Thursday, May 21, 2009

சுமித்ராவின் சரித்திரம் பக்கம் 5 ( a love lettttter story )

சுமித்ரா-சுமன் -உஷா விஷங்கள் அவ்வப்போது குழப்பம் ஏற்படுத்திக் கொண்டேதான் இருந்தாலும் அதைவிட பெரிய பெரிய பிரச்சனைகள் எங்களுக்கு இருந்தன. கல்லூரியில் எங்களுக்கான அடையாளம் உருவாகிக் கொண்டிருந்த காலம். சிலர் ஹீரோக்களாகவும், சிலர் ஆங்கிலேயர்களாகவும்,சிலர் மகளிர் காவலராகவும் உருவெடுத்துக் கொண்டிருந்தனர். சில அறிவுஜீவி மாணவர்கள் கூட அழகுணர்ச்சி மிளிரும் வண்ணம் வலம்வரத் தொடங்கியிருந்தனர்.

இந்தச் சூழலில்தான் இரண்டாமாண்டும் சுற்றுலா வந்தது. முதலாமாண்டு சுற்றுலாவில் சுமன் சுமித்ரா சைக்கிள் ஓட்டிய கதையை ஏற்கனவே படித்திருப்பீர்கள்.

படிக்காதவர்கள்


கதையின் முதல் பகுதி "அடப்பாவி மணமேடையில்கூட


இரண்டாம் பகுதி நண்பர்கள் என்றும் சொல்லலாம்

மூன்றாம் பகுதி இந்தப் பூனையும் பால் குடிக்குமா?

நான்காம் பகுதி ஃபிகர் இல்லடா.., ஃபிகர் மாதிரி

சுட்டிகளைப் பயன்படுத்தி படித்து மகிழுங்கள்.

-------------------------------------------------------------------

இரண்டாம் ஆண்டு சுற்றுலா பற்றிய பேச்சுக்கள் தொடங்கிய உடனயே மாணவர்கள் அனைவரும் தயாராகத் தொடங்கினர். எங்கள் வகுப்புத் தலைவர் அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். துணைமுதல்வரிடன் அனுமதி வாங்குவது, உடன் வரும் விரிவுரையாளர்களை தயார் செய்வது, மாணவர்கள் தங்குமிடம் ஏற்பாடு செய்வது, பேருந்து ஏற்பாடு செய்வது போன்ற பணிகள் தலைவரின் தலைமையில் வேகமாகச் செய்யப்பட்டன. ஏற்கனவே அந்த ஊர்களுக்குச் சென்ற மூத்த மாணவர்களின் உதவியும் அந்த ஊரைச் சேர்ந்த பிற மாணவர்களின் ஆலொசனையும் கவனத்தில் கொள்ளப் பட்டது.

இந்த உலா ஏற்பாடுகள் அது பாட்டுக்கு நடந்து கொண்டிருந்தபோதே பிற ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்தன. பல மாணவியர் சுற்றுலாவிற்கு தனி உடைகள், அலங்காரப் பொருட்கள், குளிர்கண்ணாடிகள் வாங்க ஆரம்பித்திருந்தனர். மாணவர்களும் அதே போன்ற பொருட்களை மூத்த மாணவர்களிடமிருந்து கடன் வாங்க ஆரம்பித்திருந்தனர்.


இந்த சூழலில் வகுப்பில் இருந்த சில சேட்டைக் கார மாணவர்கள் ஒரு குழுவாக நடு இரவில் கால்பந்து மைதானத்தின் நடுவில் அமர்ந்து ஆலோசனை செய்து கொண்டிருந்தனர். கால்பந்து மைதானத்தில் அமர்ந்து மந்திர ஆலோசனை செய்வதில் பல வசதிகள் இருந்தன. எத்தனை பேர் வேண்டுமானாலும் அமரமுடியும். பேசும் விஷயங்களை யாரும் ஒட்டுக் கேட்க முடியாது.

சேட்டை1:- டூர் வருதுடா.. நாம ஏதாவது செய்யணும். அவன் அவன் பெரிய பிஸ்த் ஆயிட்டு இருக்கான்.

சேட்டை2:- ஆமாண்டா.., நம்மள காமெடியனா கூட எவளும் பாக்க மாட்டேங்கறாளுக

சேட்டை3:- ஸ்கூல்ல குஞ்சம் வைச்ச சடைப் போட்டவ எல்லாம் இன்னிக்கு ஹேர் கட்டிங் பண்ணிட்டு லொள்ளு தாங்க முடியல...

சேட்டை1:- விடுறா..., ஸ்கூல்லயே நீ கரெக்ட் பண்ணியிருக்கணும். தும்பவிட்டுட்டு வாலப் புடிக்க நெனச்சா முடியுமா...

சேட்டை4:- விடுங்கடா பழசக் கெலறி விட்டுக்கிட்டு.. ஏதாவது செய்து நாமளும் டெபாசிட் புடிக்கணும்டா

சேட்டை3:- இந்த சோடா புட்டி சோப்ரா பார்ரா.. இப்பலெல்லாம் ஜிகினா கூட கடலைப் போட்டுக்குட்டு இருக்கான். இவங்க அத்தனைப் பேருக்கும் ஹெல்மெட் போட்டு டெபாசிட்ட கலட்டுணும்டா.. ஏதாவது ஐடியா சொல்லுங்கடா

சேட்டை5:- அவன் பேர் நாம லவ் லெட்டர் கொடுத்துறலாம்டா. ஜிகினா இரி ஆயிடுவா

சேட்டை6:- நீ அப்படிச் சொல்ற..ஆனா நான் என்ன சொல்றன்னா அப்ப அதுக ரெண்டும் செட்டில் ஆயிடும் நீ மாமா ஆயிடுவ

சேட்டை7:- ஆமா ஆமா இனி இங்கிலிஷ்ல கடல போடுறத எல்லாம் கேட்க வேண்டியிருக்கும்

சேட்டை1:- அப்ப நாமலே லெட்டர் கொடுப்போம்.

சேட்டை5: ஆனா நம்ம மூஞ்சிக்கு செட்டில் ஆகாதே..

சேட்டை2:-அதைப் பத்தியெல்லாம் கவலைப் படக்கூடது

சேட்டை4:-ஆமா வள்ளுவர் கூட சொல்லியிருக்கரு. உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்..

சேட்டை5:-அப்ப ஓ.கே.. ஓ.கே

சேட்டை2:- யாருக்கு கொடுக்கலாம்டா நக்மாவுக்கு கொடுக்கலாம்டா.. சேட்டு ஃபிகர் செட்டில் ஆனா தேவையில்லை பாலிஸி..

சேட்டை3:- அப்ப நீயே கொடுத்துடு

சேட்டை2:- அது சரி இந்த கோவை மாநகரிலே பழம்வாங்கா பதிவிரதன் நான் மட்டும்தான். அந்த வேலை இங்க வேண்டாம்

சேட்டை6:- அப்ப நாம எல்லோரும் கொடுப்போம்.

சேட்டை3:- ஒருத்திக்கு எத்தனை பேர்டா லவ் லெட்டர் கொடுப்பீங்க

சேட்டை1:- ஒருத்திக்கு வேண்டாம்டா எல்லோருக்கும் லெட்டர் கொடுப்போம்டா. நாம எல்லோரும் கொடுப்போம்

சேட்டை2:- சூப்பர் ஐடியா. லெட்டர் ரெடி பண்ணனும்டா

சேட்டை3:- அன்பே.. அன்புள்ள அன்பே

சேட்டை5:- இப்படியெல்லாம் எழுதினேன் வை செருப்படி விழும்

சேட்டை1:- ஹாய்.., ஐஸ்.. (ஐஸ்வர்யா) இப்படி ஆரம்பிப்போம்

சேட்டை7:- ஓப்பனிங்லயே செமயா வண்டி ஏத்தறயேடே

சேட்டை4:- நடக்கட்டும் நடக்கட்டும்.

சேட்டை3:-மேட்டருக்கு வாங்கடா......

சேட்டை2:- உலகம் ரொம்ப சிறிசு, அனாடமி புக் கிரே எழுதுனது, கைட்டன் தமிழ்காரன் இல்ல, சிவபார்வதி பாவம் ரஜினி கட்சில லதாவா சேத்திக்குவாரா மாட்டாரா இதெல்லாம் எழுதுவம்டா

சேட்டை7:- இது லவ் லெட்டர்டா

சேட்டை2:-ஆமா லட்டர் கொடுத்து செட்டில் ஆகி கல்யாணம் பண்ணிக்காமலே குழந்தை பெத்துக்கப் போறாரு. எழுதுவம்டா.., நாம எழுதறதுதான் லவ் லட்டர். அது அவள் படிச்சாகணும். அது அவ தலையெழுத்து

சேட்டை5:- ஏண்டா பிரச்சனை ஏதும் வந்தறாதே..,

சேட்டை1:- அதெல்லாம் வராதுடா.., அப்படியே வந்தாலும் பெண்களைக் கரெக்ட் பண்றதுக்குண்ணே ஜெமினிகணேசனை கடவுள் நம்மளோட படிக்க அனுப்பிச்சிருக்காரே... கரெக்ட் பன்ற பொறுப்ப ஜெமினி பார்த்துக்குவார்

சேட்டை4:-யார் எழுதறது

சேட்டை3:-நம்ம 11னோட கையெழுத்து முத்துமுத்தா இருக்கும் அவன எழுதச் சொல்லுவோம்.

சேட்டை11:- மக்களே.. மக்களூக்கு மக்களே நீங்களெல்லாம் நாளைக்கு அடிவாங்குனீங்கன்னா, உங்க வீட்டுக்கு இலவசமா நான் தந்தி யடிக்கறேன். த்யவுசெய்து என்ன விட்டுடுங்க

சேட்டை3:- எனக்குவேற தமிழ் ஒழுங்கா எழுத வராது. இல்லைன்னா நானே எழுதிடுவேன்.

சேட்டை8:-குஞ்சம் வைக்கற பொண்ணுகளோட படிச்சவனுக்கு தமிழ் எழுத வராதாம். யாருக்கட்ட டீ காது குத்தற

சேட்டை7:- யூ ஒன்லி ரைட்டிங்.. வீ ஆல் ரைடிங்

சேட்டை6:- குட் மார்னிங் ஆப்பீசர். இதுகெல்லாம் என்ன அர்த்தம்?

சேட்டை1:- நாளைக்குப் போறோம். ஒலிம்பிக் கார்ட்ஸ் வாங்கறோம்.

சேட்டை4:- டேய் இது பெரிய பட்ஜெட்டுடா. குறைஞ்சது 25 பேருக்கு பத்து பேரு லெட்டர் கொடுத்தாலும் 250 கொடுக்கணும்டா....

சேட்டை6:- எப்பப் பார்த்தாலும் பஞ்சப் பாட்டு பாடிட்டு விடுடா... நாளைக்குப் போய் வெள்ளைப் பேப்பர் வாங்க்கிட்டு வந்து எழுதுவோம்.

சேட்டை1:- ஒன்னு எழுதுவோம். அப்புறம் செராக்ஸ் போட்டுக்கலாம்.

சேட்டை6:- டேய் இது லவ் லெட்டர்டா....

சேட்டை9:-கலர் செராக்ஸ் போட்டுக்கலாம்டா. அப்படியே இதயம், அஜித், தேவயானி படங்களெல்லாம் போட்டுக்கலாம்டா

சேட்டை6:- சரி யார்யாருக்கு கொடுக்கலாம்.

சேட்டை1:- டேய் பப்ளிமாஸ் குல்கர்னி

சேட்டை8:- நாம கொடுக்கலாம்டா.., ஆனா 6 மட்டும் அவளுக்கு கொடுக்க வேண்டாம். அவ பார்க்கற பார்வையே செரியில்லை. இவனுக்கு செட் ஆனாலும் ஆயிடும்

சேட்டை6:- நெஜமாவாடா.., முதல்லயே சொல்லியிருக்கலாம்ல.. டேய் நான் இந்த வெளையாட்டுக்கு வரல.. நான் குல்கர்னிய பார்க்கறேன். டேய் நார்த்திடா..

சேட்டை4:-டேய் கோபி செட்டி பாளையத்தில சாணி தட்டறதுக்கு நார்த்தியெல்லாம் ஓவர்டா....


சேட்டை1:- அதெல்லாம் நீ டூர் முடிச்சிட்டு பாரு. சரி யார்யார் யார்யாருக்கு குடுக்க வேண்டாம்?

எல்லோரும் தங்கள் கருத்தைப் பதிவு செய்ய தனியே ஒரு லிஸ்ட் தயாரானது.

சேட்டை3:- டேய் பூங்காவனம், மனிஷா இவங்களுக்கு யாரும் கொடுக்க வேண்டாம். ரிஸ்க் பார்ட்டீங்க..

சேட்டை4:-அப்படியே சுவாதி, ரிதி இவங்களுக்கும் கொடுக்க வேண்டாம். அடி உறுதி யாயிடும்

இவ்வாறாக சேட்டைக்கார மாணவர்கள் தங்கள் பயணத்திற்கான தயாரிப்பை இனிதே தயாரித்து பேருந்து ஏறினார்கள்


பேருந்து முதல் நாள் இரவு புறப்பட்டு மறுநாள் காலையில் ஏதோ ஒரு ஊரில் உள்ள ஒரு கல்யாண மண்டபத்தில் நின்றது. மாணவர்கள் குளித்து தயாராகி சாப்பிட்ச் சென்றனர். சாப்பிட்டுவிட்டு அருகில் உள்ள கோவிலுக்கும் பூங்காவிற்கும் சென்று சற்று இளைப்பாறத்தொடங்கினர்.

சேட்டை3 வந்து சுமித்ராவிடம் கடிதம் கொடுத்தான். கடுமையான கோபத்துடன் கங்கூலி போல் பார்த்த சுமித்ரா கடிதத்தைப் படிக்காமலேயே கண்டபடி அறிவுரை வழங்க ஆரம்பித்தாள். சிறிது நேரம் கழித்துச் சென்ற சேட்டை7 கடிதம் கொடுத்த உடன் கடும் கோபத்திற்குள்ளான சுமித்ரா வசைமாறி பொழிய ஆரம்பித்தாள். சில நிமிட இடைவெளிகள் மற்றவர்களும் தங்கள் கைவரிசையைக் காட்ட் கோபத்தில் மூச்சிறைக்க ஆரம்பித்தது.

சுமித்ரா தங்கியிருந்த மண்டபத்திற்குச் செல்ல மண்டபத்தின் முன் பகுதியில் கடிதத்தின் ஒருபிரதி ஒட்டப் பட்டிருந்தது. அதைப் பார்த்த சுமித்ரா மயங்கி விழுந்தாள். அவளை மயக்கம் தெளியவைத்து விட்டு நாங்கள் வந்த வேளையைப் பார்க்க ஆரம்பித்தோம். பேருந்து புறப்படும் நேரத்திற்கு பேருந்துக்குச் சென்றோம்.

அங்கு எங்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சுமனின் மடியில் சுமித்ரா தலைவைத்துப் படுத்திருந்தாள். மயக்கம் போட்டுவிழுந்த அதிர்ச்சியில் அவள் மிகவும் சோர்ந்து இருப்பது போல் தோன்றியது.

ஏனோ முதல் ஆண்டு சுற்றுலாவின் போது சொன்ன

உன்னையும் என்னையும் தப்பா பேசுறாங்க நீ வேற சீட்டுக்குப் போ.......

என்ற வார்த்தைகள் நினைவுக்கு வந்து தொலைத்தது. அத்தோடு உஷாவோடு அவன் நெருக்கமாக நடந்துவந்ததும் மனதுக்குள் வந்தது.


========================================================
பெறுநர் என்ற இடத்தில் கடிதம் கிடைக்கப் பெறாத அனைத்து மாணவிகள் என்றும் அனுப்புனர் என்ற இடத்தில் சேட்டைகளின் பெயரையும் போட்டு அந்த இடத்தை ஒரு நகைச்சுவைப் பிரதேசமாக மாற்றி அமைத்திருந்தனர். காதல் பற்றிய ஒவ்வொருத்தர் கருத்தையும் (வாங்கிக் கட்டியதைத்தான்) அவர்களுடைய குரல்தொனியிலெயே பரிமாறிக் கோண்டு வந்தனர்.

இந்த சிறிய இடைவெளியில் சேட்டைகளில் ஒருவரான விஜய் சன்னமாக சங்கீதாவிடம் தனது மனதை பரிமாறிக் கொண்டது பிற்கால சரித்திரத்தில் தெரிய வந்த ஒரு முக்கிய நிகழ்ச்சி
==============================================================
தொடரும்

========================================================

டிஸ்கி:- இந்த கதை நன்கு கொதிக்கவைத்து கசக்கிப் பிழிந்து வடிகட்டிய கற்பனைக் கதை. இதில் வரும் சம்பவங்கள், பெயர்கள் அனைத்தும் கற்பனையே. இதில் வரும் சம்பவங்களோடு யாரையும் தொடர்படுத்திப் பார்க்க வேண்டாம் என்று வாசகர்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்
=========================================================

அடுத்த பகுதி இங்கே உள்ளது.சுட்டிமூலம் படித்து மகிழுங்கள்

17 comments:

  1. //ஸ்கூல்ல குஞ்சம் வைச்ச சடைப் போட்டவ எல்லாம் இன்னிக்கு ஹேர் கட்டிங் பண்ணிட்டு லொள்ளு தாங்க முடியல... //


    :)

    ReplyDelete
  2. நீங்க ஒரு சகலகலா வல்லவன்

    ReplyDelete
  3. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    பிரியமுடன்.........வசந்த் சார்

    நசரேயன் சார்..,

    ReplyDelete
  4. சுரேஷ் ,

    இத்தனை சேட்டைகாரனுங்களை வைத்துகிட்டு

    என்னதான் பண்ண போறிங்களோ !!!!

    ReplyDelete
  5. //starjan said...

    சுரேஷ் ,

    இத்தனை சேட்டைகாரனுங்களை வைத்துகிட்டு

    என்னதான் பண்ண போறிங்களோ !!!!
    //


    கற்பனைக்கதை என்பதை இதன்மூலம் மேலும் வலுவாக என்னால் கூறமுடிகிறதே தல...

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  6. i am very proud that some one from palani
    (my home town)is writing good in blog..i have also started and deleted blogs many times..from 2004.but didnt turn out good to continue.so now just a reader..keep up ur good work..hope i will catch u chat ..

    ReplyDelete
  7. //inbaa said...

    i am very proud that some one from palani
    (my home town)is writing good in blog..i have also started and deleted blogs many times..from 2004.but didnt turn out good to continue.so now just a reader..keep up ur good work..hope i will catch u chat ..
    //


    வாங்க தல,,, வருகைக்கு நன்றி

    அடிக்கடி வாங்க..,

    ReplyDelete
  8. na thaliam illaigo..romba chinnaallu..i tried clicking ur gtalk link when u where online but i am getting host no connected message

    ReplyDelete
  9. மீள் வருகைக்கு நன்றி இன்பா அவர்களே

    இப்போது சரிசெய்துவிட்டேன். ப்ரோஃபைலில் மின்னஞ்சல் முகவரி கொடுத்துள்ளேன். அதில்கூட தொடர்பு கொள்ளலாம்

    ReplyDelete
  10. தொடர் பதிவுக்கு அழைக்கப்பட்டுள்ளீர்கள் வரவும் நண்பா

    ReplyDelete
  11. கண்டிப்பாக தொடருகிறேன் தல..

    ஞாயிறு அல்லது திங்களில் பதிவேற்றிவிடுகிறேன்

    ReplyDelete
  12. yappa... Diskie pothu en mooda spoil panniteengale... Naa idhula neenga enda settainnu yosichitu irundhen..

    ReplyDelete
  13. /Karthik said...
    yappa... Diskie pothu en mooda spoil panniteengale... Naa idhula neenga enda settainnu yosichitu irundhen..//

    illai yendral darma adi vilum.

    erkanave intha kadhai enathu junior senior manavarkalidam kadum ethirppai uruvakki vittathu.

    ReplyDelete
  14. வாழ்த்துகள்!

    உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

    உங்கள் வருகைக்கு நன்றி,

    அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.

    நன்றி
    தமிழ்ர்ஸ்

    ReplyDelete
  15. //கல்லூரியில் எங்களுக்கான அடையாளம் உருவாகிக் கொண்டிருந்த காலம். சிலர் ஹீரோக்களாகவும், சிலர் ஆங்கிலேயர்களாகவும்,சிலர் மகளிர் காவலராகவும் உருவெடுத்துக் கொண்டிருந்தனர்.//

    சூப்பர் :) :)

    ReplyDelete
  16. //புருனோ Bruno said...

    சூப்பர் :) :) //

    நன்றி தல..,

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails