Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Saturday, December 14, 2013

கல்யாண சமையல் சாதம்- ஏ கிளாஸ்

டிஸ்கி:- முன்னொரு காலத்தில் முத்துராமன் மஞ்சுளா நடிப்பில் மறுபிறவி என்றொரு படம் வந்தது. 1995-98ல் சன் டிவியை இரவு 12க்கு மேல் பார்த்த ரசிக கண்மனிகளுக்கு அந்தப் படம் ரொம்பவும் பரிச்சயம். அடுத்த கட்டத்தில் கார்த்திக் ராதா நடிப்பில் வாலிபமே வா வா என்றொரு படம். அதுவும் பிரபலம்தான்.  இப்போது அடுத்த காலகட்டம். அதே போன்றதொரு கதை. ஆனால் கவுதம் கார்த்திக் நடிக்கவில்லை. பிரசன்னா நடித்து இருக்கிறார். அந்தப் படம் தான் கல்யாண சமையல் சாதம்.


முதலில் இந்தப் படம் ஆகா போன்றதொரு படம்போல என்ற எண்ணம் மனதில் இருந்தது. ஒரு சுபயோக சுபதினத்தில் தயிர் சாதம் மட்டும் சாப்பிடும் எண்ணத்தில் படம் பார்க்க ஆரம்பித்தவனுக்கு ஓப்பனிங்கே ஒரு இன்ப அதிர்ச்சிதான்.  பொண்ணு உட்கார்ந்துட்டா, ஓ உட்கார்ந்துட்டாளா..., நானும்தான் உட்கார்ந்துட்டேன் என்று ஆரம்பித்து,  if u want to talk, first learn WHISPER, உடனே ஒரு கெக்கெபிக்கே சிரிப்பு என்று டைட்டில் போடுகிறது.

முதல் படத்தில் கல்யாணத்திற்கு பிறகு முத்துராமனுக்கு அதில் ஒரு பலஹீனம் தென்படும். அவரது மனைவி தனது தளராத முயற்சியால் அதை சரிசெய்வார்.

இரண்டாவது படத்தில் சுற்றுலா சென்ற இடத்தில் ராதா போடும் சண்டை, மற்றும் கார்த்திக்கின் ஃபேவரிட் குத்துச் சண்டை வீரரின் மேல் திணிக்கப் படும் சதியின் காரணமாக கார்த்திக் தானும் ஒரு பலவீனமான மனிதரோ என்று வீட்டைவிட்டு ஓட கிளைமாக்ஸில் ராதா தானே களத்தில் இறங்கி, அவரும் வெற்றி பெற்று கார்த்திக்கையும் வெற்றியடையச் செய்வார். அவர்கள் இருவரும் வெற்றி யடைந்ததை அவர்களது சொந்தக் காரர்கள் வரிசையாக வந்து பார்த்து மகிழச்சியடைந்து செல்வார்கள்.

இந்தப் படத்தில் என்னவென்றால் முழுக்க முழுக்க ஒரு அரேஞ்சுடு மேரேஜ். பார்த்ததும் நாயகியிடம் விழுந்து விடுகிறார். ஹீரோ .   அவரது தாசானுதாசன் ஆகி விடுகிறார்.  திருமணத்துக்கு முன்பே ஒரு முயற்சித்துப் பார்க்க்க ..........., முயற்சி தோல்வி அடைகிறது.    இந்த முயற்சிக்கு முன்னால் சில டயலாக்குகள்,, இப்பெல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடிய மக்கள் களத்தில் இறங்கிடறாங்க,, இன்னும் சிலர் கல்லூரியின் போதே.., நீ அப்படி இல்லையில்ல என்று......  அதாவது ஹீரோ ஹீரோயின் சுத்தமானவங்களாம்........., 


இந்த இடத்தில்தான்  பழையகால விமர்சனங்கள் சில நினைவுக்கு வ்ந்தன. சில நேரங்களில் சில மனிதர்கள், அரங்கேற்றம் போன்ற சில ப்டங்கள் பற்றிய பேச்சுவந்த போது அந்த ப் படத்தின் நாயகிகள் எல்லாம் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களாக படைப்பக்கப் பட்டிருப்பார்கள்,  அதற்காக சிலர் கொதித்துக் கொண்டிருந்தார்களாம். அப்போது படைப்பாளிகளால் சொல்லப் பட்ட ஒரு விளக்கம். பொதுவாக நாயகி கெட்டுப் போகிறார் என்றால் அவர் சுத்தமானவர் என்பதை மக்களிடம் காட்டவேண்டுமாம். இயல்பான கதாநாயகி கெட்டுப் போகிறார் என்றால் மக்களிடம் அதிர்ச்சி எதுவும் வராதாம். அதனால் குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த கதாநாயகியைக் காட்டுவார்களாம். அவர்கள் கெட்டுப் போனால் பார்ப்பவர்களுக்கு ஒரு அதிர்ச்சி உருவாகுமாம. ஒரு வேளை அதே தியரிதான் இங்கு உபயோகப் படுத்தப் பட்டு நாயகனையும் நாயகியையும் குறிப்பிட்ட சமூகத்தில் காட்டுகிறார்களா என்ற சந்தேகம் கூட எழுகிறது.

நாயகி மனதளவில் நாயகனுக்கு சப்போர்ட்டாக இருக்கிறார்.  மறுபிறவியில் திருமணம் முடிந்து விட்டதால் மஞ்சுளா தனது கணவனை மீட்டெடுக்க கண்டபடி போராடுவார். பார்க்கும் நமக்கு தண்ணீரே வந்துவிடும் கண்களில்.



வாலிபமே வா வாவில் கார்த்திக்கின் போராட்டம்தான் படம் முழுவதும் ராதாவின் அதிரடி கிளைமாக்ஸில்தான்.  கிளைமாக்ஸ் முடிந்ததும் அவர்களின் சொந்தக்காரர்கள் பார்த்து சந்தோசப் படுவதுபோல் நாமும் சந்தோஷப் படுவோம்.



 இதில் கல்யாணம் ஆகவில்லை. தவிரவும் இவர்கள் சுத்தமானவர்கள். அதனால் அவருக்கு முழு அளவில் ஆதரவு கொடுக்கிறார் மனதளவில்.  பல இடங்களில் உட்கார்ந்து இது பற்றிப் பேசுகிறார்.

கோபத்தில் மாப்பிள்ளை ஒரு புஸ்ஸூ என்று சொல்லுவிட்டு ஹீரோ வருத்தப் படுவாரோ என்று இவர் வருத்தப் படுகிறார். மாப்பிள்ளைக்கு இப்படி ஒரு பிரச்ச்னை இருப்பது தெரிந்தும் மாமனார் திருமணத்தை தொடர்ந்து நடத்துகிறார். வாழ்க அந்த மாமனார்.   இணையத்தில் பார்த்து தெரிந்து கொள்வதற்குக்கூட பிரசன்னா அவ்வளவு கூச்சப் படுகிறார். அந்த அளவுக்கு அவர் நல்லவராம்.  இவ்வாறாக பிரச்சனையை எப்படி சரிசெய்வது என்பதிலேயேபடத்தை கொண்டு போகிறார்கள். கடைசியில் அவருக்கு எப்படி சரியானது என்பது தெரியாமலேயே சரியாகிவிட்டதாகச் சொல்கிறார்கள்.

Friday, November 1, 2013

ஆதித்ய கரிகாலன் மன்னன் ஆகிருந்தால்.....,

டிஸ்கி:-

நமக்கு பிடித்தவர்களை நாயகனாக்கி பல காவியங்கள் எழுதுவது மரபுதான். அது கல்தோன்றி மண் தோண்றா காலத்தில் துவங்கி இன்றைய சினிமா வரைக்கும் இருப்பதுதான். இது ஒரு சுவையாக கற்பனை.  சின்ன வயதில் நான் மன்னனானால்..........,    எதிர்காலத்தில் நான்....., என்றெல்லாம் பேச்சுப் போட்டி நடத்துவார்கள். இதுவும் அது போலத்தான்.


என் மனதில் வெகுநாட்களாக இருந்து கொண்ட அரிப்புதான். தமிழ் சமுதாயம் ஏன் இவ்வளவு சிரமப் பட்டுக் கொண்டு இருக்கிறது. இந்த தமிழ் சமுதயாத்தின் இழி நிலைக்கு காரணம் தான் என்ன என்றெல்லாம் நானும் உள்ளங்கிடங்கோடு போராடிக் கொண்டிருந்தவன் தான். 

அப்படி யோசித்துக் கொண்டிருந்த காலக் கட்டத்தில் தீடீரென்றா தீயாய், காற்றாய், புயலாய் தோன்றியதுதான். ஆதித்ய கரிகாலன் சக்ரவர்த்தி ஆகி இருந்தால் தமிழ் சமுதாயத்தின் இந்த இழிநிலை மாறியிருக்குமோ என்றுதான் தோன்றியது.இதற்கான காரணங்கள்.



1.  ஆதித்ய கரிகாலன் ஒரு அதிரடி இளவரசன், இணை அரசன், போர்கள் பல பறந்திருக்கும்.  சோழப் பேரரசு விரைவில் உருவாகி இருக்கும்.

2.ஆதித்ய கரிகாலன் தளிச் சேரிப் பெண்டிரை ஆதரித்த சுவடுகள் எதுவும் இல்லை. எனவே தேவரடியார் என்ற தனிப் பிரிவினர் வந்திருக்க மாட்டார்கள். பிற்காலத்தில் அவர்களுக்கு ஏற்பட்ட நிலையும், சமுதாயத்தில் அவர்களது நிலையும் அனைவருக்கும் தெரிந்ததே..,

3.அவர் அக்கனுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்க மாட்டார். நாட்டுக்கு ஒரே ஒரு ராஜாதான் இருந்திருப்பார்.

4.ராஜ ராஜ சோழன் காலத்தில்தான் தமிழகத்தில் ஜாதி வாரி பிரிவுகள் வளர்ந்ததாகச் சொல்கிறார்கள். ஆதித்ய கரிகாலன் மன்னனாகி இருந்தால் இது தவிர்க்கப் பட்டிருக்கலாம். ( பட்டிருக்கலாம் என்றெல்லாம் இல்லை, கண்டிப்பாக ஜாதியாக இருந்திருக்காது.)

5. ராஜ ராஜன் காலத்தில்தான் கலைஞர்கள் எச்சில் துப்புவதை சேகரிக்க தனி ஆட்கள் நியமிக்கும் பழக்கம் வந்தது.

6. ஆதித்யன் தஞ்சை சக்கர வர்த்தி ஆகியிருந்தால்  அருள்மொழி ஈழ சக்கரவர்த்தி ஆகி இருக்க வாய்ப்பு அதிகம். ஒரு வேளை அது நடந்திருந்தால் இந்திய துணைக் கண்ட அரசியலே வேறு மாதிரி ஆகியிருக்கும்.

7. ஆதித்ய கரிகாலன் தாய் தந்தையர்க்கு செலவு செய்து வீடுகட்டும் இயல்பு கொண்டவன். ராஜராஜனோ பெருத்த செலவு செய்து கோவில் கட்டியன். அவனது மகனே அந்தக் கோவிலும், நகரும் பிடிக்காமல் வேறு ஒரு ஊருக்கு ஒதுங்கியது வரலாறு.


டிஸ்கி:-

எதிர்காலத்தில் ஔவையார் அரசாட்சி செய்திருந்தால் எப்படியிருக்கும்,  மருத நாயகம் பிரதமர் ஆகி\யிருக்க வேண்டும். கோச்சடையான் ஜனாதிபதி ஆகியிருக்க வேண்டும் என்றெல்லாம் பழ இடுகைகள் போடும் எண்ணம் இருக்கிறது.

Sunday, June 16, 2013

விகடனுக்கே ஒரு விமர்சனம்.

இந்த வாரம் விகடனில் பிடாரனின் மகள் கதை படித்தேன்.  நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பில் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் கதை தான் பிடாரனின் மகள்.

கதை என்று பார்த்தால் ஏற்கனவே நமக்கு அறிமுகமான கதைதான். ஏற்கனவே அழகி படத்தில் ஒரு ஓரமாய் எட்டிப் பார்த்த கதைதான்.  செல்லியை சின்ன வயதில் பார்க்கும் கதாநாயகன். அந்த சின்ன வயதிலேயே தனது தாயாரின் ஹேர் பின்களை கொடுத்தும், கொஞ்சம் கரெக்ட் செய்த காசில் நெயில் பாலீஸ் வாங்கிக் கொடுத்தும் ஃபிரெண்டு பிடிக்கப் பட்ட அந்தச் சிறுமியை, சில பல ஆண்டுகளுக்குப் பின் நாயகன் பார்க்கிறார். அப்போது அவரது உணர்வு,. அவ்வளவுதான் கதையின் சுறுக்கம்.  சிறுமியின் பின்புலம், வளர்ந்தபின் அவரது பின்புலம். அவரது தந்தையின் சிந்தனைகள் சில, நாயகனின் கருத்துக்கள் சில என்று புதிதாக கதை எழுத வருவோருக்கு எப்படி நமக்குத் தெரிந்த ஒரு சம்பவத்தை பெரிதாக மாற்றி கதையாக்குவது என்று சொல்வதாக இந்தக் கதை அமைந்திருக்கும்.

பாம்பு விளையாட்டுப் பொருள் இல்ல.., அது ஒரு உசிரு. அந்த உசிரு நமக்கு அடங்கியும் இருக்கும். மீறினா காவு வாங்கிடும்.

பாம்பாட்டுறது ஒரு போதை, நாம ஊதறதுக்குப் பாம்பு கிறங்கி ஆடுதேனு ஒரு மிதப்பு வரத்தான் செய்யும். நாள்பட அந்த கிறுக்கு மண்டைஇல் கிர்னு ஏறிடும்

பாம்பு சாகிறது சாதாரண விஷயமில்லை. எந்த பாம்பாவது தானாக சாகிறத பார்த்து இருக்கியா? 

அப்படி இப்படி பாம்பு பாம்பாட்டி பற்றியெல்லாம் பேசும்போது  பாம்பாட்டியின் வாழ்க்கை இப்படித்தான் இருக்குமோ என்று நம்மை எண்ண வைத்து விடுகிறார். 

நாமும்கூட அப்படியே அப்படியே நம்பிவிடலாம் அதனால் பாதிப்பு ஏதும் இல்லை.

அப்படியே ஒரு டாக்டரைப் பற்றியும் பேசுகிறார்கள் கதையில் அந்த டாக்டருக்கு ரத்தப் பரிசோதனையும் ஸ்கேன் பரிசோதனையும் தேவையில்லாமல் எழுதித் தருவதாகவும் அதில் கமிஷன் பெற்றுக் கொள்வதாகவும் எழுதி இருந்தார். அந்த வகையில் ஸ்கேனில் மட்டும் மாதம் மூன்று லட்சம் வருவதாக சொல்லி இருக்கிறார். 30 நாளில் மூன்று லட்சம் என்றால் ஒரு நாளில் 10,000 வருமானம். அதாவது கமிஷன்.  கணக்கிட வசதிக்காக  கமிஷன் 10%  என்று வைத்துக் கொண்டால் ஸ்கேன் செய்வது ஒரு நாளைக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு ஒரு வேளை கமிஷன் 2% என்று வைத்துக் கொண்டால் ஸ்கேன் செய்வது 5 லட்சம் ரூபாய்க்கு.  இந்த பெரிய தொகைக்கு கார்ப்பரேட் மருத்துவ மனைகளே செய்வார்களா என்பது சந்தேகமே..,

அதாவது கமிஷனாக பெரும்பங்கு சம்பாதிக்கும் நபர் என்று தேவையில்லாமல் புழுதியை எடுத்து விடுவதாகவே தோன்றுகிறது.  இவ்வாறான வரிகளைப் படித்த போது தனக்குத் தோன்றுவதை எல்லாம் எழுதி அதை இலக்கியமாக மாற்றும் திறன் நட்சத்திர எழுத்தாளர்களுக்கு உண்டு என்பதை ஒரு வார இடைவெளியில் மீண்டும் நிரூபித்து விட்டதாகவே தோன்றுகிறது.

குருடன் யானை கண்ட கதைபோல  இது போன்ற பாத்திரங்களை படைப்பதற்கு முன் எழுத்தர்கள் எழுதுவது போலவே இருந்து விடுகிறார்கள்

Thursday, June 6, 2013

சாமிக்கு விட்றா சர்வேசா........,

+2ல் கண்ணாபின்னாவென்று மக்கள் மதிப்பெண்கள் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். கற்கால மாணவர்கள் வெகுசிலரே நூற்றுக்கு நூறு வாங்கி வந்த சூழலில் ஒரே மார்க் மாணவர்கள் வெகுசிலரே இருந்தனர். அந்த கற்கால மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு என்ற கூடுதல் ஐட்டம் ஒன்று இருந்தது. அதில் பொது அறிவு கேள்விகளெல்லாம் வைத்து இருந்தனர். ஒரே மதிப்பெண்களில் வந்து நிற்பது வெகுசில மாணவர்களே இருந்தனர். பின்னர் அந்த பொது அறிவுக் கேள்விகளை கட் செய்ய அதிலும் மாணவர்க்ள் முழு மதிப்பெண்கள் எடுக்க ஆரம்பித்தனர். 

வெட்டியாக ஒரு கூடுதல் தேர்வாக இருந்த அந்த நுழைவுத் தேர்வை பின்னர் வெட்டி எடுக்க மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் வித்தியாசமும் குறைந்து ஒரே மதிப்பெண்களில் பலரும் வந்து குவிய ஆரம்பித்து விட்டனர்; அந்த பிரச்சனையை சமாளிக்க அறிமுகப் படுத்தப் பட்டதுதான் குலுக்கல் எண் (ராண்டம் நம்பர்). பொறியியல் நேர்காணலில் உபயோகப் படுத்தப் படும் முறை. 

 //பி.இ., சேர்க்கை செயலர் ரைமண்ட் உதிரியராஜ் பேசியதாவது:வரும், 12ம் தேதி, அனைத்து மாணவர்களுக்கும், "ரேங்க்&' பட்டியல் வெளியிடப்படும். இந்த பட்டியல் தயாரிக்க, ரேண்டம் எண்கள் உதவுகின்றன. ஒரே, "கட்-ஆப்&' மதிப்பெண்களில், 350 பேர் வரை வருவர்.
இவர்களிடையே, கணித மதிப்பெண் யாருக்கு அதிகம் என, பார்க்கப்படும். இதில், அனைவரும் சமமாக இருந்தால், இயற்பியல் பாடத்தில் பெற்ற மதிப்பெண் பார்க்கப்படும். இதுவும், சரி சமமாக இருந்தால், நான்காவது பாடத்தில் பெற்ற மதிப்பெண்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
இதுவும், ஒரே அளவு மதிப்பெண்களாக இருந்தால், மாணவர்களின் பிறந்த தேதி பார்க்கப்படும். இதிலும், "டை" வந்தால், இறுதியில், ரேண்டம் எண்களில், அதிக மதிப்புடைய எண்கள், யாரிடம் உள்ளதோ, அந்த மாணவர், முதலில் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார். இவ்வாறு ரைமண்ட் தெரிவித்தார்.//


ஏறக்குறைய இன்னபிற  தேர்வுகளிலும் அப்படித்தான்.   


இந்த குலுக்கல் முறையைவிட  தமிழ்பாட மதிப்பெண் மொத்த மதிப்பெண் போன்றவை உபயோகப் ப்டுத்தினால் தமிழுக்கு மரியாதை கொடுத்த மாதிரியும் இருக்கும்.  

சில பல பள்ளிகளில் மொழிப்பாடங்களுக்கு பெரிய முக்கியத்துவம் தராமல் நான்கு பாடங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து பாடம் எடுக்கிறார்களாம். நன்றாகப் படிக்கும் மாணவர்கள் என்பதால ஓரளவு படித்தாலே நல்ல மதிப்பெண்களை மொழிப்பாடத்தில் எடுத்து விடுகின்றனர். ,மற்றபடி அந்த பள்ளிகளுக்கு தமிழ், ஆங்கிலம் பாஸ் செய்தாலே போதும் என சாமி விடும் மனப்பாங்கே நிலவி வருகிறது.  இது போன்று ஒரு உத்தரவு வந்தால் ஓரளவு மொழிப்பாடங்களையும் மாணவர்கள் படிக்க ஆரம்பிப்பார்கள்.

Sunday, May 19, 2013

தப்புமா? தப்பாதா?

The 1000 year-old Naganathasamy temple built by Rajendra Cholan. Photo: B. Velankanni Raj 
இப்படியும் ஒரு கோயில்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வீர நாராயண புரத்தில் உள்ள சிவன் கோயில்தான் இது. கடவுள் நம்பிக்கை இருந்தாலும் இல்லாவிட்டாலும் இது போன்ற கோவில்களை, புராதாணக் காலக் கட்டிடங்களைக் காக்க வேண்டியது நம் கடமை.  
 http://www.thehindu.com/news/national/tamil-nadu/1000yearold-cholaera-temple-facing-threat-of-demolition/article4718623.ece#comments   செய்தியின் படி இந்தக் கோவில் ராஜராஜ சோழன் தன் மனைவியரோடு வந்து வணங்கியது.,   தஞ்சாவூர் விக்கரவாண்டி நாற்கரச் சாலையின் காரணமாக  இந்தக் கோவில் அழிக்கப் படலாம் என்ற எண்ணம் இப்போது தோன்றியுள்ளது. அந்த ஊர் மக்கள் எதிர்ப்பினை தெரிவித்திருக்கிறார்கள்.  இப்போதைய கும்ப கோணத்திற்கு அருகில் உள்ள மாணம்பாடி கிராமத்தில் உள்ள இந்தக் கோயில் கடந்த 30 ஆண்டுகளாக மாநிலத்தின் தொல்பொருள் துறையின் கண்காணிப்பில் உள்ளதாம்.
 


முதல்வர் மாதிரி பெரிய பதவியில் இருப்பவர்கள் யாராவது இதில் தலையிட்டு ஏதாவது செய்தால் இந்தக் கோவில் தப்ப வாய்ப்பு இருக்கிறது.

Saturday, May 18, 2013

டோனி! எனக்கு சோடா வேண்டும்



 வியாபார ரீதியான விளையாட்டுப் போட்டிகளில் முதலிடம் வகிப்பது நம்ம ஐ.பி.எல் தான்.

அதன் வியாபாரத் தன்மையிலெயே சில பல சந்தேகங்கள் இருக்கின்றன்.

1. ஏற்கன்வே சச்சின், டோனி போன்றவர்கள் சந்தையில் பல விளம்பரங்களை கையில் வைத்திருக்கும்போது சில பல சிறுவர்களால் அந்த பொருட்களின் மார்க்கெட் கூடுமா? 

2.மேலே உள்ள சிலபல சீறுடைகளில் சிறு சிறு எழுத்துகளில் எழுதியிருக்கும் பொருட்களுக்கு அப்படி எழுதியதால் வியாபாரம் பெருக வாய்ப்பு இருக்கிறதா?
3.ஐ.பி.எல் போட்டிக்கு பல கோடி கொடுத்து பெப்ஸி என்று பெயர் வைத்திருப்பதால் கோக்கிற்கு ஏதாவது நஷ்டம் இருக்குமா?

4.ஷாரூக் போன்று ஒரு பெரிய பிஸினஸ் உள்ள ஒரு நடிகர் இரண்டுமாதம் கிரிக்கெட்டில் சுற்றுவதால்  ஷாருக் கானுக்கு லாபமா நஷ்டமா?  இதே கேள்வி  ப்ரீதி, ஷில்பா வைக்கூட கேட்கலாம். ஆனால் அவர்கள் சும்மா இருக்கிறார்கள் என்பதால் அந்த கேள்வி இல்லை

5.சின்ன அம்பானிகளும் கிரிக்கெட் கிரவுண்டில் தனி ஷோபா போட்டு உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்களே.., அவர்களுக்கு அவ்வளவு நேரம் வெட்டியாக இருக்கிறதா? அல்லது அவர்களுக்கு கிரிக்கெட் கிரவுண்டில் இருப்பதால்தான் லாபம் அதிகமா?

6. பூனே அணி அதிக போட்டிகளில் தோற்றதால் கண்ட லாபத்திற்கும். சென்னை அணி வென்றுகொண்டிருப்பதால் அடையும் லாபத்திற்கும் ஏதாவது வித்தியாசம் இருக்குமா?

7.கங்கூலி போன்ற ஒரு மூத்த முக்கிய வீரரை சும்மா உட்கார வைத்ததற்கு ஏன் கிரிக்கெட் உலகம் பொங்கி எழவில்லை.

8.ரிக்கி பாண்டிங் போன்ற ஒரு மாபெரும் காப்டனுக்கு இந்தியாவில் உள்ள பி தர வீரர் அளவு சம்பளம் கொடுத்து மரியாதை செய்ய என்ன காரணம்? 

9.லட்சுமி கரமான சில நடிகைகள் கிரிக்கெட் முக்கிய நபர்களுக்கு ஏற்கனவே நண்பர்களாக இருக்கிறார்களே.., அவர்களோடு இனிப் பேசிக் கொண்டிருந்தால்கூட சிபிஐ தவறாக நோக்குமா?

10.பெப்சி, கோக் போன்ற பொருட்கள் குக்கிராம பெட்டிக்களில்கூட கிடைக்கும்ப்போது, டோனி விளம்பரப் படுத்தும் கிளப் சோடா மட்டும் ஏன்  டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் கூட கிடைப்பதில்லை?

Sunday, May 12, 2013

MOTHER'S DAY Vs மாட்டுப் பொங்கல்

தமிழ்நாட்டில் தமிழ் மண்ணில் கொண்டாடும் விழாக்கள் பல. அதில் பொங்கல் தனிச் சிறப்பு வாய்ந்தது. அதில் மாட்டுப் பொங்கல் தனித்தன்மை வாய்ந்தது.

விவசாயத்திற்கு பலவிதங்களில் மாடுகளின் பங்கு முக்கியமானது. காளைகள் உழுவதற்கு உதவுகின்றன. வண்டிகளை இழுப்பதன் மூலம் பயணத்திற்கும் சரக்கு இடமாற்றத்திற்கும் மிகவும் உதவுகின்றன. பல எந்திரங்களும் எந்திரங்களின் மூலம் இயங்கும் வாகனங்கள் உபயோகத்தில் இருந்தாலும் காளைகளின் பங்கு முக்கியமானது. பசுக்களும் சளைத்தவை அல்ல. பால் பொருட்கள் இல்லாமல் நம்மால் நமது வாழ்க்கையை நினைத்துக்கூட பார்க்க முடியாது. மாடுபோல உழைப்பு என்பதே விசுவாததிற்கும் கடின உழைப்புக்கும் கூறப் படும் வார்த்தையாக இருக்கிறது.

அவ்வளவு கடுமையாக உழைக்கும் மாட்டுக்கு நன்றி செலுத்தும் நாளாக மாட்டுப் பொங்கல் அமைகிறது. அன்று அதிகாலையிலேயே மாட்டைக் குளிப்பாட்டி விடுவார்கள். அன்றைய தினம் விரும்பிய வண்ணம் மாட்டுக்கு மேய்ச்சல் இருக்கும். விரும்பிய வண்ணம் வண்ணங்கள் தீட்டி, கொம்புகள் அலங்கரித்து சில இடங்களில் துணிகள் கூட அணிவித்து மகிழ்வார்கள்.

மாலைப் பொழுதில் பொங்கல்வைத்து அதனை மாட்டுக்கு ஊட்டி அழகு பார்த்து பின்னரே குடும்பத்தினர் உண்டுமகிழ்வார்கள்.

குறிப்பாக அன்றைய தினம் மாட்டுக்கு எந்த வேலையும் கொடுக்க மாட்டார்கள்.

========================================================================

குடும்பத்திற்காக கடினமாக உழைக்கும் இன்னொரு ஜீவன் உண்டு. அவர்தான் அன்னை. அவர் எவ்வள்வு பெரிய நிறுவனத்தின் தலைவராக இருந்தாலும் குடும்பத்தின் அடிப்படை வேலைகள் அனைத்தையும் செய்வார். குழந்தை வளர்ப்பில் அவரது பங்கு மிக முக்கியமானது.

வெள்ளையர் கண்டுபிடித்த MOTHER'S DAY அன்று அன்னையருக்கு அனைவரும் மரியாதை செலுத்துவார்களாம்.
அன்றும் கூட இனிப்புகளையும் பலகாரங்களையும் செய்து கொண்டாடினால் அதையும் அன்னைதான் செய்ய வேண்டியிருக்கிறது. தாயாருக்கு மட்டும் புத்தாடை என்பதை அந்த தாயாரே விரும்புவதில்லை.


எனவே அன்னையர் தினத்தை அனுதினமும் கொண்டாடி அன்னையரைப் போற்றுவோம். (அதற்காக இன்று கொண்டாடாமல் இருந்து விடவே வேண்டாம். அவருக்கு ஓய்வு கொடுத்து அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்துவோம்). அன்னை என்றால் உங்களைப் பெற்ற அன்னையை மட்டுமல்ல.
உங்கள் குழந்தையைப் பெற்ற அன்னையையும் தான்.

=======================================================================
இவரும் கூட அம்மாதான்




=================================================================


சில குடும்பங்களில் அம்மா செய்யும் வேலைகளுக்காகத்தான் வேலைக்காரி வைத்திருக்கிறார்கள். பல குடும்பங்களில் அம்மாதான் அந்த வேலைகளைச் செய்கிறார்.

நாளைய தினம் பதிவர்கள் குழந்தைகள் மீதான வன்முறை பற்றிய கலந்துரையாடலுக்குச் செல்லப் போவதால் இந்தப் பதிவினை இன்றே வெளியிட்டு உள்ளேன்.

குழந்தைகள் மீதான வன்முறைபற்றி நான் எழுதிய இந்தப் பதிவில்

பின்னூட்டத்தில்

"குழந்தையை வேலைக்காரி மாதிரி நடத்தாதே" என்று சொல்லும்போதே, வேலைக்காரிக்கும், வீட்டில் சின்னச்சின்ன வேலைகள் செய்வதற்கும் உள்ள வித்தியாசம் எளிதில் புரிந்துவிடும். இதில் நீங்கள் குழம்பிக்கொள்ள வேண்டியதில்லை.
என்று நண்பர் குறிப்பிட்டிருந்தார்.

எனது பதிலில்



பல நேரங்களில் சின்ன சின்னவேலைகளுக்குக் கூட வேலையாட்களைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். நம்வீட்டில் இருக்கும் அனைத்து வேலைகளும் நாம் செய்ய வேண்டிய வேலைகள்தான். இதில் வேலைக்காரி மாதிரி நடத்தாதே. என்ற வாக்கியத்தின் பொருளைக் கூற முடியுமா? வேலைக்காரர்கள் என்பவர்கள் அடிமைகள் அல்ல. உங்கள் வேலையையைச் செய்ய உங்கள் உடலும் நேரமும் இடம் கொடுக்காததால் விலை கொடுத்து வேலையை வாங்குகிறோம். அப்படிப்பார்த்தால் உங்களைவிட வேலைக்காரர்களுக்கு சுயமரியாதை அதிகமாக இருக்கவேண்டும். வேலைக்காரர்களைப் போல் குழந்தையை நடத்தாதே என்ற வாசகம் எழும்போதே வேலைக்காரர்களையும் குழந்தைகளையும் அடிமையாக நடத்துவதாக பொருள்படும் அல்லது உங்கள் வேலையை மற்றவர்கள் மேல் திணிக்கும் கொடூர பழக்கத்திற்கு குழந்தையை அடிமைப் படுத்துவதாகப் பொருள்படாதா......


மேலும் இது தொடர்பான விவாதங்களைப் படிக்க இங்கே செல்லவும்

கலந்துரையாடலுக்குச் செல்லும் முன் இது போல இன்னும் பல கேள்விகளுடன் செல்லுங்கள். தெளிவு படுத்திக் கொண்டுவாருங்கள்

டிஸ்கி;- மீள்பதிவுதான். முதன்முதலில் வெளிவந்த தேதியறிய முதல் பின்னூட்டம் பார்க்கவும்

Saturday, May 11, 2013

தேவையா 11ம் வகுப்பு?

12 வகுப்பு ரிசல்ட் வந்த பிறகு பொதுவாக எழும் விமர்சனம். 11ம் வகுப்பு பாடம் சொல்லித் தராமல் நேரடியாக் 12ம் வகுப்பு பாடங்களைச் சொல்லித் தருவதாக எல்லோரும் விமர்சித்து வருகிறார்கள். நாங்கள் படிக்கும்போதும் இதே போன்று சொல்லுவார்கள். என்னோட சந்தேகம் என்னன்னா   11ம் வகுப்பு பாடம் சொல்லித் தராமல் நேரடியாக 12ம் வகுப்பு பாடம் எடுக்க முடியும் அதுவும் மாணவர்களுக்கு புரியும் அப்படின்னா அந்த 11ம் வகுப்பு பாடம் எதற்காக? 

அப்படி சில பாடங்களை எதற்காக கல்வியாளர்கள் உருவாக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டுப் பாடமும் அடுத்த ஆண்டிற்காக பாடத்திற்கு அடிப்படையாக இருந்தால்தானே அந்த பாடத்திற்கு ஒரு மரியாதை இருக்கும்? அதை விடுத்துவிட்டு  அங்க 12ம் வகுப்புப் பாடம் சொல்லியே தருவதில்லை என்று புலம்புவதோ அந்த பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யச் சொல்லி போராட்டம் நடத்துவதோ வெட்டி வேலை.

===========================================
உடுமலைப் பேட்டைக்கு அருகே உள்ள ஒரு பள்ளியின் விளம்பரம் ஒன்று இன்றைய தினந்தந்தியில் வந்திருந்தது. மாணவர்கள் பத்தாம் வகுப்பில் எடுத்த மதிப்பெண் சதவீதம், பன்னிரெண்டாம் வகுப்பில் அவரது மதிப்பெண் சதவீதம் ஆகியவை பட்டியலிட்டு இருந்தார்கள். நூறுசதவீதம் தேர்ச்சி தரும் பள்ளி அது. பத்தாம் வகுப்பில் 60% கீழே எடுத்த பல மாணவர்களும்  12ல் 80%க்கும் மேல் எடுத்ததாக விளம்பரப் படுத்தி இருந்தார்கள். வாழ்க அந்தப் பள்ளி


தங்கள் பள்ளியில் இத்த்னை பேர் 1150க்கு மேல் எடுத்ததாக தம்பட்டம் அடிக்கும் பள்ளிக்ள் அதே மாணவர்கள் பத்தாம் வகுப்பில் எத்தனை சதவீதம் எடுத்தனர். தங்கள் பள்ளியில் சேர்ந்த மாணவர்களின் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்களை விளம்பரம்படுத்தி மாணவர்களை எந்த அளவு முன்னேறி இருக்கிறோம் என்று காட்டுவார்களா? அந்த தைரியம், நேர்மை அந்தப் பள்ளிகளுக்கு இருக்கிறதா?

Sunday, April 21, 2013

பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் சுந்தரபாண்டியன் 2 ?

விக்கிற விலைவாசில பாதாமும் பிஸ்தாவும் வாங்கிக் கொடுத்து பொண்ண நாங்க வளர்த்தால் நீங்க அஞ்சு ரூபாய்க்கு அயர்ன் பண்ணின சட்டை போட்டுக் கொண்டு கரெக்ட் பண்ணிட்டு போயிடுவீங்க நாங்க பார்த்திட்டு சும்மா இருக்கணும்     
 உபயம்: சந்தானம்- கலகலப்பு

மேல இருக்கற வசனத்தை கேட்டு ரசித்து என்சாய் பண்ணி சிரித்து குதித்து விசிலடித்த அதே ரசிக்க கண்மணிகளுக்கு கௌரவம்ன்னு ஒரு படத்த ரீலீஸ் பண்ணியிறுக்காங்க.  நல்ல விஷயம்தான். அது ஏற்கணவே இந்தியில் வந்தது. அதில் ஜாதிப் பெயர்லாம் சொல்லியிருக்காங்க. இதில சொல்லல அப்பிடின்னு ஒரு குரூப் சொல்லிட்டு இருக்காங்க.  நல்ல படங்க எந்த மொழில இருந்தாலும் தமிழுக்கு கொண்டு வருவதுதானே நாம பாரதியாருக்கு செய்யற மரியாதை.  அதை செய்திருக்கும் ராதா மோகனுக்கும், பிரகாஷ் ராஜுக்கும் வாழ்த்துக்கள். ஏற்கனவே ஒரு டிவி நிகழ்ச்சியில கவுரவக் கொலைப் பற்றியும் , ஜாதிக் கொடுமைகள் பற்றியும் பேசி ஒருதடவ மார்க்கெட்டிங் பண்ணியாச்சு.  ஆனாலும் பாருங்க   ஒரு தினசரிப் பத்திரிக்கை. இது கவுரவக் கொலை அல்ல., உணர்ச்சி வேகத்தில் செய்த கொலை என்று எழுதியிருங்காங்க.   மத்தபடி படத்தைப் பத்தி நல்லாத்தான் எழுதி இருக்காங்க. ஆனாலும் உணர்ச்சி வேகத்தில் செய்த கொலை அப்படிங்க வார்த்தையைப் படிச்சதும் ஷாக் ஆயிட்டேங்க., அதுவும் எப்படி.,  பாண்டவர் பூமி படத்தில் கொலை நடந்த உடனே நம்ம ராஜ்கிரண் நிப்பாரே அப்படி.,

இப்ப பாருங்க.,  ஜாதி, கவுரவ கொலை அப்படி இப்படின்னு பேசி பதிவர்கள் விமர்சனம் கூட எழுத முன் வர மாட்டாங்கராங்க., திருமதி தமிழை விட கவுரவும் படத்துக்கு  பதிவர்களின் விமர்சனம் குறைவுதான்.

======================================================================
தமிழ் திரையில்  ஜாதிப் பிரச்சனை பற்றி பேசுவதற்கு சில இலக்கணங்கள் இருக்கின்றன. அதைப் பின்பற்றினால் மட்டுமே அந்த படம் மக்கள் வரவேற்பைப் பெரும்.

உயர்ந்த தாழ்ந்த ஜாதிப் பிரச்சனைகளைப் பற்றிப் பேச கூடாது, வேண்டுமென்றால் உயர்ந்த பிற்படுத்தப் பட்ட மிகவும் பிற்படுத்தப் பட்ட ஜாதிப் பிரச்சனைகளைப் பற்றிப் பேசலாம்.

தாழ்ந்த ஜாதி  என்ற வார்த்தைக்குப் பதிலாக ஏழைகள் என்று உபயோகப் படுத்தலாம். பரதேசி என்று கூட சொல்லலாம். ஆனால் தலித் என்று சொல்லக் கூடாது.

தாழ்ந்த ஜாதியைக் காப்பாற்ற ஒரு உயர்ந்த ஜாதிக் காரர்தான் வரவேண்டும். அவர் ஜாதி வித்தியாசம் இல்லாமல் இருப்பார்.   அவர் தந்தையும் அவ்வாறே இருத்தல் நலம். அவர் வீட்டில் எல்லாம் ஏழைகளுக்கும் சோறு போடுவதாக ஒரு காட்சி அமைத்து. ஹீரோ குரூப்ஸ் வரும்போது. சாப்பிடுபவர்கள் எழுந்து  நின்று முதுகை வளைத்து  சாமீன்னு சொல்லி ஒரு கும்பிடு போட்டால் படம் சூப்பர் ஹிட் ஆகிவிடும். அனைத்து தரப்பினரும் பாராட்டுவார்கள். 

தமிழில் வெளி வந்த ஜாதி மறுப்பு திரைப்படங்களில் வெற்றிபெற்ற படங்கள் இரண்டு.

1. இது நம்ம ஆளு. அதிலும் ஹீரோ தலித் கிடையாது. சவரம் செய்யும் பிரிவைச் சேர்ந்தவர்.  தலித் என்பவர் அவர்களுக்கும் கீழே

2.வேதம் புதிது. இதிலும் கூட சத்தியராஜைப் பார்த்து அமலாவின் தம்பி கேட்கும் கேள்விகளை தமிழகமே புல்லரித்துப் பார்த்தது. நீங்க படித்து வாங்கிய பட்டமா? என்று கேட்டபோது சத்தியராஜ் ஷாக்காகி நிற்க தமிழகமே ஷாக் ஆகி நின்ற மாதிரி ஒரு ஃபீலிங்ஸ். யோசிச்சு பாருங்க,  அதே கேள்வியை ஒரு தாழ்த்தப் பட்ட சிறுவன் கேட்டிருந்தால் புல்லரித்து நின்ற ஜனம் என்ன செய்து இருப்பார்கள்?

==================================================================
இன்னொரு படமும் உண்டு. அதில் நிஜமாகவே ஹீரோவை தலித் ஆக காட்சி இருப்பார்கள். குடும்ப கவுரவம் காக்க அந்தப்  பெண் சாக,   மேல்ஜாதிப் பெண் காதலித்த இளைஞனும் கடைசியில் சாக எல்லோரும் நெஞ்சமும் மகிச்சியாக இருக்க அந்தப் படம் வெற்றி பெற்றது.   யாருக்காவது நினைவு  இருக்கா?

=================================================

கவுரவக் கொலை பற்றி மிக சமீபத்தில் உள்ளது உள்ளபடி ஒரு படத்தில் காட்சிப் படுத்தி இருப்பார்கள். படத்தில் துவக்கத்திலேயே  அந்த பையனை துரத்திக் கொண்டுப் போய் நடுக் காட்டில் வைத்து அவன் கெஞ்சும்போது தங்களது  வழக்கமான டயலாக் சொல்லி அந்தப் பையனை ஈவு இரக்கம் இல்லாமல் கொன்றுவிட்டு அவர்கள் அப்படித்தான் என்று பதிவு செய்திருப்பார்கள்.  அந்தப் படம்  சுந்தர பாண்டியன்.

பில்லா உருவான கதையை பில்லா 2 என்று சொல்லி (அதை நாயகன் 2, பாஷா 2 என்று சொல்லி இருக்கலாம் ) வெளிவிட்டது மாதிரி  இந்தப் படத்தையும்  சுந்தர பாண்டியன் 2 என்று சொல்லி மார்கெட்டிங் பண்ணி இருக்கலாம்.  டிவி நிகழ்ச்சியில் அழுத பெண்களின் கண்ணீரை விட பவர் ஃபுல்லாக இருந்திருக்கும்.

Wednesday, April 3, 2013

காதல் கோவணம்

அம்மணமாக சுற்றும் ஊரில் கோவணம் கட்டிக் கொள்வது போன்றதுதான் காதல் திருமணம். சிலர் அந்தக் கோவணத்தைக் கழட்டி தலையில் சுற்றிக் கொள்வதாலேயே காதல் திருமணம் என்பது முழுவதும் ஒதுக்க வேண்டியது என்ற முடிவுக்கு வரவேண்டியது இல்லை.
 

பெரும்பாலும் காதல் திருமணத்திற்கு எதிரி என்று பார்த்தால் பெற்றோர் என்று சொல்லுவார்கள். பார்த்தால் அப்படியும் இருக்காது. கூட இருக்கும் சொந்தங்கள் பந்தங்கள் என்று சொல்லிக் கொண்டு சுற்றுபவர்கள். இந்தப் பெண்ணையும் மாப்பிள்ளையும் குறிவைத்து சுற்றிக் கொண்டு இருந்தவர்கள் இவர்கள்தான் பெரிய எதிரியாக இருந்து இம்சை கொடுப்பார்கள். இவர்களுக்கு பயந்துதான் பெரும்பாலும் பெற்றோர்கள் எதிர்க்கிறார்கள்., கருணைக் கொலைகள் தான் ஒரு மானஸ்தன் என்பதை  தன் சாதிக்காரனுக்கு நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில்தான் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறார்கள். 

200- 300 கிமீ தள்ளி உள்ள, சில நேரங்களில் பக்கத்து மாநிலங்களில் உள்ள பெண்ணையோ, மாப்பிள்ளையையோ மெட்ரிமோனியலில் தங்கள் சாதிப் பெயரைக் குறிப்பிட்டு இருந்த ஒரே காரணத்துக்காக மணம் முடித்து வைக்கும் பெற்றோர்களால் ஏன் தங்கள் குழந்தைகளுக்கு பிடித்த பெண்ணையோ மாப்பிள்ளையையோ திருமணம் முடித்து வைக்க முடியவில்லை? இந்த சுற்றமும் சூழ நிற்கும் கூட்டங்களால் வந்த வினைதான் இது. 

தங்கள் சாதியிலேயே திருமணம் செய்து கொண்ட பலரையும் பாருங்களேன். அவர்களது கஷ்ட காலங்களில் இந்த சுற்றமும் சூழ வந்து கும்மியடித்தவர்கள் யாராவது வந்து உதவி செய்து இருக்கிறார்களா என்று?   காதல் திருமணம் செய்தவனானாலும், பெற்றோர் பார்த்து வைத்த திருமணம் ஆனாலும் அவனவனாகப் பார்த்து அந்தக் கஷ்டங்களைச் சமாளித்தால்தான் உண்டு.

அப்புறம் எப்படித்தான் இதைத் தாண்டுவது எனப் பாருங்கள்.  காதலிப்பவர்கள் இருவரும் சொந்தமாக ஒரு வேலை தேடிக் கொண்டு பிறந்த ஊரை விட்டு தள்ளி இருக்கும் நகரத்துச் சென்றவர்கள் காதல் திருமணம் சந்தோஷமாகத்தான் இருக்கிறார்கள். காதல் திருமணம் செய்து கொண்டு சொந்த ஊருக்குக்கு போனவர்கள் கதிதான் அதோ கதி ஆகியிருக்கிறது.

சொந்த ஊர், சொந்த மண் என்ற நினைப்போடு இருந்தால் கருணைக் கொலையை  சந்தித்துத்தான் ஆக வேண்டியிருக்கிறது, இதில் தலித், தலித் அல்லாதவர்கள் என்ற வேறுபாடு இருப்பதாகத் தோன்றவில்லை.   ஆனால் சாதி வேறுபாடு பார்த்தல் என்று எல்லா இடங்களிலும் பரவி இருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. அதே நேரத்தில் சாதி பார்க்காமல் பழகும் மக்களும் பெருகிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.  அப்படி சாதி பார்க்காமல் பழகுபவர்கள்கூட சாதி மறுப்பு திருமணத்திற்கு ஒத்துக் கொள்வார்களா என்பது சற்று சந்தேகம் தான். 

எனக்குத் தெரிந்தவரை  சாதி மறுப்பு திருமணம் செய்பவர்கள்  சொந்த ஊர் பக்கம் போகாமல் இருப்பது. இருவருமே நல்ல வேலையில் இருப்பது.ஆகிய காரணங்கள் மட்டுமே அவர்களது திருமணத்தை வாழ வைக்கும். இதை பயந்து ஓடுதல் என்று நினைக்கத் தேவையில்லை. புதிய வாழ்க்கை என்று நினைத்துக் கொள்ள வேண்டியதுதான். முடிந்தால் உங்களை பெற்றவர்களையும் உடன் அழைத்துச் செல்லுங்கள். அவர்களும் கண்டிப்பாக உங்களுடன் வந்து மகிழ்ச்சியாகத் தான் இருப்பார்கள்.  அப்படி உங்களோடு வர மறுத்தால்  பெற்றோர் பார்த்து வைத்து திருமணங்களில் எத்தனை பேர் கூட்டுக் குடும்பமாக இருக்கிறார்கள் என்பதைக் காட்டினால் அவர்களும் மனம் மாறக் கூடும்.

=================================================================
இன்றைய இளைஞர்கள் ஒரே சாதியில் திருமணம் செய்து கொள்ள எனக்குத் தெரிந்து சில காரணங்கள்.

1. அவர்களை யாருமே காதலிக்க மறுப்பது.., சிலர் சிலபல முயற்சிகள் செய்தும் பலனிக்காமல் போயிருக்கும்.

2.இதுவரைக்கும் பெற்றோர் சொன்னதை கேட்கவில்லை. இதை மட்டுமாவது பெற்றோர் விருப்பதுக்கு விட்டு விடுவோம் என்று ஒதுங்குவது ( இதில் அவர்களது சோம்பேரித் தனமும் இருக்கிறது)

3.நமக்கு நல்ல துணை கிடைத்து விட்டது. நமது சகோதர / சகோதரிக்கு நல்ல துணை கிடைக்குமா என்ற சந்தேகம். ( பம்பாய் அரவிந்த சாமி மாதிரி யாருக்கும் பதில் சொல்லத் தெரிவதில்லை)

Sunday, January 15, 2012

எம்.ஜி.யார் பாணியில் விஜய்

நண்பன் திரைப்படம், வித்தியாசமான அனுபவமாக அமைந்தது. சில திரைப்படங்கள் விஜயை வேறொரு களத்திற்கு அழைத்து செல்லும் வகையில் அமைந்திருக்கும்.  பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, திருமலை போன்ற படங்களுக்கு பிறகு விஜய் தனது பயணத்தை மாற்றிக் கொண்டிருப்பார். நண்பனும் அது போன்ற ஒரு படம்தான்.  ஆனால் நண்பன் போன்ற கதையை எழுதும் ஆட்கள் இப்போது இருக்கிறார்களா என்று தெரியவில்லை.  நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற எண்ணத்தில் வாழும் விஜய் கதாபாத்திரம் தமிழுக்குப் புதுசு. விஜய் ரசிகர்கள் சிலராவது ஆல் ஈஸ் வெல் என்று சொல்லிக் கொண்டு சுற்றினால் அதுவே மிகப் பெரிய வெற்றிதான்.  கருப்பு வெள்ளைக் காலத்து எம்.ஜி.ஆர் படங்களில் சில, பல தத்துவங்கள் எம் ஜியாரால் ரசிகர்களுக்கு திணிக்கப் பட்டு இருக்கும். ரசிகர்கள் தெரிந்தோ தெரியாமலோ அதன் பால் ஈர்க்கப்பட்டு இருப்பார்கள். அது போலத்தான் ஆல் ஈஸ் வெல்.  எப்படியோ நல்லது நடப்பதை வரவேற்றுத்தான் ஆக வேண்டும்.

விஜய்க்கு பன்ச் டயலாக் இல்லை. எண்ட்ரி சீன் இல்லையென்றெல்லாம் சொல்லிக் கொள்கிறார்கள்.  ஆல் ஈஸ் வெல்லைவிட என்ன ஒரு பன்ச் டய்லாக் வேண்டும்.  விஜய்யின்  எண்ட்ரி சீன் சொல்கிறதே படித்ததை வாழ்க்கையில் உபயோகித்து வாழ்பவர் என்று.  இதைவிட பவர்ஃபுல் எண்ட்ரி சீன் இதுவரை விஜய் படங்களில் வந்ததே இல்லை என்றுதான் சொல்லுவேன்.  காட்சிக்கு காட்சி  விஜய் ஒரு மாபெரும் பராக்கிரமசாலியாகவே காட்டப் படுகிறார்.  சக மாணவர்களுக்காக பொங்கி எழுவதிலும், அவர்களால் ஒரு வருடம் முழுவதும் செய்ய முடியாததை ஒரே நாளில் செய்து முடிப்பது ஆகட்டும், நண்பர்களுக்காக எதையும் செய்பவராக ஆகட்டும். முதலாளிக்காக அனைத்தையும் இழந்துவிட்டு செல்லும்போது. முதலாளிக்காக அனைத்தையும் கொடுத்துவிட்டாலும் விஜய் நிமிர்ந்து நிற்கிறார்.  விருப்பப்பட்டு படித்தால் சொந்தக்காலில் சந்தோஷமாக நிற்க்கலாம் என்ற கருத்து அற்புதமாக சொல்லப் பட்டு இருக்கிறது.  அமெரிக்காவில் போய் பேங்க் வேலை செய்வதற்கு எதற்கு என்சினியரிங், படிக்க வேண்டும் என்ற கேள்வி எழுப்பி இருக்கிறார்? ( கேள்வி இந்தியில் எழுப்பப் பட்டு ஷ்ங்கரால் தமிழ் படுத்தப் பட்டிருந்தாலும் இந்தக் கேள்வி ஜீவாவோ, ஸ்ரீகாந்தோ கேட்டிருந்தால் அது நம் காதில் கூட விழுந்திருக்காது)

இது போன்ற வலிமை வாய்ந்த ஹீரோ பாத்திரம் இனிமேல் விஜய்க்கு கிடைக்குமா என்று தெரியவில்லை. ஆனால் விஜய்க்கு மட்டுமல்லாது எல்லா ஹீரோக்களுமே இது போன்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க வேண்டும்.



அனைத்து மாணவர்களுக்கும் ஒரு கருத்து சொல்லப் படுகிறது, அதுதான் விஜய் முதல் மாணவனாக வரும் விதம். எத்தனை விஜய் ரசிகர்கள் அதை கவனிக்கிறார்கள் என்பது கேள்விக்குறியாக இருந்தாலும் ஒருவர் கவனித்துப் பயன் பெற்றாலும் மகிழ்ச்சியே..,

அடுத்ததாக கருத்துப் புரியாமல் மனனம் செய்து தேர்வு எழுதும் மாணவர்களை கண்டபடி கலாய்த்து இருந்தாலும் அந்த மாணவனும் நிறைய சம்பாதித்து தனக்கு பிடித்த வாழ்க்கை வாழ்வதாகவே காட்டி இருக்கிறார்கள்.  அனைத்து விதங்களிலும் நண்பன் ஆல் ஈஸ் வெல்..,

===========================================================================

என்றே முடித்து விடுவதுதான் நல்லது. இல்லியானாவை பற்றி எது பேசினாலும் அது எதிர்மறையாகத்தான் அமையும்.  விஜய் போன்ற ஒரு மிகச்சிறந்த மாணவனுக்கு  இல்லியானாவைப் போன்ற மிக மிக சுமாரான ஜோடிதான் அமையும் என்று  நிதர்சனைத்தைக் காட்டுகிறார்கள்.  இல்லியானாவை  ஆந்திராவில் நம்பர் ஒன் என்கிறார்கள்.  விஜயசாந்தி, ரம்யாகிருஷ்ணா , அனுஷ்கா வரிசையில் இல்லியானா என்பதை ஜீரணிக்கவே முடியவில்லை.  சாப்பாட்டில் எல்லாமே இனிப்பாக இருந்தால் திகட்டிவிடும் அல்லவா,  அது போலதான் இந்தப் படத்தில் இலியானாவும்..,

Thursday, November 24, 2011

ராமன், சீதை உதாரணத் தம்பதிகளா?

டிஸ்கி:- புராண, இதிகாச கதைகள் எதிர்ப்பாளர்கள் மனம் புண்படும் விதமாக இந்த இடுகை இருப்பதாக நினைத்தால் சற்று ஒதுங்கி நில்லுங்கள்.


ஏக பத்தினி விரதனாக ராமனையும், பதிவிரதையாக சீதையும் பலரும் உதாரணமாகச் சொல்லி நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால யாராவது ராமன், சீதையை உதாரணத் தம்பதியாகச் சொல்லிப் பார்த்திருக்கிறோமா? எங்காவது உதாராணத் தம்பதிகள் கதை ஏதாவது இருக்கிறதா?


கண்ணகி கதையிலும் சரியான தம்பதிகள் கிடையாது.

சாவித்ரி கதையிலும் சத்தியவான் டம்மி பீஸ்தான்.


அனுசூயா கதையோ தலை சுற்றவைக்கக் கூடியது.


இவர்கள் கதையில் எல்லாம் கணவர்களைப் பற்றி பெரிதாக எதுவும் இல்லாத நிலையில் சீதையின் கணவர் மட்டும் பத்தினி விரதனாக காட்டப் படுகிறார். 


ஒரே ஒரு மனைவியோடு  அவரையும் காட்டுக்கு அனுப்பி விட்டு ஆட்சிக் கட்டிலில் இருந்ததால் அவரைப் பற்றி இவ்வாறான புகழ்ச்சி மொழிகளை பரப்பி இருப்பார்களோ..


சீதையாக நடித்ததால்தான் கணவனைப் பிரிந்து மனைவி படும் வேதனை புரிந்தது என்று நயந்தாரா சொன்னதாக செய்திகள் வந்து இருக்கின்றன. சீதையாக நடிக்க அவர் அசைவ உணவுகளை தவிர்த்ததாக வேறு சொல்லி இருக்கிறார்.  சீதை சுத்த சைவம் என்று கம்பராமாயணத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எங்காவது சொல்லி இருக்கிறார்களா..?  ராமன் சீதையைப் பிரிந்த பின்னர் புலால் உண்பதை தவிர்த்ததாக வேறு பேசிக் கொள்கிறார்கள். இது பற்றி கம்ப, வால்மீகி ராமாயணங்களில் ஏதாவது சொல்லி இருக்கிறார்களா..?


Wednesday, October 5, 2011

ஸ்ட்ராங்கான மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்


https://fbcdn-sphotos-a.akamaihd.net/hphotos-ak-ash4/305116_267436236629976_192867670753500_811266_220613920_n.jpg     









மனைவி நல்லா ஸ்ட்ராங்கா இருந்தா ஒரு சக்கரம் இல்லாட்டிக்கூட வண்டி ஓட்டலாம் அப்படிங்கறதா எவ்வளவு அழகா சொல்லி இருக்காங்க பாருங்க

Friday, June 24, 2011

900/1200 க்கு தமிழக அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் சீட்

இன்றைய தேதியில் எம்பிபிஎஸ் சீட்டுக்காக பெற்றோர் அங்கும் இங்கும் அல்லாடிக் கொண்டு இருப்பதை பார்க்க முடிகிறது.  (சில பெற்றோர் லயோலா கல்லூரியில் விசுவல் கம்யூனிகேசன் சீட்டுக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் மனதில் வைத்துக் கொள்வோம்). தமிழ்நாட்டில் கட் ஆஃப் மதிப்பெண் ஒன்று இரண்டு குறைந்தால் கூட தனியார் மருத்துவ கல்லூரிகளில் சில லட்சங்கள் அதிகம் ஆகிக் கொண்டே இருக்கிறதாம்.

ஆனால் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர 900 மதிப்பெண் எடுத்தாலே கூடப் போதும். ஆனால் என்ன கீழே கொடுக்கப் பட்டிருப்பதுபோல மதிப்பெண் வாங்கி இருக்க வேண்டும் அவ்வளவுதான்.

உயிரியல்- 200/200
வேதியியல் 200/200
இயற்பியல் 200/200
கணிதம் 100/200
தமிழ் 100/200
ஆங்கிலம் 100/200

நம்பினால் நம்புங்கள் மேலே உள்ளமாதிரி மதிப்பெண்கள் வாங்கியிருந்தால் கண்டிப்பாக உங்களது 900 மதிப்பெண்ணுக்கே எம்.பி.பி.எஸ் சீட் கண்டிப்பாக கிடைக்கும்.

Saturday, May 28, 2011

சிங்கப்பூரில் ரஜினி ( காணொளிகளுடன்)

சிங்கப்பூருக்கு ஓய்வெடுப்பதற்காக சென்றிருக்கும் ரஜினிகாந்த நன்கு ஓய்வு எடுத்துக் கொண்டு பூரண நலத்துடன் தாயகம் திரும்பி ராணா, ஜீணா, நீனாம் கானா, இந்தன்னா, இத்தண்ணா என்று பல படங்களில் நடித்து மகிழ்ச்சியாக வாழுவதற்கு நம்மால் முடிந்த பிராத்தனைகளை செய்வோம்.

ஏற்கனவே ஒரு முறை ரஜினி உடல்நலம் இல்லாதபோதும்  அவரது குருநாதர் கே.பாலசந்தரின் ஏற்பாட்டின்படி  சிங்கப்பூர்தா அப்போது அங்கு படமாக்கப் பட்டதுதான் நினைத்தாலே இனிக்கும்.

இந்தப் படம் நாங்கள் குழந்தைகளாக இருக்கும்போதே வந்திருந்தாலும்கூட  ஒரு சராசரி மாணவனாக கல்லூரியில் காலடி எடுத்த வைத்த காலத்தில் நம்மைப் போன்ற ஒரு ஜீவனாக தோன்றிய பாத்திரம்தான் இந்த காணொளியில் வரும் ரஜினி. நமக்கே இவ்வாறு தோன்றியதென்றால் அந்தக் கால கட்ட மாணவர்களுக்கு தங்களில் ஒருவராக ரஜினி தோன்றியிருப்பார். தங்களில் ஒருவராக முதல்மதிப்பெண் வாங்கிய மாணவரை தலைக்குமேல் தூக்கிக் கொண்டாடும் சகமாணவர்களாக அப்போது ரஜினியை நினைத்துப் பார்த்திருப்பார்கள்.

இந்த்க் குறிப்பிட்ட காட்சியில்  துவக்கத்தில் ரஜினி காட்டும் அலட்சியம் பின்னா அவர் காட்டும் பதட்டம். அதையெல்லாம் விளக்கும் சக்தி நமக்கு இருப்பதாகவே தோன்றவில்லை.


ரஜினியின் கதாபாத்திரம் உருவாக்கமே ரஜினியை மனதில் வைத்து ரஜினிக்காக மட்டுமே செய்தது போல இருக்கும். கொஞ்சம் பிசகினாலும்  என்னவோ போல ஆகிவிடும் கதாபாத்திரம் அது.  ரஜினியின் நண்பர் வீட்டில் விடைபெரும்போதும், கமல் வீட்டில் கிளம்பும்போது நகைச்சுவை செய்யும்போது பரிசோதனை செய்யும்போதும் விமானத்திலும் நிதானமாக மீண்டும் மீண்டும் ரசிக்கலாம்.





மேடை நிகழ்ச்சிகளின்போது மாணவர்கள் பலரும் சேர்ந்துதான் அந்த கலைநிகழ்ச்சிகளை உருவாக்குவார்கள். நிகழ்ச்சியின் ஒட்டுமொத்த பேர் குறிப்பாக அன்று மட்டும் நிகழ்ச்சிகளை ரசிக்கும் நபர்கள் முன்னால் நிற்கும் மாணவனைத்தான் பாராட்டுவார்கள். கதை திரைக்கதை எழுதும் அதாவது ரூம்போட்டு யோசிக்கும் நபர்களுக்கு பாராட்டு மிக மெதுவாகத்தான் கிடைக்கும். அந்த உணர்வை ரஜினி இந்தப் பாடலின்போது அழகாக வெளிக்காட்டுவார்.  அது.................



முதன்முதலாக நகரத்திற்கு செல்லும் மாணவனுக்கும் இந்தப் படத்தில் வரும் ரஜினிக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.





இது ஒரு பக்தி பாட்டுன்னும் சொல்லலாம். ஒரு ஆட்டத்தில் ரிசர்வ் பிளேயர் எப்படி தனக்கு கொடுக்கப்படும் வாய்ப்பை நன்கு உபயோகப் படுத்திக்கொள்ளவேண்டும் என்பதாக இந்தக் கதாபாத்திரம் எனக்குப் படுகிறது.


முப்பது ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூர் சென்ற ரஜினி நலமுடன் திரும்பியத்தைப் போல இம்முறையும் நல்லபடி திரும்பி வர அனைவரும் பிராத்தனை செய்வோம்

Friday, May 27, 2011

இளையராஜா ரசிகர்களுக்கு ஒரு சவால்

நாட்டில் எல்லோரும் ரொம்ப சீரியஸா யோசனை பண்ணிட்டு இருக்காங்க. சீரியஸா அப்படிங்கறத தீவிரமான்னு எழுதலாமான்னு யோசித்து பார்த்தால் தப்பா அர்த்தம் வந்திருந்தும் நினைச்சால் ஒரு வேளை அதையே மக்கள்  அதுதான் சரி என்று சொல்லி விடுவார்கள் என்று சீரியஸா என்றே எழுதி விட்டேன்.

கொஞ்சம் மென்மையாக ஏதாவது எழுதலாம் என்று நினைத்த போது  சில மென்மையான பாடலகள் நினைவுக்கு வந்தன. அதில் ஒரு பாடல்தான் இது.



ஆனந்த தாகம்
உன் கூந்தல் பூக்கள் தீர்க்குமே
நாணம் தோற்குமே
அடிக்கடி
மலர்கொடி நேரம் பார்க்குமே
உரிமையில் என்மயில் ஆடும் முன்
ஆடும் முன்
உன்மழைக்காலம் போய்விடும்
ஆசைஆகிவிட நேர்ந்திடும்
நேருமோ....
ராத்திரி அலைகள் ஓயட்டும்
...
மூத்தவர் தலைகள் சாயட்டும்
..
தீபத்தின் விழிகள் மூடட்டும்
....
ஆடை கொடு
ஆளை விடு
தேகம் கொடு
போதும் விடு
தாகம் ஊருதே
......
( மௌனம்)

வலைக்கரம் ஒலிக்கையில் மானம் போகுதே
கன்னியின் மேனி வேர்க்குதே
ஏனம்மா
ஜன்னலின் கம்பி பார்க்குதே
அடராமா..,

பேசும் ஓசை இங்கு கேட்குதே கேட்குமோ
திரிகளை விரல்கள் தூண்டுதே தூண்டாதோ
அணைகளை வெள்ளம் தாண்டுதே
ஆசைநாகம் வந்து தீண்டுதே

நாணம் வந்து போகின்றது
தீயில் விஷம் சேர்கின்றது
கண்கள் மூடுதே
......(மௌனம்

அனைக்கையில் கவிக்குயில் ஊமை ஆனதே..



அதில் ஒரு பாடல்தான் இது. இந்தப் பாடல் என்ன ராகம் என்றெல்லாம் தெரியாது. ஆனால் இசைக் கோர்வைகள் தனித்தனியாக அசத்தும். அதைவிட  பாடகர்கள் பாடுவதே மிக அழகாக வேறொருவரால் இப்படிக் கொண்டுவர முடியுமா என்பது போல நேர்த்தியாக வடிவமைத்திருப்பார்கள். படத்தின் பெய்ர் தெரியவில்லை. வா இந்தப் பக்கம், ஒரு ஊதாப் பூ கண் சிமிட்டுகிறது என்றெல்லாம் யூ ட்யூப் பக்கம் பேசி இருப்பார்கள். இந்தப் பாடல் பெரும்பாலானவர்களுக்கு புதிதாக் கேட்பதாகவே அமைந்திருக்கும்.


=======================================================================







எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்
இங்கேதான் கண்டேன் பொன்வண்ணங்கள்
என் வாழ்க்கை வானில் , நிலாவே, நிலாவே

நான் காண்பதே உன் கோலமே அங்கும் இங்கும் எங்கும்
என் நெஞ்சிலே உன் எண்ணமே அன்றும் இன்றும் என்றும்

உள்ளத்தின் தீபம் உள்ளே என் ஜீவன் நீ நீ நீ

கல்லானவன் பூவாகிறேன் கண்ணேஏஏஏ உன்னைஐஐஐ எண்ணீஈஈஈ

எதற்காக வாழ்ந்தேன் உனக்காக வாழ்வேன் நான் நீ நாம்ம்ம்ம்



இந்தப் பாடல் பதின்ம வயதில் கேட்டு இருந்தாலும் சமீபத்தில்தான் பார்க்க நேர்ந்தது. கமல்ஹாசனை மனதில் நிறுத்தியே அசைப்போட்டு வந்த பாடல். கேட்ட்கும்போதெல்லாம் ஒரு உலுக்கு உலுக்கும்.  கதாநாயகி பாண்டியனின் போலீஸ் அக்காதான்.
இந்தப் பாடலை கேட்கும்போதே  அலைகள் ஆர்ப்பரிப்பதும்  உள்ளத்தில் புயல் அடிப்பதும்  படக்காட்சியைப் பார்க்காமலேயே நமது உள்ளத்தில் தோன்றும். அதுவும் அந்த கடைசி வரிகள்.  மீண்டும் ஒரு முறை இளைஞனாக மாறி களவு காதலைச் செய்யலாமா என்று தோன்ற வைக்கும். பாடலைப் பார்க்கும்போது குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் 2.50க்கு பின் வரும் நடன அசைவுகள் க்க்க்கிரேட்.,

=======================================================================







வேண்டும் வேண்டும் உங்கள் உறவு,
வெண்பனி தென்றல் உள்ளவரையில்..,

தோன்றும் இளமை, தொடர்ந்திட வேண்டும்
தொடரும் மாலை வளர்ந்திட வேண்டும்..,

நான்கு இதழ்கள் கலந்திட வேண்டும்
நாளை என்பதே மறந்திட வேண்டும்

நெஞ்சில் நீயே நிறைந்திட வேண்டும்
நீண்ட இரவுகள் நான் பெற வேண்டும்

கொஞ்சும் மொழிகள் நீ சொல்ல வேண்டும்
கோடைமழையில் நான் நனைந்திட வேண்டும்

உனை நினைத்தே நான் வாழ்ந்திட வேண்டும்
ஒவ்வொரு பிறப்பிலும் இணைந்திட வேண்டும்

இந்தப் பாடல் சமீப கால அரசியலில் முதல் இரண்டு வரிகளுக்காக பாடப் பட்டு வந்த பாடல். சிவாஜி, ஸ்ரீபிரியா காதல் கோடிகளாக இந்தப் பாடலைப் பாடினாலும் கூட கதை தந்தை சிவாஜிக்கும், மகள் ஸ்ரீப்ரியாவுக்கும் இடையேயானது.  தாயார் ஸ்ரீப்ரியா மகளை பெற்றவுடன் ஓய்வு பெற்றுவிடுவார்.  படம் முடியும் போது இதே பாடலை மகள் தந்தையைப் பார்த்து பாடுவார் என்றால் படத்தின் புரட்சியைப் புரிந்துதான் ஆக வேண்டும். இந்தப் படத்தோடு  மூன்றாம் பிறை, மூன்று முகம் ஆகிய வெளியானதாக பேசிக் கொள்கிறார்கள்.

கடைசி வரியைப் பாடும்போது  ஸ்ரீப்பிரியாவின் கண்களே தனிக் கவிதையாக ஒளிரும்.


டிஸ்கி:- இந்தப் பாடல்களில் இளையராஜாவின் பணி கலந்துள்ள பாடல்களை  கேட்டதும் சொல்லுங்களேன்.

Wednesday, May 11, 2011

தமிழகம் முழுவதும் நாங்கள் எடுத்த எக்ஸிட்போல் கருத்துக் கணிப்புகள்

இந்த தேர்தலில் வாக்களிப்பதற்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நடத்த நாங்கள் எங்கள் நண்பர்களுடன் சேர்ந்து முடிவு செய்தோம்.  நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் எல்லாம் பார்த்தால் ஏறக்குறைய தமிழ்நாடு முழுவதற்கும் ஆள் இருந்தது. கேள்விகளைத் தயார் செய்து வைத்தோம்.

1.இது வரை இருந்த முதல்வர்களில் நன்றாக செயல்பட்டவர் யார்? இந்த தேர்தலில் யார் முதல்வராக வர ஆசைப் படுகிறீர்கள்?

2.புதிய சட்ட சபையில் அதிமுக எத்த்னை இடங்களைப் பிடிக்கும்? திமுக எத்தனை இடங்களைப் பிடிக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? மற்ற அணிகளுக்கு எவ்வளவு?

3 கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்களின் வாழ்க்கைத்தரம் இந்திய அளவை ஒப்பு நோக்க அதிகரித்திருக்கிறதா? குறைந்திருக்கிறதா?

4.விலைவாசி அதிகரிப்பு இந்திய அளவைவிட் குறைந்திருக்கிறதா? அதிகரித்திருக்கிறதா?

5. தொலைக்காட்சி, ஸ்டவ், கிரைண்டர் பிரச்சாரம் எடுபடுமா?

6.ஊழல் ஒரு பிரச்சனையாக இருக்குமா?

7.அரசியல் தலைவர்கள் தங்கள் தவறுகளைத் திருத்திக் கொள்வார்கள் என்று நம்புகிறீர்களா?

8.வடிவேலுவின் பிரச்சாரம் எடுபடுமா?   வடிவேலு அடுத்த கருப்பு எம்.ஜி.ஆர் ஆக மாறி திமுக வெற்றிக்கு உதவுவாரா?

9.மின்வெட்டு தேர்தல் பிரச்சனையா?


10.இந்திய அரசியலில் தமிழ்நாட்டு தேர்தல் முடிவுகள் எதிரொலிக்குமா?




இப்படியெல்லாம்  கேள்விகளை வைத்துக் கொண்டு மூத்த நண்பர் ஒருவரிடம் கேள்வித்தாள் பற்றி கருத்துக் கேட்டோம். அவரும் சில விஷய்ங்களைப் பேசி விட்டு, யார் யாரிடம் எல்லாம் கொடுத்து கேட்கப் போகிறீர்கள் என்று கேட்டார். நாங்களும் பெரும்பாலான நண்பர்கள் பெயர் மற்றும் அவரது நண்பர்கள் என்று 150-200 பெயர்களைச் சொன்னோம். 

இது போன்ற வாக்கெடுப்பு ஏற்றவகையில் பலதரப் பட்ட வேளை செய்பவர்கள். பல ஊர்களில் குடியிருப்பவர்கள், பல்வேறு அரசியல் கட்சிக்கு ஆதரவு அளிப்பவர்கள் என்று பரவலாக இருப்பதையும் சொன்னோம்.

அவர் உடனே சில கேள்விகளில் சில மாற்றங்கள் சொன்னார். 

முதல் கேள்விக்கு சச்சின் பெயரை சேர்த்துக் கொள்

இரண்டாவது கேள்விக்கு இந்திய கிரிக்கெட் அணியை சேர்த்துக்கொள்

மூன்று நான்காவது கேள்விக்கு கேள்வி புரிகிறதா இல்லையா என்று ஒரு வாய்ப்பினைக் கொடு


என்பது மாதிரி வரிசையாகச் சொன்னார். எனக்கென்னவோ கேள்வித்தாளில், சச்சின் பெயரைச் சேர்த்தால் அவர்தான் முதலிடம் வருவார் என்று தோன்றியது. இது போன்று அவர் சொன்ன மாற்றங்களில் மொத்தமாக குழம்பி நின்றதும் அவரே சொன்னார்.   உங்க லிஸ்ட் பாருங்கப்பா, அவங்களெல்லாம் என்ன சொல்லுவாங்கன்னு நீங்க யோசித்து சில எண்களைப் போட்டு கருத்துக் கணிப்பு வெளியிட்டு விடு அவ்வளவுதான் விஷயம். இதுக்கு போய் பக்கம் பக்கமா அச்சிட்டு அதை விநியோகித்து, அதை தபாலில் திரும்பப் பெற்று, அதை தொகுத்து.., அதற்குள் உண்மையான முடிவுகளே வந்து விடும்  என்று சொல்லி விட்டார்.


Tuesday, May 10, 2011

+2 வெற்றி, மாயை அல்லது பிரமை

பனிரெண்டு முடித்தவர்களுக்கான தேர்வு முடிவு வந்து விட்டது, மதிப்பெண் தரவரிசை போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். முதல் இடம் பிடித்த மாணவர்களை தலையில் தூக்கிவைத்து ஆடிக் கொண்டிருக்கிறார்கள்.  ஊக்கப் படுத்துவது அவசியம்தான்,. அதற்காக கிரிக்கெட் அணிக்கு வரவேற்பு கொடுப்பதுப்போல விளம்பரம் அவசியம்தானா!

10ல் நல்ல மதிப்பெண் வாங்கி 12ல் தடுமாறிப் போனவர்கள் கதி என்ன?

12ல் நல்ல மதிப்பெண் எடுத்தவர்களில் பெரும்பாலோனோர் மருத்துவம் எடுக்கிறார்கள்.  ஒரு சிலர் மட்டுமே லட்சியமாக பொறியியல் எடுக்கிறார்கள். மற்றவர்கள் மருத்துவம் கிடைக்காததால் பொறியியல் எடுக்கிறார்கள். ஆனால் இந்த ஓட்டப் பந்தயத்தில் முன்னிலை பெற்றவர்கள் நிலை. படிப்பு முடிக்கவே ஆறு ஆண்டுகள்.  சற்று பின் தங்கியவர்கள் நான்கு ஆண்டுகளில் நல்ல வேலைக்குப் போய் விடுகிறார்கள்.  பலர் உலகம் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.  ஆனால் 6 ஆண்டுகளில் மருத்துவம் படித்தவர்களில் சில முண்ணனி கல்லூரிகளில் முதுகலை படிக்கவில்லை என்றால் எதிர்காலமே இல்லை என்ற அளவில் தன்னம்பிக்கையை வளர்த்துவைத்து மேலும் மேலும்  போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்வதிலேயே காலம் தள்ள வைக்கிறார்கள். சிலர் வெற்றி பெறுகிறார்கள்.


பொறியியல் சேர்ந்தவர்களில்கூட அனைவரும் லட்சக் கணக்கில் சம்பாதிக்கிறார்களா? என்றால் அதுவும் இல்லை. பலரும் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். சிலபல ஆண்டுகள் லட்சங்களில் புரண்டவர்கள் கூட அதன்பின் கல்லூரி ஆசிரியர்களாக சொற்ப சம்பளத்துக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.

மருத்துவம், பொறியியல் கிடைக்காதவர்கள் அத்தோடு அழிந்து போய்விட்டார்களா? என்றால் அப்படி இல்லை. ஆசிரியர் பள்ளிகளில் சேர்ந்தவர்கள். அரசுப் பள்ளி, கல்லூரிகளின் பணிக்கான போட்டித் தேர்வுகளில் வென்று பணியில் சேர்ந்தவர்கள் மிகச் சிறிய வயதிலேயே மேற்கண்ட பிரிவு மாணவர்களைவிட அதிகமாக வெகுகாலம் சம்பாதிக்கும் நிலைக்கு வந்து இருக்கிறார்கள்.

பொறியியல், மருத்துவம், ஆசிரியர் பணி வாய்ப்புக்கள் கிடைக்காமல் கலை அறிவியல பட்டப் படிப்பு போய் பின்னர், நிர்வாகப் படிப்போ, இந்திய ஆட்சிப் பணிக்கோ போனவர்களும் அதிகம்.

இது எதற்கும் வழி இல்லாமல் போன அளவு மதிப்பெண் எடுத்தவர்களின் வாழ்க்கை அஸ்தமித்துவிட்டதா என்றால் அதுவும் கிடையாது.  அவர்களும் தங்கள் பிழைப்பை நடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்.பலர் மிக நல்ல நிலையிலேயே இருக்கிறார்கள்.

என்னொடு ஒன்பதாம் வகுப்புப் படித்த நண்பர் ஒருவர், மூன்றுமுறை ஒன்பதாம் வகுப்பில் தோல்வி. நகரில் உள்ள முண்ணனி கடை ஒன்றில் அன்றாடக் கூலிக்கு வேலைக்குச் சேர்ந்தார். அவரிடம் எந்த சொத்தும் கிடையாது.  முதலாளிக்கு விசுவாசமாக இருந்தார். சில ஆண்டுகள் கூலித் தொழியாளியாக காலந்தள்ளியவர் பின்னர் அங்கேயே ஓட்டுநராக மாறினார், யார் அவரது வண்டியில் ஏறினாலும் மிகவும் பணிவுடன் விருப்பத்திற்கேற்ப ஓட்டுவார். மணம் கோணாமல் பார்த்துக் கொள்வார். இன்று அவருக்குச் சொந்தமாக ஏழு வண்டிகள் உள்ளன. ஒவ்வொரு வண்டியும் வங்கிக் கடன் மூலம் வாங்கியது. சிபாரிசு மற்றும் கியாரண்டிக் கையெழுத்துக்கள் அவரது விசுவாதத்தின் மூலம் சம்பாதித்த மனிதர்கள் போட்டதுதான். கடனை வெகுவிரைவில் அடைத்துவிடுவார். இப்போது ஓட்டுநர்களும் இவரிடம் பணிக்கு உள்ளனர். இவர் இன்னும் பழைய முதலாளியிடம் மாதச் சம்பளத்தில்தான் பணிக்கு இருக்கிறார்.



மதிப்பெண்களாக குவித்து லட்சக் கணக்கில் சம்பாதிக்கும் வேலைக்குச் சென்றவர்கள் வென்றவர்களாக கருதமுடியுமா? என்றால் அதுவும் இல்லை. வாழ்க்கை என்று ஒன்று இருக்கிறது. சமுதாயக் கட்டமைப்பில் வாழும் நம்மால் நம் சந்ததிகளை உருப்படியாக உருவாக்கும் லடமை இருக்கிறது. இல்லையென்றால் அவர்கள் வெறும் உருப்படிக்களாக போய்விடும் ஆபத்தும் இருக்கிறது,  அதில் தோல்வி கண்டால் அவர்கள் பெற்ற வெற்றிகளையெல்லாம் அவர்களின் குழந்தைகள் குழிதோண்டிப் புதைத்துவிடுவார்கள்.

அப்படியென்றால் என்ன செய்வது? வாழ்க்கையில் படிப்பு முக்கியமில்லையா?  மதிப்பெண்கள் அவசியமில்லையா? முதல் மதிப்பெண்க்கள் பெற்றவர்களைப் பாராட்ட வேண்டாமா?

பாராட்டுங்கள். வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணியைப்போல பாராட்டு மழையில் மூழ்கடிக்கடித்துவிடாதீர்கள். அவர்கள் போக வெண்டிய பாதைகள் நிறைய உள்ளன. இந்த வெற்றியை அடித்தளமாக பயன்படுத்தி சாதிக்க வேண்டிய விஷய்ங்கள் நிறைய உள்ளன.  அதில் கவனம் செலுத்த்ச் சொல்லுங்கள்.

தோல்வி அடைந்தவர்கள் ( இந்தப் பாராட்டுக் கொண்டாட்டங்கள் இரண்டாம், மூன்றாம் நிலைபெற்றவர்களை தோற்றவர்கள் போல சித்தரிக்கின்றன)  மனம் வெம்பும் அளவிற்கு கொண்டாட்டங்கள் தேவையே இல்லை.

வாழ்க்கையில் ஒரு நிலை அவ்வளவுதான். ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வாங்குவதுபோல . அதை மட்டும் வைத்துக் கொண்டு  அடகுவைக்கக்கூட முடியாது.

சென்ற ஆண்டு போட்டதுதான். மீள்பதிவு

Monday, May 9, 2011

இந்த ஆண்டு பதினொன்று சேரும் மாணவர்களுக்கு..,

இந்த ஆண்டு பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்துவிட்டன.   இன்னும் சில நாட்களுக்கு மாறி மாறி வாழ்த்துக்களும்  பேட்டிகளும் வந்து கொண்டே இருக்கும்.    ஒவ்வொரு பள்ளியிலும் எம் மாணவர்களும் இத்தனை பேர் 1100+  , இத்தனை பேர் 1150+ , இத்தனை பேர் 1200+ என்றெல்லாம் மாறி மாறி விளம்பரம் கொடுப்பார்கள்.




அந்த விளம்பரங்கள் இப்போது வருவதைவிட 10ம் வகுப்பு முடிவுகள் வந்த பின்பு இன்னும் அதிகமாக இருக்கும்.  இந்த -------+  விளம்பரம் போடும் பள்ளிகள் எல்லாம் பெரும்பாலும் 475க்கும் மேல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை மட்டுமே சேர்க்கும் பள்ளிகளாக இருக்கும்.   முடிந்தால் இன்று வெளியாகியுள்ள + 2 தேர்வுகளில் ஒவ்வொரு தனித் தனி மாணவனும் +2ல் எடுத்த மதிப்பெண் சதவீதம் எவ்வளவு அதே மாணவன் பத்தாம் வகுப்பில் எடுத்த மதிப்பெண் சதவீதம் எவ்வளவு என்பது பற்றி  ஒரு ஒப்புமை பாருங்களேன்.  பெரும்பாலான பள்ளிகள் இதில் தோல்வியே அடைகின்றன.



பல 95 சதவிகிதத்திற்கும் மேற்பட்டு மதிப்பெண் வாங்கியவர்கள் 90-95ல் வந்து நிற்கிறார்கள்.  பல 90 % + மாணவர்கள் 90க்கும் கீழே போகிறார்கள்.  இவ்வாறு பெரும்பாலான மாணவர்களின் மதிப்பெண் சதவிகிதத்தை இரண்டு ஆண்டுகளில் குறைத்திருக்கும் பள்ளிகளில் பல மாணவர்கள் 1150க்கும் மேல் வாங்கியிருந்தால் அது அந்த மாணவர்களால் வாங்கப் பட்டதா? அந்த பள்ளி கொடுத்த பயிற்சியினால் வாங்கப் பட்டதா? 



எனவே மாணவர்களே, மாணவர்களின் பெற்றோரே இந்த ஆண்டு பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளை இந்த கோணத்திலும் ஒரு முறை ஆய்வு செய்து பின்னர்  பள்ளியை முடிவு செய்யலாமே? மாணவர்களின் ஆளுமைத் திறன், போராடும் தன்மை போன்ற பல விஷயங்கள் முக்கியாக இருந்தாலும் தேர்வில் பெரும் மதிப்பெண்கள் தலையாய இடம் பிடித்து நிற்கின்றன. நமக்குத் தேவை சிறந்த பயிற்சி அளித்து உயர்வடையச் செய்யும் பள்ளிகளே.   சிறந்த மாணவர்களை மட்டுமே சேர்த்துக் கொண்டு அவர்களின் சிறப்பான உழைப்பால் தாங்கள் பெயர் வாங்கிக் கொண்டு நிற்கும் பள்ளிகள் அல்ல


பின் குறிப்பு:- இவ்வாறு மதிப்பெண் வாங்கியிருப்பதாக விளம்பரம் செய்யும் பள்ளிகள் அந்த மாணவர்களின்  10 வகுப்பு மதிப்பெண்களை தெரிந்து கொள்ள வாய்ப்பு இருந்தால் சொல்லுங்களேன்.

பின்குறிப்பு 2: இணைய்ம மூலம் அதை தெரிந்து கொள்ள ஏதாவது வழி இருக்கிறதா?

பின்குறிப்பு3:- உங்களுக்கு தெரிந்து இவ்வாறு மதிப்பெண் சதவிகிதம் குறைந்த மாணவர்கள் அதிகமா? அதிகரித்த மாணவர்கள் அதிகமா?


Friday, May 6, 2011

ஜோதிகா கார்த்தி நிச்சயதார்த்ததிற்கு ஏன் வரவில்லை?

சிவக்குமார் தனது மகனுக்கு தனது விருப்பப்படி தானே தனது சுற்றமும் நட்பும் சூழ முன்னின்று ஒரு பெண்ணைப் பார்த்து நிச்சயம் செய்து இருக்கிறார்.

கொடுமுடிக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தில் நிச்சயம் நடந்ததாக செய்திகளும் படங்களும் வந்துள்ளன. சூர்யாவும் இருந்திருக்கிறார்.

http://panippulam.com/panippulamcom/padam/cinema/karthi-engament%20_1_.jpg


ஆனால் ஜோதிகாவும், அவர்களது குழந்தையும் காணவில்லை.

வழக்க்மாக சிவகுமார் வீட்டுப் பெண்களின் மேல் காமிரா விழாமல் பார்த்துக் கொள்வது போல இந்த நிகழ்ச்சியிலும் ஜோவும், குழந்தையும்  படங்கள் வெளிவராமல் பார்த்துக் கொண்டனரா?



இல்லை  ஜோவுக்கு இது போன்ற விழாக்களில் கலந்து கொள்ளும் உரிமை மறுக்கப் படுகிறதா?


அவ்வாறு மறுக்கப் பட்டால்  அதற்கு அவர் காதல் திருமணம் செய்து கொண்டது காரணமா?   

கொடிசீயா- கோவையில் நடக்கும் திருமணத்திற்காவது ஜோ வருவாரா?

குடும்பத்தின் மூத்த மருமகளுக்கு  அவருக்கு உரிய மரியாதை கிடைக்குமா?


=========================================================================

இவ்வளவு தூரம் வந்தாச்சு அப்படியே 
பாபா s/o பொன்னி   படிச்சு கருத்து சொல்லிட்டு போங்க

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails