Tuesday, October 6, 2009

குருதி சிந்தி குடிமக்களைக் காப்பாற்றிய கொங்கு நாட்டுத்தங்கம்

சக மாணவி மூக்கில் ரத்தம் ஒழுக மயங்கிக் கிடந்தால் என்ன தோன்றும்? இருந்தாலும் மாணவர்கள் எழுப்பிக் கொண்டே இருந்தனர் .
ஆனால் அவளை எழுப்புவதற்கு முன் வி.பி.யோடு சேர்ந்து மேலும் சில ஆசிரியப் பெருமக்களும் உள்ளே வந்து விட்டனர். அவர்கள் அனைவரும் மருத்துவர்களாகவும், ஆசிரியர்களாகவும் இருந்த காரணத்தால் ( அவர்கள் இரண்டு வேலைகள் செய்தாலும் அவர்களுக்குக் கிடைக்கும் சம்பளம் கல்லூரி ஆசிரியர்களைவிடக் குறைவுதான்) முதலுதவி மிக வேகமாக நடந்தது.

சில நிமிடங்களில் சுமித்ரா கண்விழித்தாள். ஆனால் அவளால் நிற்க முடியவில்லை. முதல்நாள் மாணவர்கள் அனைவரும் ஏற்படுத்திய மன அழுத்தமும்( இந்தச் சுட்டி), இரவு முழுவதும் அடுத்த நாள் வகுப்பிற்காக தயார் செய்ய கண்விழித்து இருந்ததும் மயக்கத்திற்கு முக்கிய காரணமாக இருந்திருக்கின்றன. தவிர அதிகாலையிலேயே மருத்துவமனைக்கு போய் நோயாளியின் விவரங்களைத் தொகுத்து பிரண்டேசனுக்காக தயாராகிக் கொண்டிருந்திருக்கிறாள். பால், காஃபி, டீ தண்ணீர் எழுதுவும் குடிக்காமல் சாப்பிடவும் செய்யாமல் இருந்திருக்கிறாள். ( ஓ.பி. வகுப்பு ஏழு. முப்பது மணிக்குத் துவங்கும்) முடிந்த உடனே அரக்கப் பறக்க வந்திருக்கிறாள். வந்த வேகத்தில் கதவில் மோதியதில் மயங்கிச் சரிந்து விட்டாள் . அவளை எழுப்பி உட்கார வைப்பதற்குள் விசாரணை சூழலே மாறிப் போயிருந்தது.

அக்ஷய் குமாரின் அக்கிரமங்கள் பற்றி அவனது வகுப்பு மாணவர்களே துணை முதல்வரிடம் சொல்லி இருந்தனர். வினிதாவும் தானும் இளவரசனும் நண்பர்கள் ( நண்பர்கள் என்றுதான் ) என்றும் வெகுகாலமாக அவ்வப்போது பேசுவது உண்டு என்றும் சாட்சி சொல்லிவிட்டிருந்தாள்.( அவள் சாட்சி சொல்ல மறுத்த கதை இந்தச் சுட்டியில்)

டேஞ்சர் டயபாலிக் முதல் நாள் இரவே இளவரசன் ஜூனியர் மாணவனை அடித்ததைப் பார்த்ததாக சாட்சியாக இருந்த உதவிப் பேராசியரியரைச் சந்தித்து பேசியிருந்தான். அவரும் தினமும் இந்த இரண்டு ஜந்துக்களும் கடலைப் போட்டதைப் பார்ததாக ஒத்துக் கொண்டு இருந்தார். ஆனால் அவரை அவமரியாதை செய்யும் வண்ணம் இளவரசன் நடந்து கொண்டிருந்ததை ஜீரணிக்க முடியாமல் இருந்ததை உணர்ந்த டேஞ்சர் டயபாலிக் அவரிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். தவிர இது போன்று மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்வதாக தெரிவித்திருந்தான். சென்ற ஆண்டு கல்லூரியில் நடந்த சிலவிழாக்களில் அவனுக்கும் அவருக்கும் ஓரளவு தொடர்பு இருந்ததால் டேஞ்சரின் பேச்சில் அவரும் இறங்கி வந்திருந்தார். விசாரணையின் பிற்பகுதியில் டேஞ்சர் அவரை கூட்டி வந்து நிலைமையை சமாளித்திருந்தான். மாணவர்களை எச்சரித்து அனுப்பி இருந்தனர்.

ஆக மொத்தத்தில் இளவரசன் தலை தப்பியது.

இவ்வளவும் ஏதோ கனவில் நடப்பது போல சுமித்ராவின் எதிரில் நடந்து கொண்டிருந்தது. இவை நடக்கும் போதே ஒரு ப்ரூ காஃபி, இரண்டு முட்டை பப்ஸ், கொஞ்சம் மாசா பானம் என்று ஒரு நோயாளியின் துணைக்கு இருப்பவர் சாப்பிடுவது போல் தொடர்ச்சியாக சாப்பிட்டுக் கொண்டே இருந்தாள் சுமித்ரா.

-------------------------------------------------------------------------

சரி சரி எல்லாரும் மச மச ன்னு நிக்காம கேண்டீன் வாங்க

இளவரசன் ட்ரீட் கொடுக்க போறான். சார்லி யின் குரல் ஓங்கி ஒலித்தது.

வினிதாவும் ட்ரீட் கொடுக்கணும்.
சுமித்ராவின் அல்லக்கை ஒன்று சொன்னது. இந்த அல்லக்கை காலை வகுப்பிற்குச் செல்லாமல் ஒன்பது மணிவரை தூங்கி எழுந்து மாணவியர் விடுதியில் மீதம் இருந்த காய்ந்து போன இட்லியில் ஒரு பத்து இட்லிகளை சாப்பிட்டு விட்டு தாகமாக இருப்பதால் உடனடியாக தனக்கு சிட்ரா, அல்லது செவன் அப் வகை குளிர்பானம் தேவை என்பதை உரிமையுடன் கேட்டுக் கொண்டிருந்தாள்.

வெள்ளெலி ட்ரீட் குடுக்க மாட்டா.. அவளும் நம்மள மாதிரியே இளவரசனுக்கு நண்பிதானாம.
சச்சின் தனக்கே உரித்தான் வெண்கலக் குரலில் ஒலி எழுப்பினான். இளவரசன் நெளிந்து கொண்டே

வாங்கடா கேண்டீன் போலாம்
என்று அனைவரையும் அழைத்துச் சென்றான்.

கேண்டீனுக்கு எதிரே ஒரு அகலமான பெரிய சுவர் ஒன்று இருக்கும். அங்கேதான் மாணவர்கள் தங்கள் படைப்புகளை சுவர் பத்திரிக்கைகளாக மாற்றி ஒட்டி மகிந்து கொண்டிருப்பார்கள்.

கேண்டீனில் எல்லோரும் ஏதாவது ஒன்றை தின்று கொண்டே இருக்கும் போது டேய் அங்க பாற்ரா.... அஜித் அலர

திரும்பிப் பார்த்தால் அங்கே ஒரு சுவரொட்டி அதிரடியாக முளைத்திருந்து. ஒரு சாட் பேப்பரில் ஸ்கெட்ச் பேனாவில்
குருதி சிந்தி குடிமக்களைக் காப்பாற்றிய கொங்கு நாட்டுத்தங்கம் மாணிக் ஃபாத்திமா வாழ்க


எழுதி அதன் அருகில் பம்பாய் படத்தில் மணிஷா கொய்ராலா துப்பட்டாவுடன் காட்சி அளித்த ஒரு ஸ்டில் வண்ணத்திரை, சினிக்கூத்து மாதிரியான பத்திரிக்கையிலிருந்து வெட்டி ஒட்டப் பட்டிருந்தது.

அதைப் பார்த்து சுமித்ரா கோபப் பட்டாளா அல்லது கூச்சப் பட்டாளா என்றே தெரியாத ஒரு சிரிப்பினைச் சிரித்தாள்.

ரெப் ஆக இருப்பது ரொம்ப கஷ்டமா இருக்கில்ல.., அல்லக்கை ஒருத்தி சூழ்நிலையை மாற்றும் வகையில் பேசினாள்.

எனக்கு இது ஒண்ணும் புதிசில்ல, ஸ்கூல் லயே நான் நாலு வருஷம் லீடரா இருந்திருக்கேன். இது சுமித்ரா

ஆமா, ஆமா, வருகைப் பதிவேடு தூக்கிட்டுவருவது, பேசரவங்க பேர் எழுதறது, டஸ்டர் கிளிஞ்சு போனா தைச்சு வைக்கறது அப்படின்னு பல வேலைகள் பண்ணி இருப்ப போல


வழக்கம் போல் சச்சினின் பேச்சுக்கு அங்கிருந்தவர்களிடமிருந்து ஒரு அதிரடிச் சிரிப்பு வந்து கொண்டிருந்தது.

இந்த வருஷம் அரசுப் பொருட்காட்சி வருதுல்ல, அதுல வழக்கம் போல நம்ம கல்லூரி சார்பா ஒரு ஸ்டால் போடுவாங்கல்ல

போடுவாங்க அப்புறம் என்ன இல்ல

அதுல எப்பவும் தேர்டு ஜூனியர் தான் உட்கரணுமாம். அதனால் யார் யார் எப்பப்ப போகணும்னு ஒரு சார்ட் போட்டு கொடுத்திடு.

யார் வேணாலும் பார்த்துக்கங்கப்பா., நான் மே மாதம் பூரா ஊருக்கு போயிடுவேன்.

அதலெல்லாம் முடியாது அம்மணி. நீதான் ரெப்பு எல்லா பொறுப்பும் உன்னோடதுதான். அதில்லாமல் உங்க சீஃப் மே மாதம் பூரா வகுப்பு எடுப்பார். விடுப்பு மத்தவங்களுக்குத்தான் உங்க யூனிட் மாணவர்களுக்கு கிடையாது.

சுமித்ரா சன்னமாய் முறைத்தாள்

=====================================

இந்த நிகழ்ச்சிகளெல்லாம் முடிவடைந்து அவரவர் இடத்திற்கு திரும்பிக் கொம்ண்டிருந்தனர். கடலைப் போடுவதற்கு எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பை உபயோகப் படுத்திக் கொள்ளும் நோக்கத்தில் சச்சின் சார்லி போன்றவர்கள் அங்கேயே ஓரங்கட்டி கிடைத்த வாய்ப்பில் கடலை போட்டுக் கொண்டிருந்தனர். சுமன் தனது இருசக்கர வாகனத்தை எடுக்கும் நோக்கத்துடன் வண்டி நிறுத்தும் இடத்திற்கு வந்தான். அப்போது அவனுக்கு முன் அங்கு நின்றிருந்த சில மூத்த மாணவர்கள்

டேய், என்னடா இங்கிருக்கற

இன்னிக்கு கிளாஸ் இருக்குங்க சார்

ஏண்டா அவ்வளவு வேகமா நீயும் ஒரு ஃபிகரும் ஓடி வந்து வண்டி ஏறி புறப்பட்டீங்க. கடைசியில காலேஜுக்கா வந்தீங்க

அங்கிருந்த எல்லோருமே சினிமாவுக்கோ இல்லை ஊட்டிக்கோ போவீங்கன்னு அல்லவா நினைச்சிருந்தோம்.

ரெண்டு பேர் வேகமா ஓடினா சினிமாவுக்குத்தான் போவாங்களா என்ன? இன்னொரு சீனியர் மாணவர் சொல்லிக் கொண்டிருந்தார். சுமன் லேசான சிரிப்புடன் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

பின்னால் இரண்டடி தள்ளிவந்து கொண்டிருந்த சுமித்ரா & கூட்டத்தின் முகங்களில் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தன

தொடரும்>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>..


முந்தய பகுதிகளுக்கு இந்தச் சுட்டியை அழுத்தவும்.




14 comments:

  1. பல திருப்பங்களுடன் சுவராசியாமாய் போய்க் கொண்டேயிருக்கிறது தொடர்.

    ReplyDelete
  2. கொங்குநாட்டுத் தங்கம் வாழ்க!

    ReplyDelete
  3. இப்போதைக்கு உள்ளேன் ஐயா

    ReplyDelete
  4. நேத்துதான் DVD சிக்குச்சு! அதுக்குள்ள இந்த பதிவு! படம் பாத்துட்டு விரைவில் பதிவோட வர்றேன்!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  5. @முரளிகண்ணன்
    @Starjan ( ஸ்டார்ஜன் )
    @பழமைபேசி
    @T.V.Radhakrishnan
    @பயங்கரவாதி டாக்டர் செவன்

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே..,

    ReplyDelete
  6. உள்ளேன் ஐயா! கதை கொஞ்ச நாள் கழிச்சி வந்திருக்கு!! எல்லாரும் நல்ல பிள்ளையா படிக்கப் போய்ட்டாங்களோ?!

    ReplyDelete
  7. // ஷங்கி said...

    உள்ளேன் ஐயா! கதை கொஞ்ச நாள் கழிச்சி வந்திருக்கு!! எல்லாரும் நல்ல பிள்ளையா படிக்கப் போய்ட்டாங்களோ?!//

    ராக்கிங் குற்றத்திலிருந்து வெளிய வருவதுன்னா கொஞ்சம் கஷ்டம்தானே தல..,

    ReplyDelete
  8. நடக்கட்டும் நடக்கட்டும் ..:)

    ReplyDelete
  9. // வினோத்கெளதம் said...

    நடக்கட்டும் நடக்கட்டும் ..:)//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல

    ReplyDelete
  10. // இது நம்ம ஆளு said...

    அருமை :)//

    நன்றி தல..,

    ReplyDelete
  11. தல மீள் பதிவா.

    என்ன கொஞ்ச நாளா ஆளைக்காணோம்?

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails