Tuesday, December 29, 2009

டபுள் மீனிங் 29-12-09

வழக்கம்போல் சுதந்திரப் பறவையாகவே சுமித்ரா சுற்றிக் கொண்டிருந்தாள். அவளுக்கு உள்ள சாதாரணப் பொறுப்புக்களைக்கூட உடன் படிக்கும் மாணவர்கள் பில்ட் அப் கொடுத்துக் கொண்டே இருந்ததால்  அவளுக்கு தான் ஏதோ ஒரு சாதனை மங்கை போன்ற பெயர் வந்துவிட்டிருந்தது.  அதுவும் சுமன் முன்மொழிந்த நார்த்தி பீஸைத் தோற்கடித்துவிட்டதால் தனக்கு ஒட்டு மொத்த மாணவர்கள் செல்வாக்கும் நிறைந்து இருப்பதாகத் தனக்குத் தானே நினைத்துக் கொண்டிருந்தாள்.  அவளை ஓட்ட நினைக்கும் மாணவர்கள் அவள் கையசைத்தாலும் கண்ணசைத்தாலும் சூப்பர் சூப்பர் என்று சொல்லிக் கொண்டிருந்தனர். அவள் தும்மினால் கூட 1967லிருந்து இந்தக் கல்லூரியி இவ்வளவு சூப்பராக தும்ம ஆளே இல்லை என்று சொல்ல ஆரம்பித்திருந்தனர், அதையும் சுமித்ரா நம்பிக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்தாள்.


இப்படி அதீத நினைப்பில் சுற்றிக் கொண்டிருந்தவளிடம் உன்னுடன் வந்திருப்பவன் பெயர்  தீஃபக் குமார் என்றதும் அவள் கண்களில் பொறிபறக்க ஆரம்பித்தது.

கொஞ்சம் உங்கள் கால்கள் துவளுவது போலத் தோன்றியது.  அவள் த்னியாகத்தான் பொருட்காட்சிக்கு கிளம்பினால் பொருட்காட்சி வாசலில் ஹாய் சொல்லிக் கொண்டு தீபக் குமார் வந்தான். அவளும் ஒரே கல்லூரி என்பதாலும் இப்போதெல்லாம் பலரும் பல பிரச்சனைக்கு தன்னை அனுகுவதாக நினைத்துக் கொண்டிருந்ததாலும் அவனுடன் பேசிக் கொண்டுவந்திருந்தாள்.  ஆனால் இவர்கள் இப்படி பேசுவதற்கு உதட்டளவில் எதிர்ப்பு தெரிவித்தாலும் உள்ளுக்குள் கொஞ்சம் உதருவதாகவே தோன்றியது.

தீபக் குமார் அப்போது கையில் பெரிய சைஸ் அப்பளத்துடன் வந்தான். ஒரு அப்பளத்தை  சுமித்ராவிடம் கொடுத்தான். மற்ற மாணவர்களிடம் என்ன பாஸ் நீங்க இதை ஏற்கனவே டேஸ்ட் பண்ணியிருப்பிங்களே...,


பாருடா டபுள் மீனிங் பேசறான். சுமனின் நண்பன் ஒருவன் தனக்கும் தன் அருகில் இருந்தவனுக்கும் மட்டும் கேட்பதுபோல் சொல்லிக் கொண்டது  சுமிதராவுக்கும் சேர்ந்து கேட்டுத் தொலைத்தது. 

இல்லை  எங்களுக்கு இதிலெல்லாம் இண்டரெஸ்ட் இல்ல இது சுமன்..,

நான் அப்படி இல்லப்பா ..,   டேஸ்ட் பண்ணனும்னு நினைச்சா சான்ஸ் கிடைச்ச உடனே டேஸ்ட் பண்ணிடுவேன்..,

ஆனால் பாரு..,  இதெல்லாம் ஒருநாள் சாப்பிட்டா ஓ.கே.., டெய்லினா  வயிறும் தாங்காது.., பாக்கெட்டும் தாங்காது..,

ஏண்டா.., இவன் அப்பளத்தைதான சொல்றான்,  எனக்கு என்ணென்னமோ தோணுதுடா..,

ஓ.கே பாஸ் நாங்க கிளம்புறோம். நீங்க நம்ம ஸ்டால பாத்துக்கங்க.., நாங்க சுத்திப் பார்க்கறதுக்கு நிறைய இருக்கு. சுமித்ரா போலாமா?

போம்ம்மா போ..,  போய் சுத்திப்பாரு...,  சுமன் சொன்ன குரல் அவனுக்கு கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது,

தொடரும்............................................................>>>>>

முந்தைய பகுதிகளுக்கு இந்தச் சுட்டியைத் தட்டுங்கள்

============================================================

14 comments:

  1. டாக்டர் நீங்க தலைப்பு வைக்கிறதிலே டாக்டர் தான்

    ReplyDelete
  2. தல, ஆரம்பிக்கிறதுக்குள்ள முடிஞ்சிருச்சி.

    மீதி எங்கே.(அப்பளத்தை இல்லை பதிவை சொன்னேன்)

    ReplyDelete
  3. // நசரேயன் said...

    டாக்டர் நீங்க தலைப்பு வைக்கிறதிலே டாக்டர் தான்//

    வாங்க தல முந்தைய பதினொன்பது பகுதிகளைப் படித்திருப்ப்பீர்கள் என்று நம்புகிறேன்..,

    ReplyDelete
  4. //அக்பர் said...

    தல, ஆரம்பிக்கிறதுக்குள்ள முடிஞ்சிருச்சி.

    மீதி எங்கே.(அப்பளத்தை இல்லை பதிவை சொன்னேன்)//

    இந்தக் கற்பனைக் கதையின் இந்தப் பகுதிக்கு பலத்த எதிர்ப்பு தல.., இதைத்தான் எழுதப் போகிறேன் என்று யூகித்தபலரும் பல பகுதிகளை வெட்டச் சொல்லி கட்டாயப் படுத்திவிட்டார்கள்..,

    ReplyDelete
  5. //ஆரம்பிக்கிறதுக்குள்ள முடிஞ்சிருச்சி.//


    :-)))

    ReplyDelete
  6. ////ஆரம்பிக்கிறதுக்குள்ள முடிஞ்சிருச்சி.//


    :-)))//


    கண்டிப்பாக தொடரும்..,

    ReplyDelete
  7. தலைவா... 2010ல முடியுமா? இல்ல 2012 ல முடியுமா??

    தொடர்ந்து படிக்க முடியல தல..

    படிக்காமலேயே நல்லா இருக்குன்னு சொல்ல மனசு வரல.. :-)

    2010 ல படிச்சுர்றேன்

    ReplyDelete
  8. இந்த இடத்துல படிச்சுட்டேன்...

    ReplyDelete
  9. கதை அருமை ; தொடரட்டும்

    ReplyDelete
  10. // கடைக்குட்டி said...

    தலைவா... 2010ல முடியுமா? இல்ல 2012 ல முடியுமா??

    தொடர்ந்து படிக்க முடியல தல..

    படிக்காமலேயே நல்லா இருக்குன்னு சொல்ல மனசு வரல.. :-)

    2010 ல படிச்சுர்றேன்//



    மனமிருந்தால் மார்க்கமுண்டு..,

    ReplyDelete
  11. // ஸ்ரீராம். said...

    இந்த இடத்துல படிச்சுட்டேன்...//

    எல்லாத்தையும் படித்துவிடுங்கள்..,

    தனியாகச் சுட்டிகளின் வரிசையைக் கொடுத்துள்ளேன்

    ReplyDelete
  12. // Starjan ( ஸ்டார்ஜன் ) said...

    கதை அருமை ; தொடரட்டும்//

    நன்றி தல..,

    ReplyDelete
  13. உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. //அக்பர் said...

    உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.//

    நன்றி மற்றும் வாழ்த்துக்கள்..,

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails