Wednesday, May 13, 2009

சுமித்ராவின் சரித்திரம் பக்கம்- 4

ஜூனியர் மாணவியைக் காட்டி விசாரித்துக் கொண்டிருந்ததைப் பார்த்த சுமித்ரா என்ன நினைத்தாள் என்று தெரியவில்லை.., அவளைப் பார்த்து வியர்த்தது உண்மையில் இன்று நினைத்தாலும் நகைச்சுவையாகத்தான் இருக்கிறது. அப்போதுதான் இரண்டாம் ஆண்டு போயிருந்ததால் முதலாமாண்டில் அனைவரையும் பார்த்து பயப் படும் நிலமை மாறாத சூழல் இருந்ததால் சுமித்ராவைப் பார்த்து கூட பயப்பட நேர்ந்தது ஒரு நகைச்சுவைதான்.

ஜூனியர் மாணவன் மறுநாள் முழுவிவரமும் தருவதாகக் கூறினான்.

=================================================

கதையின் முதல் பகுதி "அடப்பாவி மணமேடையில்கூட


இரண்டாம் பகுதி நண்பர்கள் என்றும் சொல்லலாம்

மூன்றாம் பகுதி இந்தப் பூனையும் பால் குடிக்குமா?

சுட்டிகளைப் பயன்படுத்தி படித்து மகிழுங்கள்.

=========================================================

மறுநாள் அன்று அந்த ஜூனியர் மாணவன் முழு பயோ டேட்டாவுடன் வந்து நின்றான். எனக்கே ஆச்சரியமாய் இருந்தது. சீனியர் மாணவர் கேட்டார் என்று ஏறக்குறைய மிரட்டி முழு விவரங்களும் வாங்கிக் கொடுத்துவிட்டான். பின்னாளில்தான் தெரிந்தது சீனியர் கேட்டார் என்றே நிறைய மாணவிகளின் முழுவிவரங்களையும் வாங்கி வைத்திருக்கிறான். எத்த்னை பேருக்கு என்னைக் காட்டி விவரங்கள் வாங்கினானோ தெரியவில்லை.

அந்தப் பெண்ணின் பெயர் உஷா..., அதில் கிடைத்த விவரங்களை அவ்வப்போது பகிர்ந்து கொள்ளுவோம்.

உஷாவிற்கும் சுமனுக்கும் உள்ள நட்பு அது பாட்டுக்கு வளர்ந்து கொண்டுதான் இருந்தது.

இப்போதெல்லாம் ஜூனியர் மாணவர்களிடம் மற்ற மாணவர்கள் டாப்-10 பெண்களை அடிக்கடி கேட்க ஆரம்பித்திருந்தனர். முதல் கால கட்டங்களில் டாப்-10 பட்டியலில் இல்லாத உஷா கொஞ்சம் கொஞ்சமாக இடம் பிடித்தாள். அதுவும் சுமன் இருக்கும் இடங்களில் இது கொஞ்சம் அதிகமாக இருந்தது. விடுதி உணவகத்தில் ஒரு மேசையில் சுமன் இருக்கும் நேரத்தில் மற்ற மேசையில் இந்தக் கேள்வி வந்தால் உஷா முதலிடம் பிடிக்க ஆரம்பித்தாள்.

அவள் உண்மையிலேயே சூப்பர் ஃபிகர் என்று நினைத்த மூத்த மாணவர்கள் வாய்ப்பு கிடைக்கும் போது உடற்கூறியல் அறுவை அறை மற்றும் வகுப்பறைப் பக்கங்களில் தென்பட ஆரம்பித்தார்கள். சரமாரியாக அனைத்து மாணவர்களாலும் அவள் பெயர் உச்சரிக்கப் பட்டதால் அவளை உண்மையிலேயே ஃபிகர் என்று நினைத்துவிட்டனர்.

ஏறக்குறைய புடவை கட்டிய ரம்பாவும் மகேஷ்வரியும் கலந்த உருவம் மஞ்சள் வண்ண ரிப்பன் கட்டி முகப்பூச்சிப் பவுடர் இல்லாமல் கோட் வேறு அணிந்து 40 கிலோவில் ஒரு மங்கை. அவளை அழகி சென்று சொல்லி எல்லோரும் ஏமாந்து கொண்டிருந்தனர். அதற்குக்காரண்ம சுமந்தான் என்ற விவரம் தெரியத் தெரிய சுமன் உஷா விவகாரமும், சுமன் சுமித்ரா விவரமும் கல்லூரி முழுவதும் பரவ ஆரம்பித்தது.


கல்லூரியின் முன்பகுதியில் உள்ள பிள்ளையார் கோவிலில் உட்கார்ந்து ஊர் திரும்பும் பெண்களிடம் சீடை, முறுக்கு போன்ற பொருட்களை கப்பமாக வாங்கும் கூட்டம் ஒவ்வொரு ஞாயிறு அன்றும் கூடியிருக்கும். நாங்களும் சீனியர் ஆகிவிட்டதால் அந்த பிள்ளையார் கோவிலில் ஒரு தூணைப் பிடித்து உட்கார்ந்து கொண்டிருந்தோம். ஒவ்வொரு பெண்ணிடமும் இருக்கும் திண்பண்டங்களை வாங்கிக் கொண்டிருந்த எங்களுக்கு புரையேற ஆரம்பித்தது. திரும்பிப் பார்த்தால் சுமன் உஷாவுடன் நடந்து வந்து கொண்டிருந்தான். நாங்கள் எங்கள் வகுப்பு மாணவிகளிடம் பேசுவதற்கு பயந்து கொண்டிருந்த போது சுமன்..., உஷாவுடன் நடந்து வந்து கொண்டிருந்தான்.

அப்படியே பிள்ளையார் கோவில் தூணுக்குப் பின்னால் அப்படியே உட்கார்ந்து விட்டோம்.. சுமன் பாதுகாப்பாக உஷாவை கல்லூரி விடுதிக்கு அழைத்துச் சென்றான். கடுப்பான நாங்கள் யமகாவை எடுத்துச் சென்று ஜோடியை வழிமறித்து வழிபறியை ஆரம்பித்தோம். நாங்கள் அவளிடம் பெயர் கேட்டுவிட்டு சுமனிடம் பூவே உனக்காக படத்துக்கு போகலாமா.., உள்ளத்தை அள்ளித்தா பார்க்கலாமா என்று வெட்டியாக பேச ஆரம்பித்தோம். சுமன் நெளிந்து கொண்டிருக்கும் போதே சுமித்ரா அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தாள். வீட்டிலிருந்து விடுதி நோக்கி வந்து கொண்டிருந்தவள். வழியில் இருந்த கூட்டத்தைப் பார்த்து உள்ளே நுழைந்துவிட்டாள். உஷாவைப் பிரித்து விடுதிக்கு அனுப்பி விட்டு எங்களுடன் பேச ஆரம்பித்தாள்.

சுமனைப் பார்த்து என்ன நீயும் இவனுகளோட சேர்ந்துவிட்டாயா என்று கேட்டாள்.

சுமன் புரியாமல் விளிக்க இவனுக( நாங்கள்தான்) எல்லாம் ரொம்ப நாளா உஷா பின்னாடி சுத்திட்டு இருக்கானுக. நானும் ரொம்ப நாளா கவனிச்சிட்டு இருக்கேன். இன்னைக்கு நீயும் கூட்டணி அமைச்சிட்டே..

சுமன் ரொம்பவும் நல்ல பிள்ளை போல தலையாட்டிக் கொண்டிருந்தான். நாங்கள் விடுதிக்கு திரும்புவதாகச் சொன்னவுடன் சுமித்ரா கொண்டுவந்த பையிலிருந்து ஒரு பார்சலை எடுத்து சுமனிடம் கொடுத்து இது உன்க்காக என்றாள். இவனுகளுக்கும் கொஞ்சம் கொடுத்துவிடு என்று பெரிய மனத்துடன் சொன்னாள்.

பார்சலில் இருந்த பலகாரங்கள் எங்களுக்கு பாரமாய் சாப்பிடுவதற்கு முன்பே தொண்டையில் நின்றது.

===============================================================

தொடரும்......................................................

அடுத்த பகுதி

ஒருத்திக்கு எத்தனை பேர்டா லவ் லெட்டர் கொடுப்பீங்க?

வந்துவிட்டது.

8 comments:

  1. உள்ளேன் அய்யா.

    ReplyDelete
  2. வோட்டு போட்டாச்சு தல.

    ReplyDelete
  3. //King Viswa said...

    வோட்டு போட்டாச்சு தல.
    //

    நன்றி தல..

    ReplyDelete
  4. //எத்த்னை பேருக்கு என்னைக் காட்டி விவரங்கள் வாங்கினானோ தெரியவில்லை.//

    இதெல்லாம் சகஜம் தலைவரே

    ReplyDelete
  5. // புருனோ Bruno said...

    //எத்த்னை பேருக்கு என்னைக் காட்டி விவரங்கள் வாங்கினானோ தெரியவில்லை.//

    இதெல்லாம் சகஜம் தலைவரே//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல..,

    ReplyDelete
  6. டாக்டர் பின்னாடி பாருங்க ...

    ReplyDelete
  7. தல பேக்கிரவுண்ட் படம் சூப்பர்.

    நீங்க யூத்துன்னு அடிக்கடி நிருபிக்கிறீங்க.

    ReplyDelete
  8. // Starjan ( ஸ்டார்ஜன் ) said...

    டாக்டர் பின்னாடி பாருங்க ...//


    // அக்பர் said...

    தல பேக்கிரவுண்ட் படம் சூப்பர்.

    நீங்க யூத்துன்னு அடிக்கடி நிருபிக்கிறீங்க.//


    நன்றி தல..,

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails