Monday, August 24, 2009

நார்த்தி ரங்கீலாவும் மண்ணின் மகள்களும் 24.8.09

அடுத்த ஆண்டின் துவக்கம். முதல் வேளையாக கல்லூரி பேரவைக்கு பிரதிநிதி தேர்ந்தெடுக்கும் வேலை ஆரம்பம் ஆனது. அந்தப் பிரதி நிதியே வகுப்பின் தலைவனாகவும் இருப்பான். டேஞ்சர் டயபாலிக் விருப்பம் இல்லாமல் ஒதுங்கிக் கொண்டான்.

ஜில்லட்டின் குமார் ஏற்கன்வே குரூப் ஸ்டடி என்ற பெயரில் ஒரு கூட்டத்தைச் சேர்த்து வைத்திருந்தான். அவனது கூட்டத்தினர் அவன் சொல்வதை பெரும்பாலும் தலையாட்டிக் கொண்டிருந்த காரணத்தால் அவன்தான் இந்த ஆண்டின்ப் பிரதிநிதி என்பதாகவே எல்லோரும் நினைத்திருந்தார்கள்.

ஆனால் நடந்ததோ வேறு

பெண்ணுரிமை, பெண் விடுதலை என்று பேசி பேசி இருந்ததால் அவன் அணி சார்பாக ஒரு பெண்ணைத்தான் நிறுத்த வேண்டும் என்பதில் அந்தப் பெண்கள் மிகவும் உறுதியாக இருந்தனர் . ஜில்லட் ங்ஏ என்று விழித்துக் கொண்டிருந்தான். பெண்களில் வலிமை வாய்ந்தவளும் எதற்கும் அஞ்சாதவளும் எல்லோரிடமும் தைரியமாக நிற்கக் கூடியவளுமான சுமித்ராவே தலைமைப் பொறுப்புக்கு ஏற்றவள் என்பதாக அந்தக் குழுமம் முடிவு செய்திருந்தது. வழக்கம் போல் அந்தக் கூட்டத்திற்கும் குழுமி இருந்த அனைவருக்கும் ஜில்லட்டின்தான் குளிர்பானம் வாங்கிக் கொடுத்தான்.

அன்று மாலை அந்த வகுப்பு மாணவர்களின் பொதுக்குழு கூடியது. தேர்தல் பொறுப்பாளராக டேஞ்சர் டயபாலிக்தான் இருந்தான். வகுப்பினில் ஜில்லட்டின் நிற்பான் என்ற எண்ணம் இருந்ததால் ஆண்கள் யாரும் தேர்தலில் நிற்கவில்லை. ஜில்லட்டின் எழுந்து சுமித்ராவின் பெயரை முன் மொழிந்த உடன் ஆண்கள் பலர் சற்று அதிர்ச்சிக்குள்ளானார்கள். அவர்களால் ஒரு பெண்மணியை தங்கள் தலைவராக ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை. புதிதாக தங்களுக்குள் ஒருவரை தேர்ந்தெடுக்கும் அவகாசம் இல்லாத நிலையில் குழப்பாகவே நின்றிருந்தனர்.

ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப் படலாம் என்ற சூழலில்

சுமன் எழுந்தான். ரங்கீலா தத்தா வின் பெயரை முன் மொழிந்தான். ரங்கீலா பெயரைப் போலவே வண்ணமயமானவள். மாணவர் மனதில் இடம் பிடித்தவள். ரங்கீலா சுமன் பேசியே நாங்கள் பார்த்ததில்லை. தேர்வு மும்மரத்தில் எந்த எந்த கூட்டணி எப்படி இடம் மாறியது என்றே தெரியவில்லை. சைக்கிள் சின்னம் என்.டி.ஆரை விட்டு பிரிந்ததைக் கேட்டதைவிட மக்கள் அதிகமான அதிர்ச்சியை அதிர்ச்சியுடன் பார்த்தனர்.

வேறு யாராவது நிற்பதற்கு விரும்புகிறீர்களா என்று கேட்ட போது இங்கிலீஷ் குப்பன், டயபாலிக் போன்றவர்கள் பெயர்களையும் பலரும் முன் மொழிந்தனர். (ஜில்லட்டின் பெயரும் முன்மொழியப் பட்டது. அவன் சுமித்ராவை முன்மொழிந்த காரணத்தால் அவனும் ஒதுங்கிக் கொண்டான்.) ஆனால் அவர்கள் விருப்பம் இல்லை என்று கூறிவிட்டதால் இறுதிப் போட்டியாளர்களாக ரங்கீலா தத்தாவும், சுமித்ராவும் போட்டியிட்டன்ர்.

------------------------------------------------------------------------------




----------------------------------------------------------------------------------

கொக்கு ஒன்னு காத்திருக்கு

கண்ணீரில் தத்தளிச்சு மீனிருக்குது



----------------------------------------------------------------------------------

வடக்கும் தெற்கும் மோதிக் கொண்டதில் அதிபயங்கர திருப்பங்கள் நிகழ்ந்தன.
முதலில் சுமித்ரா நிற்பாள் என்பதே யாரும் எதிர்பாராத ஒன்று. ஜில்லட்டின் குமாரின் வகையறாவில் இல்லாத ஒருத்தி அவர்கள் சார்பாக நிறுத்தப் பட்டிருக்கிறாள். அடுத்ததாக சுமித்ராவில் முன்னாள் சைக்கிள் சாரதியான சுமனின் ஆதரவோடு ரங்கீலா தத்தா நிற்கிறார்கள்.

மூத்த மாணவர்கள் மத்தியில் ஒரு பத்திரிக்கையாளர் கம் அரசியல்வாதியின் தோற்றத்தில் சுமன்குமார் சித்தரிக்கப் பட்டிருந்தான். கிங் மேக்கர், குயின் மேக்கர் என்றெல்லாம் புகழப் பெற்றான்.

சுமித்ராவின் பதவியை முடிக்க வந்த கோடரிக் காம்பாக சுமன் சித்தரிக்கப் பட்டான். ரங்கீலாவிற்காக மாணவர்கள் மத்தியில் அவன் தான் ஓட்டுச் சேகரித்துக் கொண்டிருந்தான். அவனோடு சேர்ந்து வட நாட்டுப் பெண்களும், உள்ளூர் சேட்டுப் பெண்களும் மாணவர்களைத் தேடித்தேடிச் சென்று அளவளாவியதில் மாணவர்கள் தத்தாவிற்கே ஓட்டுப் போட்டுவிடுவார்கள் என்பது போல தோன்றியது.

ஏற்கனவே இங்கிலீஷ் குப்பன் - சுமித்ரா உரசலில் அவளது சரமாரியான தமிழ் சொற்பொழிவுக்கு உள்ளூர் பாஷையில் பொருள் கொண்ட மக்கள் கொஞ்சம் எரிச்சலாகவே இருந்தனர்.

ரங்கீலா மற்றும் தோழிகள் எந்த அலட்டலும் இல்லாமல் கொஞ்சும் தமிழும், குழைந்த குரலுமாய் ஓட்டுக் கேட்க மாணவர்களின் ஓட்டுக்களை அப்படியே அள்ளும் நிலையில் இருந்தாள்.

தேர்தலுக்கு முதல்நாள் காலை:-

தமிழ் மகளின் பிரச்சார பாணியே மாறியது. அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் ஊர் மற்றும் பக்கத்து ஊர் மாணவர்களை அனுகினர். மொழிஆர்வத்தையும் மண் பாசத்தையும் உணர்த்தும்விதம் சொற்பொழிவாற்ற ஆரம்பித்தனர்.

ஒவ்வொரு வார்டிலும் சராசரியாக ஐந்து மாணவர்கள் இருப்பார்கள். அவர்கள் ஒவ்வொரு நாளும் நோயாளிகளைப் பரிசோதனை செய்வார்கள். அந்த ஒரு நோயாளியைப் பற்றி உதவிப் பேராசியர்களிடம் கல்ந்துரையாடல் செய்வார்கள். என்வே தினசரி வகுப்புகளுக்கும் அடுத்தடுத்த நாட்களில் எஸ்கேப் ஆவதற்கும் சகமாணவியரின் உதவி தேவை என்பதால் அவர்களின் பிரச்சாரம் வேலை செய்தது.

(சுமத்ராவும், சுமனும் அடுத்தடுத்த பெயர் என்பதால் அவர்கள் ஒரே வார்டில் ஒரே யூனிட்டில் இடம் பெற்றிருந்தனர் ) பொதுவாக கடைசி ஆண்டுவரை இதே நிலைதான் நீடிக்கும்.

மற்றும் வடக்கத்தி மாணவர்களை யாருக்கும் பிடிக்காது என்பதால் அவர்களை எதிர்த்தும் பிரச்சாரம் செய்யப் பட்டது. காலை முதல் மாலை வரை நடந்த பிரச்சாரத்தில் நன்கு பலன் இருந்தது.

தேர்தல் நடந்தது. கடும்போட்டியில் சுமித்ரா வென்றாள்.

சில நாட்களில் பேரவை பதவியேற்பு நடந்தது. மூன்றாம் ஆண்டு மாணவர்கள் பிரதிநிதியாக சுமித்ராவை அழைத்தனர். முக்காடு போட்டுக் கொண்டு சென்றாள். நடந்தாள், நடந்தாள்......, நடந்தாள்......., அவளது சக தோழியர் பாஷா..., பாஷா.., என்ற குரலை அதே தோணியில் எழுப்பிக் கொண்டிருந்தனர். இதே போன்ற சம்பவம் மாணிக ஃபாத்திமாவின் துப்பட்டா பகுதியிலும் இருந்தது என்பதை தெரியாதவர்கள் இந்த சுட்டியை த்ட்டிப் பாருங்கள்

அவள் அணிந்திருந்த துப்பட்டா .., அதே வண்ணம், அதே வடிவம், அதே வேலைப்பாடுகள், மொத்தத்தில் அன்று வந்த அதே துப்பட்டா.

எப்படி?

குப்பன் பக்கம் பார்வையைத் திருப்பிய போது அவன் முகத்தில் எந்த வித உணர்ச்சியும் தென்படவில்லை. அவன் மட்டுமல்ல அவனோடு சேர்ந்த யாரின் முகத்திலுமே எந்தவித உணர்ச்சியும் தென்படவில்லை

தொடரும்...,

----------------------------------------------------------
கதையின் முதல் பகுதி "அடப்பாவி மணமேடையில்கூட

இரண்டாம் பகுதி நண்பர்கள் என்றும் சொல்லலாம்

மூன்றாம் பகுதி இந்தப் பூனையும் பால் குடிக்குமா?

நான்காம் பகுதி ஃபிகர் இல்லடா.., ஃபிகர் மாதிரி

ஐந்தாம் பகுதி ஒருத்திக்கு எத்தனை பேர்டா லவ் லெட்டர் கொடுப்பீங்க

ஆறாம் பகுதி நான்கு பெண்களைக் காணவில்லை.

ஏழாம் பகுதி நெஞ்சுக்கு நடுவில் தொங்கிய வாக்மேன்

எட்டாம் பகுதி மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு; மடிமேல் விளையாடி...

ஒன்பதாம் பகுதி தமிழ் இந்தி ஒற்றுமையை வளர்த்த ரங்கோலிப் போட்டி

பத்தாம் பகுதி இது ராக்கிங்கிற்கு ஆதரவான இடுகை அல்ல

பதினொன்றாம் பகுதி மாணிக் ஃபாத்திமாவின் துப்பட்டா

பனிரெண்டாம் பகுதி பெண்ணுரிமை காக்க வந்த ஆபத்பாந்தவன்

பதிமூன்றாம் பகுதி அங்க is போடு இங்க was போடு

பதினான்காம் பகுதி சுதேசி மாணவர்கள், விஜயதசமி,

தொடரும்..,

9 comments:

  1. நல்ல சுவாரசியமான தேர்தல் சுரேஷ்!!

    ReplyDelete
  2. ஹாஸ்டல் தினங்கள் -- சுஜாதாவின் நாவல் போலுள்ளது!!

    ReplyDelete
  3. தமிழ்மணம் ஓட்டுப்போட்டாச்சு!!

    ReplyDelete
  4. ரொம்ப இன்ரஸ்டிங்கான கதை

    ReplyDelete
  5. அருமையா 2 பாட்டுகளை ஞாபகப்படுத்தீட்டிங்க தல!

    ReplyDelete
  6. ஹ்ம்! கதை எப்படி எப்படியோ திரும்புதே. நகத்தைக் கடித்து வெயிட்டிங்!

    ReplyDelete
  7. // தேவன் மாயம் said...

    நல்ல சுவாரசியமான தேர்தல் சுரேஷ்!!//

    நன்றி சார்.., இதில் இன்னொரு தேர்தலும் வரும்

    ReplyDelete
  8. //தேவன் மாயம் said...

    ஹாஸ்டல் தினங்கள் -- சுஜாதாவின் நாவல் போலுள்ளது!!//

    நன்றி சார், பாராட்டுக்கும் ஓட்டுக்கும்

    ReplyDelete
  9. @Starjan ( ஸ்டார்ஜன் )
    @ஜெகநாதன்
    @சங்கா

    நன்றி நண்பர்களே..,

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails