Thursday, March 31, 2011

ங், ஞ் எழுத்துக்கள் தமிழ் மொழியிலிருந்து நீக்கம்

தமிழ்மொழியை எளிமைப் படுத்தி உலக அளவில் பிரபலப் படுத்த பல முயற்சிகள் எடுக்கப் பட்டு வருகின்றன.  இது தொடர்பாக அகில உலக தமிழ் மக்கள் பண்பாட்டு பரவலாக்கல் மட்டும் விரிவாக்கக் கழகம் சார்பாக சில அறிவிப்புகள் வெளியிடப் பட்டு உள்ளன.


இதன்படி தமிழ்மொழியை எளிமைப் படுத்தும்பொருட்டு அதில் உள்ள   ங், ஞ் ஆகிய எழுத்துக்கள் நீக்கப் பட்ட உள்ளன.  இந்த எழுத்த்துக்கள் தேவையில்லாமல் இடத்தை அடைத்துக் கொண்டு இருப்பதாகவும்,  இதன் காரணமாகவே தமிழ் மொழியில் அதிக எழுத்துக்கள் இருப்பது போல தோற்றம் இருப்பதாகவும் சொல்லப் பட்டுள்ளது.

இனிமேல்  இங்ஙனம் = இன்கனம்

                  வாங்க = வான்க
           மஞ்சு =  மன்சு

என்று எழுத மற்றும் அழைக்கப் படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.


தமிழ் மொழியில் எழுத்து வடிவங்கள் மாறுவது இது ஒன்றும் முதல் முறையில்லை என்றும்  பல வித எழுத்து வடிவங்களை தமிழ் கடந்து வந்துள்ளதாகவும்,
இப்போதுள்ள எழுத்துவடிவத்திற்கும் தொல்காப்பியரின் ஓலைச் சுவடிகளில் இருக்கும்  எழுத்துக்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் காலப் போக்கில் எல்லாம் மாறியே தீரும் என்றும் கூறப் பட்டுள்ளது.

மேலும்  னை, லை ழை போன்ற எழுத்துக்கள் புழக்கத்தில் வந்து 100 ஆண்டுகள்கூட ஆகவில்லை என்றும் அதற்கு முன் இருந்த வடிவங்கள் இப்போது மாறி , மறைந்து விட்டதாகவும் அ, உ, த,ம, ப,வி, கழகத்தினர் தெரிவித்தனர்.

மற்றும் ந, ல, போன்ற எழுத்துக்களிலும் சிறு குறியீடுகள் மூலம் வேறுபடுத்தி காட்ட ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் அதன் அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று செய்திக்குறிப்பு கூறுகிறது.

Wednesday, March 30, 2011

நிஜமா இலவசம்னு ஒன்னு இருக்கா?

இலவசம், இலவசம் என்று புலம்புவர்களுக்கு ஒரு கேள்வி, தயவு செய்து பதில் சொல்லுங்கள்.

தமிழ் நாட்டில் நிறைய இலவசங்கள் கொடுப்பதாகப் புலம்புகிறீர்களே..,  பள்ளி மாணவர்களுக்கும், நோயாளிகளுக்கு , வயோதிகர்களைத் தவிர  வேறு மக்களுக்கு இலவசங்கள் ஏதாவது கொடுத்திருக்கிறார்களா?

தொலைக்காட்சி பெட்டி மட்டும் விதிவிலக்காக எல்லோருக்கும் கொடுக்கப் பட்டது. நாட்டு நிகழ்வுகளை, மக்களின் வாழ்க்கை முறைகளை தமிழ்நாட்டின் கடைகோடி வரை கொண்டு சென்ற மிக முக்கிய அரசியல் நிகழ்வு அது.


Monday, March 28, 2011

பணம், சாதி, கொள்கை, கூட்டணி ...... ஓட்டு

தேர்தலில் வாக்களிப்பது என்பது முழுக்க முழுக்க சுயநலம் தொடர்பான விஷயம்தான். இதில் வருத்தப் பட ஒன்றும் இல்லை. நம்மை ஆள்பவர்கள் நமக்கு தோதாக அமையவேண்டும் என்று நினைப்பதில் என்ன தவறு இருக்க முடியும். என்னைப் பொறுத்தவரை  89தேர்தல் முதற்கொண்டு நேரடியாக பார்த்து வருகிறேன். மக்களின் வாக்களிக்கும் மனப்பாண்மை என்பது முழுக்க முழுக்க தன் தலைவன் தொடர்பாகவே அமைகிறது.

எம் ஜி யாரை தலைவராக ஏற்றுக் கொண்டவர்கள் கலைஞருக்கோ, கலைஞரை தலைவராக ஏற்றுக் கொண்டவர்கள் எம் ஜி யாருக்கோ, அவரது கட்சிக்கோ வாக்களிக்கவே மாட்டார்கள்.


ஆனால் எம் ஜி யாருக்குப் பிறகு தனது தலைவராக கலைஞரை ஏற்றுக்கொண்டவர்கள் நிறைய உண்டு.  எப்படி சச்சின் சதம் அடித்தால் தான் அடித்தது போல மக்கள் மகிழ்கிறார்களோ அதே போல தனது தலைவர் ஜெயித்தால் தானே ஜெயித்தது போல் தானே முதல்வர் ஆனது போல நினைப்பவர்கள் அதிகம். அது அவர்களுக்கே தெரியும். உண்மை அல்ல. இது கற்பனை என்று. ஆனால் அந்த கற்பனையிலேயே வாழ்பவர்கள் மிக அதிகம்.

குறிப்பிட்ட நாயகர்களுக்கு, கடவுளர்களுக்கு கூட்டம் இருப்பது போலத்தான் இதுவும்.


தலைவர் கொடுக்கும் வாக்குறுதிகள் முக்கியத்துவம் வகித்தாலும்  தலைவரால் அதை நிறைவேற்ற முடியுமா அல்லது இத்தனை நாள் ஏன் நிறைவேற்றவில்லை என்பதிலும்  வாதவிவாதங்கள் செய்கிறார்கள். அப்போதும் கூட தலைவரின் ஆளுமைத் திறன் முக்கியப் பங்கு வகிக்கிறது.

லஞ்சங்கள், அதிகார துஷ்பிரயோகங்கள் பெரும்பாலான மக்களால் விரும்பப் படுகிறது.  தன் தலைவரால் நியமிக்கப் பட்ட பிரதிநிதி,  அலுவலகங்களில் தனது திறமையைக் காட்டி காரியம் சாதிக்கும்போது மக்கள் புளங்காகிதம் அடைகிறார். ( காணிக்கையும் செலுத்துவார்கள் என்பதையும் மனதில் கொள்ளுங்கள் )


தன்னையும் தன் சமுதாயத்தையும் பார்த்து மற்றவர்கள் பயப்பட தலைவரின் பெயர் உபயோகப் படும் என்றால் மட்டுமே சாதி, மதங்கள் உள்ளே நுழைகின்றன. ஆனால் பல நேரங்களிலும்  பெரும்பான்மையான சாதியைச் சேர்ந்தவர்களையே அரசியல் கட்சிகள் நியமிக்கின்றன. இது அடியாள் சேர்ப்பதற்கு வேண்டுமானால் உதவுமே தவிர  வெற்றிக்கு உதவுமா என்பது கேள்விக் குறிதான்.

நடுநிலை வாக்காளர்கள் என்ற நிலையில் சிலர் இருப்பார்கள். இவர்கள் ஊசலாடும் வாக்காளர்கள் என்றே சொல்லலாம். இவர்களைப் பொறுத்தவரையில் யார் தலைமைக்கு வந்தால் இந்த முறை நம் தொழில் நன்றாகப் போகும் என்று பார்ப்பார்கள். யார் வந்தாலும் ஒன்றுதான் என்னும்போது  தொகுதிப் பிரதிநிதியிடம்   நாம் எளிதில் சாதித்துக் கொள்ளமுடியுமா என்று பார்ப்பார்கள். அப்போது சாதிய ரீதியில் ஏற்கனவே உள்ள நெருக்கம் உதவும்.  சாதிக்கு அப்பாற்பட்டு தங்கள் பகுதியில் செல்வாக்கினை வளர்த்து வைத்திருக்கும் சிலரிடம் பெரும்பான்மைச் சாதியை சேர்ந்தவர்களை நிருத்தினாலும் செயிக்க முடியாத நிலையே ஏற்படும்.


கூட்டணியைப் பார்த்து ஓட்டுப் போடுவது என்பதும் நடக்கிறது.  பெரும்பாலான கூட்டணிகள் இன்னார் வரக்கூடாது என்றுதான் சேருகின்றன.

91லும் சரி,  96, 2001ன் மெகா கூட்டணி, 2006 கூட்டணி போன்றவை இவர்கள் வெல்ல வேண்டும் என்பதை விட இந்த நபர் ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்பதில்தான் கவனத்துடம் இருந்தன.   96ல் கொள்கைக்கான உருவான தமாகா  அதைக் குழிதோண்டி2001ல்  புதைத்ததற்கு காரணம்   வேறு என்னவாக இருக்க முடியும்?   இன்னார் வரக்கூடாது என்று என்ற காரணம் கூட தலைவனை முன்னிலைப் படுத்துவது என்றே அமைகிறதல்லவா?


பிரச்சனைகள் என்பதில் பொதுப் பிரச்சனைகள் என்றுமே ஓட்டுப் போடும் காரணியாக இருந்ததாக எனக்குத் தோன்றவில்லை.  ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு காரணத்தைக் கொண்டிருந்தாலும்  தீர்க்கும் நபரை தேடியே ஓட்டுப் போடுகிறார்கள்.

வாக்குறுதிகள் : மனிதன் என்று ஒரு திரைப்படம் எஸ்பி முத்துராமன் இயக்கியது. அதை மீண்டும் ஒரு முறை பார்க்கவேண்டும்.  வாக்குறுதிகளை வைத்து மக்கள் மத்தியில் நம்மை பற்றியே பேசும் சூழலை உருவாக்க முடியும்.  வாக்குறுதிகள் தலைவனின் மதிப்பை மிகவும் உயர்த்தும். ஆனால் சொல்லும் தலைவரின் நம்பகத்தன்மையும் இதில் அடங்கியிருக்கின்றது,பிரியாணியும் குவார்ட்டரும்  வாங்கிக் கொண்டு ஓட்டுப் போட்டுவதாகச் சொல்லுகிறார்கள். யாருமே அந்த குறிப்பிட்ட தினத்தில் வாங்கிக் கொடுப்பதைப் பொறுத்து ஓட்டுப் போடுவதில்லை. வாங்கிக் கொடுப்பவருக்கும் அதை சாப்பிடுபவருக்கும் இடையிலான் ஒரு நெருக்கம் மட்டுமே அதை ஓட்டாக மாற்ற முடியும். திடீரென ஒரு ஆள்  ஆயிரம் ரெண்டாயிரம் அல்லது ஒரு ஃபுல் வாங்கிக் கொடுத்து குறிப்பிட்ட சின்னத்துக்கு ஓட்டுப் போடச் சொன்னால் கண்டிப்பாக அதே சின்னத்துக்கு ஓட்டுப் போடும் அளவிற்கு நம் ஊரில் நேர்மை இருக்கிறதா என்பது என்பது அனைவருக்கும் தெரிந்ததே..,

============================================
சக பதிவர் மாதவராஜ் அவர்களின் தளத்தில் கொடுத்துள்ள கேள்விகளுக்கான எனது கருத்தே இந்த இடுகை.

==================================================

பணம், சாதி, கொள்கை கூட்டணி எல்லாம் இருந்தாலும்  தலைவன், தலைவன் மட்டுமே அவை எல்லாவற்றையும் ஓட்டாக மாற்ற முடியும். தமிழ்கத்தில் இதுவரை அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.


=======================================================

கூட்டணி கட்சிகள் இருந்தாலும் தேர்தலுக்குப் பின்னரும் இவர்கள் நம்முடன் இருப்பார்களா? என்பதும் ஓட்டுப் போடும் வாக்காளர்கள் யோசித்துக் கொண்டுதான் ஓட்டுப் போடுகிறார்கள்.  எனக்கென்னவோ 1980ல் நடந்த இந்த சிந்தனை ஓட்டம் இந்த ஆண்டும் வரும் என்று தோன்றுகிறது.


==================================================================


அரசு சார்பாக புதிய திட்டம் ஒன்று பற்றி முதலமைச்சர்  உத்தரவு போடச் சொன்னபோது ‘ஜீ.ஓ. இடம் தராது’ என்று சம்பந்தப்பட்ட அதிகாரி சொன்னார். உடனே அவர்  , ‘ஜீ.ஓ.’ன்னா என்ன?’ என்று கேட்டிருக்கிறார். இதுகூட தெரியாமல் ஒரு முதலமைச்சர் இருக்கிறாரே என்று நினைத்தாரோ என்னவோ, ‘அது கவர்மெண்ட் ஆர்டர் ஐயா’ என்றார் அந்த அதிகாரி. ‘அதுசரி, கவர்மெண்ட் ஆர்டர் என்றால் என்ன?’ என்று மறுபடி கேட்டார்
என்ன பதில் சொல்வதென்றே அதிகாரிக்குத் தெரியவில்லை. மௌனம். மீண்டும் அவரே   பேசினார் : ‘நீங்கள் எழுதி வைப்பதில் நான் கையெழுத்துப் போட்டால் அது கவர்மெண்ட் ஆர்டர். அப்படித்தானே? நான் சொன்னபடி மாற்றி எழுதுங்கள். நான் கையெழுத்துப் போடுகிறேன்!’

இவ்வாறு சொன்ன முதல்வர்  பிற்காலத்தில் சட்ட மன்ற தேர்தலில் தோற்றுப் போனார். அவர் தோற்றதற்கு பணம், சாதி, கொள்கை, பிரச்சனை, கூட்டணி போன்றவை காரணம் என்றா நினைக்கிறீர்கள்?


 ஒரு தலைவர், அவர் வழி நடந்த  களப் பணியாளர்களின் கடின உழைப்பு அவ்வளவுதான்.

===================================================================


கொள்கை அடிப்படையில் ஓட்டுப் போடுபவர்கள் யாராவது இருந்தால் எந்தக் கொள்கையின் அடிப்படையில் எதிர்கட்சி வேட்பாளரை நிராகரித்தீர்கள் என்று சொன்னால் கொள்கை அடிப்படையில் ஓட்டு என்றால் என்ன புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.


எங்கள் கட்சியின் கொள்கையை அந்தக் கட்சி காப்பியடித்து விட்டது என்று எந்த தலைவரும் கூறாவிட்டாலும் அதுதான் நாட்டு நடப்பு

=============================================================

வளர்ச்சிப் பணியா? வைப்பு நிதியா?

சென்ற இடுகையில் நண்பர் ஒருவர் ஒரு மாநில அரசு பணத்தினை டெபாஸிட் செய்து வைத்திருப்பதை சற்று பெருமையாகச் சொன்னார். பலரும் பாராட்டும் அரசுதான் அந்த மாநில அரசு. ஆனால் லட்சம் கோடிகளை டெபாஸிட் செய்து வைத்திருப்பது என்பது கொஞ்சம் நெருடலாகவே உள்ளது.

அன்னிய செலவாணியில் மத்திய அரசு கையிருப்பில் வைத்திருப்பது என்பதும் மாநில அரசு பணத்தினை டெபாஸிட் செய்து வைத்திருப்பது என்பதும் வேறுவேறு என்று நினைக்கிறேன். (மாற்றுக் கருத்து அல்லது உண்மை நிலவரம் தெரிந்தவர்கள் கருத்துச் சொல்ல அழைக்கப் படுகிறார்கள்)

மக்களுக்கு தூய்மையான குடிநீர், பாதுகாப்பான வாழ்க்கை,  தரமான கல்வி, துரிதப் போக்குவரத்து ஆகியவை கொடுக்க வேண்டிய கடமை மாநில அரசுகளுக்கு இருக்கின்றன. கண்டிப்பாக இந்தியாவின் எந்த மூலையிலும், ஏன் முக்கிய நகரங்களில் உள்ள மக்களுக்குக் குட இந்த தேவைகள் பூர்த்தி செய்யப் பட்டிருக்குமா என்பது கேள்விக் குறிதான்.  மேலும் மேலும் பள்ளிகள், கல்லூரிகள் அமைக்கலாம்.  மருத்துவமனைகளில் மிக மிக கடினமான சிகிச்சைகள் அளிக்கும் வகையில் விரிவு படுத்தலாம்.  கடைக் கோடி கிராம மக்களுக்கு வந்து செல்ல போக்குவரத்து வசதி சாலைகள் அமைக்கலாம். நாட்டில் பேருந்தே வராத கிராமங்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றன. ஒரு நாளைக்கு ஓரிரு பேருந்துகள் மட்டும் வரும்  கிராமங்களும் இருக்கத் தான் செய்கின்றன. அவர்களுக்கெல்லாம்  நட்டக் கணக்கு பார்க்காமல் அருகிலுள்ள பெரிய கிராமங்கள், அல்லது நகரங்களை இணைக்கச் செய்யலாம்.

இதையெல்லாம் முடித்துவிட்டு பணத்தை வைப்புநிதியாக வைத்திருந்தால் கண்டிப்பாக பாராட்டியே தீரவேண்டும். அப்படி இல்லாமல் இருந்திருந்தால்  குழந்தைகளுக்கு சாப்பாடு போடாமல் படிக்க வைக்காமல் சொத்துக்களை சேர்க்கும் பெற்றோர்களைப் போல  அவர்களும் பரிதாபத்துக்கு உரியர்களே..,


=====================================================================
//ரம்மி said...
சரியாகச் சொன்னீர்கள்! இவை இலவசங்கள் அல்ல! மக்கள் நலத் திட்டங்கள்! இதுவே உண்மையான கம்யூனிஸ பாதை! என்ன அடுத்த தலைமுறைக்கும் சேர்த்து, இப்பவே அரசு கடன் வாங்குகிறது! ஒரு லட்சம் கோடிகள் கடன், தமிழகத்திற்கு! குஜராத்க்கு, ஒரு லட்சம் கோடி டெப்பாசிட் வைத்துள்ளது!// இதற்கான  மறுமொழியே இந்த இடுகை.  கருத்துச் சொன்ன ரம்மி அவர்களுக்கு நன்றி

Sunday, March 27, 2011

எது இலவசம்?

தமிழக தேர்தலில் தேர்தல் அறிக்கையை வைத்துக் கொண்டு பலரும் பலவாறு பேசிக் கொண்டிருக்கிறார்கள். தமிழன் இலவசத்திற்கு விலை போகிறானாம். இலவசம் என்றால் என்ன என்றே தெரியாத பெருந்தகைகள் எள்ளி நகையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

முதலில் அரசு என்றால் என்ன? அரசின் கடமை என்ன? என்று கூட தெரியாமல் இலவசங்களைப் பற்றி மாறி மாறி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.


மக்களுக்கு தன்னிறைவான வாழ்க்கையைத் தருவதுதான் உண்மையான அரசின் கடமையாக இருக்கமுடியும்.  அனைத்து மக்களுக்கும் குடியிருக்க உறைவிடம், அனைத்து மக்களுக்கும் தரமான கல்வி, பாதுகாப்பு, தரமான உணவு, குறையே சொல்ல முடியாத மருத்துவ வசதி போன்றவைகளை மக்களுக்குத் தருவதுதான் சிறந்த அரசாக இருக்க முடியும்.

இன்றைய தினத்தில் அனைத்திற்கும் அடிப்படை கல்வியாகவே இருக்கிறது. கல்வியைப் பெற பொருளாதாரம் ஒரு தடையாக இருக்குமெனில் அதைக் களைய வேண்டியது அரசின் கடமைதான்.  புருனோ போன்ற பதிவர்கள் எழுதும்போதெல்லாம் சொல்லுவார்கள்.  டான் பாஸ்கோ போன்ற பள்ளிகளில் கிடைக்கும் கல்விக்கு எந்த விகிதத்திலும் குறைவில்லாத வகையில் கடைக் கோடி கிராம மக்களுக்கும் கிடைக்கும் சூழல் வரவேண்டும்.  சென்னையிலுள்ள தனியார்பள்ளிகளில் படிக்கும் மாணவனுக்கு அவன் பெற்றோர் பிறக்கும் முன்பே முன்பதிவு செய்து ஒவ்வொரு தினத்திற்கும் சில ஆயிரங்கள் செலவு செய்கிறார்கள் என்றால் அதே செலவினை அன்றாடக் காட்சி தன் மகனுக்குச் செய்ய முடியுமா? அப்படியென்றால் அதை வழங்க வேண்டியது அரசின் கடமையல்லவா? அப்படி வழங்கினால் அதன் பெயர் அரசாட்சியா?  இலவசமா?

மதிய உணவுத் திட்டத்தின் பின்னர் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது சரித்திரம். பின்னர் சீருடை, புத்தகங்கள், குறிப்பேடுகள் எல்லாம் அரசுப் பள்ளிகளில் வழங்கப் படுகின்றன. பின்னர் சைக்கிள்கள் கொடுத்தார்கள்.  இதெல்லாம் நாட்டின் கல்வியை வளர்க்கத் தேவையான அடிப்படைகள். இதை முழுமையாக கொடுக்கவேண்டியது அரசின் கடமை. இந்தியாவில் பெரும்பாண்மையான மாநிலங்களுக்கு முன்பே தமிழகம் வழ்ங்குகிறது என்றால் தமிழகம் ஒளிர்கிறது என்றுதான் பொருளே தவிர இதில்  விமர்சிக்க ஒன்றும் இல்லை.

மாணவர்களுக்கு புத்தகங்கள். பேனாக்கள், குறிப்பேடுகள் கொடுத்த அரசு மடிக் கணினி வழங்குவதும் காலத்தின் கட்டாயம் அல்லவா..,  ஒரு மாணவன் அவனது முழுத் திறமைக்கேற்ப படிக்க நினைக்கும் அளவிற்கு படிக்கும் சூழலை ஏற்படுத்தி தரவேண்டியது அரசின் கடமை என்பதையும் பொருளாதாரம் எந்த இடத்திலும் இடையூறு செய்யக்கூடாது என்பதையும் இலவசங்களை விமர்சிப்பவர்களே ஏற்றுக் கொள்வார்கள். 


எட்டு ரூபாய் மானியம் கொடுத்து 3.50க்கு அரிசி கொடுத்துக் கொண்டிருந்த அரசு  ஒரு ரூபாய் செலவில் கொடுத்த போது விமர்சிக்கிறார்கள்.  இதெல்லாம் விமர்சிக்க வேண்டும் என்ற ஒரே காரணம்தானே தவிர வேறென்ன இருக்க முடியும். குறைந்த பட்ச அளவு அரிசியை மக்களுக்கு அடிப்படை உரிமையாக முழு மானியத்தையும் ஏற்றுக் கொண்டு வழங்குவது கூட மக்களாட்சியின் வெற்றி என்றுதான் சொல்லவேண்டும். இதில் தவறு இருப்பதாக தோன்றவில்லை.


கிராமங்களில் அங்கன்வாடி மையங்களை வந்து பாருங்கள். எத்தனை பெற்றோர் அந்த மையங்களை நம்பி  குழந்தைகளை விட்டுவிட்டு வேலைக்குச் செல்கிறார்கள் என்பது புரியும். அந்த நம்பிக்கையை வழங்க வேண்டியது அரசின் கடமை அல்லவா?

இன்றைய தமிழகத்தில் தொலைக்காட்சி மூலம் ஒரே மக்கள், ஒரே சூழல், ஒரே பண்பாடு என்பது உருவாகி வருகிறது அல்லவா.., மக்களின் சிந்தனைகள் சீரியல்களின் அடிப்படையில் இருந்தாலும் கூட பேச்சு மொழிகள் கூட ஓரளவு வித்தியாசம் குறைந்து வருகின்றன.  நல்ல தூய்மையான உடைகள், பளிச்சென்று இருக்கவேண்டும் என்ற எண்ணம், குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் பெண்கள் படித்தால் அவர்களது வாழ்க்கைப் போராட்டத்திற்கு உதவும் போன்ற எண்ணங்கள் பல தொலைக்காட்சித்தீமைகளுக்கு நடுவிலும் வளர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

மிக்ஸி கிரைண்டர் போன்றவை வரும்போது அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் கண்டிப்பாக உயர்ந்து தான் போகும். ஒவ்வொரு குடும்பத் தலைவியின் சுமையைக் குறைப்பதும்  அரசின் கடமைதானே..,

இலவசமாக வீடு வழங்குவது என்பதும் கூட விமர்சிக்கப் படுகிறது. உண்மையில் அனைத்து குடியிருப்புகளையும்கூட அரசு பொதுவுடமையாக்கிவிடலாம்.  குறைந்த பட்ச வசதி கொண்ட வீடுகளை மக்களுக்கு குடியிருக்க இலவசமாகவும், சற்று வசதிகள் கூடக் கூட அந்த வீட்டுக்காண வாடகையை சற்று அதிகமாக்கி அரசுக்குச் செலுத்தச் சொல்லலாம். ஏற்கனவே தண்ணீர்வரி, மின்சார வரி போன்றவைகளை மக்கள் தொடர்ச்சியாக செலுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதன்மூலம்  குடியிருப்புகளையும் இலவசமாகக் கொடுக்க முடியும். தனிநபர்கள் சொத்துக் குவிப்பதையும் தடுக்க முடியும்.  இது இப்போதைக்கு நடைமுறைக்கு சாத்தியம் இல்லாவிட்டால்கூட  வருமைக்கோட்டிக்கு கீழே உள்ள மக்கள் அனைவருக்கும் இலவச வீடுகளை வழங்கும்போது மக்கள் தொகையை பரவலாக்கப் படுகிறது.   குறைவான எண்ணிக்கையில் கொடுத்தால் மட்டுமே  அதை பிறருக்கு வாடகைக்கு விடுவது என்பது வரும்.  சற்று வசதியான வீடுகளை அரசே மக்களுக்கு விற்பனை செய்யலாம். ஹவுசிங் போர்டு ஏற்கனவே செய்வது தான் என்றாலும் பெரிய அளவில் செய்தால் இதில் இருக்கும் மனக் கசப்புகள் அகலும்.


திருமண உதவித்தொகைகள் வழங்கப் பட்டு வருகின்றன.  திருமணத்தையே அரசு நடத்தி வைத்துவிடலாம்.   இவ்வாறு திருமணத்தை அரசு நடத்தினால் குழந்தை திருமணத்தை தவிர்த்து விட முடியும். மக்களுக்கு  திருமணம் என்ற பெயரில் ஏற்படும் மிகப் பெரிய கடன் சுமைகள் குறையும். கோவில்களில் அன்னதானம் வழங்குவது போல திருமணத்தின்போது சாப்பாட்டையும் அரசே போட்டுவிடலாம்.

இலவசமாக ஆடுகள், கன்றுகள் வழ்ங்குவதாக அறிவித்து இருக்கிறார்கள். ந்டைமுறைக்கு சாத்தியமா என்ற கேள்வியை பலரும் கேட்கிறார்கள்.  படிப்படியாக செய்தால்கூட இது ஒரு மாபெரும் திட்டம் அல்லவா? கண்டிப்பாக எந்த அரசு வந்தாலும் இதைச் செய்வார்கள்.  இதில் பாதிப் பேர் விற்றுத் தின்றாலும்கூட மீதம் இருப்பவர்கள் அதை வளர்ப்பார்கள். உழைக்கும் எண்ணம் பெரும். கால்நடைகள்மூலம் கிடைக்கும் வருமாணம் நிரந்தரமாகவும், உடலுழைப்பு மட்டுமே மூலதனமாக இருப்பதால் பலரும் நல்ல நிலமைக்கு வந்து விடுவார்கள்.  கால்நடைகளை வாங்கு விற்றவர்கள்கூட மீண்டும் அந்த வேலையை செய்ய தொடங்கினாலும் ஆச்சரியப் பட ஒன்றும் இல்லை.  மறைமுகமாக இறைச்சியின் விலையும் நன்கு குறையும். ஆனால் இறைச்சிவிலை  குறைந்தாலும் உற்பத்தியாளர்களுக்கு வருமான இழப்பு வராது. எவ்வளவு பெரிய பொருளாதார சூத்திரம் இது.

உண்மையில் இலவசங்கள் என்பவை இந்தியா போன்ற வளரும் நாடுகளில் மிக அவசியமானதும் அத்தியாவசியமானதும்கூட..., 

குந்தவையாக அனுஷ்காமனி ரத்னம் எடுக்கப் போகும் பொன்னியின் செல்வன் கதையின் குந்தவையாக அனுஷ்கா நடிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு குந்தவை பாத்திரத்திற்கு நமிதா ஓ. கே என்று சொல்லி இந்த இடுகையினைப் போட்டு வாங்கிக் கட்டிக் கொண்டது ஏனோ நினைவுக்கு வந்தது.

 மனிரத்னம் ஏன் பொன்னியின் செல்வன் கதையினை இப்போது கை வைத்திருக்கிறார் என்று இந்த இடுகையில் சொல்லி இருந்தாலும் இப்போது மீண்டும் ஒரு முறை கதைச் சுருக்கத்தினை நினைத்துப் பார்ர்போம்.

தந்தை சுந்தரச் சோழர் மிகப் பெரிய பேரரசர். அவருக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள்.  மூத்தவர் மதுரை மண்ணிலே எதிரிகளை பந்தாடியவர். அவரது ஆக்ரோஷத்துக்கு மன்னர் பயந்து நாட்டின் வட பகுதியை நிர்வகிக்க அனுப்பி விடுகிறார். இளையவர் பட்டத்துக்கு வர மக்கள் விரும்புகிறார்கள். மகளும் அரசாங்க நடவடிக்கையில் தலையிடுகிறார். மகளின் காதலன் சோழ குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்கிறார். இறுதிக் கட்டத்தில் அவர் சிறைக்கெல்லாம் செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இப்படித்தான்  பொன்னியின் கதையோட்டம் செல்கிறது. இவர்களை ஒழித்துக் கட்ட போராடும் பாத்திரப் படைப்பாக நந்தினி...,


தனக்கேற்றாற்போல் சரித்திர நிகழ்வுகளை வளைத்துக்கொள்ளும் திரையுலக பிரம்மாக்கள் இந்தப் படத்தை என்னவெல்லாம் செய்யப் போகிறார்கள் என்னும்போது இந்தப் பாடல் கண்ணில் பட்டது. குந்தவை பாடும் இந்தப் பாடலை அப்படியே ரீமேக் செய்தால்....

ஏ..,  ஏ.... , ஏ....,   ஏ  ஃபார் ஆப்பிள்.....,
ஏ..,  ஏ.., ஏ.., ஏ... ,,  போடு
ஏ.., எ..., ஏ.., ஏ...,  ஏடேய்..,


தம்பி ஏடேய்..,

உன்னோடது நாடேய்..,

ஏடெய்.,  நாடேய்..,

ஏடுன்னா இன்னா நைய்னா

மெம்மரி.,   மெம்மெம்மெம்மரி கார்டெய்

ஏடு தந்தானடி தில்லையிலே ( பழைய அம்மா குரலில்)

ஏய்ய்ய்ய்ய்ய்ய்..,

இன்னாங்கடா பண்றீங்க..,

சிங்குடா..,  சாங்குடா....................., 

===========================================================

இந்த காணொளியப் பார்த்தால் அனுஷ்காவிற்கு குந்தவை பாத்திரத்தை விட நந்தினி பாத்திரம்தான் நன்கு பொருந்தி வரும் என்று தோன்றுகிறது.குந்தவை பாத்திரத்தையும், நந்தினி பாத்திரத்தையும் கல்கி வெவ்வேறாக படைத்திருந்தாலும் இரண்டும் ஒரே பாத்திரமாகத்தான் இருந்திருக்கும் என்பதற்கு பொன்னியின் செல்வன் கதையிலிருந்து நான் கொடுத்திருக்கும் வாதங்கள் இந்த இடுகையில்..,

==================================================================
பொன்னியின் செல்வன் கதையைப் படிக்கும்போது ஒவ்வொரு காட்சியும் படிப்பவர் மனதில் மிகப் பிரமாண்டமாகவே விரிந்திருக்கும். ஒவ்வொரு காட்சியையும் படமாக்கும்போது அந்தக் கதையை உள்ளார்ந்து படித்த பலரிடமும் காட்சியைக் கேட்டு உள்வாங்கி காட்சிப் படுத்தினார்கள் என்றால் ஓரளவு திருப்தியைக் கொடுக்கமுடியும். இல்லையென்றால் சிரமம்தான். இருந்தாலும் இந்தக் காட்சி ஓரளவு வெற்றி பெற்றுவிடுவார்கள் என்றே தோன்றுகிறது.================================================
வந்தியத் தேவன் அறிமுகக் காட்சியில் இப்படியொரு பாட்டுப் போட்டால்............,விஜய்க்குத்தான் அந்தப் பாத்திரம் என்று சொல்கிறார்கள்.

Thursday, March 24, 2011

இன்று இந்தியா வெல்லும் (புதுசு)

இன்று   நடைபெறும்  ஆஸ்திரேலியாவுக்கு  எதிரான போட்டியில் இந்தியா வெல்லும் என நம்புவதற்கான காரணங்கள்:-

1. இதுவரை டோனி ஒழுங்காக ஆடவில்லை. அதனால் இன்று அவர் சதம் அடிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

2.அவர் விளையாடவில்லை என்பது அவரை நம்பி ஒப்பந்தம் செய்திருக்கும் பல விளம்பரதாரர்களுக்கு மாரடைப்பே வந்து விடும். அந்த வாய்ப்பை டோனி தரமாட்டார்.

3.இந்தியா போட்டியை விட்டு விலகினால் போட்டியின் சுவாரசியம் குறைந்துவிடும். அது கிரிக்கெட் உலகிற்கு நல்லதல்ல.

4.இந்தியா வென்றால் அடுத்து பாகிஸ்தானுடன் போட்டி. அண்ட லோக பிரபஞ்ங்களும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதால் அனைத்து கடவுள்களும் கிரகங்களும் அந்தப் போட்டியை எதிர்ப்பார்த்து இருப்பதால் கிரகங்களின் நிலை இந்தியாவிற்கு சாதகமாக உள்ளது.

5.சுழற்பந்து சுலபமாக எடுபடும் வாய்ப்பு இருக்கிறது என்பது தமிழ்நாட்டு தேர்தல் கூட்டணியிருந்தே  தெரிகிறது. இதுவும் இந்தியாவிற்கு சாதகமானதுதான்.

6.ரிக்கி பாண்டிங் இந்தியா அணிக்கு, குறிப்பாக டோனி அணீக்கு மிகவும் கடமைப் பட்டு இருக்கிறார்.   அதனால் இந்தியாவிற்கு வாய்ப்பு அதிகம். புரியாதவர்கள் இந்தச் சுட்டியைத் தட்டவும்.

டிஸ்கி: இது நகைச்சுவையாக எழுதப் பட்டது.

டிஸ்கி 2 ; ஆஸ்திரேலியாவை விட இந்திய அணி பலம் பொறுந்திய அணியாகவே இருக்கிறது.

டிஸ்கி 3; ரிக்கி பாண்டிங்கைவிட டோனி அமைதியாக இருக்கிறார். அவ்வப்போது டெண்டுல்கரும் பந்து வீச்சாளர்களுக்கு டிப்ஸ் கொடுக்கிறார். எனவே இந்தியா வெல்லும்

டிஸ்கி 4; யாராவது தமிழ்மணத்திலும் இண்டிலியிலும் சேர்த்து விடுங்கள்

Tuesday, March 22, 2011

இதுவும் ஒரு கனவு கிரிக்கெட் அணிதான்

ஒரு கிரிக்கெட் எவ்வளவு ஓட்டங்கள் எடுத்திருந்தாலும் எதிர் அணியினரை அவர்களைவிட குறைவான ஓட்டங்களில் முடித்தால்தான் வெற்றிபெற முடியும்.  அதற்கு மிகச் சிறப்பான பந்துவீச்சாளர்கள் அவசியம் தேவை.
http://img.indiaglitz.com/tamil/news/star280108_1.jpg
பொதுவாக வேகப் பந்துவீச்சாளர்கள்தான் பந்துவீச்சினைத் தொடர்வார்கள். இந்தியாவின் வேகப் பந்துவீச்சாளர்கள் எவ்வளவுதான் சிறப்பாக பந்து வீசினாலும் அவர்களை உலக வேகப் பந்து வீச்சாளர்களோடு ஒப்பிட்டு பார்ப்பதுதான் நமது மரபு. அத்தோடு வெளிநாட்டு பந்துவீச்சாளர்களோடு ஒப்பிட்டுபார்க்கவேண்டும். வெளிநாட்டு பந்துவீச்சாளர்களைப் போலவே பந்துவீசுபவர்களுக்கு என்றுமே நம் நாட்டில் மரியாதை உண்டு.
http://www.behindwoods.com/hindi-tamil-galleries/star-cricket/bwoods_star-cricket-20.jpg1.ரஜினிகாந்த்

இவர் களத்தில் இருந்தாலே மற்றவர்கள் களமிறங்க பயப்படுவார்கள். எனவே துவக்கப் பந்துவீச்சாளராக ரஜினிகாந்த்தான் பொறுத்தமாகப் படுகிறார்.

2.சிலம்பரசன்

இவரை சாதரணமாக நினைத்து இவரோடு போட்டியிட்டால் இவரைப் போலவே போல்ட் ஆகிவிடும் வாய்ப்பு நிறைய இருக்கிறது.  இவரது பாணியை அகர்கர் பந்துவீச்சோடு ஒப்பிடலாம். நிறைய ரன்கள் விட்டுக் கொடுத்தாலும் விக்கெட் எடுப்பது போல எவ்வளவு செலவு செய்தாலும் இவரோடு போட்டிபோடுபவர்களை தோல்வியடையச் செய்துவிட்யுவார்.

3.ஜே.கே.ரித்தீஷ். அணியின் வெற்றிக்கு மிக அவசியமான ஆல்ரவுண்டர் எந்த இடத்திலிருந்தும் மட்டை பிடிக்கலாம்,. பந்துவீசலாம்.  கீப்பிங் செய்யலாம். தேவைப் பட்டால் கோச்சாக கூட மாறும் திறமை உடையவர்.

அடுத்ததாக மித வேகம் அல்லது சுழல்

இந்த இடத்தில் பொதுவாக இருவர் அல்லது மூவர் இருப்பார்கள். மற்ற அணிகளில் இருப்பதுபோல மிரட்டும் தன்மை நமது அணிக்கு கிடையாது.

இவர்களை நம்பி களத்தில் இறங்கி அடித்து ஆடினால் ஆட்டம் இழப்பது நிச்சயம்.  இதுபோன்று நம்பி இறங்குபவர்களை ஆட்டம் இழக்கச் செய்யும் வேலையை செய்ய நம்மிடம் விக்கிரமன், கதிர் போன்றவர்கள் இருக்கிறார்கள். 

கந்த சாமி குழுவினரும்  இதில் முக்கிய போட்டியாளர்கள். கந்தசாமியால் ஆட்டம் இழந்தவர்கள் எண்ணிக்கை அவர்களுக்கே தெரியாது.

(இந்தப் பதிவு மீள்பதிவாக இருப்பதால் இன்றைய சூழலில் யாரை இந்த இடத்துக்குப் போடலாம் என்று நீங்களே சொல்லுங்கள )

விவேக்,வடிவேலு போன்றவர்கள் கூட இந்த இடத்திற்கு போட்டி போடுகிறார்கள். இவர்கள் இருவரும் பல நேரங்களில் கூக்லி போடுவதுண்டு. இவர்களது பந்து எந்தப் பக்கம் திரும்பும் என்பது இவர்களாலேயே கணிக்க முடியாதது கூடுதல் தகுதிகள்.


அடுத்து விக்கெட் கீப்பர். பொதுவாக விக்கெட் கீப்பர் வேலைக்காரருக்கு எல்லாமே தெரிந்திருக்க வேண்டும். பந்துவீச்சாளருக்கு அவ்வப்போது மட்டையாளருக்கு தெரியாமல் யோசனைகளை பறக்கச் செய்ய வேண்டும்.  அவரே ஒரு மட்டை பிடிப்பாளராக இருந்தால் கூடுதலாக மகிழ்ச்சி தரும்.  சக களத் தடுப்பாளர்களுக்கு பயிற்சி கொடுக்கும் வல்லமை இருந்தால் சிறப்பாக இருக்கும். முதல் சிலிப், இரண்டாம் சிலிப் வரை இவரே சமாளிப்பாரானால் இவருக்கு கோவில் கட்டி கொண்டாடுவார்கள்.

இது போன்ற திறமைகளை ஒருங்கே படைத்தவர் கமலஹாசன். இவரால் இயக்குநரானவர்கள் பலர்.  நாசர், நாகேஷ், காகா ராதாகிருஷ்ணன் போன்ற பல களத்தடுப்பாளர்களை இவர் சிறப்பாக உபயோகப் படுத்திக் கொள்வார். முதல் சிலிப், இரண்டாம் சிலிப் போன்ற இடங்களில் இவரே  பல வேடமிட்டு சமாளித்துக் கொள்வார்.

இவர்கள் என்னதான் அணிக்காக கடுமையாக உழைத்தாலும்  அணிக்கு பெருமளவு வெற்றியைத் தேடித் தருபவர்களும்  மட்டையாளர்களே..,  இவர்களில் பலரும் பல முட்டைகள் வாங்கினாலும் இவர்களது சாதனைகளால் என்றுமே மக்கள் மத்தியில் புகழோடு உலவுவார்கள்.

துவக்க மட்டை என்பது மிக முக்கியமான ஒன்று. அணித்துவக்கத்திற்கு நம் கண்முன் நிற்பவர்கள் இருவர்.

1.விஜய டி.ஆர்.
எதிராளியைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் மட்டையை சுழற்றுபவர். தன்னம்ப்பிக்கையின் மொத்த உருவம். எல்லா வகையான மைதானத்திலும் எந்த வகையான பந்து வீச்சையும் சமாளிக்கும் வல்லமை படைத்தவர் இவர்.

2.விஜய்
இவர் பெரிய அளவில் ஸ்கோர் செய்வாரா என்பதை விட இவரது துவக்கம் மிக அதிரடியானது. இவர் களத்தில் இறங்குவதே மற்றவர்கள் வயிற்றில் புளியை கரைக்கும். அப்போது இவரது ரசிகர்கள் கொடுக்கும் ஓசை மிக அற்புதமாக ஒலிக்கும். இவரது சமீபத்திய ஸ்பான்ஸர்கள் மிகவும் வலிமை வாய்ந்தவர்கள்.

முதல் விக்கெட்டுக்கு களம் இறங்க சரியான நபர் அஜித்தான். முந்தைய விக்கெட் இழந்ததைப் ப்ற்றிய கவலை இல்லாமல் மட்டையைச் சுழற்றுபவர்.
இவர் களம் இறங்கும்போதும்  ரசிகர்களின் அதிரடி சொல்லி மாளாது.

இரண்டாம் விக்கெட்டுக்கு களம் இறங்க பொறுத்தமான நபர் ரஜினிகாந்த்.
தனி நபராக ஒரு அணியை ஜெயிக்கும் திறமை உள்ளவர். இவர்மேல் அதீத தன்னம்பிக்கை வைத்து தேர்வாளர்கள் அணியின் மற்றவீரர்கள் தேர்வில் பலமுறை கவனக்குறைவாக இருந்ததுண்டு.  இவர் களம் இறங்குவார் என்பதே இவருக்கு முன்னால் மட்டை பிடிப்பவர்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டுவதாக இருக்கும்.  இவர் இன்னும் களத்திற்கு வரவில்லை என்பதே எதிரணியினருக்கு ஒரு கிலியை ஏற்படுத்தும்.

மூன்றாம் விக்கெட்டுக்கு களம் காண்பவர் ஓரளவிற்கு அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்பவராக இருக்க வேண்டும். கிடைக்கும் வாய்ப்பை நன்கு உபயோகப் படுத்திக் கொள்பவராக இருக்க வேண்டும். எதிர்காலத்தில் நம்பிக்கை நட்சத்திறமாக உருவாகும் திறமை படைத்திருக்க வேண்டும். இந்த இடத்திற்கு சூர்யா பொறுத்தமானவராக இருப்பார்.


நான்காம் விக்கெட்டுக்கு களம் இறங்க விஜய காந்த் பொறுத்தமானவராக இருப்பார். வாய்ப்புக்கிடைக்கும்போது ரன் எடுக்க வேண்டும்.  இவரால் அணி வெற்றி பெற்றால் மகிழ்ச்சி அடைவார்கள். அல்லது அவர் எடுத்த ரன்களுக்காக மகிழ்ச்சி அடைவார்கள்.

இவர் சீக்கிரமே அவுட் ஆனால் எல்லோரையும் போல் சீக்கிரம் அவுட் ஆகிவிட்டார் என்று சொல்லிவிடுவார்கள்.


ஐந்தாம் விக்கெட்டுக்கு ஏற்கனவே பார்த்தபடி கமலஹாசனை வரச் சொல்லலாம்.இவரது ஆட்டம் வெற்றிகரமாகவும் அமையும். சில நேரங்களில் சோதனை முயற்சியாகவும் அமையும். சில நேரங்களில் பந்துவீச்சாளர்களை மட்டுமன்றி பார்வையாளர்களையும் கூட சோதித்து விடுவார்.  பின்னர் மற்ற பந்து வீச்சாளர்களை களமிறங்கச் சொல்லலாம்.


ஏதாவது மாற்றம் வேண்டுமென்றால் நீங்கள் சொல்லுங்களேன்.

Saturday, March 19, 2011

நெஹ்ராவுக்கு கடைசி ஓவர் ஏன்? வீடியோ அம்பலம்

சென்ற ஆட்டத்தின்போது நெஹ்ராவிற்கு டோனி ஏன் அந்த ஜோகிந்தர் ஓவரைக் கொடுத்தார் என்று பலரும் குழம்பிக் கொண்டிருந்த வேளையில்தான் யூடூபிள் இந்த காணொளியைக் காண நேரிட்டது. 

டோனியின் ராஜ தந்திரம் உங்களுக்குப் புரிகிறதா?

===================================================================

அது அப்படியே இருந்தாலும் இந்த மாதிரி காட்சிகள் இனிக் கிடைக்குமா?===========================================================

தியாகம் அப்படின்னா என்னன்னு கும்ளே சொல்லித் தருகிறார் பாருங்கள்===========================================================

இப்படியெல்லாம் நம்ம ஆட்கள் கேட்ச் எடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்================================================================

கண்ண மூடிக்கிட்டு சிக்ஸ் அடிக்கிறது நம்ம ஆளு, நல்ல பாருங்க கண்ண மூடிக்கிட்டு அடிக்கிறார்.
===============================================================

இந்த சிக்ஸ் எல்லாம் கண்ண திறந்துதான் அடிக்கறார்.

அக்கா மகள்

http://1.bp.blogspot.com/_FylGS8_9K7U/SdH_h8q6juI/AAAAAAAAQSs/U6bdZ5RiguI/s400/Anushka2903_016.jpg
வெண்ணிலாக்கா  உறுதியாக சொல்லியிருந்தாள்.  பிரியாவுக்கு இந்த வருஷத்தோடு படிப்பு முடியுது. மாசில பரிசம் போட்டுடலாம். வைகாசில கல்யாணம். ராஜா வெண்ணிலாவின் கடைசித் தம்பி. 

Thursday, March 17, 2011

மூன்றாவது அணித் தலைவர் யார்? ஒரு அதிரடி அலசல்

முன்னொரு காலத்தில் பி.ஜே.பி கூட்டணியில்  யார் பிரதமராக இருப்பது என்ற கேள்வி எழுந்தபோது அனைவரும் ஒத்துக்கொள்ளக்கூடிய ஒரு நபர் என்று வந்து அத்வானியை பின்னுக்குத் தள்ளி  வாஜ்பாய் பிரதமராக வந்தார் என்ற ஒரு கருத்து உலாவியது உண்டு. இப்போது தமிழ்நாட்டு அரசியலில் மூன்றாவது அணி ஒன்று உருவாகப் போவதாக பேசிக் கொள்கிறார்கள். அவர்களுக்கு யார் தலைவராக இருக்க முடியும் என்று ஒரு சின்ன அலசல்.

தலைவருக்கான சில முக்கிய தகுதிகள்:=

1.யார் என்ன திட்டினாலும் தாங்கும் சக்தி வேண்டும். கோபம் எவ்வளவு வந்தாலும் முகத்தில் காட்டாமல் மிஸ்டர் கூல் என்ற பெயர் வேண்டும்.

2.அவர் நிற்பது, உட்கார்வது, சிரிப்பது ஏன் டாய்லட் போவது முதல் அனைத்துமே ராஜதந்திரமாக கருதப் பட வேண்டும்.

3.சிறந்த திறமையாளர்களின் சாதனைகளுக்கு முட்டுக் கட்டை போட தெரியவேண்டும். அதே நேரத்தில் வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு இவரால்தான் அவர் சாதனை செய்ததாக காட்டிக் கொள்ள வேண்டும்

4.வெச்சா குடுமி, சிரச்சா மொட்டை என்ற பழமொழி போல இல்லாமல் சிக் என்று கட்& ரைட்டாக இருக்க வேண்டும்.

5.இவரது ஆள் தோற்றாலும் எல்லாம் ஒரு பயிற்சிதான் என்று சொல்லத் தெரிய வேண்டும்.

6.அவ்வப்போது டம்மி பீஸ்களுக்கு வாய்ப்புக் கொடுத்து முக்கிய காலகட்டங்களில்  நிறைய டம்மி பீஸ்களின் ஆதரவைக் காட்டி செல்வாக்கு மிக்கவராக காட்டிக் கொள்ள வேண்டும்.

7.நாடு முழுவதும் செல்வாக்கு மிக்கவராக இருக்க வேண்டும்.

8.அடிக்கடி டி.வி.யில் வருபவராக இருத்தல் வேண்டும்.

9.கோடிகளில் புரள்பவராக இருக்கவேண்டும். வெள்ளைவெளேர் நடிகைகளுடன் கிசுகிசுக்கப் படுதல் கூடுதல் தகுதி

10.எதிர் அணியினரிடம் மொக்கையாக அடிவாங்கித் தோற்றால்கூட ஏதோ வென்றுவிட்டது போன்று ஊடகங்களால் பேசப் பட வேண்டும்.


இவ்வளவு த்குதிகளும் நிறைந்தவர் யார்?

உங்களின் அன்புநண்பன்,

கலியுக பார்த்தசாரதி,

நவீன சாணக்கியன் (குடுமியை சமீபத்தில் எடுத்தவர்),

நடந்துவரும் ஹெலிகாப்டர்,

பறந்து பிடிக்கும் டைனஸார்,


என்றெல்லாம் அழைக்கப்படும்

மகேந்திர சிங் டோனிதான் அவர்,


சரியான நேரத்தில் சரியான மனிதரை உபயோகப் படுத்திக் கொண்டால் மூன்றாம் அணி உருப்படும். செய்வார்களா?

டிஸ்கி= மீண்டும் ஒரு முறை படித்துப்பாருங்கள்


Wednesday, March 16, 2011

இந்தியா உலகக் கோப்பையை வென்றால்...., (புதுசு)

டோனியின் பெருமைகளைப் பற்றி பேசிக் கொண்டே போகலாம். மகாபாரதத்தில் பாண்டவர்கள் எப்படி யுக்திகளை உபயோகப் படுத்தினார்களோ அதே போல இந்திய அணி கோப்பையை வாங்கிக் கொடுத்திருக்கிறார்.


கபில்தேவின் அணியைப் போல சிறந்த அணி கிடையாது  என்பதை ஊடகங்களும் ஒத்துக் கொண்டிருக்கின்றன. பதிவர்களும் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள்.  இருந்தாலும் கோப்பையை  வாங்கி இருக்கிறது. ஒரே காரணம் டோனிதான்.  சச்சின் சிறப்பாக பேட்டிங் செய்கிறார் என்றால் அதற்குக் காரணம் டோனிதான். மிக மிகச் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கால கட்டத்தில்கூட இரட்டைச் சதம் அடிக்காத சச்சின் டோனியின் தலைமையில்தான் அதுவும் டோனியுடன் களத்தில் இருக்கும்போதுதான் என்பது சரித்திரம். அதுவும் சச்சின் கொஞ்சம் நிதானமாக ஆடிய போது மிக வேகமாவும், அதே நேரத்தில் ஸ்ட்ரைக் ரொடேசன் கொடுக்காமல் ஆடுவது எபப்டி என்பதை களத்திலேயே ஆடிக் காட்டியவர் டோனி என்பது அந்த ஆட்டத்தைப் பார்த்தவர்களுக்குப் புரியும்.

கோலி, யூசுப் பதான் போன்றவர்களை இடம் மாற்றி இறக்கியது, நேஹ்ராவுக்கு கடைசி ஓவர் கொடுத்தது போன்று உலகக் கோப்பையின்போதே பல சோதனை முயற்சிகள் செய்ய கிளைவ் லாயிட், ஆலன் பார்டர், ஹன்ஸி குரோன்யே போன்ற தலைகள் கூட தயங்கி இருக்கிறார்கள். ஆனால் டோனி அதை செய்தவர். அந்த முயற்சிகள் அப்போது தோல்வி போல தெரிந்தாலும் பின்னர் தங்கள் தவறுகளை சரி செய்து கொள்ள வாய்ப்பு கொடுத்தவர் டோனி.


எங்கே தான் அதிக ரன்கள் குவித்தால் பின்னால் இருக்கும் வீரர்களுக்கு சரியான வாய்ப்புக் கிடைக்காதோ என்ற எண்ணத்தில் தனது ரன் குவிக்கும் தாகத்தை கட்டுப் படுத்திக் கொண்டு இருந்தவர் டோனி.  முக்கிய சீனியர் மட்டையாளர்களை  உள்வட்டத்துக்கும் நிறுத்தி மற்ற அணிகள் களத்தடுப்பு செய்து கொண்டிருக்க அவர்களை வெளியே நிறுத்தி அதிக அளவு வேலைகளை வெளிக் கொணர்ந்தவர் டோனி.


முதற்சுற்றில் தோல்விகள் அடைந்ததை ஊடகங்கள் பெரிது படுத்தி திட்டிக் கொண்டிருந்தன. ஆனால் அந்தத் தோல்விகளால்தான் இந்திய அணிக்கு வசதியான மைதானங்கள் அமைந்தன என்பது இன்னுமொரு சரித்திரம்.


ப்யூஷ் சாவ்லா என்றொரு ரகசிய ஆயுதத்தைக் காட்டியே பிற அணிகள் வயிற்றில் புளியைக் கரைத்தவர்  டோனி.  தான் ஏற்கனவே பந்து வீசிய காலங்களில் மிகக்குறைவான ரனகளை மட்டுமே கொடுத்திருந்த போதிலும்,  தற்பெருமை விரும்பாமல் மற்றவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்த வள்ளல் டோனி. 

எனவே இப்போது வென்றிருக்கும் கோப்பையை டோனிக்கு சமர்ப்பிப்பதோடு, பாரத ரத்னா விருதினையும் டோனிக்கு கிடைக்க இந்த வழிவகைகள் செய்ய வேண்டும்.


டிஸ்கி:=இந்திய அணி வென்றால் டோனி எப்படி பாராட்டி எழுதலாம் என்று ஒத்திகை பார்க்க எழுதப் பட்டது

டிஸ்கி2:=  வென்றால் இதைவிட இன்னும் மிகச் சிறப்பாக புகழ்ந்து எழுத நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது.

Sunday, March 13, 2011

வயசுப் பொண்ணு வாந்தி எடுத்தா இவன சும்மாவா விடுவாங்க?

பட பட வென்று தட்டப் பட்ட சத்தத்தில் கல்லூரி விடுதி முழுவதுமே விழித்துக் கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும். சுமன் எப்போது தைரியமான ஆளாக இருந்தாலும் முக்கியமான காலகட்டங்களில் இவன் வெறொரு இடத்தில் இடத்தில் இருப்பான். அவனது ராசி அப்படி என்று சிலர் சொல்லுவார்கள். அந்த நேரத்தில் எஸ்கேப்..............    என்று ஓடி விடுவான் என்றும் சிலர் சொல்லுவார்கள்.

ஆனால் கல்லூரி விடுதியின் அறைக்கு ஒரே கதவு என்பதாலும் ஜன்னல் வழியாக வெளியே செல்ல பயமாக இருந்தாலும் அவன் திறக்காமலேயே இருந்தான். என்ன இருந்தாலும் விடுதிக் கதவுகள் அதற்குரிய பலத்தில் தானே இருக்கும். அடித்த அடியில் கதவுகள் உடைந்து விடும் முன்னரே திறந்து விடலாம் என்று திறந்தாலும்    தைரியசாலி போல முகத்தை வைத்துக் கொண்டு  யார்ரா இது இந்த நேரத்தில்  என்று சொல்லிக் கொண்டே கதவைத் திறந்தான் சுமன்.

வெளியே  தீஃபக்கின் நண்பர்கள்.  கையில் ஸ்டம்ப் , பேட் போன்ற அதிபயங்கர ஆயுதங்களுடன்  வாசலில் நின்று கொண்டிருந்தனர்,


அதற்குள் சத்தம் கேட்டு  விடுதியில் இருந்த பெரும்பாலான மாணவர்கள் கூடி விட்டிருந்தனர்.


 எல்லோரும் வந்து விட்டதால் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்ட சுமன்,
என்னடா இந்த நேரத்தில்.......,  அவன் கேட்கும்போது அவன் மிரட்டுகிறானா? இல்லை பயப் படுகிறானா? என்றே தெரியவில்லை.

”தீபக் குமாரை தூக்கிட்டு போய்ட்டாங்க”

என் ரூம்ல செக் பண்ண போரியா.. ,  பண்ணுங்கடா, பண்ணுங்க...,   இப்போது தைரியமாகவே சொன்னான் . சுமன்.

”பொண்ணு வாந்தி எடுத்தா இவன சும்மா விட்டுவாங்களா”

என்னடா இங்க பிரச்சனை.

இங்கிலீஷ் குப்பனும் வந்து சேர்ந்தான். இங்கிலிஸ் குப்பனைப் பற்றி தெரியாதவர்கள் இந்த சுட்டியைத் தட்டுங்கள்.

இங்கிலிஷ் குப்பன் வந்த உடன் இன்னுமேட் தைரியம் ஆனான் சுமன்.


சுமத்ரா மயங்கி விழுந்த கதையையும் , அதன் பின்னர் நடந்த நிகழ்வுகளையும் சுருக்கமாக குப்பனிடம் சொல்லப் பட்டன. சச்சின், அஜித் போன்றவர்களும் வந்து சேர்ந்தனர்.

சுமத்ரா மயங்கி விழுந்த கதை  தெரியாதவர்கள்  இந்த   சுட்டியத் தட்டுங்கள்.


குப்பன் எப்போது  பிரச்சனைகளை வித்தியாசமாக கையாளுபவன்.  சுமித்ராவின் ஊரைச் சொல்லி நேரா அங்க போயி விசாரிங்கடா என்று சொன்னான்.சுமன் அறைக்கு ஆயுதங்களுடன் வந்தவர்கள், கிராமத்திற்கு செல்லச் சொன்னதும் பயந்தே போனார்கள். சற்று சோர்வுடனேயே  தீபக்க எப்படி திரும்பிக் கொண்டு வருவது என்று பேச ஆரம்பித்தனர். 

எப்படிடா இதெல்லாம் வீட்டுக்குப் போச்சு?

சுமித்ரா மயங்கி விழுந்த நிகழ்ச்சிக்குப் பின் நடந்த நிகழ்ச்சிகளையும்  சுமித்ரா மிகுந்த மன உழைச்சலுக்கு உள்ளானதால் மிகவும் சோர்ந்து எந்த நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி ஒதுங்கி இருந்ததால் தோழிகளில் ஒருத்தி வீட்டுக்குத் தகவல் கொடுத்ததாக தோழிகளின் தோழன் ஒருவன் சொன்னான்.

சரி வா.,  நாம சுமித்ரா ஊருக்குப் போய் பேசிப் பார்ப்போம்.

போலிசுக்குப் போலம்டா..,  தீபக் குமாரின் நண்பன் ஒருவன் சொன்னான். வேண்டாம்டா பேப்பர்ல வந்தா ரொம்ப அசிங்கம். தவிரவும் சுமித்ராவோட குடும்ப செல்வாக்கு முன்னாடி போலிஸ் ஒண்ணும் பண்ண முடியாது இது டேஞ்சர் டயபாலிக்.  டயபாலிக் பற்றி தெரியாதவர்கள் இந்த சுட்டியைத் தட்டவும்.

குப்பன், டயபாலிக்,சுமன் போன்றவர்கள் சுமித்ராவின் ஊருக்குக் கிளம்பினார்கள். 


சச்சின்னுக்கு திடீரென்று ஒரு சந்தேகம்.

ஏண்டா சுமித்ராவுக்கு தீஃபக் குமாரை பிடிச்சு கல்யாணம் பண்ணி செச்சிரும்பாங்களாடா?  அந்த ஊரில அரிவாள் மனை கல்யாணம் சகஜம்டா..,

அரிவாள் மனைக் கல்யாணம்  என்பது அரிவாள்மனை முனையில் பெண்ணுக்கு தாலிகட்ட வைப்பது.


என்ன நடக்குதுன்னு யாருக்குத் தெரியும்?  நம்ம போயி பார்த்திட்டு வரும். அவ்வளவுதான்.


ஏண்டா தாலி கட்ட மாட்டேன்னு சொன்ன என்னடா பண்ணுவாங்க


வெட்டிடுவாங்கடா..,


தலையன்னு நினைக்காதடா ...,


கொஞ்சம் திகிலுடனே கிளம்பிப் போணார்கள்.தொடரும்............................................


முந்தைய பாகத்தினைப் படிக்க இந்தச் சுட்டியைத் தட்டுங்கள்Enjoy the climax of 'Siva' by istream

Wednesday, March 9, 2011

ஒரு 18+ கதையின் விமர்சனம்

சராசரியான கதை போன்றுதான் துவங்கியது.

ஏதோ 70-80 நாவல்களில் வரும் காட்சி போல உடலுறவுக்கு பின் அந்தப் பெண்மணியின் உணர்வுகளின் அடிப்படையில் தொடங்கியது கதை. சற்று சூடாக சென்றது.

//
ஒருவேளை என்னை கற்பழிச்சுட்டாரா இந்த ஆளு? கற்பழிச்சா இதுபோல் இரண்டுமுறை உச்சமடைய முடியுமா?//

இந்த வரிகளிலேயே பெறும்பாலான உணர்வுகள் நமக்கு கிடைத்துவிட்டதாக நினைத்தால் உண்மை அது அல்ல அதற்கு பின்னரும் எழுதியிருக்கிறார். அதை நீங்களே படித்தால்தான் உணர முடியும்.


//அஷோக் எல்லாம் ப்ளான் பண்ணித்தான் வந்தானா? இதுக்காகத்தான் ரேணுகா இல்லாத நேரம் வந்தானா? ரேணுகா இல்லைனு தெரிஞ்சுதான் வந்தானா இந்தப் பொறுக்கி//

அந்த ரேணுகாவைப் பற்றி கதையில் சொல்லும்பொது ரேணுகாவின்மே ஒரு பரிதாபம் வருகிறது. அதே ரேணுகா அதைப் பற்றி கவலையே இல்லாமால் இன்னும் சொல்லப் போனால் கொஞ்சம் மகிழ்ச்சியாகவே இருப்பதாக காட்டும் கதாசிரியர் வெற்றி பெற்றுவிட்டதாகவே தோன்றுகிறது.

அதுவும் ரேணுகாவை முழுமையாக நாம் தெரிந்து கொள்ளும்போது மகிழ்ச்சியாகவே இருக்கிறது. அந்த க்ளைமாக்ஸ் “நச்”


வாழ்த்துக்கள் எழுத்தாளரே..,

அந்த கதையை முழுமையாகப் படிக்க இந்தச் சுட்டியைத் தட்டுங்கள்

எச்சரிக்கை டோனி..,

இன்றைய போட்டி

இந்திய அணியின் வாழ்க்கையில் முக்கியமான நாள்

இந்த போட்டி எப்படி அமையப் போகிறது என்பதைவிட சில புள்ளி விவரங்கள்.


நெத்ர்லாந்து அணிக்கெதிராக இந்திய அணியில் ஒரு  ஆட்டக்காரர் எடுத்த அதிகப் பட்ச ஸ்கோர் 51.


இந்திய அணியின் அதிக பட்ச ஸ்கோர் 204.

இது தவிர


நேற்றைய ஆட்டத்திற்கு முன்பு வரை பாகிஸ்தான் முதல் இடத்தில் இருந்தது. கொஞ்சம் ரன் வித்தியாசத்தில் தோற்றிருந்தால் கூட அந்த குழுவில் பாகிஸ்தான் தான் முன்னிலை வகித்திருக்கும். ஏனென்றால் நியூஸி ஏற்கன்வே தோற்றிருக்கிறது.

தவிரவும்  நியூஸி எடுத்த கடைசி 100 ரன்களுக்கு தேவைப் பட்ட பந்துகள் வெறும் 30. அந்த நூறு இல்லை என்றால் அந்த குழுவின் நிலையே வேறு மாதிரி இருந்திருக்கும்.

இன்றைய இந்திய அணியில் பியூஸ் சாவ்லா, ஹர்பஜன்சிங் போன்றவர்கள் இன்றைய போட்டியை வாழ்வா, சாவா போட்டியாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு விக்கெட் விழுமா இல்லை அவர்களை தூக்கி விடுவார்களா? என்பது இன்று தெரிந்துவிடும்.

பேட்டிங்கில் கூட ஏதாவது சாதித்து இன்றைய போட்டியின் யுவராஜ் சிங்காக மாற கனவு கொண்டிருக்கிறார்கள்.


அதனால் அணித் தலைவரின் செல்லப் பிள்ளைகள் பலரும் இடம்பெறத் துடித்துக் கொண்டிருப்பது போல தெரிகிறது, அப்படி செல்லப் பிள்ளைகளாக இடம் பெறும்போது அவர்கள் எப்படி விளையாடப் போகிறார்கள் என்பது தெரியவில்லை.

அதிரடித் திருப்பங்களுடன் கோடி ராமகிருஷ்ணாவின் படம் பார்ப்பது போன்ற அனுபவத்தை கொடுத்துக் கொண்டிருக்கும் உலகக் கோப்பைப் போட்டி இன்று இந்திய அணிக்கு என்ன தரப் போகிறதோ தெரியவில்லை....,


ஒருவேளை இந்த வீடியோவில் இருப்பது போல நடந்துவிடுமோ..,Tuesday, March 8, 2011

இது ஒரு கற்புக்கரசியின் கதை

Mahabharat
பாரதத்தில் நடைப் பெற்ற சில சுவாரசியமான சம்பவங்கள்தான் இவை....

பல நூற்றாண்டுகளுக்கு பின்னால் செல்லுங்கள். இல்லையேல் சில வருடங்களுக்கு முன் உங்கள் தாத்தா பாட்டியின் சொற்களை ஞாபகப் படுத்திக் கொள்ளுங்கள். அதுவும் போதாதென்றால் நீங்கள் படித்த அம்புலிமாமா, சிறுவர் மலர் எதையாவது ரெஃபரன்ஸ் புத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். இப்போது கதைக்கு வருவோம்.

.....................................................................................................................

அந்த மாபெரும் நாட்டின் இளவரசனுக்கு பெண் தேடுகிறார்கள். அண்ணன், தம்பி இருவருமே பலசாலிகள்..

முதலில் அண்ணனுக்குப் பெண் தேடுகிறார்கள்.

தம்பிக்கு பெண் கொடுக்க பலரும் தயாராக இருக்கிறார்கள். அண்ணனுக்கு எல்லோரும் தயங்குகிறார்கள்.

இந்தியத்துணைக்கண்டத்திலே ஏற்க்குறைய மேற்காசிய நாடுகளுக்குச் செல்கிறார்கள். பெண் கேட்கிறார்கள். மூத்த இளவரசனுக்கு பெண் கொடுக்க தயங்கி நிற்கிறார்கள். பெண்கேட்கச் சென்ற குடும்பப் பெரியவர், போருக்கு அழைக்கிறார். அந்நாட்டு இளவரசியின் அனைத்து அண்ணன்களையும் கொள்கிறார்கள். அந்நாட்டின் மன்னனையும் கொல்கிறார்கள். அந்த நாட்டையே அழித்து விட்டு திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில் அந்த நாட்டு இளவரசி வருகிறாள். நாட்டின் சண்டையை முடிவுக்கு கொண்டுவரவும், தனது சின்னத்தம்பியைக் காப்பாற்றவும் திருமணத்திற்குச் சம்மதிக்கிறார்.

ஆனால் இந்த கொடிய உலகத்தைக் காண சகிக்காமல் தனது கண்ணைக் கட்டிக் கொள்கிறார்.

அந்த இளவரசிதான் பாரதப் போரின் மகாராணி காந்தாரி அவர்கள்.

அவர் கண்ணைக் கட்டிக் கொண்டது பீஷ்மர் முதலானவர்களை பார்க்க விரும்பாமையா? இல்லை திருதிராஷ்டிரன் பார்க்காத உலகத்தை தானும் பார்க்க விரும்பாத ஒரு பாசத்தின் காரணமாகவா...............

..................................................................................................................

காந்தார தேசத்திலிருந்து தப்பி வரும் குட்டி இளவரன் சகுனி ஒரு சபதம் செய்கிறார். தனது நாட்டை சின்னா பின்னப் படுத்திய பீஷ்மரின் நாட்டையும் வம்சத்தையும் அழிப்பதாக சபதம் செய்கிறார். பின்னர் படிப்படியாக காய் நகர்த்தி பாரதப் போருக்கு காரணமாக அமைந்து கௌரவர்களையும் பாண்டவர்களின் மகன்களையும், ஏராளமான போர்வீரர்களையும் அழிக்கிறார். ஏறக்குறைய தனது சபதத்தில் வெல்கிறார்.

எதிர்மறை நாயகனாக பெருவாரியான வெற்றிகளைக் குவித்த சகுனி .. மகாபாரத்தின் நாயகனா? வில்லனா?

...........................................................................................................
மற்றுமொரு சுவாரசியமான ஒரு ஒற்றுமை... பாண்டவர்களுக்கு தந்தை ஐவர். ஐவருக்கும் மனைவியாக திரவுபதி...
.............................................................................................

நடுநிசி நாய்கள் V.2 ( ஆண்-பெண் உல்டா)

தமிழ்நாட்டில் பெண் உரிமை, பெண் முன்னேற்றத்திற்கான படங்கள் பல வந்துள்ளன. நாமும் பல படங்கள் பார்த்துள்ளதால் இனிமேல் படம் எடுக்க போகும் நண்பர்களுக்காக எவ்வாறு பெண் உரிமை படங்கள் எடுக்கலாம் என்று சிறு பார்வை.

1.பெண் உரிமை படம் என்றால் அந்தப் பெண் வேலைக்குப் போகும் பெண்ணாக இருக்கவேண்டும். ஒன்று அவள் வருமானத்தை நம்பித்தான் அந்தக் குடும்பமே நடக்க வேண்டும். அல்லது அந்தக் குடும்பத்தில் அவள் ஒரு கெஸ்ட் போல வந்து போக வேண்டும்.


2. அவள் மற்றும் அவள் தோழியைத் தவிர அனைவரும் அவளுக்கு தீங்கு விளைவிக்க வேண்டும். அவளது மேலதிகாரி அவளைக் கற்பளிக்க முயற்சிக்க வேண்டும்.


3.நாயகிக்கு யாராவது ஒரு டம்மி பீஸ் காதலன் ( காவலன் அல்ல)  இருக்க வேண்டும். ஆனால் இறுதிக் காட்சியில் அவர் நாயகியின்  தங்கை அல்லது தோழியை திருமணம் செய்து கொள்ள வேண்டும்.

4. நாயகியின் தாயார் இறுதிக் காட்சியில் ( முறைப்படியே)  கர்ப்பம் தரிப்பதைக் காட்டினால் தமிழத் தாய்க்குலங்கள் கண்ணீர் வடிப்பார்கள்.

5. ஏதாவது ஒரு சோகக் காட்சியில் அல்லது துக்கப் பாடலில் நாயகின் மாராப்பு நழுவுவது போல காட்சி அமைக்க வேண்டும். ஜாக்கெட்டை கழட்டுவது போல காட்சி வைத்தால் சிறந்த் இயக்குநர் என்ற பாராட்டுக்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

6.மூச்சை இழுத்து இழுத்து பேச வேண்டும்.

7. துவக்கப் பாடல் காட்சியில் ஒண்ணும் தெரியாத பாப்பா போல வரவேண்டும்.

8. பெண் காவல் அதிகாரி பற்றிய படம் என்றால் அவரைத் தவிர அனைத்து ஆண், பெண் காவல் அதிகாரிகளும் கெட்டவர்களாக முறை தவறியவர்களாகவே இருக்க வேண்டும்.


9. பெண் அரசியல் வாதிகள்  அரசியலில் முன்னேற இருக்கும் வழிகளைப் பற்றி விவரித்து படம் எடுக்கலாம். ( உதாரணம் : லாரன்ஸ் நடித்த ராஜாதிராஜா )


10. நவீனகால படமான நடுநிசி நாய்கள் படத்தை உல்டா செய்து ஒரு பெண் பல கொலைகள் செய்வது போல எடுக்கலாம். கொலைகள் மட்டும் செய்வது பல படங்களில் வந்து விட்டதால் கதையின் பின்புலத்தையும் சேர்த்து உல்டா செய்தல் நலம்.  அப்படி ஒரு படம் வந்தால் அது உலக அளவிலேயே தமிழனின் பெருமையை தூஊஊஊக்கி நிறுத்தும்.   அரங்கேற்றம் படம் வந்த போது ( பல ஆண்டுகள் கழித்து நாங்கள் பார்த்தபோது ஏற்பட்ட உணர்வுகளைவிட பலமான அதிர்வுகளை ஏற்படுத்தும் படமாக இது அமையும்.Monday, March 7, 2011

சங்க நிர்வாகியின் மனந்திறந்த கடிதம்( தொழில்வளர்ச்சியின் பொருட்டு)

அகில உலக கிரிக்கெட் கோப்பை நிர்வாகிகளுக்கு,

ஐயா,

எங்கள் நாட்டில் நாங்களும் கிரிக்கெட் சங்கம் வைத்து இருக்கிறோம். நீங்கள் சில பல ஆண்டுகளாக உலக்கோப்பை போட்டிகளை நடத்திவருவதைக்கண்டு மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் நாட்டில் நாங்களும் கிரிக்கெட் போட்டிகளை வளர்த்த விரும்புகிறோம். தரத்தினையும் வெகுவாக உயர்த்திட விரும்புகிறோம்.


உங்களுக்கு மகிழ்ச்சித் தரக்கூடிய செய்தி எங்கள் நாட்டில் சென்ற ஆண்டு மட்டும் 23 கிரிக்கெட் மட்டைகளும் 86 கிரிக்கெட் பந்துகளும் விற்பனை ஆகி உள்ளன. சென்ற ஆண்டைவிட இது மிக மிக அதிகம்.

நீங்கள் மனதுவைத்தால் எங்கள் நாட்டில் வளர்ந்து வரும் கிரிக்கெடை இன்னும் அதிகரித்துவிடலாம். எங்களுக்கும் எங்களைப் போன்ற வளரும் நாடுகளுக்கும் உலக் கோப்பை போட்டிகளில் வாய்ப்புத்தாருங்கள்.


நாங்கள் உள்ளே வந்தால் கிரிக்கெட்டில் மேலும் மேலும் பல சாதனைகள் புரிய உதவியாக இருப்போம். இந்த உலகக் கோப்பையையே எடுத்துக் கொள்ளுங்கள். மிக வேகமான சதம். அதிக ரன் குவிப்பு, குறைந்த ரன்களில் அவுட் ஆக்குதல் போன்ற பல பல பல சாதனைகள் எங்களைப் போல வளரும் நாடுகளுக்கு இடையேயான போட்டிகளில்தானே நடைபெறுகின்றன.

ரசிகர் எல்லோருக்குமே நாங்கள் விளையாடும் போட்டிகள்தான் பிடிக்கின்றன

அதைவிடுத்து ஏற்கனவே விளையாடிய நாடுகளிடையேயான போட்டிகளைப் பார்ப்பதற்கே வெறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  நாங்கள் களம் இறங்கினாலே எதிர் அணியினரின் கேப்டனுக்கும், பயிற்சியாளருக்கும் வாந்தி பேதி வருகிறதாம் .அந்த அளவிற்கு பயப் படுகிறார்கள்.

முக்கியமான செய்தி ஒன்று. எங்கள் நாட்டில் வீட்டிற்கு வீடு டி.வி. உள்ளது. எங்கள் கருத்தையும் மனதில் வைத்து.  அடுத்த உலகக் கோப்பையின் போது பதினாறு குழுக்களாகப் பிரியுங்கள். அதில் முதலிடம் பெறும் அணியை வைட்த்து ஒரு ஸ்வீட்16 நடத்துங்கள்.  பின்னர் வளக்கம்போல் போட்டிகளை நடத்திக் கொள்ளுங்கள்.  குழுவில் முதலிடம் பெற ஒவ்வொரு அணியும் கடுமையாக உழைப்பார்கள். எங்களோடு மோதும் போட்டியில் தோற்றால் எல்லாம் முடிந்து என்பதால் ஆட்டமும் நன்றாக இருக்கும்.  எங்கள் நாட்டுக் கிரிக்கெட்டும் வளர்ந்துவிடும்

நன்றி 

இப்படிக்கு
சப்ளிங் நாட்டு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள்
( தேசிய அளவிளான தனியார் அமைப்பு)

http://www.sufvillage.co.uk/content/images/Events/pw_history/cricket_field.jpg

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails