பின்னே புத்தம் புதிய ஜூனியர் மாணவியின் சுண்டுவிரலை போட்டி என்ற பெயரிலும், காயம் ஏற்படுத்திய வஸ்துவை கண்டுபிடிக்கும் சாக்கிலும் எடுக்க முயற்சி செய்ததைப் பார்த்தால் என்னதான் செய்வார்கள்.
முட்டைத் தோசை இதைப் பார்த்த உடனே கத்திவிட்டான் டேய்........,
முட்டைத் தோசையின் பெயர் காரணம் மிகவும் அலாதியானது, அவர் புதிய மாணவராக கல்லூரியில் சேர்ந்த காலத்தில் விடுதியில் இருந்த மூத்த மாணவர் அவரை தமிழில் மட்டுமே பேசுமாறு பணித்திருந்தார். மூத்தவர் சாதாரணமாகக் கேட்ட ஏதோ ஒரு கேள்விக்கு அவர்
சார், நான் தமிழ் மீடியம் ஸ்டூடண்ட், எனக்கு இங்கிலீஷ் வராதுஎன்று பதில் கொடுத்ததால் அவருக்கு அந்த உத்தரவு
அந்த ஒரு கால கட்டத்தில் சாப்பிடும்போது ஆம்லேட்டைக் காட்டி
இதன் பெயர் என்ன?என்று கேட்டபோது
முட்டைதோசைஎன்று பதில் அளித்த காரணத்தால் அவரை எல்லோரும் முட்டைத் தோசை என்றே அழைக்க ஆரம்பித்தனர்.
சுமன்குமார் சற்று பயந்து கொண்டே ஆனால் அதை வெளிக்காட்டாமல் சமாளிக்க ஆரம்பித்தான். என்னடா கோலம் பார்க்க வந்தியா?
பார்த்தேன் நண்பா! பார்த்தேன்
இந்த அலங்கோலத்தை கண் நிறையும் வரைப் பார்த்தேன் நண்பா பார்த்தேன்
நண்பர் பரதன் வசனம் பேசினார். அந்த வசனம் முகராசி படத்தில் எம்ஜியார் பேசியதாம் பிற்காலத்தில் ஒருநாள் முகராசி படம் பார்க்கும்போது தெரியவந்தது.
ஏண்டா சின்னப் புள்ளைங்க ( கோயமுத்தூர் பாஷைல பெண்பிள்ளைகளைத்தான் புள்ளை என்பார்கள்) போடுற கோலத்தை டிஸ்கரேஜ் பண்ற..,
சரி., சரி நீயே ஊக்கு வி.. நாங்க அப்படியே ரவுண்ட்ஸ் போறோம்...
சொல்லிக் கொண்டே இடத்தை காலி செய்தார்கள்.
இருந்தாலும் நண்பர் முட்டை தோசை மனம் ஆறவே இல்லை
அவர் வேகமாக வெளியே வந்து இரண்டு ஜூனியர் மாணவர்களை அழைத்தார். டேய் உஷா தனியா கோலம் போட கஷ்டப் படறா.., போய் உதவி செய்யுங்கடா.., என்று உத்தரவு போட்டார்.
பொதுவாக நண்பர் முட்டைதோசைக்கு ஜூனியர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகம். அவர் குறித்து கொடுக்கும் கேள்விகள்தான் உள்ளுறைத்தேர்வுகளில் அதிகம் கேட்பார்கள். மற்ற மாணவர்கள் தலையணை அளவுள்ள புத்தகங்களைப் படித்து உள்ளுறைத்தேர்வுகள் எழுதப் போகும்போது முட்டைதோசை மிகக் குறைவான பகுதிகளை மட்டும் குறித்துக் கொடுத்து படிக்கச் சொல்லுவார். அதன் மூலம் அதிக மதிப்பெண் எடுக்க வைத்து விடுவார்.
அவர் குறித்துக் கொடுப்பதில் இருந்து கேட்கும் கேள்விகள் கேள்வித்தாளில் பாதிக்கு மேல் ஆக்கிரமித்து வருவதால் முட்டை தோசையை ஜூனியர் மாணவர்கள் எப்போது சுற்றிக் கொண்டிருப்பார்கள். முட்டைத்தோசை சொல்லும் எந்த வேலையையும் சிரமேற்கொண்டு செய்து முடிக்க தயாராக இருப்பார்கள்.
ஏண்டா உங்க பேட்ச் பொண்ணு ஒருத்தி தனியா கஷ்டப் பட்றா.., போங்கடா போய் ஹெல்ப் பண்ணுங்க
என்று முட்டைதோசை சொன்ன உடனே அவர்கள் கிளம்பி போய் உஷாவுடன் சேர்ந்து கொண்டணர். ரங்கோலி குழுப் போட்டியாதலால் அந்தக் குழுவில் இவர்கள் இணைவதில் ஒரு பிரச்சனையும் இருக்கவில்லை
கொதிப்பான சுமன் இடத்தை காலிசெய்து விட்டு தண்ணீர் குடிப்பதற்காக சென்றான். அப்போது நடனப் பயிற்சி செய்து கொண்டிருந்த சுமத்ராவும் வந்து கொண்டிருந்தாள்.
==========================================================
சுமன்_சுமித்ரா இடையேயான உறவு பற்றித் தெரியாதவர்கள்
கதையின் முதல் பகுதி "அடப்பாவி மணமேடையில்கூட
இரண்டாம் பகுதி நண்பர்கள் என்றும் சொல்லலாம்
மூன்றாம் பகுதி இந்தப் பூனையும் பால் குடிக்குமா?
நான்காம் பகுதி ஃபிகர் இல்லடா.., ஃபிகர் மாதிரி
ஐந்தாம் பகுதி ஒருத்திக்கு எத்தனை பேர்டா லவ் லெட்டர் கொடுப்பீங்க
ஆறாம் பகுதி நான்கு பெண்களைக் காணவில்லை.
ஏழாம் பகுதி நெஞ்சுக்கு நடுவில் தொங்கிய வாக்மேன்
எட்டாம் பகுதி மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு; மடிமேல் விளையாடி...
ஒன்பதாம் பகுதி தமிழ் இந்தி ஒற்றுமையை வளர்த்த ரங்கோலிப் போட்டி
படித்து தெரிந்து கொள்ளுங்கள்
============================================================
இருவரும் நின்று யாரும் கேட்காத குரலில் உலக விஷ்யங்களைப் பேசி அறிவை வளர்த்துக் கொண்டிருந்த போது சுவற்றின் மறு பகுதியில் பேசிக் கொண்டிருந்த விஷயங்கள் அவர்களுக்கு அப்படியே கேட்க ஆரம்பித்தது.
தனது சவாலில் வெற்றிப் பெறுவதற்காக எப்படி சுமத்ராவின் துப்பட்டாவை எடுப்பது என்பது பற்றி இங்கிலீஷ் குப்பனும் அவனது தோழர்களும் ஆலோசனை செய்து கொண்டிருந்தனர்.
தொடரும்.............................................
athane paarthen,, yennada onnume puriyalenu.. hmmm neraya padikanum pola irukku.. yellathayum padichitu varen..
ReplyDelete// குறை ஒன்றும் இல்லை !!! said...
ReplyDeleteathane paarthen,, yennada onnume puriyalenu.. hmmm neraya padikanum pola irukku.. yellathayum padichitu varen..//
படிச்சாச்சா தல..,
கலக்கல் தல. ரெண்டு வரி படிச்ச மாதிரி இருந்தது அதுக்குள்ள முடிஞ்சிருச்சி.
ReplyDeleteதொடர்ந்து எழுதவும்.
பிடிச்சிருக்கு..... படிச்சிட்டன்.....
ReplyDeleteஎழுதுங்க எழுதுங்க... எழுதிக்கொண்டே இருங்க.....
அப்படியே நம்ம பக்கமும் வங்க பிடிச்சிருந்தா அடிக்கடி வங்க...
// அக்பர் said...
ReplyDeleteகலக்கல் தல. ரெண்டு வரி படிச்ச மாதிரி இருந்தது அதுக்குள்ள முடிஞ்சிருச்சி.
தொடர்ந்து எழுதவும்.//
நன்றி தல..,
// சந்ரு said...
பிடிச்சிருக்கு..... படிச்சிட்டன்.....
எழுதுங்க எழுதுங்க... எழுதிக்கொண்டே இருங்க.....//
நன்றி தல,,.,
நானே ராகிங்கிற்கு ஒரு பதிவை போடணும்னு நினைச்சிருந்தேன். நீங்க முந்திக்கிட்டீங்க,..
ReplyDeleteகலக்கல்,.
வாசிக்க வாசிக்க ... முடியல....
ReplyDeleteரொம்ப விறுவிறுப்பு
நல்லா இருக்கு
//jothi said...
ReplyDeleteநானே ராகிங்கிற்கு ஒரு பதிவை போடணும்னு நினைச்சிருந்தேன். நீங்க முந்திக்கிட்டீங்க,..
கலக்கல்,.//
நன்றி தல..,
கதை தொடரும்..,
//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
ReplyDeleteவாசிக்க வாசிக்க ... முடியல....
ரொம்ப விறுவிறுப்பு
நல்லா இருக்கு//
நன்றி தல...,
என்ன தல...
ReplyDelete5 தான் படிச்சேன்.. அதுக்கு அப்ப்றம் இது... ..
சுமனுக்கும் குமித்ராவுக்கும் என்னதான் தல நடக்குது.. ??? சொல்லுங்க...
:-)
// கடைக்குட்டி said...
ReplyDeleteஎன்ன தல...
5 தான் படிச்சேன்.. அதுக்கு அப்ப்றம் இது... ..
சுமனுக்கும் குமித்ராவுக்கும் என்னதான் தல நடக்குது.. ??? சொல்லுங்க...
:-)//
முழுவதும் படித்து விட வசதியாகத்தான் தொடுப்புகள் தந்துள்ளேன்..,
படிங்க தல..,
சுமன் - சுமித்ரா நாம் சராசரியாகப் பார்க்கும் மாணவர்கள்தான்
விளாசித் தள்ளுங்க தல! முட்டைதோசை - பேரு சூப்பரு!
ReplyDelete