பிள்ளைங்களா......, என்ற குரலோடு வந்தாள் சவீதா. அவள் எப்போதும் அப்படித்தான் சகமாணவிகள் ஜூனியர் மாணவிகள் எல்லோரையும் பிள்ளைங்களா என்றுதான் அழைப்பாள். சுமத்ரா சவீதாவின் குரலைக் கேட்டதும் சற்று நினறாள். ஒரே வகுப்பு மாணவிகள் என்பதால் சேர்ந்தே மாணவியர் விடுதிக்குச் செல்லலாம் என்ற யோசனையும் ஒரு காரணமாக இருந்தது. சவிதாவும் சுமித்ராவும் சேர்ந்தபின் அவர்கள் இருவர் மட்டுமே கல்லூரியில் இருந்து மாணவியர் விடுதியை நோக்கிச் செல்வது போல இருந்தது. மற்ற மாணவியர் யாருமே அவர்கள் இருவருடம் வரத் தோன்றாதது போல இருவரும் தனித்து விடப் பட்டிருந்தனர்.
சுமித்ரா உங்கிட்ட ஒண்ணு சொல்லனும்..,
சொல்லு.., தான் மாணவர் தலைவி என்பதால் ஏதோ பிரச்சனையை தன்னிடம் சொல்லப் போகிறாள். தான் போய்தான் பஞ்சாயத்துச் செய்ய போகிறோம் என்பது போல இருமாப்புடன் கேட்டாள் சுமித்ரா
நீ தீபக் குமாரோட சுத்தரயாம்.., ஹாஸ்டல்ல பேசிக்கறாங்க...,
சுமித்ராவுக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தது. இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
ஹாஸ்டல்ல பேசிக்கறாங்களா.., காலேஜ்ல பேசிக்கறாங்களா..,
இல்ல எல்லோரும் ஒரு மாதிரியா பேசறாங்க (அதற்கான காரணத்தை அறிய இந்தச் சுட்டியைத் தட்டுங்கள்)
நம்ம பசங்கள சுத்த மோசம்டி. எப்ப பாரு அசிங்க அசிங்கமா பேசிட்டு இருப்பாங்க..,
இல்லடி இப்ப கொஞ்சம் வேறமாதிரி சொல்றாங்க..,
நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து சுத்தறீங்களாம். பல இடங்களும் போறீங்களாம். ரொம்பவே தப்புத் தப்பா பேசறாங்க..,
எனக்கு எல்லாம் மரத்துப் போச்சுடி.., ஆரம்பத்தில இங்கிலீஷ் குப்பானோட சேர்த்துப் பேசுனாங்க.., அதற்கப்புறம் சுமனோட சேர்த்துப் பேசுனாங்க
இப்ப தீபக்கோட சேர்த்துப் பேசுறாங்க..,
ரொம்ப தத்துவஞானி மாதிரி பேசாதடி, முதல் ரெண்டும் வேற.., இது வேற
ஏண்டி என்னப் பார்த்தா உனக்கு எப்படித்தெரியுது? கொஞ்சம் விரக்தி மற்றும் கடும் கோபம் கலந்த கலவையாக சுமித்ரா பேசினாள்.
கொஞ்சம் கோபம் படமா நான் சொலறதா கேளு..,
நான் ஏன் நீ சொல்றத கேக்கணும். நீ அந்த பசங்க பேசுற பேச்சக் கேட்டுக்கிட்டு என்ங்கூட சண்டைக்கு வற்ர..,
நான் உங்கூட சண்டைக்கு வரல.., தவிரவும் இப்ப நான் சண்டை போட காரணமும் இல்ல. கொஞ்சம் புரிஞ்சுக்க முயற்சி பண்ணு.
நீங்களெல்லாம் என்ன புரிஞ்சிக்க மாட்டீங்க ஆனா நான் உங்கள புரிஞ்சிக்கணுமா..,
இவனுக்கு ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு ஆளோட சேர்த்து பேசுவானுக அதுக்கெல்லாம் நான் டென்சன் ஆக முடியாது.., அவளுடைய கோபத்தில் அவளுடைய மூக்கு,நெஞ்சு எல்லாம் வெடித்துவிடுவது போல பேச ஆரம்பித்தாள்.
இங்க பாரு சுமித்ரா முதல் இரண்டு மேட்டரும் பசங்க சும்மா சாதரணமா பேசுனது. அத யாருமே என்னிக்குமே பெரிசா எடுத்துக்கல.., அதெல்லாம் அப்பவே போச்சு. ஆனா இந்த மேட்டர் அப்படி இல்ல..,
ஏண்டி சேர்த்து பேசரவங்க பேசுவீங்க.., அதுல இதெல்லாம் சும்மாவாம். அதெல்லாம் சீரியஸாம். உன்ன இப்படி நிறையப் பேரோடு கிசுகிசுக்க விட்டு அப்புறம் அதெல்லாம் சும்மா அப்படின்னா நீ அமைதியா போயிடுவயா..,
வெட்டியா கோபப் பட்டு பேசிட்டு இருக்காத.., நீயும் தீபக்கும் இருக்கும் புகைப்படத்தை நாங்க பார்த்தோம். அதுனாலதான் உங்கிட்ட பேசி புரியவைக்கலாம்னு பார்த்தேன். நீ கோபப் படறதப் பார்த்தா ஏண்டா பேசுணொம்னு இருக்கு. சாரிப்பா.., நான் வாரேன். சூடாக சொல்லிவிட்டு வேகமாக நடக்க ஆரம்பித்த சவீதா சொத் என்று சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தாள். சுமித்ரா மயங்கிக் கிடந்தாள்.
ஏனோ கிராமத்து மருத்துவச்சிகளெல்லாம் சவீதாவின் நினைவுக்கு வந்தார்கள்.
===============>>>>>>> தொடரும்>>>>>> தொடரும்>>>>>>தொடரும்
இந்தக் கதையின் முந்தைய இருபது பாகங்களுக்கு இந்தச் சுட்டியைத் தட்டுங்கள்
இருபது வருஷமா தேங்காய் ஸ்ரீனிவாசன் என்ன செய்தார்னு பார்க்க இந்த காணொளியைப் பார்த்து விடுங்கள்
தல,
ReplyDeleteஇது ஒரு 18+ தொடர் என்று நீங்கள் கூறிய போது நான் நம்ப வில்லை. இப்போது 21 தொடும்போது நம்ப வேண்டி இருக்கிறது.
தொடருங்கள்.
தல வழக்கம் போலவே விறுவிறுப்பா கொண்டு போய் சீக்கிரம் முடிச்சிட்டிங்க.
ReplyDeleteஓட்டும் போட்டாச்சு.
ReplyDeleteயூத்துன்னா அப்படித் தானா ...
ReplyDeleteகதை சீக்கிரம் முடியலைன்னு சொல்ல மாட்டேன் .
என்னா போங்க எனக்கும் ஒன்னும் புரியலா (படம் வேற இல்லை) நாளைக்கு தெளிவா படிச்சுட்டு சொல்றேன் :-)
ReplyDeleteதொடரட்டும்
ReplyDelete//RADAAN said...
ReplyDeleteபிளாக் எழுதுபவர்களுக்கு ரடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வாய்ப்புக்கள்...
எங்கள் வலைத்தளத்தில் உங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...
www.radaan.tv
http://radaan.tv/Creative/DisplayCreativeCorner.aspx//
நீங்க ஒரிஜினல் தானே..,
// King Viswa said...
ReplyDeleteதல,
இது ஒரு 18+ தொடர் என்று நீங்கள் கூறிய போது நான் நம்ப வில்லை. இப்போது 21 தொடும்போது நம்ப வேண்டி இருக்கிறது.
தொடருங்கள்.//
நன்றி தல..,,
// அக்பர் said...
ReplyDeleteதல வழக்கம் போலவே விறுவிறுப்பா கொண்டு போய் சீக்கிரம் முடிச்சிட்டிங்க.//
நன்றி தல.., கண்டிப்பாக தொடரும்
// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
ReplyDeleteயூத்துன்னா அப்படித் தானா ...
கதை சீக்கிரம் முடியலைன்னு சொல்ல மாட்டேன் .//
பார்த்துக்கிட்டே இருங்க..,
// சிங்கக்குட்டி said...
ReplyDeleteஎன்னா போங்க எனக்கும் ஒன்னும் புரியலா (படம் வேற இல்லை) நாளைக்கு தெளிவா படிச்சுட்டு சொல்றேன் :-)//
முந்தைய சில பகுதிகளைப் படித்தாலே உங்களுக்குத் தெளிவாகப் புரியும். அவசியமான பகுதிகளுக்கு சுட்டி கொடுத்துள்ளேன். பிடித்திருந்தால் முழுக் கதையையும் நீங்கள் படித்துக் கருத்துச் சொல்லுங்களேன்.
// நசரேயன் said...
ReplyDeleteதொடரட்டும்//
நன்றி தலைவரே..,
20 பதிவுகளையும் படிச்சிட்டு எங்கன வாறது
ReplyDeleteஇதுலேர்ந்து தொடர்வோம் ...
அட தொடர் கதையா இது அண்ணே..அப்போ முந்தியா பதிவுகளை படிச்சுட்டு வர்றேன்.....
ReplyDelete//நட்புடன் ஜமால் said...
ReplyDelete20 பதிவுகளையும் படிச்சிட்டு எங்கன வாறது
இதுலேர்ந்து தொடர்வோம் ...//
சுட்டிகளைப் படித்தாலே முக்கிய நிகழ்வுகளைப் படித்துவிடலாம் தல..,
// seemangani said...
ReplyDeleteஅட தொடர் கதையா இது அண்ணே..அப்போ முந்தியா பதிவுகளை படிச்சுட்டு வர்றேன்.....//
வாங்க தல..,
வலைப்பூவில் தொடர்கதையா..?நல்ல முயற்சி...
ReplyDeleteஇனிய பொங்கல் வாழ்த்துகள் தல
ReplyDelete//தமிழ் வெங்கட் said...
ReplyDeleteவலைப்பூவில் தொடர்கதையா..?நல்ல முயற்சி...//
நிறைய வலைப்பூக்களில் இதை செய்து கொண்டிருக்கிறார்கள் தல..,
// அக்பர் said...
ReplyDeleteஇனிய பொங்கல் வாழ்த்துகள் தல//
நன்றி தல.., அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..,
அட்டகாசமான தொடர்... இப்போதுதான் இத்தொடரின் சுட்டி கிடைத்தது...
ReplyDeleteமீதிப் பாகங்களை எப்போது தொடர்வீர்கள்? முடிவைப் படிக்க ஆவலுடன் உள்ளேன் ..