Thursday, August 20, 2009

சுதேசி மாணவர்கள், விஜயதசமி, 20.8.09

தேர்வுகள் பற்றிய அறிவிப்புகள் வந்தபின் மாணவர் போட்டி போட்டுக் கொண்டு படிக்க ஆரம்பித்தனர். கட்டிலலில், மெத்தை வடிவத்திற்கு பரப்பி வைக்கப் பட்டிருந்த அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நிறுவனங்களால் வெளியிடப் பட்டிருக்கும் புத்தகங்களை சில மாணவர்கள் உருப் போட்டுக் கொண்டிருந்தனர். சுதேசி இயக்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் இந்திய ஆசிரியர்கள் எழுதிய தலையணை வடிவ புத்தகங்களைப் படித்துக் கொண்டிருந்தனர். இன்னும் சிலர் வகுப்புகளில் எடுக்கப் படும் பாடங்களின் குறிப்புகளை கொண்டு தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருந்தனர்.

குப்பன் குரூப்ஸ் மாணவர்கள் தாங்கள் வாங்கிய பாடப்புத்தகங்களை முதன்முதலாக எடுத்து வைத்து சாமி கும்பிட்டுவிட்டு படிக்க ஆரம்பித்திருந்தனர். இவ்வாறு விஜய தசமி அன்று பாடப்புத்தகங்களை படிக்க ஆரம்பித்தால் சுலபமாகத் தேர்ச்சி பெற முடியும் என்ற ஒரு செண்டிமெண்ட் உருவாக இந்தத் தேர்வு முன் உதாரணமாக அமைந்தது. ஆண்டு முழுவதும் பாடம் நடக்கும் தேர்வு டிசம்பர் மாதத்தில் நடக்கும். குப்பன் குரூப்ஸ் புத்தகம் எடுப்பது விஜய தசமியன்று. இடைப்பட்ட கால கட்டத்தை நீங்களே கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்.

குப்பன் குரூப்ஸில் முட்டை தோசை இருந்ததாலும் அவனது வகுப்புக் குறிப்புகள் அவனது கூட்டத்தாருக்கு எளிதில் புரியும் வண்ணம் அமைந்திருந்ததாலும் அவர்கள் புததகங்களை தொடமாலேயே காலந்தள்ளி வந்தனர். முட்டைத் தோசையின் குறிப்புகளை பெண்கள் கேட்ட போது நடந்த நிகழ்வுகள் இங்கே....,

புதிதாக வாங்கி ஃப்ளூரசண்ட் மார்க்கர் பேனாவையும், படித்த பக்கங்களுக்கும் படிக்காத பக்கங்களுக்கும் இடையே வைக்கும் சிறிய அளவுகோலையும் புதிதாக வாங்கிக் கொண்டு மாணவர்கள் இரவு பகலாகப் படிக்க ஆரம்ப்பித்திருந்தனர். தூக்கம் வரும்போது அந்தப் புத்தகங்களையே தலையணையாக உபயோகப் படுத்திக் கொள்ளும் வசதி இருந்தாலும், அதிக உயரம் காரணமாக கழுத்து வலி வரும் வாய்ப்பு இருந்ததால் அதைத் தவிர்த்து பல நேரங்களில் கைகளையே உபயோகப் படுத்தி உணவு உறக்கம் எல்லாவற்றிலும் கட்டுடைப்பு செய்து படிக்க ஆரம்பித்திருந்தனர்.

இதே நேரத்தில் கல்லூரியின் உள்ளே ஜில்லட்டின் குமாரும் கூட்டுப் படிப்பில் ஈடுபட்டுவந்தான். கல்லூரி நூலகத்தின் அருகே இருந்த ஆலமரத்தின் ஒரு பகுதியில் அவன் குழுமம் குழுமி இருந்தது. பெரிய ஆலமரத்தில் சிமிண்ட் பென்ஞ்சுகள் போடப் பட்டு மாணவர்களுக்கு வசதி செய்து கொடுக்கப் பட்டு இருந்தது, ஆலம் விழுதுகள் நிறைய தொங்குக் கொண்டிருந்தன. அதில் மாணவர்கள் அவர்களுக்குச் சொந்தமான ஃபோல்டிங் சேர்களைக் கொண்டுவந்து சிக்கவைத்து ஆடிக்கொண்டே இருக்கும் வகையில் வசதி செய்திருந்தனர். வருடத்தின் பெரும்பாலான நாட்களில் கடலைக்கும், கடலை போடுபவர்களைப் பார்த்து ஏக்கப் புகை விடுவதற்கும் பயன்பட்ட இடம் ஜில்லட்குமாரின் தயவில் அது க்ரூப் ஸ்டடி செய்யும் இடமாக அமைந்திருந்தது. இவர்கள் படிப்பதைப் பார்த்துவிட்டு மற்ற மாணவர்கள் தங்கள் இளைப்பாற்றுதல் வ்கையறாக்களை வேறு இடங்களுக்கு மாற்றி இருந்தனர்.

படித்துக் கொண்டிருக்கும் போதே ஜில்லட்டின் குமார் , தனது நட்புவட்டத்தை பெருதாக்கிக் கொண்டே இருந்தான். அப்படியே வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் டேஞ்சர் டயபாலிக் பற்றியும் குப்பன் குரூப்ஸ் பற்றியும் தனக்குத் தெரிந்த கருத்துக்களை, உருவாக்கிய கருத்துக்களை தனக்கே உரித்தான் பாணியில் சொல்லிக் கொண்டுவந்தான். பெண்களிடம் அப்போதைய சூழலில் நட்பு ரீதியில் பேசும் வல்லமை படைத்தவனாக ஜில்லட் குமார் மட்டுமே இருந்த காரணத்தால் அவன் சொல்வதை அந்தக் குழுவில் இருப்பவர்கள் நம்ப ஆரம்பித்திருந்தனர். அவனது குழுவில் மேலும் சில் ஆண்களும் பெண்களும் சேர ஆரம்பித்திருந்தனர்.

அடுத்த கட்டம் விரைவில் வெளிவரும்.,

முந்தைய பகுதிகளுக்கு இந்தச் சுட்டியைப் பயன் படுத்தவும்.


அப்படியே இந்தப் பாடலையும் பார்த்து கேட்டு ரசியுங்கள்

4 comments:

  1. உங்ககிட்ட நான் வியக்கும் விடயம்

    உங்களுடைய பதிவிலேயே ஏற்கனவே வந்த விடயங்கள் வருமாறு அடுத்துடத்த பதிவுகள் இருக்கின்றது, உங்கள் பதிவின் சுட்டிகளையே கொடுத்து - இது ரொம்ப பிடிச்சிருக்கு.


    இதன் மற்ற சுட்டிகளை இன்னும் பார்க்கவில்லை - விரைவில் பார்த்து விடுகின்றேன்.

    ReplyDelete
  2. படிச்சாச்சு. அடுத்ததுக்கு வெயிட்டிங்!

    ReplyDelete
  3. //சங்கா said...

    படிச்சாச்சு. அடுத்ததுக்கு வெயிட்டிங்!//

    விரைவில் கொடுத்துவிடுகிறேன்

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails