Monday, October 19, 2009

பதினெட்டு பூர்த்தியாகிவிட்டது

25வது வாரமாக ஒரு தொடர்கதை போய் கொண்டு இருக்கிறது. கோவை மருத்துவக் கல்லூரி பின்புலத்தில் ஏப்ரல் 28நாள் நான் எழுதத் தொடங்கிய இந்தத் தொடர்கதை உங்கள் அனைவரின் ஏகோபித்த ஆதரவுடன் பதினெட்டு பகுதிகளை தாண்டிச் சென்றுக் கொண்டிருக்கிறது. ஒரு முழுமையான கற்பனைக்கதைக்கு உற்சாகப் படுத்திக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி.

கதையின் முதல் பகுதி "அடப்பாவி மணமேடையில்கூட


மணமக்களுக்குப் பரிசுகளை நாங்கள் கொடுத்தபோது சுமித்ராவின் கணவர் சுமன்குமாரைப் பார்த்து கேட்ட கேள்விதான் எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

"ஏன் இந்தப் பையன் மட்டும் இவ்வளவு சோகமாய் இருக்கிறான்?" என்று கேட்டார்.


இரண்டாம் பகுதி நண்பர்கள் என்றும் சொல்லலாம்


ஒரு மணிநேரத்திற்குப் பிறகு திடீரென சிந்தனையில் ஒரு அடைப்பு. கருத்துக்கள் வெளியே வரமால் தடுமாறியபோது பக்கத்தில் யாரிடமாவது உதவி கிடைக்குமா என்று ஆராந்தபோது சுமித்ராவும் சுமனும் அந்தக் கால கங்கூலியும் டெண்டுல்கரும் போல கூட்டணி அமைத்து தேர்வெழுதி கொண்டிருந்தனர். 

மூன்றாம் பகுதி இந்தப் பூனையும் பால் குடிக்குமா?

எங்களிடம் சிக்கிய மாணவனிடம் விசாரித்த போது இது கடந்த ஒரு வாரமாக நடப்பதாகத் தெரிந்தது. அந்தப் பெண்ணின் பெயர் ஊர் ஆகியவற்றை விசாரிப்பதற்கும் புதிய மாணவன் என்னை ஒன்னும் பண்ணாதீங்க சார் என்று அழ ஆரம்பித்து விட்டான்.

நான்காம் பகுதி ஃபிகர் இல்லடா.., ஃபிகர் மாதிரி


மறுநாள் அன்று அந்த ஜூனியர் மாணவன் முழு பயோ டேட்டாவுடன் வந்து நின்றான். எனக்கே ஆச்சரியமாய் இருந்தது. சீனியர் மாணவர் கேட்டார் என்று ஏறக்குறைய மிரட்டி முழு விவரங்களும் வாங்கிக் கொடுத்துவிட்டான். பின்னாளில்தான் தெரிந்தது சீனியர் கேட்டார் என்றே நிறைய மாணவிகளின் முழுவிவரங்களையும் வாங்கி வைத்திருக்கிறான். எத்த்னை பேருக்கு என்னைக் காட்டி விவரங்கள் வாங்கினானோ தெரியவில்லை.


ஐந்தாம் பகுதி ஒருத்திக்கு எத்தனை பேர்டா லவ் லெட்டர் கொடுப்பீங்க

ஒரு குழுவாக நடு இரவில் கால்பந்து மைதானத்தின் நடுவில் அமர்ந்து ஆலோசனை செய்து கொண்டிருந்தனர். கால்பந்து மைதானத்தில் அமர்ந்து மந்திர ஆலோசனை செய்வதில் பல வசதிகள் இருந்தன. எத்தனை பேர் வேண்டுமானாலும் அமரமுடியும். பேசும் விஷயங்களை யாரும் ஒட்டுக் கேட்க முடியாது.

ஆறாம் பகுதி நான்கு பெண்களைக் காணவில்லை.

பெண்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் ஆபாசமாக பேசுவதாகவும் குற்றங்களை அடுக்க ஆரம்பித்தனர். வார்த்தை விளையாட்டில் ஏற்கனவே ஈடுபட்டு வந்த பெண்களும் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க நக்மா கூட்டம் மேலும்மேலும் பெரிய குரலில் சண்டையிட ஆரம்பித்தனர்.

ஏழாம் பகுதி நெஞ்சுக்கு நடுவில் தொங்கிய வாக்மேன்
அவ என்னைக்காவது நம்மள மதிச்சிருக்காளா? அவள ஏண்டா நம்ம தேடணும். சச்சினுக்கு நக்மா என்றாலே அலர்ஜி.. அல்ர்ஜி என்றால் சாதாரண அலர்ஜி அல்ல. அனாபைலாகிக்ஸ் என்று சொல்லக் கூடிய அளவு அதி தீவிர அலர்ஜி. கடுப்பின் உச்சத்தில் டயபாலிக்கை கொதறிக்கொண்டே இருந்தான். இத்தனைக்கும் அந்தப் பெண்களின் காதலர்கள் என்ற லேபிளில் ஆள் இருக்கும் போது தன்னை அனுப்புவதில் இன்னும் பெரிய கோபம்.

எட்டாம் பகுதி மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு; மடிமேல் விளையாடி...

அப்போது தான் இங்கிலீஸ் குப்பன் அந்த பெண்கள் கைப்பையைப் பார்த்தான். இதைப் போய் எங்கடா சுட்டீங்க.., பார்க்கவே கேவலமா இருக்கு..?

சக மாணவியுடைய்து . வண்டியில் தவற விட்டுட்டாளாம். போய் மீட்டுவந்திருக்கிறோம்.... என்று சொன்னதும்
"இது அதவிடக் கேவலமா இருக்கு" வெடித்தான் இங்கிலீஷ் குப்பன்.

ஒன்பதாம் பகுதி தமிழ் இந்தி ஒற்றுமையை வளர்த்த ரங்கோலிப் போட்டி
கோலப் பொடி வாங்க உள்ளூர் ஆட்களின் உதவி தேவை என்பதாலும் கடைகளுக்கு ஓடி ஓடிச் சென்று வாங்க வேண்டிய சூழநிலையும் இருப்பதால் தமிழ் மாணவர்கள் பலரும் ரங்கோலி குழுவில் இருந்தனர்.


பத்தாம் பகுதி இது ராக்கிங்கிற்கு ஆதரவான இடுகை அல்ல
அவர் வேகமாக வெளியே வந்து இரண்டு ஜூனியர் மாணவர்களை அழைத்தார். டேய் உஷா தனியா கோலம் போட கஷ்டப் படறா.., போய் உதவி செய்யுங்கடா.., என்று உத்தரவு போட்டார்.

பதினொன்றாம் பகுதி மாணிக் ஃபாத்திமாவின் துப்பட்டா

அதுவும் பெண்கள் விடுதியின் துணி காயப் போடும் பகுதியை பைனாக்குலர் கருவி மூலம் தினமும் கண்காணிக்க முடியும் என்ற செய்தி அவளது வயிற்றில் புளியைக் கறைத்தது.

பனிரெண்டாம் பகுதி பெண்ணுரிமை காக்க வந்த ஆபத்பாந்தவன்

சகமாணவிகளை மதிப்பதில்லை. பெண்களுக்கான அடிப்படை உரிமைகளைக் கூட கொடுப்பதில்லை. எல்லோரும் ரசிக்கும் கலை நிகழ்ச்சிகளைக்கூட தனிநபர் தாக்குதல்களுக்கு உபயோகப் படுத்துகிறான். சமீபத்தில் நடந்த மாணிக் ஃபாத்திமாவின் துப்பட்டா நிகழ்ச்சியில் கூட பெண்களை மிக மோசமாக சித்தரிக்கிறான். இதை வளரவிட்டால் நம் கல்லூரியில் பெண்களின் நிலை மிகவும் மோசமான நிலையை அடைந்து விடும்.

பதிமூன்றாம் பகுதி அங்க is போடு இங்க was போடு

இவளுக அமெரிக்காவில படிச்சிருந்தா அத என்ன்கிட்ட காட்டனுமா! அதுதான் கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டேன்.

போடா.., உங்கிட்ட இல்லேன்னா வேற யார்ட்டயாவது அவள் வாங்கி பிரதி எடுத்துக்குவா...

என்னமோ பண்ணிக்கட்டும், என் மூஞ்சியில முழிக்காதவரைக்கும் எனக்குக் கவலையில்லை


பதினான்காம் பகுதி சுதேசி மாணவர்கள், விஜயதசமி,

தேர்வு டிசம்பர் மாதத்தில் நடக்கும். குப்பன் குரூப்ஸ் புத்தகம் எடுப்பது விஜய தசமியன்று. இடைப்பட்ட கால கட்டத்தை நீங்களே கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்.

பதினைந்தாம் பகுதி நார்த்தி ரங்கீலாவும் மண்ணின் மகள்களும்

வட நாட்டுப் பெண்களும், உள்ளூர் சேட்டுப் பெண்களும் மாணவர்களைத் தேடித்தேடிச் சென்று அளவளாவியதில் மாணவர்கள் தத்தாவிற்கே ஓட்டுப் போட்டுவிடுவார்கள் என்பது போல தோன்றியது.

பதினாறாம் பகுதி sweet sixteen


நீங்க ரெண்டு பேர் கூட உஷாபின்னாடி சுத்திட்டு இருத்தீங்க, அதை சாக்கா வெச்சு ஒருத்தர ஒருத்தர் சகலைன்னு வேற கூப்பிட்டுக்கிட்டு திரியறீங்க,
நேரங்காலம் தெரியாமல் சுமித்ராவும் நகைச்சுவை செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தாள்.

பதினேழாம் பகுதி மயங்கிச் சரிந்த மாணவர் தலைவி

ஒருத்தனுக்காக ஒரு ஊரே மாமா வேலை பாக்குது பார்!

பதினெட்டாம் பகுதி குருதி சிந்தி குடிமக்களைக் காப்பாற்றிய கொங்கு நாட்டுத்தங்கம்

ஏண்டா அவ்வளவு வேகமா நீயும் ஒரு ஃபிகரும் ஓடி வந்து வண்டி ஏறி புறப்பட்டீங்க. கடைசியில காலேஜுக்கா வந்தீங்க

அங்கிருந்த எல்லோருமே சினிமாவுக்கோ இல்லை ஊட்டிக்கோ போவீங்கன்னு அல்லவா நினைச்சிருந்தோம்.

தொடரும்..,

6 comments:

  1. நல்லா இருக்கு சுரேஷ், ஆனா ஓட்டு போட முடியவில்லை?

    தமிலிஷ்ல் அதை சரி பண்ணுங்கள்.

    ReplyDelete
  2. // சிங்கக்குட்டி said...

    நல்லா இருக்கு சுரேஷ், ஆனா ஓட்டு போட முடியவில்லை?

    தமிலிஷ்ல் அதை சரி பண்ணுங்கள்.//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.., இன்னும் தமிழீஷில் இணைக்கவில்லை. இணைத்துவிடுகிறேன்.

    ReplyDelete
  3. நல்ல இருக்கு. நானும் ஒரு தொடர் கதை எழுதி முடித்தேன். என் வலைப்பூவை பாருங்கள். பின்னூட்டமிடவும். உங்கள் விமர்சனத்தை எதிர் பார்கிறேன்.
    http://eluthuvathukarthick.wordpress.com

    ReplyDelete
  4. பதினெட்டு பூர்த்தியானா எல்லாத்திலையும் ஒரு கவர்ச்சி வந்துடும் போல இருக்கு! உங்க பதினெட்டாவது அத்தியாயத்தில் பிகர் பற்றி எழுதியிருக்கீங்க!

    http://kgjawarlal.wordpress.com

    ReplyDelete
  5. //Imayavaramban said...

    நல்ல இருக்கு. நானும் ஒரு தொடர் கதை எழுதி முடித்தேன். என் வலைப்பூவை பாருங்கள். பின்னூட்டமிடவும். உங்கள் விமர்சனத்தை எதிர் பார்கிறேன்.
    http://eluthuvathukarthick.wordpress.com//

    படிக்க ஆரம்பித்துவிட்டேன் தல.., நன்றாக இருக்கிறது

    ReplyDelete
  6. // Jawahar said...

    பதினெட்டு பூர்த்தியானா எல்லாத்திலையும் ஒரு கவர்ச்சி வந்துடும் போல இருக்கு! உங்க பதினெட்டாவது அத்தியாயத்தில் பிகர் பற்றி எழுதியிருக்கீங்க!

    http://kgjawarlal.wordpress.com//


    கல்லூரிக் கதை தல..,

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails