Saturday, September 19, 2009

மயங்கிச் சரிந்த மாணவர் தலைவி 19.9.09

ஆத்தா வையும், சந்தைக்குப் போகணும் காசு குடு
என்று பதினாறு வயதினிலே கமல் சொல்லுவது சுமித்ரா சொல்லிக் கொண்டிருந்தாள். ஏன் எதற்கு? என்று கேட்பவர்கள் sweet sixteen பகுதியைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்

நாளைக்கு நான் தான் கேஸ் பிரசண்ட் பண்ண போறேன். சீஃப் கிளாஸ். நான் போய் ப்ரிப்பேர் பண்ணனும். சுமித்ரா புலம்பிக் கொண்டிருந்தாள். கொஞ்ச நேரம் பேசிய பிறகு சொல்வதைக் கவனிக்க ஆரம்பித்தாலும் அவளுக்கு மறுநாள் புறநோயாளிகள் பகுதியில் துறைத்தலைவரின் முன்னிலையில் பேசப் போகும் நிகழ்ச்சியே அவள் மனதில் ஆக்கிரமித்திருந்தது.


வெள்ளெலி வினிதா வந்து சாட்சி சொன்னால் ஓரளவு மேட்டரை டம்மி ஆக்கிவிடலாம். அஜித் சொல்லிக் கொண்டிருந்தான்.

வினிதா ஏண்டா சொல்லமாட்டாளாம்? சார்லி ஆச்சரியமாய் கேட்டான்.

அவங்க பேட்ச் பசங்களுக்கு எதிரா சாட்சி சொன்னா அவள அவங்க பேட்ச்ல ஒதுக்கிவச்சிருவாங்களோன்னு பயப் படறாடா.. எவனோ ஒருத்தன் அவளுக்காக விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தான்.

இப்ப ஜூனியர் பசங்கள கரக்ட் பண்ணிணா வெள்ளெலிய சாட்சி சொல்ல வச்சிடலாம். அப்படித்தானே... இது சச்சின்.

அப்ப வாங்க மக்களே போய் ஜூனியர் பொண்ணுங்கள கரெக்ட் பண்ணுவோம்.
இது வையாபுரி...

கடலை போட வாய்ப்பு கெடச்சா விட மாட்டீங்களே.. இது சுமித்ராவின் அல்லக்கை ஒன்று பேச ஆரம்பித்திருந்தது.

அதெல்லாம் நாங்க முயற்சி செய்து பார்த்துட்டோம். ஜூனியர் பொண்ணுங்க இருக்கற விங் பக்கமே போக விடமாட்டேங்கறாங்க
இளவரசனின் நலம்விரும்பி ஒருத்தி சொன்னாள்.

இதுக்கெல்லாம் சரியான ஆள் முட்டைத் தோசைதான். அவன் எங்கடா போனான்?

முட்டைத் தோசையின் பெயர் காரணம் இந்தச் சுட்டியிலும், அவன் எப்படி இந்த வேலைக்கு பொறுந்தி வருவான் என்பது பற்றி இந்தச் சுட்டியிலும் கொடுக்கப் பட்டுள்ளது.

கழுத கெட்டா குட்டிச்சுவரு...,

முட்டை தோசைக்கு காம்பவுண்ட சுவரு..,


சச்சின் மீண்டும் ஒரு பன்ச் எடுத்துவிட்டான். அதற்குள் முட்டைத்தோசையும் வந்து சேர்ந்தான். முட்டைத் தோசையின் அடி பொடிகளாக மாறியிருந்த ஜூனியர் மாணவர்களும் அழைக்கப் பட்டனர். அதற்குள் ஆறுமணி ஆகிப் போயிருந்தது.

முட்டைத்தோசையின் அடிபொடிகள் வந்து சேர்ந்தபின் அவர்களிடம் கொஞ்ச நேரம் பேசினான் முட்டைத்தோசை. அவர்களிடம் பேசியதில் அக்சய் பற்றி நல்ல அபிப்ராயம் இல்லாமல் இருப்பது தெரிந்தது. அவர்களின் துணையுடன் மாணவியர் விடுதிக்குச் சென்று வெள்ளெலி வினிதாவிடம் பேசினார்கள்.

ஒருத்தனுக்காக ஒரு ஊரே மாமா வேலை பாக்குது பார்!
வழக்கம்போல் பன்ச்சுடன் கூடிய கவிதையை சச்சின் சொல்லிக் கொண்டிருந்தான். நடந்ததைச் சொல்ல வினிதா ஒத்துக் கொண்டாள்.

சரிடா ! இத நேரில பார்த்த ஏ.பி. (உதவி பேராசிரியர்) யிடம் யார் பேசறது?

யார் பேசறதா? இந்த மாதிரி விஷயத்துக்காகத் தான நம்ம பேட்சில் டேன்ஞர் டயபாலிக் இருக்கான்! சுமித்ரா அதிரடியாக அறிவித்தாள்.

இப்ப நீதான் ரெப்பு அதுனால நீதான் போகணும். இது முட்டைத்தோசை.

ஒன்பது மணிக்கு மேல என்னைய வெளிய விட மாட்டாங்க. தவிரவும் இந்தமாதிரி விஷ்யங்களுக்கெல்லாம் அவந்தான் அனுபவசாலி.

ஆமா ஆமா அக்கா ஒருமுறை சொன்னா நூறுமுறை சொன்னா மாதிரி சச்சின் தனது வழக்கமான நகைச்சுவை குரலில் சொன்னான். ஏன் இந்த வசனம் இங்கு வந்தது என்று தெரியாதவர்கள் இந்தச் சுட்டியையும், இந்தச் சுட்டியையும் அழுத்தவும்.

================================================

மறுநாள் காலையில் வெகுநேரத்திலேயே எழுந்து மருத்துவமனைக்குச் சென்று அவள் தரவேண்டிய நோயாளியின் விவரங்களைத் தொகுக்க ஆரம்ப்பித்தாள் சுமத்ரா. அதற்கு முந்தய நாள் இரவு முழுவதும் கண்விழித்து அந்த வகுப்பிற்காக தயார் செய்தது வீண்போகவில்லை என்று சொல்லும் அளவுக்கு சிறப்பாகவே பிரசண்ட்செய்திருந்தாள். அதனால் ஒன்பது மணிக்கு முடிக்கப் படவேண்டிய வகுப்பு ஒருமணிநேரம் கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டது. மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களும். பெண்களில் சிலரும் வகுப்பிற்கு வரவில்லை.

வழக்கமாக ஒன்பதுமணிக்கு முடிக்க வேண்டிய துறைத்தலைவர் அன்று பத்துமணி அளவில்தான் முடித்தார். அவரது வகுப்பு முடிந்த உடன் வேகமாக ஓடிவந்து சுமனின் இருசக்கர வாகனத்தில் ஏறினாள் சுமித்ரா . அவர்கள் இருவரும் வேகமாக ஓடிவந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்டது அருகில் இருந்த தேநீர் அருந்தகத்தில் இருந்த அனைத்து மாணவர்களாலும் சிலபல ஆசிரியப் பெருமக்களாலும் கேள்விக் குறியோடு பார்க்கப் பட்டது.


அடுத்த சில பலநிமிடங்களில் இருவரும் கல்லூரி வந்து சேர்ந்தனர். வாகனத்தை நிறுத்தும்போது கட்டிடத்தின் இன்னொரு பக்கத்தில் துணை முதல்வரும், சில உதவிப் பேராசிரியர்களும் மேலே வந்து கொண்டிருப்பது தெரிந்தது. மிகவேகமாக இருவரும் துணைமுதல்வரின் அலுவலகத்திற்குச் சென்றனர். அந்த அலுவலகத்தின் அறைக்கதவை மிகவேகமாகத்திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான் சுமன்.

அங்கே ஜூனியர் மாணவர்கள் சிலரும், இளவரசன் நண்பர்கள் சிலரும் இருந்தனர். டேஞ்சர் டயபாலிக் அங்கே இல்லை.

அந்தக் கதவு தானே மூடிக்கொள்ளும் வகையில் அமைந்திருந்த கதவு. அவன் திறந்த வேகத்திற்கு திரும்பிவந்த கதவு சுமித்ராவின் முகத்திலேயே மோதியது. அடிபட்ட வேகத்தில் சுமித்ரா மயங்கிச் சரிந்தாள். மூக்கில் ரத்தம் ஒழுக ஆரம்பித்தது.

கொஞ்ச நேரத்திற்கெல்லாம் சுமித்ராவின் முகத்தில் தண்ணீர் தெளித்துப் பார்த்தும் மயக்கம் தெளியவே இல்லை. துணைமுதல்வர் அறை வாசலில் சுமித்ரா மயங்கிக் கிடக்க அவரது அறையை அவரோடு சேர்ந்த குழுவினர் நெருங்கிக் கொண்டிருந்தனர்.

===================================================

தொடரும்...

-------------------------------

முந்தைய பகுதிகளுக்கு இந்தச் சுட்டியை அழுத்தவும்.

=======================================================


6 comments:

  1. ''ஒன்பது மணிக்கு மேல என்னைய வெளிய விட மாட்டாங்க''


    ippo yellam aaru mani pannittathaa kelvi patten....

    ReplyDelete
  2. வேகமா படிச்சிட்டு வந்தேன் ஆனா.... //தொடரும்// என்னது இது?

    ReplyDelete
  3. //mahe said...

    ippo yellam aaru mani pannittathaa kelvi patten....//


    அடக் கொடுமையே..,

    சிறப்புக்காரணம் ஏதாவது உண்டா?

    ReplyDelete
  4. // சிங்கக்குட்டி said...

    வேகமா படிச்சிட்டு வந்தேன் ஆனா.... //தொடரும்// என்னது இது?//

    இது தொடர்கதை தலைவா...,

    ReplyDelete
  5. ஓ! நிறையத் தயங்கிய மங்கை மயங்கிட்டாளா?! பாக்கலாம்!

    ReplyDelete
  6. // சங்கா said...

    ஓ! நிறையத் தயங்கிய மங்கை மயங்கிட்டாளா?! பாக்கலாம்!//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..,

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails