Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Saturday, September 3, 2016

காதல், களவு தமிழர் பண்பாடே 3.9.16

தனக்கு பிடித்த ஒருவனைத் தானே தேர்ந்தெடுத்துக் கொண்டு தன் வாழ்க்கையை தேடிச் செல்வது என்பது பழந்தமிழர் வாழ்க்கையில் இயல்பான ஒன்றே. அதற்கான ஓர் ஆதாரம் இதோ

கழிய காவி குற்றும் கடல
வெண் தலைப் புணரி ஆடியும் நன்றே
பிரிவு இல் ஆயம் உரியது ஒன்று அயர
இவ்வழிப் படுதலும் ஒல்லாள் அவ்வழிப்
பரல் பாழ் படுப்பச் சென்றனள் மாதோ
செல் மழை தவழும் சென்னி
விண்ணுயர் பிறங்கல் விலங்குமலை நாட்டே.

குறிந்தொகை 116, கோடன் கொற்றனார் எழுதியது

கழிய – ஆறு கடலோடு சேருமிடம், மனைவி கணவனோடு சேருமிடமாகவும் கொள்ளலாம்

காவி –தாம்பூலத்தின் வண்ணம், மலர்கள் ,

குற்றும் – பறித்தும்,அரிசி குத்தும் செயலில் வரும் குத்தும் என்ற பொருளிலும் கொள்ளலாம்

கடல – கடலில் உள்ள,

வெண்டலைப் – வெள்ளைத் தலைகளையுடைய ,

புணரி ஆடியும் – அலைகளில் ஆடியும்,

நன்றே – மிக,

பிரிவு இல் ஆயம் – பிரிவு இல்லாத தோழியருடன்,

உரியது ஒன்று அயர – எல்லோருக்கும் உரிய விளையாட்டையும் புரிய,

இவ்வழிப் படுதலும் ஒல்லாள் – இந்த வழிக்கு ஒத்துக் இருக்காமல், 

அவ்வழி – அந்த வழியில்,

பரல்பாழ் படுப்பச் சென்றனள் – சிலம்பில் உள்ள கற்கள் பாழாக்கும்படி சென்று விட்டாள்.

மாதோ – அசை,

செல்மழை – செல்லும் மழைமேகங்கள்,

தவழும் சென்னி – தவழும் மலை உச்சி, 

விண்ணுயர் பிறங்கல் விலங்குமலை நாட்டே   – வானத்து அளவும் உயர்ந்த மலைகள் உள்ள நாட்டிற்கு (சென்று விட்டாள் )
.
இது ஒரு செவிலித் தாய் பாடியதாக உள்ள பாடல்.  இந்தப் பாடலை மீண்டும் ஒரு முறை படித்து இதில் உள்ள பொருட்களோடு உங்களுக்கு தோன்றும் பொருளையும் சேர்த்து படிக்கும்போது வெளிப்படும் உணர்வுகள் சுவையாக இருக்கும்.
 
இந்தப் பாடல் ஒரு செவிலித்தாயானவள் தனது மகள் காதலனோடு சென்று விட்டதை சொல்லும் வண்ணம் அமைந்த பாடல். இது போன்ற பாடல்களை பள்ளிகளிலேயே சொல்லித் தர ஆரம்பித்தால் காதல் எண்பது மிக இயல்பான ஒன்று என்பதை மிக ஆரம்பத்திலிருந்தே புகட்ட முடியும்.

Friday, September 2, 2016

காதலும் களவும் தமிழர் ஒழுக்கம் 31.8.16

நான் சொல்ல வருவது இந்தப் பாடலில் உள்ள செய்தி அல்ல.., இது போன்ற செய்திகளை பொதுவில் சொல்ல பழந்தமிழ் மகளிருக்கு உரிமை இருந்திருக்கிறது. என்பதே ஆகும். ஆணுக்குக்கு இருக்கும் உரிமை பெண்ணுக்கும் உண்டு என்பது புரிந்தாலே, காதலுக்காக சோகமாக சுற்றுவதும் காதலிக்க மறுத்தவளை கொல்வதும் தவிர்க்கப் பட்டுவிடும்.


யாரும் இல்லை தானே கள்வன்
தான் அது பொய்ப்பின் யான் எவன் செய்கோ
தினைத்தாள் அன்ன சிறு பசுங்கால
ஒழுகு நீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே.



இது கபிலர் எழுதிய பாடல், குறுந்தொகை 25
குறிஞ்சித் திணை அதாவது புணர்தலும் புணர்தல் நிமித்தமுமான பாடல்கள் இந்த குறிஞ்சித் திணையில் வரும்.

//யாரும் இல்லை தானே கள்வன்//
அந்த நிகழ்ச்சி நடக்கும்போது யாரும் இல்லை. தானே கள்வன் என்று சொல்வதால் அவன் திருடிவிட்டான் என்று பொருள் கொள்ளலாம். என்ன திருடிவிட்டான். குறிப்பாக சொல்லாததால் நாயகியின் அகம், அல்லது புறம் என்று நமக்கு வசதியாக பொருள் கொண்டு விடலாம்.


//
தான் அது பொய்ப்பின் யான் எவன் செய்கோ//
நான் நெனச்சது பொய்யாக போனால் யார் என்ன செய்ய முடியும்?


//தினைத்தாள் அன்ன சிறு பசுங்கால
ஒழுகு நீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டுதான்// திணைப் பயிரின் தாள் மாதிரி சின்ன பசுமையான(இளமையான அப்படி எடுத்துக்கலாமா) காலில் ஒழுகும் நீர்... ஆரல் பார்க்கும் குருகும்..,, ஆரல்- ஒரூ வகை மீன் குருகு அப்படின்னா குருத்து..,அதாவது மீனைப் பார்க்கும் குருத்து.



//குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே.//
இந்த மேட்டர்ல்லாம் திருமணம் நாளிலிருந்தே


இதையெல்லாம் திரும்ப ஒருமுறை துவக்கத்திலிருந்து மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்து. உங்களுக்குத் தோன்றும் பொருளை எடுத்துக் கொள்ளலாம்.
நான் சொல்ல வருவது இந்தப் பாடலில் உள்ள செய்தி அல்ல.., இது போன்ற செய்திகளை பொதுவில் சொல்ல பழந்தமிழ் மகளிருக்கு உரிமை இருந்திருக்கிறது. என்பதே ஆகும். ஆணுக்குக்கு இருக்கும் உரிமை பெண்ணுக்கும் உண்டு என்பது புரிந்தாலே, காதலுக்காக சோகமாக சுற்றுவதும் காதலிக்க மறுத்தவளை கொல்வதும் தவிர்க்கப் பட்டுவிடும்.
#kadhalpsk

Monday, February 14, 2011

கா...த...ல...ர் தி..ன...ம்

சொல்லிவிடலாம்

ஆனால்

என்ன ஆனால்

சொன்னபிறகு

சொன்னபிறகு?

ஏற்க மறுத்தால்

மறுத்தால் மறக்க வேண்டியதுதானே!

மறக்கும் மனம் இருந்தால்

இருந்திருந்தால்?

நினைக்கவே முடியவில்லையே


மறப்பதை நினைக்கவே

முடியவில்லையே


பின்னர்

நினைத்ததை மறப்பது என்பது...,

தொடக்கம் என்றிருந்தால்


முடிவு என்றும்


ஒன்று இருக்குமே


முடிவே

வேண்டாம் என்றுதானே

சொல்லவே வேண்டாம் என்று

மனம் சொல்கிறது

ஒரு நாள்

பல நாட்கள்

ஒரு வாரம்

பல வாரங்கள்

ஒரு மாதம்

பல மாதங்கள்

பல மாதங்கள் தாண்டி

சில ஆண்டுகள் கூட

ஓடிவிட்டன

கல்லூரி வாழ்க்கைகூட

கடைசி நாளில் சொன்னால்கூட


^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^

சொல்லி இருந்தால் கூட...,





^
^
^
^
^
^
^
^
^
^
^
^
^
சொன்னதால் என்ன நடந்தது என்பதை அறிய இந்தச் சுட்டியைப் பயன்படுத்துங்கள்.

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails