Sunday, October 25, 2009

உருகும் மனிதன், பேசும் தனித்தலை

கோயமுத்தூரில் அரசுப் பொருட்காட்சி காந்திபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகில் நடைபெறும். தொடர்குண்டுவெடிப்பிற்கு முந்தைய கால கட்டத்தில் கதை நடைபெறுகிறது என்பதை மனதில் வைத்துக் கொண்டு படியுங்கள் நண்பர்களே..., மாலை நேரத்தில் கோவை மருத்துவகல்லூரி சார்பாக இரண்டு ஸ்டால்கள் போடப்படும்.
ஒன்றில் உடல் உறுப்புகளை பதப் படுத்தி வைத்து இருப்பார்கள். தனி அறையில் மக்களுக்கு விளக்கம் தரும் வகையில் ஒரு பிணம் முழுமையாக பாடம் செய்து வைத்திருப்ப்பார்கள். மருத்துவகல்லூரி மாணவர்களின் முதல் ஆசிரியரே அவர்தான் என்பதால் அவரிடம் எந்த அச்சமும், பயமும், அறுவறுப்பும் இன்றி மாணவர் ஒருவர் அருகில் நின்று விளக்கம் கொடுத்துக் கொண்டிருப்பார்.


மற்றொரு அறையில் தனித்தனி குடுவைகளில் உடலில் உறுப்புகள், அதற்கென உள்ள தனி கண்ணாடி குடுவைகளில் போட்டு வைத்திருப்பார்கள். அங்கேயும் சில மாணவர்கள் இருந்து விளக்கம் கொடுத்துக் கொண்டிருப்பார்கள். இந்த அறைகளைப் பார்வையிடுவது என்பது இலவசமாகவே வழங்கப் பட்டுவரும்.  ஆனால் இந்த இடங்களுக்கு கூட்டம் குறைவாகவே இருக்கும்.  ஆனால் இன்னொரு பகுதியில் உருகும் மனிதன், பேசும் தனித்தலை ஆகிய காட்சிகள் நடத்துவார்கள். அந்த இடங்களில் கூட்டம் நிறம்பி வழியும்.

உருகும் மனிதன் காட்சி என்பது ஓரிடத்தில் மாணவரையும், மற்றொரு இடத்தில் ஒரு முழு எலும்புக்கூட்டையும் தனித்தனியே அமரவைத்திருப்பார்கள், ஒளி அமைப்பினை கூட்டியும் குறைத்தும் பார்க்கும் மக்களுக்கு இரண்டு பிம்பங்களுக்கும் ஓரிடத்தில் விழுவது போல செய்வார்கள்.  அதனால் அந்த மாணவரின் உடை, சதை ஆகியவை மறைந்து எலும்புக்கூடு தெரிவதுபோல ஒரு பிம்பம் ஏற்படும். இரண்டு பிம்பங்களும் துளிகூட இடம்பிசகாமல் அமைத்து வைத்திருந்தால் பிரமிப்பு கூட்டித்த்ரும் நிகழ்ச்சி அது.

வெட்டிவைக்கப்பட்ட பேசும்தலை என்பது கோவில்திருவிழாக்களில் நடைபெறும் நாக கன்னிகை போன்ற நிகழ்ச்சி அது. மனிதனின் தலை தனியே தெரிவது போல காட்சி அமைத்திருப்பார்கள். கழுத்தைச் சுற்றிலும் சிவப்பு மையை ஊற்றியும் தலை இருக்கும் மேடையில் இனிப்பு பாகு அல்லது மிட்டாய்களை வைத்திருப்பதால் அந்த இடத்தில் ஈ மொய்க்கும் படியும் அமைத்திருப்பார்கள். அங்கே ஒரு மாணவன் தனி தலையை நிகழ்ச்சிக்கு கொடுத்துக்கொண்டு அங்கு வந்திருக்கும் மக்களோடு,  எக்ஸ் ரே, காமா ரே, சத்யஜித் ரே, லிசா ரே, மைக்ரோ சர்ஜரி, கம்யூட்டர் சர்ஜரி என்று அப்போது புழக்கத்தில் இருந்த புரிந்தும் புரியாத வார்த்தைகளைக் கொண்டு உரையாடிக் கொண்டு இருப்பார்கள்.

இந்த வேலைகளுக்கு ஏப்ரல் மே மாதங்களில் தேர்வுகள் இல்லாமல் இருக்கும் மூன்றாம் ஆண்டு மாணவர்களே செய்து கொண்டு இருப்பார்கள். அவர்களுக்கு மாண்வர் பேரவை மூலமாக சிறிய ஊக்கத்தொகை வழங்கப் படும். அதை அவர்கள் அன்றைய செலவுக்கு வைத்துக் கொண்டு  அரசுப் பொருட்காட்சியை அனுபவித்துக் கொண்டு இருப்பார்கள். அவர்களின் தலைமை பற்றி இந்தச் சுட்டியில் இருக்கிறது.


நடைபெறும் மாதங்களில் தேர்வுகள் பெரும்பாலான கல்லூரிகளில் தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டும்  முடிந்த நிலையிலும் இருப்பதால் கல்லூரி மாணவ மாணவியரின் வருகை அதிகமாக இருக்கும். அந்த நேரத்தில் இலவச கடலை சாகுபடியும் அதிகமாக இருக்கும்.

இப்படியாக ஒருநாளில்  பொருட்காட்சி நடைபெற்று வந்த காலகட்டத்தில் பார்வையிட சுமித்ரா வந்தாள். அவளுக்கு பார்வையிடும் அதிகாரம் வந்த கதை இந்த சுட்டியில் உள்ளது. 

சுமன் அப்போது பொருட்காட்சியில் பேசும்தலையாக உட்கார்ந்து இருந்தான். சுமித்ராவுடன் கல்லூரியின் சீனியர் மாணவர் ஒருவரும் பேசும் தலையை பார்வையிட்டுவந்தார்.  அவர் தனியே தன் வேலையை பார்த்துக் கொண்டு வந்திருந்தார். சுமித்ரா பொருட்காட்சியில் பணியிலிருந்த சக தோழர்களை பார்வையிட வந்தாள். இருவரும் ஒன்றாகவே உள்ளே வந்தார்கள்.

பாஸ் உங்க தல ஏன் தனியா இருக்கு.

புதுசா வந்திருக்கற கம்யூட்டர் சர்ஜரி பண்ணி கழட்டி வச்சிட்டாங்க.

அப்ப இனிமேல் உங்களுக்கு தலை இருக்காதா?

இல்ல போகும்போது அதே மாதிரி இன்னொரு சர்ஜரி பண்ணி சேர்த்திருவாங்க

அது எப்படிங்க முடியும்?

இப்பல்லாம் நிறைய பயலாஜிக்கல் வெப்பன்ஸ் கண்டுபிடிச்சிருக்காங்க. அதுனால் இது நடக்கும்.

என்னங்க கொஞ்சம்கூட லாஜிக்கே இல்லாம சொல்றீங்க...

(a+b)2= a2+b2+2ab

அப்படின்னா

சொன்னது லாஜிக்கோடதான இருக்கு.

அது சரி..,

உங்களுக்கு பசிச்சா என்ன செய்வீங்க..,

எனக்குத்தான் வயிரே இல்லையே அப்புறம் எப்படி பசிக்கும்?

அப்ப நீங்க சாப்பிடவே மாட்டீங்களா?

வாய் இருக்கே ? அதுனால சாப்பிடுவேன்.

நீங்க சாப்பிடுவது எங்க போகும்.

உடம்புக்குத்தான்.

உங்களுக்குத்தான் உடம்பே இல்லையே

ஆனா தலை இருக்கே.., அதோட செயல்பாடுகளுக்கு புரதச்சத்து, மாவுச் சத்து, கொழுப்புச் சத்து வேணுமே

எங்க ஜீரணம் ஆகும்

நான் வாய் வழியா சாப்பிட்டா.., அத அப்படியே தனி கனெக் சன் மூலமா வயிற்றுக்கு எடுத்துட்டுப் போய். அங்க ஜீரணிச்சு திரும்பவும் கொண்டு வந்து ரத்தத்தில சேர்த்திடுவாங்க.

ஆனா.. உங்க ரத்தத்தை ஈ மொய்க்குதே..,

ஈக்கும் பசிக்குமே...,

அதுனால எனக்கும் பசியாறும் ஈக்கும் பசியாறும்.

நாங்க சாப்பிடுறதெல்லாம் நீங்களும் சாப்பிடுவீங்களா?

நீங்க சாப்பிட்டத நான் எப்படி சாப்பிடமுடியும்? புதுசா வாங்கிக் கொடுத்தா சாப்பிடலாம்.

இப்படியே கிடைத்த வாய்ப்பையெல்லாம் உபயோகப் படுத்திக் கொண்டு கடலை வார்த்துக் கொண்டு ஒரு உலகளாவிய நட்பினை வளர்த்துக் கொண்டிருந்தார்கள் அப்போது வித்தை காட்டிக் கொண்டிருந்த மாணவர்கள்.

அந்த நேரத்தில் சுமித்ரா மற்றும் அந்த சீனியர் மாணவர் இருவரும் அங்கே பிரவேசித்தது கொஞ்சம் அதிர்ச்சியை கொடுத்தது.

நீ அவன்கூட வந்தது எங்களுக்குப் பிடிக்கவில்லை.

சீனியர் மாணவரோடு வராவிட்டாலும், தனது சுதந்திரத்தில் மற்ற மாணவர்கள் தலையிடுவது ஏனோ  சுமித்ராவுக்குப் பிடிக்கவில்லை.

அது என்னோட சொந்த விஷயம்.

உங்கூட வ்ந்த சீனியரோட பேர் தெரியுமா?

தெரியும் தீபக் குமார்.

அது சரி. மாண்வர்கள் அவன எப்படி கூப்பிடுவாங்க தெரியுமா?

எப்படிக்கூப்பிடுவாங்க?



தீ   ஃப   க்  குமார்.


அவங்கூட திரும்ப வும் யாராவது பார்த்தாங்க . காலேஜில உம் பேர் கந்தலாக மாறிடும் ஜாக்கிரதை!


தொடரும்...................................................


-----------------------------------------------------------------------------------------


இதற்கு முந்தைய பகுதிகளுக்கு இந்தச் சுட்டி உதவும்




_______________________________________________________________________________

12 comments:

  1. விறு விறு வெனப் போனது இந்த இடுகை

    ReplyDelete
  2. @DHANA
    @முரளிகண்ணன்

    நன்றி நண்பர்களே..,

    ReplyDelete
  3. உரையாடலில் கல்லூரிக்கே உரித்தான நக்கலும், புத்திசாலித்தனமும் இருக்கிறது. படிக்கிறப்ப டாக்டருக்கு நிறைய பெண் ரசிகைகள் போலிருக்கு!

    http://kgjawarlal.wordpress.com

    ReplyDelete
  4. //கோயமுத்தூரில் அரசுப் பொருட்காட்சி காந்திபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகில் நடைபெறும்//

    டெமோ ஆளுக நீங்கதானா அது!

    ReplyDelete
  5. தல

    நல்லா இருக்கீங்களா??!

    உங்கள ஒரு தொடர் பதிவுக்குக் கூப்பிட்டு இருக்கேன். தொடருங்க..

    ReplyDelete
  6. பள்ளி நாட்களில் கோடை விடுமுறையின் போது கோவைப் பொருட்காட்சிக்கு வருடம் தவறாமல் குடும்பத்துடன் போய் விடுவோம். ஹூம் அந்த நாட்கள்..

    விறுவிறுப்பாய் இருந்தது, விரைவில் முன்கதைகளைப் படித்து விரிவாய் பின்னூட்டுகிறேன்

    ReplyDelete
  7. @Jawarlal
    @ராஜ நடராஜன்
    @இளைய பல்லவன்
    @நாகா

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே

    ReplyDelete
  8. ஹைய்யோ ஹைய்யோ:-)))))

    கடலை சாகுபடி அமோகம், போங்க:-)))))

    ReplyDelete
  9. @துளசி கோபால்
    @ஆ.ஞானசேகரன்

    நன்றிகள் கோடி..,

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails