகிறார். யந்திர தகடு உடலில் சேர்ந்த உடன் தலைவர் வில்லன் கூட்டத்தின் சொல்படி நடக்க ஆரம்பிக்கிறார்.

வில்லன் கூட்டத்தினர், உலகில் உள்ள பெரும்தலைகள் பலரை கொண்று குவிக்க ஆணையிடுகின்றனர். முதலில் ரஷ்யத் தொழில் அதிபரை கொல்கிறார். அதனை ஒரு அழகி விடியோ எடுத்து விடுகிறார். அடுத்து ஜெர்ம்னிக்குச் செல்கிறார்.


இந்த நிலையில் தலைவர் யந்திரத்தின் கட்டுப்பாட்டில் இருப்பது அவரின் குடும்பத்திற்கு தெரிந்துவிடுகிறது. உடனே இமயமலையில் 1000ஆண்டுகள் வாழ்ந்திருக்கும் மகான் அமிதாப்ஜியிடம் செல்கின்றனர். அவர் தனது தவ வலிமையால் தலைவரின் ஆன்மாவைத்தனியாக பிரித்து தலைவரைக் காப்பாற்ற அனுப்புகிறார். தலைவரின் ஆன்மா மனித உருக் கொண்டு தலைவரை காப்பாற்றச் செல்கிறார்.

இந்த நிலையில் எந்திரத் தலைவர் அமரிக்கா செல்கிறார். கடல் கடந்து செல்லும் சக்தியை அமிதாப்ஜி தராததால் ஆத்ம சக்தி திரும்பி விடுகிறார்.


கடல் கடந்து செல்லும் சக்தியை ஆதித்ய கணேசச் சித்தரிடம் தான் இருக்கிறது. அவர் விண்ணுலகம் பார்க்கும் ஆசையில் மண்ணுலகம் நீங்கிவிட்டார். அவரை வரவைக்க சிறப்பு வழிபாடுகள் செய்ய வேண்டும் என்கிறார். அந்த பூசைகளை அவர் திருமணம் செய்து கொள்ளும் பெண்தான் செய்ய வேண்டும் என்கிறார்.

ஐஸ்வர்யா பூஜைகள் செய்து வருகிறார். இந்த சூழ்நிலையில் ஜெர்மானிய தொழிலதிபரைத் தலைவர் ஐ.நா. சபை வாசலில் வைத்துக் கொண்று விடுகிறார். அடுத்த கட்ட பூஜையாக இமயமலை பனிக்கு நடுவே பூங்குண்டம் அமைத்து அங்கே கிடைக்கும் இலைகளை ஆடையாக அணிந்து நடணம் ஆடி பூஜை செய்கிறார்.கூடவே ஐந்து இளம் கன்னிப்பெண்களும் ஆடுகிறார்கள். தலைவர் செய்த கொலையால் உலகமே பரபரப்பாகிறது. இந்தியாவின் மேல் போர் தொடுக்க அமரிக்கா திட்டமிடுகிறது.



அடுத்த கட்டமாக அமெரிக்க ஜனாதிபதியை முடிக்கும் பணி கொடுக்க்ப் படுகிறது. தலைவர் மறுத்து விடுகிறார். வில்லன் குரூப் மந்திர வாதிகள் அதீத கோபம் அடைகிறார்கள். ஐஸ்வர்யாவின் பூஜை காரணமாக ஆதித்ய கணேச சித்தர் தோன்றி பல ரகசியங்களைச் சொல்கிறார்.இந்த வலுவான பாத்திரத்தை சிவாஜி சாருக்கு கொடுக்கிறார்கள். முழுக்க கிராபிக்ஸ்.

தலைவரின் நாடி, நரம்பு, ரத்தம், சதை, நகம், பனியன், ஜட்டி எல்லாமே நல்ல எண்ணங்களும் நல்ல சிந்தனைகளும் இருப்பதால் தலைவர் என்றுமே தவறு செய்யமாட்டார். இதுவரை அவர் கொன்றவர்கள் எல்லாம் உலக பயங்கரவாதிகள். அவர் என்றுமே நல்லவர்களை எதிர்க்க மாட்டார். என்று கூறுகிறார். அடுத்த ரகசியத்தையும் கூறுகிறார். தலைவர் பிறந்த அன்றுதான் வானில் துருவ நட்சத்திரம் காணாமல் போனது. அத்னால் தலைவர்தான் துருவ நட்சத்திரம். இதை வெளியே சொல்லக் கூடாது என்று சத்தியம் வாங்குகிறார். ஆதம சக்தி அமெரிக்கா செல்லும் சக்தியைக் கொடுக்கிறார்.


வில்லன் கோஷ்டி யெந்திரனை அடைத்துவைத்து விட்டு இந்தியா முழுவதும் குண்டு வைக்கின்றனர். ஆத்ம சக்தி அமெரிக்கா சென்று விட்டு, யெந்திரனை விடிவித்து இந்தியா அனுப்பிவிட்டு அங்கே அவர் தங்கிவிடுகிறார். தலைவர் அனைத்து இடங்களிலும் குண்டுகளை எடுக்கிறார். அங்கே அமெரிக்க ஜணாதிபதியைக் காப்பற்றும் பொறுப்பை ஆத்மாவும். இந்தியாவில் நடக்கும் மயிர் கூச்செரியும் சாகஸங்களை யெந்திரனும் செய்கிறார்கள். கூடவே ஐஸ்ஸும் போய் மிகவும் உதவி செய்கிறார். அங்கே தலைவர்க்கு பிரபல டென்னிஸ் வீராங்கணை உதவி செய்கிறார்.


கடைசியில் அமெரிக்காவையும் இந்தியாவையும் தலைவர் காப்பாற்றீவிடுகிறார். இந்த நிலையில் வெளி கிரகங்களீலிருந்து இரண்டு வாகண்ங்கள் வருகின்றன. அதில் இருந்து இறங்குபவர்கள் தாங்கள் ரஜினி ரசிகர்கள் என்று சொல்லிவிட்டு

யூனிவர்ஸ் முழுவதும் உன்னை வென்றிட யாரு...
பிரபஞ்ச நாயகனே ........

பாட்டுடன் படம் முடிவடைகிறது.


டாங்கர் வண்டியில் துரத்தும் படைகளைப் பார்த்து தலைவரின் வசனம்..

யெந்திரனுக்கே யெந்திரமா........



தலைவர் ஒவ்வொருவரையும் போட்டுத்தள்ளும்போது பேசும் வசனம்

நான் ஒருத்தனக் கொண்ணா நூறு பேரை கொண்ண மாதிரி


அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் டக் டக் என்று பயணம் செய்துவிட்டு

ஆண்டவன் சொன்னான் அமெரிக்கா வந்தேன்

ஆண்டவன் சொன்னான் அமெரிக்காவிலிருந்து வந்தேன்


சொல்லி பல வகைகளில் கலகல்ப்பாக்கலாம்.



பின்குறிப்பு:-
வழ்க்கமாக ரஜினி படமென்றால் பழைய ரஜினி படங்களீன் சாயல் இருந்தே தீர வேண்டும். அதனை ஓரளவே நிறைவேற்ற முடிந்தது.

========================================================

நாம் எழுதிய பிற எந்திரன் கதைகளை இங்கே.

அடுத்ததாக இங்கே நீங்கள் படிக்கலாம்

========================================================

முதலிலேயே எழுதிவிட்டதாலும் அதிலும் தமிழுக்காக எழுதியதாலும் அருந்ததி அளவுக்கு ரத்தம் சேர்க்கப் படவில்லை.

Monday, January 12, 2009

பொங்கல் கொண்டாடும் வீரம்மிக்க தமிழ் இளைஞர்களே..

தமிழர் திருநாள் கொண்டாட்டங்கள் துவங்கிவிட்டன். தமிழ்நாட்டு இளைஞர்கள் தங்களுக்கும் உணவு வழங்கிக் கொண்டிருக்கிற பஞ்ச பூதங்களுக்கும் நன்றி சொல்லத் தொடங்கிவிட்டனர். தமிழனின் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டுகளும் நடத்தப் படப் போகின்றன்.

தமிழன் மறந்துபோன தமிழனின் வீர விளையாட்டு ஒன்று இருக்கிறது. அதுதான் இளவட்டக் கல் தூக்குவது. நினைவு படுத்துவதற்கு சில உதாரணங்கள்.
1. முதல்மரியாதை படத்தில் சிவாஜி தூக்குவார். நினைவுபடுத்திப் பாருங்கள். அதற்கு சிறப்பு தீம் மியூசிக் கூட சேர்த்திருப்பார்கள்.
2.விரும்புகிறேன் படத்தில் பிரசாந்த் தூக்குவார்.

இதையும் மீறி ஞாபகம் வராதவற்களுக்கு சிறிய விளக்கம்.. ஊரின் ஒரு முக்கிய இடத்தில் ஒரு பெரிய கல் இருக்கும். அந்தக் கல்லை தூக்கும் சக்திபடைத்தவனுக்கு மட்டுமே திருமணம் செய்யும் தகுதி இருப்பதாக நினைத்தார்கள். எடைக் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.

இன்று கூட கிராமம்தோறும் அந்தக் கல்லை நிறுவலாம். அதில் சிலநிலைகளைக் கூட கொண்டுவரலாம். கொஞ்சம் கொஞ்சமாக எடைகளை அதிகரிக்கலாம். அதைத்தூக்கும் இளைஞர்களுக்கு ஒரு கவுரவம் கூட கிடைக்கும். மற்ற விளையாட்டுகளைவிட ஆபத்து குறைவு. அதே நேரத்தில் வலிமையை நிரூபிக்கும் வாய்ப்பும் அதிகம். செலவும் குறைவு.

இதனால் யாருக்கும் எந்தவிதமான உடல் உயிர் பாதிப்புகளும் கிடையாது. கவுரவமும் கிடைக்கும்.

எனவே தமிழ்நாட்டு இளைஞர்கள் தமிழனின் மானம் காக்கவும் தனது வலிமையை நிரூபிக்கவும், மறைந்துவரும் நமது வீரவிளையாட்டாம் இளவட்டக் கல் தூக்குவதை ஊருக்கு ஊர் தெருவுக்கும் தெரு நிறுவ வேண்டும்.

Sunday, December 7, 2008

சுவாரசியமான பாடல் காட்சிகள்

கதையின் நாயகனுக்கும் நாயகனின் முறைப்பெண்ணுக்கும் திருமணப் பேச்சுக்கள் நடை பெறுகிறதுஇருவரும் ஒருவர்மேல் ஒருவர் மிகவும் அன்புடன் பாசத்துடன் இருப்பவர்கள்முறைப் பெண்னுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை। ஆனால் மாமன்மகனின் ( நாயகனின்) மணம் வருத்தப் படுமே என்று தயங்கி தயங்கி ரொம்ப நிதானமாக
தாங்கள் மனம் வருந்தக் கூடாது। உங்கள் மீது மிகுந்த அன்பு பாசம், மரியாதை எல்லாம் வைத்துள்ளேன், ஆனால்......., ஆனால்..........., நான் நம்ம இன்ஸ்பெக்டர் செழியனை காதலிக்கிறேன்
மிகவும் தயங்கி பில்டப் கொடுத்து நாயகன் ஃபீல் பண்ணாம இருக்க ரொம்ப கஷ்டப் பட்டு டயலாக் பேசி சமாதானப் படுத்துவார்.


இந்த மாதிரி சூழலில் எவ்வளவு ஆழமான் சோகம் பிழிந்தெடுக்கும் பாடல் போட்டிருக்கலாம்। ஆனால் ஜாலியான ஒரு பாடலை போட்டிருப்பார்கள்। ஏன்னா நாயகனும் மாமன் மகளீன் தோழியை லவ்விட்டு இருப்பார்। அவரும் இதே மாதிரி ஃபீல் பண்ணுவார்।
அந்தப் பாடல் இதோ.....

நல்ல வேளை நான் பிழைத்து கொண்டேன்
என் காதலை உன்னிடம் அழைத்து வந்தேன்
நல்ல வாழ்வை நான் அமைத்து கொண்டேன்
அந்த வாழ்விலே உன்னையும் அணைத்து கொண்டேன்
(நல்ல வேளை )


நானே எழுதி நானே நடித்த
நாடகத்தில் ஒரு திருப்பம்
என்னை நம்பியிருந்தாள் அவள் நலம் அடைந்தாள்
என்றும் அது தானே என் விருப்பம்
எதிர் காலம் ஒன்று புது கோலம் கொண்டு
மனவாசல் தேடி வருமே
(நல்ல வேளை )


கண் மேல் பிறந்து கை மேல் முடியும்
கதையில் என்ன தயக்கம்
மலர் கட்டில் அறையில் அன்று கிட்டும் வரையில்
சொல்லும் காவியத்தில் வரும் மயக்கம்
ஒரு பாதி அங்கும் மறு பாதி இங்கும்
சரி பாதி இங்கு வருமே
(நல்ல வேளை )


மடி மேல் துயிலும் கொடி போல் துவளும்
பேரழகை படம் பிடித்தேன்
அந்த பட்டு முகத்தை இந்த சுட்டு விரலால்
தொட்டு பார்க்கையிலே உயிர் துடித்தேன்
காதல் போன்ற உள்ளம் கரை மீறி துள்ளும்
உடல் சேரும் எண்ணம் வருமே
(நல்ல வேளை )

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails