Sunday, January 23, 2011

நெஞ்சுக்கு நடுவில் தொங்கிய வாக்மேன்

சுமித்ரா, நக்மா இரண்டு பேரும் காணாமல் போனது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அப்பாடா...,,, தலைக்கு வந்தது தலைப் பாகையோடு சென்றது என மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம். ஏறக்குறைய கொண்டாட்டங்கள் துவங்கிவிட்டன... இந்த சூழலில் எங்கள் தானைத் தலைவர், அன்பு அண்ணன், கடமைதவறா மாவீரன் டயபாலிக் எங்களை அழைத்தார். அவர் வகுப்புத் தலைவர் அல்லவா..., பொறுப்பு பொங்கி வழிந்தது....

என்னடா..,

போயி ரெண்டு பேரெயும் கூட்டிட்டி வாங்கடா..,

ரெண்டில்ல

ரெண்டோடு ரெண்டு நாலு..........


நாங்கூப்டாவல்லாம் வரமாட்டா.......... வேற யாராயவது அனுப்பு,


கடுப்பானார் டயபாலிக். சற்று கோபமாகவே சென்சார் செய்யக்கூட கூச்சப்படும் வகையில் தனது சர்வாதிகாரத்தைப் பயன்படுத்தி டயபாலிக் எங்களுக்கு உத்தரவிட்டார்..
==========================================================


கதையின் முதல் பகுதி "அடப்பாவி மணமேடையில்கூட


இரண்டாம் பகுதி நண்பர்கள் என்றும் சொல்லலாம்

மூன்றாம் பகுதி இந்தப் பூனையும் பால் குடிக்குமா?

நான்காம் பகுதி ஃபிகர் இல்லடா.., ஃபிகர் மாதிரி

ஐந்தாம் பகுதி ஒருத்திக்கு எத்தனை பேர்டா லவ் லெட்டர் கொடுப்பீங்க

ஆறாம்பகுதி நான்கு பெண்களைக் காணவில்லை. சுட்டிகளைப் பயன்படுத்திப் படித்துவிடுங்கள்.
=========================================================

முதல்பகுதியில்


எங்களில் முதலில் திருமணம் ஆனது சுமித்ராவிற்குத்தான். இன்னும் பயிற்சிக் காலத்தில் நாங்கள் அனைவரும் இருந்ததால் சுமித்ராவின் திருமணத்திற்கு எல்லோரும் சென்றிருந்தோம். மணமக்களுக்குப் பரிசுகளை நாங்கள் கொடுத்தபோது சுமித்ராவின் கணவர் சுமன்குமாரைப் பார்த்து கேட்ட கேள்விதான் எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

"ஏன் இந்தப் பையன் மட்டும் இவ்வளவு சோகமாய் இருக்கிறான்?" என்று கேட்டார்.

"அடப்பாவி மணமேடையில்கூட என் வாழ்க்கையில் விளையாடுகிறாயா" என்று சொன்னாள் சுமிதரா.

(ஒரு ஞாபகத்துக்காக) கதை சுபமாகத்தான் முடியும்

=========================================================

வரவர டயபாலிக் ரொம்ப பண்றாண்டா..,, இவளுகல்லாம் வந்தா என்ன? போனால் என்ன? இவளுகப் போயி தேடச் சொல்றாண்டா.. புலம்பிக்கொண்டே வந்தான் சச்சின்.., அறிவைத் தவிர எல்லாம் வளர்ந்திருக்கும். அவ என்னைக்காவது நம்மள மதிச்சிருக்காளா? அவள ஏண்டா நம்ம தேடணும். சச்சினுக்கு நக்மா என்றாலே அலர்ஜி.. அல்ர்ஜி என்றால் சாதாரண அலர்ஜி அல்ல. அனாபைலாகிக்ஸ் என்று சொல்லக் கூடிய அளவு அதி தீவிர அலர்ஜி. கடுப்பின் உச்சத்தில் டயபாலிக்கை கொதறிக்கொண்டே இருந்தான். இத்தனைக்கும் அந்தப் பெண்களின் காதலர்கள் என்ற லேபிளில் ஆள் இருக்கும் போது தன்னை அனுப்புவதில் இன்னும் பெரிய கோபம்.

வாடா.., இன்னொரு முறை லால்பாக் சுத்திப் பார்க்கலாம். சற்று சமாதானப் படுத்திக்கொண்டே லால்பாக் கில் வலம்புரியாக சுற்ற ஆரம்பித்தோம். நண்பன் இங்கிலீஷ் குப்பனும், அஜித்தும் இடம்புரியாகச் சுற்ற ஆரம்பித்தார்கள்.

250 ஏக்கர் பரப்பலவில் பரந்துவிரிந்து கிடக்கும் பெரிய பூங்கா அது. தோட்டங்களாகவே பரவிக்கிடந்தது. அதில் செடிகளிலேயே கடிகாரம் செய்து வைத்திருந்தனர்.

டேய் அங்க பாரு சச்சின் கூவினான். என்னடா ட்ரெஸ் இது ஆம்பிளையா பொம்பளையான்னே தெரியல..............

போடா. இந்த ஊர்ல நெரயாப் பெண்கள் ஜீன்ஸ் போடறாங்க........ வந்த வேளையைப் பாரு..

ஆனா இந்த மாதிரி எந்தப் பொம்பளயும் ஜீன்ஸ் போட மாட்டா. எவ்ளோ பெரிய கூலர்ஸ் போட்டிருக்கா பாரு. நான்கூட வழியில வாங்கலாம்னு சொன்னேன். நீதான் மஞ்சுளா( உலகம் சுற்றும் வாலிபன் நாயகியேதான்) கண்ணாடி மாதிரி இருக்குன்னு சொல்லீட்டே.....

நாங்கள் போகும் வழியில் ஒரு அம்மன் கோவில் இருந்தது. அங்கு உள்ள பெட்டிக்கடையில் 20அல்லது30 ரூபாய் கண்ணாடிகள் குவித்துவைத்திருந்தனர். அதைக் கேட்டு சச்சின் அடம்பிடித்துக் கொண்டிருந்தான். நாங்கள்தான் கேவலமாக இருப்பதாகச் சொல்லித்தடுத்துவந்தோம். ஆனால் அதே மாதிரி கண்ணாடி இங்கே இன்னொரு பெண்..

பாதுகாப்பான தொலைவுக்கு சச்சினை அழைத்துவந்துவிட்டு நாங்கள் இருவரும் அந்த நாகரீக மங்கையை நோட்டமிட ஆரம்பித்தோம். ஒரு கையில் ஏதோஒரு சிப்ஸ், இன்னொரு கையில் வேறொரு ஐட்டம்.

டேய் வாக்மேன் பாருடா...

இல்லடா அவ பொண்ணுதான்.., எனக்கு நல்லாத்தெரியுது.

நானும் அதைத்தாண்டா சொல்றேன்..

வாக்மேன் எங்க மாட்டியிருக்கா பாரு...

எங்கே என்று வாய் கேட்டாலும் கண்களுக்கு அந்த இடம் கிடைத்துவிட்டது..

அந்த பெண் அணிந்திருந்த டி-சர்ட்டின் நெஞ்சுப் பகுதியில் வாக்மேனை செருகிக் கொண்டு இரண்டு கைகளிலும் ஏதோ ஒன்றை வைத்துக் கொண்டு அந்தப் பெண் நடந்துகொண்டிருந்தாள்.. வாக்மேன் கருவி சற்று எடை கூடிய கருவி என்பது அது மாட்டிய இடத்தை கீழே இழுத்ததில் இருந்து எங்களால் உணரமுடிந்தது.

அவள்ந்டையே வேறொரு மாதிரி இருந்தது. அப்போது அந்த அவளின் தோழிப் பெண் வந்து சேர்ந்தால். தோழியைப் பார்த்த உடன் எங்களுக்கு அடையாளம் தெரிந்துவிட்டது. அந்த நாகரீக வேற்று கிரகவாசி நக்மாதான் என்று.. வேகமாக அவள் அருகில் சென்றோம்.

நக்மா எங்கள் வகுப்பில் இருந்தாலும் கடந்த ஒரு ஆண்டில் அவளை நாங்கள் (நான்) அவ்வளவு அருகில் இருந்து பார்த்ததில்லை. தவிரவும் புடவை கட்டி கோட் போட்டுப் பார்த்த ஜீவராசியை நாகரீகக் கண்கொண்டு பார்த்ததில் எங்களுக்கு அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுவிட்டது. தனது ரசனையும், நக்மாவின் ரசனையும் கூலர் விஷயத்தில் ஒன்றாய் அமைந்தது சச்சினுக்கு மிகுந்த சந்தோஷம். டயபாலிக் எது செய்தாலும் ஒரு அர்த்தம் இருக்கும்டா.. (டயபாலிக்கின் பாத்திரம் வித்தியாசமானது அவர் எது சொன்னாலும் அவரது நண்பர்கள் அவரைத் திட்டுவார்கள். ஆனால் அவர் சொல்வதைத்தான் கேட்பார்கள்)

போற்றுவார் போற்றட்டும்; தூற்றுவார் தூற்றட்டும் போகட்டும் டயபாலிக்குக்கே

என்ற எண்ணமே டயபாலிக் யின் நண்பர்களுக்கு இருந்தது.

டயபாலிக் யை புகழ்ந்து கொண்டே நக்மாவுடன் கடலை போட ஆரம்பித்தான். சச்சினுக்கு கல்லூரி வாழ்க்கையில் அதுதான் முதல் கடலை. அதுவே நன்கு விளைந்து கொண்டிருந்ததில் மிகுந்த மகிழ்ச்சி. நடுவில் வாக்மேனின் கேசட் கூட மாற்றிவிட்டான்.அவள் இரண்டு கையிலும் வைத்திருந்த நொறுக்கு தீனிகளை கைகளை மாற்றாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். இவன் பேசிக்கொண்டே இருந்தபோதிலும் காதில் இருந்த இயர்பீஸை கழட்டாமலேயே சச்சினுடன் கடலை போட்டுக் கொண்டுவந்தாள் நக்மா, கூடவே அல்லக் கையும்

பத்தடி தள்ளி நானும் அவர்கள் பின்னாலேயே பேருந்துவுக்கு வந்து சேர்ந்தேன்.

பேருந்தில் சுமித்ராவும் உட்கார்ந்திருந்தாள். இங்கிலீஸ் குப்பனையும் அஜித்தையும் பார்த்தியா? இது நான்



நாங்க ஏன் அவனுகள பார்க்கணும்? வழக்கம் போல் சுமித்ரா உதார்விடத்தொடங்கினாள்

உங்க ரெண்டு பேரையும் தேடிட்டுத்தான் வந்தானுக...

நாங்க என்ன சின்னப் பொண்ணுகளா... தொலஞ்சு போக சுமித்ரா கொஞ்சம் அமைதியாக பதில் சொன்னமாதிரி இருந்தது.

உங்களுக்காகத்தான் வண்டி ஒருமணிநேரம் காத்துக் கிடக்கு. இது இன்னொரு தோழி.

அவர்களைப் பார்ர்கவே இல்லை என்று சொல்லிவிட டயபாலிக் கொஞ்ச நேரம் பொறுமையாக இருக்கச் சொன்னான்.

கொஞ்ச நேரத்தில் இங்கிலீஷ் குப்பனும் அஜித்தும் வந்து சேர்ந்தனர்.

கூப்பிட்டுக்கிட்டே இருக்கேன். நீ பாட்டுக்கு வந்துக்கிட்டே இருக்க வந்ததும் கோபத்துடன் அஜித் சொன்னான்.

சுமித்ராவின் தோழி:- நான் அப்பவே சொன்னேன். இவதான்

கூப்ட்டா போகதடி. விவகாரம் புடிச்சவனுக ன்னு சொன்னா..

இங்கிலீஷ் குப்பன்:-உங்களத்தேடி நாங்க வந்தா எங்களுக்கு அல்வா கொடுத்துட்டு சுத்துரியா

சுமித்ரா:-இங்க பாரு நீ எங்கள தேடி வருவேன்னு எங்களுக்கு எப்படித் தெரியும். ஏதோ ரவுசு உடறேன்னு நினைச்சு அப்படிச் சொன்னேன். நீ பாட்டுக்கு பேசிக்கிட்டே போற.. முதல்ல வாய மூடு..

இங்கிலீஷ் குப்பன் பயங்கர கடுப்புடன் அடிங்க்............... என்று சொல்லிக் கொண்டு பாய்ந்தான் . மூடு என்பது அவர்களின் வட்டாரச் சொல்லில் ஒரு கெட்டவார்த்தை என்பது அதன்பின் தான் எங்களுக்குத் தெரிந்தது.

திருதிருவென முழித்துக் கொண்டிருந்தான் சுமன்குமார்

=========================================================

தொடரும்

16 comments:

  1. //thevanmayam said...

    வந்துவிட்டேன்!!!
    //

    நன்றி சார்,

    ReplyDelete
  2. புதுப் பெட்டி போட்டாச்சு.பின்னூட்டம் இட பழைய சிரமங்கள் குறைந்திருக்கும் என்று நினைக்கிறேன்

    ReplyDelete
  3. //மூடு என்பது//

    டப்பியக் கட்டு, பொத்து, சாத்து...இப்பிடி இறைய...

    ReplyDelete
  4. //பழமைபேசி June 12, 2009 10:55 PM

    //மூடு என்பது//

    டப்பியக் கட்டு, பொத்து, சாத்து...இப்பிடி இறைய...
    //

    ஆமா தல கொஞ்சம் நுணுக்கமான மேட்டர்தான்

    ReplyDelete
  5. தொடரட்டும்..தொடரட்டும்..

    ReplyDelete
  6. //நசரேயன் June 12, 2009 11:49 PM

    தொடரட்டும்..தொடரட்டும்..
    //

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல..,

    ReplyDelete
  7. சார்,

    சூப்பர். இது நிஜம்மாலுமே நடந்ததா என்ன?

    மூடு என்பது நம்ம சிங்காரச் சென்னையில் கூட ஒரு தவறான சொல்லே.
    ஆனால் இந்த அளவுக்கு கேட்ட வார்த்தை இல்லை.

    ReplyDelete
  8. ஒன்னுமே புரியலியே

    உலகத்துல

    என்னமோ நடக்குது போங்க‌

    ReplyDelete
  9. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ஒலக காமிக்ஸ் ரசிகன் சார்,

    ஸ்டார்ஜன் சார்,

    ReplyDelete
  10. மூடு என்பது நேரடையான கெட்ட வார்த்தை இல்லாவிட்டாலும் கேவலப்படுத்தும் ஓர் சொல். அதைக்கேட்டா கோவம் வரத்தான் செய்யும். அதைப்பற்றி இங்க விலாவாரியாவா சொல்லமுடியும் இஃகிஃகி

    ReplyDelete
  11. //குறும்பன் June 13, 2009 7:12 AM

    மூடு என்பது நேரடையான கெட்ட வார்த்தை இல்லாவிட்டாலும் கேவலப்படுத்தும் ஓர் சொல். அதைக்கேட்டா கோவம் வரத்தான் செய்யும். அதைப்பற்றி இங்க விலாவாரியாவா சொல்லமுடியும் இஃகிஃகி
    //


    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல

    ReplyDelete
  12. வழக்கம் போலவே விறுவிறுப்பு.

    அசத்துங்க தல‌

    ReplyDelete
  13. @T.V.ராதாகிருஷ்ணன்
    @அக்பர்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே

    ReplyDelete
  14. @T.V.ராதாகிருஷ்ணன்
    @அக்பர்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails