Friday, July 31, 2009

ரஜினிகாந்த்தின் சம்பளத்தை குறைப்பது எப்படி?

இன்றைய தினத்தந்தி பார்த்த போது மனோரமா ஆச்சி அழகாக ஒரு புள்ளி விவரம் கொடுத்திருந்தார்.

தமிழக மக்கள்த் தொகை ஆறு கோடி;
தமிழ்நாயகர்களின் சம்பளமோ பத்துக் கோடி.

எம்.ஜி.ஆர் வாங்கியது பதினொரு லட்சம்,
சிவாஜி வாங்கியது ஆறு லட்சம்.
இப்படி சம்பளம் வாங்கினால் எப்படி படம் எடுப்பது என்று கேட்டிருக்கிறார்.

.........................................................

தமிழ்நாட்டில் சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுக்க இருக்கிறார்கள்,

(இன்னும் பச்சையாகச் சொன்னால் பதிவுலகிலிருந்து கூட நிறையப் பேர் வரக் கூடும்)

ராமராஜன், அப்பாஸ், முரளி, பாண்டியராஜன் போன்ற வெள்ளிவிழா நாயகர்கள் அவ்வளவு வாங்குவது போல் தெரியவில்லை. இவர்களது முகவரியை யாராவது ஆச்சிக்குக் கொடுங்களேன். மகிழ்ச்சியடைவார்.

.........................................................................

இந்த விழாவில் இயக்குநர் பேரரசுவும் கலந்து கொண்டிருக்கிறார். அவருக்கே உரித்தான அரசியல் நெடி கலந்த பன்ச் கொடுத்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் ஆயிரம் ஆட்சிகள் வரலாம். ஆனால் ஆச்சினா அது மனோரமா ஆச்சிதான்.


......................................... இது ஒரு மீள்பதிவு

மறக்காமல் தமிழ்மண ஓட்டு
தமிழீஷ் ஓட்டு
பின்னூட்டம் கொடுத்துவிட்டுப் போங்கள்

Thursday, July 30, 2009

விஜயகாந்த் Vs எம்.ஜி.ஆர்

பொதுவாக திரைப்படம் பார்ப்பவர்களில் சிலர் தங்கள் காலத்துப் படங்களைப் பார்ப்பார்கள்;ஒரு சிலர் எல்லாக் காலத்துப் படங்களையும் பார்ப்பார்கள்; ஒரு சிலர் எத்தனை வயதானாலும் புதுப் படங்களை மட்டுமே பார்ப்பார்கள். எல்லாவித ரசனை உள்ளவர்களையும் ஒரு முறையேனும் பார்க்கவைக்க முடியும் ஒரு சில பாடல்களில் இதுவும் ஒன்று. இதில் பாடல்வரிகள் மிகவும் கிளர்ச்சியூட்டுவதாக அமைந்திருப்பதாக சிலர் கூறுவார்கள்.

இன்பமே.. உந்தன் பேர் பெண்மையோ
என் இதயக் கனி நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி
என் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி..
இன்பமே உந்தன் பேர் வள்ளலோ..
உன் இதயக் கனி நான் சொல்லும் சொல்லில்மழலைக்கிளி
உன் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி..
(இன்பமே)


சர்க்கரைப் பந்தல் நான் தேன்மழை சிந்த வா
சந்தன மேடையும் இங்கே சாகச நாடகம் எங்கே
தேனொடு பால் தரும் செவ்விளனீர்களை
ஓரிரு வாழைகள் தாங்கும்
தேவதை போல் எழில் மேவிட நீ வர
நாளும் என் மனம் ஏங்கும்
(இன்பமே)


பஞ்சணை வேண்டுமோ நெஞ்சணை போதுமே
கைவிரல் ஓவியம் காண
காலையில் பூமுகம் நாண
பொன்னொளி சிந்திடும் மெல்லிய தீபத்தில்
போரிடும் மேனிகள் துள்ள
புன்னகையோடொரு கண்தரும் ஜாடையில்
பேசும் மந்திரம் என்ன
(இன்பமே)


மல்லிகைத் தோட்டமோ வெண்பனிக் கூட்டமோ
மாமலை மேல் விளையாடும்
மார்பினில் பூந்துகிலாடும்
மங்கள வாத்தியம் பொங்கிடும் ஓசையில்
மேகமும் வாழ்த்திசை பாடும்
மாளிகை வாசலில் ஆடிய தோரணம்
வான வீதியில் ஆடும்
(இன்பமே)

...........................................

நம் எல்லோருக்குமே நமக்கு பிடித்த பாட்லகளைப் பாடும் ஆசை இருக்கும். சிலர் உரத்த குரலில் பாடுவார்கள், சிலர் குளிக்கும் போது மட்டும் பாடுவார்கள்.

இவரும் ஆடிப்பாடுகிறார், ரீமிக்ஸ் செய்திருக்கிறார்கள்; உங்கள் கற்பனையை கொஞ்சம் அழிப்பது போல தோன்றலாம்

பிடித்தவர்கள் மட்டும் பார்க்கவும். பிடிக்காதவர்கள் நீங்களே ஆடிப்பாடுவதாக கற்பனை செய்து கொள்ளுங்கள்

Wednesday, July 29, 2009

யாரடிச்சு பூச்சி கிளம்பி...,

பட்டாம் பூச்சி அப்படின்னா சின்ன வய்சில சின்னச் சின்ன செடிகளை சேர்த்து வச்சிக்கிட்டு ஒரே அமுக்கா அமுக்க துரத்துவமே ஒரு பூச்சி அதுதான் அப்படின்னு நெனச்சிட்டு இருந்தோம்.

அதற்கப்புறம் ஒரு சின்ன வய்சு வந்திச்சு அப்ப பட்டாம்பூச்சின்னா வேற மாதிரி...,

பாரதிராஜா பட நாயகிகள் மாதிரி கண்களை படபடவென்று அடித்துக் கொண்டு கண்களிலேயே சிரிக்கும் ஆட்கள் இருப்பார்களே அவர்களைத்தான் பட்டாம் பூச்சி என்று நினைத்திருந்தோம்.

அதற்கடுத்து ஒரு சின்ன வய்து வந்தது. அதில் நம்ம பசங்க ரொம்பவும் சுறுசுறுப்பா இருப்பாங்க தினமும் மல்ர்விட்டு மலர் தாவுவாங்க. அவர்களைக்கூட பட்டாம்பூச்சி அப்படின்னு சொல்லிக்கிட்டு ஒருந்தோம்.

அதற்கடுத்து ஒரு சின்ன வய்சு.................................................

^
^
^
^
^
நாமெல்லாம் எழுத்தாளர்கள் ஆகிவிட்டோம்;

அந்தக் காலத்தில் தொல்காப்பியர், அகத்தியர், பிற்கு திருவள்ளுவர், ஔவையார், அதற்கடுத்து பாரதியார் , பெரியார் போன்றோர் புழங்கிய தமிழ் மொழியில் நாமும் எழுதி வருகிறோமே.................. அதுவே பெரிய மகிழ்ச்சி அல்லவா

அதை இன்னும் மகிழ்ச்சியாக கொண்டாடும் விதமாக

வருங்கால முதல்வர் ஸ்டார்ஜன் அவர்கள் இந்த பட்டாம் பூச்சி விருதினை வழ்ங்கியுள்ளார்.

(இந்த விருதினை ஏற்கனவே தேவன்மாயம் சாரும் வழங்கினார் அப்போதெல்லாம் இதை வெட்டி நம் தளத்தில் மாட்டிக் கொள்ளும் தொழில்நுட்பம் நமக்குத் தெரியவில்லை) அவர்களுக்கு நன்றி சொல்லும் அதே நேரத்தில் நாமும் அதை முக்காலமும் அறிந்த மூன்று பேருக்கு வழங்கி பெருமிதம் கொள்வோம்.

அவர் பல வெட்டல் ஒட்டல் வேலைகள் செய்து இந்த விருதினை எனக்கு வழங்கி யுள்ளார். நானும் வழங்கி விடுகிறேன். நீங்களும் அதே மாதிரி வெட்டல் ஒட்டல் வேலைகள் செய்து உங்கள் தளத்தில் மாட்டிக் கொள்ளுங்கள்

1.

லோகு
நல்ல பையன், அப்பாவி, வெள்ள சோறு, புள்ள பூச்சி.. இப்படி என்ன பத்தி எங்க ஊர்ல சொல்லுவாங்க.. ஆனா உண்மையில நா ரொம்ப கெட்டவன்...

கெட்டவன் அப்படின்னா விசால், சிலம்பரசன் அப்படின்னு நமது அகராதி சொல்கிறது

2.சித்து

Interests

Favorite Movies

Favorite Music

Favorite Books
3.பாலாஜி

இவர் ஒரு தடவை சொன்னா நூறு தடவ சொன்னமாதிரி


பட்டாம்பூச்சி விருது


Tuesday, July 28, 2009

மணியனின் படைப்பு வெளியான அன்று.......

அன்றே சொன்னான் மணியன். இதெல்லாம் வேண்டாம்டா..,

இருந்தாலும் நரேந்திரன் அடம்பிடித்தான்
உன் திறமை உனக்குத் தெரியாது; எனக்குத் தெரியும். நீ எழுதுடா.., மிச்சத்தை நான் பார்த்துக்கறேன்..,


நரேந்திரனின் தூண்டுதலால்தான் இதை எழுதவே செய்தான். ஊர்காரர்கள் எல்லோருக்கும் இன்று தெரிந்துவிட்டது. சிலர் அதைப் படித்திருந்தனர். பெரும்பாலோனோர்க்கு செவி வழிச் செய்திதான்.

என்ன தைரியம்? இந்த வயசில் எப்படி எழுதி இருக்கான் பாரு? பலராலும் ஜீரணிக்கவே முடியவில்லை. ஒவ்வொரு ஜாதியினரும் தங்கள் ஜாதியின் பெருமைகளை ஒருமுறை நினைவு கூர்ந்து கொண்டிருந்தனர். ஒரு பத்தாம் வகுப்பு மாணவனின் படைப்பினை புரிந்து கொள்ளும் சக்தி அந்த ஊரில் யாருக்குமே இருக்க வில்லை.

சகமாணவர்கள் கூட பொரிந்து தள்ளிக் கொண்டு இருந்தார்கள். என்னடா ஒரு கேவலமான ரசனை, வர்ணணை இவ்வளவு பரிதாபமாக இருக்கிறது என்று துக்கம் விசாரித்துச் சென்றனர்.

தனது படைப்பு ஒன்று பலரையும் சென்றடந்தது மணியத்திற்கு மகிழ்ச்சிதான். வழக்கமாக தமிழ் இரண்டாம் தாளில் மட்டும் கவிதை, கதை எழுதி வந்தவனின் படைப்பு இவ்வளவு தூரம் மக்களை சென்றடைந்தது ஓரளவு மகிழ்ச்சியே தந்தது.

ஊர் பெரியவர் ராஜசேகர் எழுதியவர்களை அடிப்பதற்கு ஆட்களையே தயார் செய்து அனுப்பியிருந்தார் என்றால் அதன் விளைவுகளை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். அவரது மகள் கோமதி கூட மணியன் நரேந்திரனுடந்தான் படித்துக் கொண்டிருந்தாள்.

இவ்வளவு அடித்தடி, பதட்டம் ஏற்பட்டுக் கொண்டிருந்தாலும் கூட மணியன் இதெற்கெல்லாம் கவலைப் படமால் சுற்றிக் கொண்டிருந்தான். அவன் இதெல்லாம் எதிர்பார்த்தது தான். அதனால்தான் எழுதியவன் பெயராக தன்பெயரைப் போடாமல் நரேந்திரன் பெயரைப் போட்டிருந்தான். ஆனால் நரேந்திரந்தான் எதிர்பார்க்கவில்லை.

படித்துப் பிடிக்கவில்லை என்றால் நிராகரிக்கப் படும். நான் வேறொரு முயற்சி செய்யலாம் என்று நினைத்திருந்தான். இதற்கு முன் அவனது பலபடைப்புகளுக்கு வரவேற்பு அப்படித்தான் இருக்கும். எழுதியதும் தெரியாது, நிராகரிக்கப் பட்டதும் தெரியாது, குப்பைத் தொட்டிக்குப் போனதும் தெரியாது. அதனால்தான் இந்த முறை மணியனிடம் எழுதி தரச் சொல்லியிருந்தான். அவனும் கூட சின்ன யோசனைகள் சொல்லி அதை மெருகு படுத்தி இருந்தான். படித்துப் பார்த்த போது நன்றாக இருப்பதாகத்தான் தோன்றியது.இதெல்லாம் இந்த கோமதியால் வந்தது. அவள்தான் இதெற்கெல்லாம் காரணம். கொடுத்த கடிதம் பிடிக்கவில்லையென்றால் கிழித்தெறிந்துவிட்டுப் போக வேண்டியது தானே..., அதை பத்திரமாக அவள தந்தையிடம் கொடுக்க அவர் கோபத்தில் எகிர ஊரே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது.

Sunday, July 26, 2009

அந்தப் பார்வை..,

பயந்தது

நடந்தது

அவன்

வென்றான்;

முதல்

பார்வை;

முதல்

எண்ணம்.

இது

இப்படித்தான்

பயம்

படர்ந்தது;

ஒவ்வொரு

பார்வையும்

உள்ளூர

உணர்த்தியது;

தவிர்த்திருக்கலாம்

தவறிவிட்டது

இல்லை

தவறாமல்

நடந்துவிட்டது.

அந்த நாய்

அப்படித்தானோ

தன்

பிறவிபுத்தியை

காட்டிவிட்டது

கடித்து விட்டது

இனி.........,

என்ன?

எப்படி?

எவ்வாறு?

வெறிநாய்க்கடி

ஊசியை

விரக்தியுடன்

போட்டுக்கொண்டேன்

Friday, July 24, 2009

சாம் ஆண்டர்சனின் பரபரப்பு பேட்டி

நீங்க ஏற்கனவே பார்த்திருந்தாலும் திரும்பவும் இந்தப் பேட்டியை பார்த்து மகிழுங்கள்

Sam Anderson Interview on Zee Tamil - A funny movie is a click away

அவரோட சமுதாய சிந்தனையைப் பாருங்கள்

லியனார்டோ டாவின்ஸி, கலிலியோ போன்றவர்களின் சிந்தனைகள் அவரிடம் தென்படுகின்றதா..,

Thursday, July 23, 2009

எந்திரன்? எங்கள் ஆசான்? வேட்டைக்காரன்?அசல்இந்தக் காட்சி எந்திரன் படத்துக்குச் சொந்தமா? இல்லை, எங்கள் ஆசான், வேட்டைக்காரன், அசல் யாருக்குச் சொந்தம் என்றே தெரியவில்லை


நமது உடன்பிறப்புகள் ஆந்திராவில் வரப் போவதாகச் சொல்கிறார்கள்

இருந்தாலும் அற்புதமான காட்சி.தமிழகத்தில் யார் படத்தில் வரப்போகிறதோ தெரியவில்லை

Tuesday, July 21, 2009

அன்பும் பண்பும் பாசத்திற்கும் உரிய அனானி அண்ணன்

அனானி மற்றும் பெயரில்லா போன்றவர்களின் கொட்டத்தை அடக்குவதாக நினைத்துக் கொண்டு இத்தனை நாட்களாக அனானி உள்ளே வருவதையே தடை செய்து வைத்திருந்தேன். நான் மட்டுமல்ல நண்பர்கள் பலரும் அவ்வாறு வைத்திருக்கிறோம்.

ஓபன் ஐ.டி. பின்னூட்டம் போடக் கூட வழியில்லாமல் கதவுகளை இருக்க மூடி வைத்திருந்த எத்தனையோ பதிவர்களில் நானும் ஒருவனாகத்தான் இருந்தேன்.

ஆனால் அதனால் கண்ட பலன் என்ன? பார்த்தால் ஒன்றும் இல்லை. பல்வேறு நகைச்சுவை ரசிகர் மன்றர்கள், அனானி மற்றும் ஓப்பன் ஐ.டி. உபயோகப் படுத்தி பல்வேறு வகையான பல்வேறு சுவையான பின்னூட்டங்களை கொடுக்கின்றன்ர். நாகரிகமற்ற பின்னூட்டங்களை கட்டுப் படுத்த நமக்கு பல வழிகள் இருக்கின்றனவே.., அப்புறம் எதற்கு பின்னூட்டக் கதவுகளை இருக மூடி வைக்க வேண்டும்?

கூகிள் கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டும்தான் பின்னூட்டம் இடமுடியும் என்ற வகையில் பின்னூட்டப் பெட்டியை வைத்திருந்தால் கூட நாகரிகமற்ற பின்னூட்டமிடவே தனி கணக்கு வைத்திருப்பவர்கள் இருக்கிறார்களே..,

அப்புறம் எதற்கு பின்னூட்டப் பெட்டியை இருக்கிவைக்க வேண்டும். தாராள மயமாக்குவோம். அனானியை அனுமதிப்போம்.

Monday, July 20, 2009

மைக்கேல் ஜாக்ஸனின் ஊக்க மருந்து- ஒரு அலசல்

நாகரீகத்தின் ஒரு கட்டமாக உற்சாகமாக இருத்தல் கருதப் படுகிறது. அசுரர் நிலை கடந்து கடவுளர் நிலை அடைந்துவிட்டதை தெரிவிக்க சோமபானம் பருகுவது ஒரு அடையாளமாக நிலவிய சூழலைக் கூட நாம் கதைகளில் படித்திருக்கிறோம்.

உலக நாகரீகங்களில் இளைஞர்கள் சுதந்திரமானவர்களாக தங்களை அறிவித்துக் கொள்ள உற்சாக பாணம் அருந்தும் கலாச்சாரங்கள் தோன்றியிருக்கின்றன.

ஆனால் ஒரு விளையாட்டுவீரனின் வாழ்க்கையில் இந்த உற்சாகபானங்கள், ஊக்கமருந்துகள் எங்கே எப்படி வருகின்றன என்றுபார்த்தால் கொஞ்சம் த்லைசுற்றவைக்கும்.

விளையாட்டுவீரனின் முதல் உற்சாக பானமே அவன் வாங்கும் கைதட்ட்ல்களே. ஒரு எழுத்தாளன் கைதட்டல் தொடர்ச்சியாக வாங்கினால் அவன் தொடர்ச்சியாக எழுதிக் கொண்டே இருப்பான். ஒரு விளையாட்டுவீரன் கைதட்டல் வாங்கும்போது அவனுக்கு மேலும் உற்சாகம் பீரிட்டுக் கிளம்பும். அதே நேரத்தில் அவனுக்கு அடுத்த வீளையாட்டுப் போட்டிகளில் மேலும் சிறப்பாக விளையாடியே தீர வேண்டிய நெருக்குதல்களுக்கு ஆளாகிறான்.

சில ஆண்டுகளில் அவனிடம் இளமை விடைபெற தொடங்குகிறது. சில நேரங்களில் அவனைவிட இளமையான திறமையான ஆட்டக்காரர்கள் வந்துவிடுகிறார்கள். சில நேரங்களில் அவனது நேற்றைய performanace இன்றைய போட்டியாக அமைந்துவிடுகிறது. அப்போது அவனுக்கு நெருக்கடி அதிகமாகிறது.

கால்பந்து போன்ற போட்டிகளில் அவனைச் சுற்றி கூடுதல் ஆட்கள் வியூகம் அமைத்துக் கொள்வார்கள். மாரடோனாவுக்கு நடந்தது அதுதான். அவர் களத்தில் தனி ஒருவராக வெற்றி வாங்கித் தருபவர் என்ற எண்ணம் உலகளாவிய ரசிகர்கள் மனதில் பதிய வைக்கப் பட்டுவிட்டது. அவர் அளவு இன்னொரு திறமைசாலி அணிக்கு கிடைக்கவில்லை. எதிர் அணியினர் ஒரு யூகம் வகுத்தனர். அவரை சுற்றி கூடுதல் வீரர்கள்; மற்றவர்கள் மட்டுமே கால்பந்து ஆடுவார்கள். இவர்கள் மாரடோனாவை முடக்குவதிலேயே காலம் தள்ளுவார்கள். அப்போது அவருக்கு ஏற்பட்ட நெருக்குதலே அவருக்கு தனது திற்மையை கூட்ட வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது. தினமும் ஒருநாள் வய்து கூடிவிடுமே; அந்தக் கட்டாயமே அவரைப் போதைப் பொருட்களை உட்கொள்ளத்தூண்டியது எனலாம்

இது தொடர்பாக ஏற்கன்வே நான் எழுதிய இடுகை இந்த இடத்தில்

விளையாட்டுவீரர்களுக்காவது போதைப் பொருட்கள் உபயோகப் படுத்துவதை கட்டுப்படுத்த தனி பரிசோதனைகளும், உபயோகப் படுத்துவது கண்டுபிடிக்கப் பட்டால் வாழ்நாள் தடைபோன்ற தண்டனைகளும் பயமுறுத்திக் கொண்டிருக்கின்றன.

ஆனால் நடிகர்களுக்கு?

திரைப்பட நடிகர்களுக்கு முந்தைய படைப்பைவிட இன்றைய படைப்பை மேலும் இளமையாகக் காட்ட கிராஃபிக்ஸ் யுத்திகளும் டூப் நடிகர்களும் உபயோகப் படுத்தப் படுகிறார்கள்.

ஆனால் மேடை நடிகர்களுக்கு?

அவர்களது நேற்றைய வெளிப்பாடுகளைவிட இன்றைய நிகழ்ச்சி சிறப்பாக அமைய வேண்டிய கட்டாய்த்தில் இருப்பார்கள். மைக்கேல் ஜாக்ஸன் அவர்களுக்கு நடந்தது அதுதான். அவரது 20 வய்து வேகம் 30ல், 40ல் கிடைக்குமா? ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். விளைவு அவர் அந்தத் திற்மையைக்காட்ட உதவிகளை நாடினார். கடும்பயிற்சிகளை மேற்கொண்டார். அதற்கு ஊக்கமருந்துகள் உதவின. விளையாட்டுப் போட்டிகளில் தடுக்க தனி ஆணையங்களும் சட்ட விதிகளும் இருப்பதுபோல் இங்கு இல்லையே. தொடர்ச்சியாக உபயோகப் படுத்த, படுத்த ஒரு கட்டத்தில் அவரது நடனம் முழுக்க ஊக்க மருந்துகளை நம்பியே அமைந்தன. அவரது வாழ்க்கையே அதன் ஆதிக்கத்தில் அமைந்துவிட்டது.=========================================================
thriller பாடல்காட்சி


beat it
Black or white

Friday, July 17, 2009

ஆள்காட்டி விரலின் பார்வையில்..,


பொதுவாக தொடர்பதிவு என்னும்போது கொஞ்சம் மகிழ்ச்சியாகத்தான் இருக்கும்.

இன்று எதைப் பதிவு செய்வது என்ற ஒரு மாபெரும் சிந்தனையில் மூழ்கி இருக்கும்போது யாரோ ஒரு புண்ணியவானிடம் உதித்த கருவிற்கு நாமும் ஒரு அலங்காரம் செய்வித்து அதை நமது சொந்த கருத்தாக போட்டுக் கொள்ள முடியும். அதையும் எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். நாமும் மகிழ்ச்சியாக ஹிட் லிஸ்ட்டைப் பார்த்துக் கொண்டிருக்கலாம்.

ஆனால் இந்த தொடர்பதிவினைப் படிக்கும்போதே இப்படியெல்லாம் எப்படி சிந்தனை செய்கிறார்கள் என்ற வியப்பும் மலைப்பும் ஏற்பட்டது முடிவில் நமக்கும் ஒரு விருது கொடுத்து அதை ஆறுபேருக்கு பங்கு போட சொன்ன போது பயம்தான் ஏற்பட்டது.பிரியமுடன் வசந்த்தின் பதிவின் தொடர்ச்சி என்றால் எனக்கு நன்றாகத்தான் இருக்கும். அந்த பதிவின் தரத்தில் எதிர்பார்த்தால் கொஞ்சம் சிரமம் தான்.

இந்தப் பதிவு வழக்கம்போல் இருந்தாலும் நமது அபிமான நட்சத்திரங்களின் பெயர்களும் அவர்களின் தொடுப்பும் கொடுப்பதால் இந்த இடுகையும் ஓரளவு நன்றாகவே அமையும் என்பதாக இந்த இடுகையை தொடர்கிறேன்.

சுவாரஸிமான வலைப்பூவுக்கான விருது தருவதற்கான காரணத்தையும் பதிவர்களையும் நான் அறிமுகம் செய்துதான் மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லாத அளவு அவர்கள் எல்லோரும் பிரபலமானவர்கள் என்றாலும் நானும் கொஞ்சம் அவர்களைப் பற்றி பேசிவிட்டு விருதினைக் கொடுத்து விடுகிறேன்.

1.இளைய பல்லவன்:- மிக ஆரம்ப கட்டத்திலேயே தமிழ்மண நட்சத்திரமாணவர். சரித்திர கதைகளுக்கு தேவையான ஆதாரங்களுடன் சக்கரவியூகம் உருவாக்குபவர்.

2.முரளிக்கண்ணன்:- நகைச்சுவை இயல்பாக கொண்டுவருபவர். விஜய்- ராகுல்காந்தி சந்திப்பும், பையாண்ணா வார்த்தை பிரயோகமும் , நாகராஜன் சந்து படித்தவர்களும் இவரை சினிமா எக்ஸ்பிரஸ் பார்வையில் பார்க்க மாட்டார்கள்

3.குடுகுடுப்பை:- எங்கள் உள்ளம் கவர்ந்த ஜக்கம்மா பக்தர்.

4.நசரேயன்:- புருஷன் v 1.0 மென்பொருள் இன்றைய வெளியீடு இது ஒன்று போதும் அவருக்கு சுவாரசியமான வலைப்பூ விருது வழங்க.....

5.சூரியன்:- நாமெல்லாம் ஒரு வலைப்பூ வைத்துக் கொண்டு நூறு வலைப்பூக்களைப் பின் தொடர்வோம். ஆனால் இவர் நூறு வலைப்பூக்களை நடத்தப் போபவர்.

6.ஜெக்நாதன்:- சங்காவுடன் ஒரு​பேட்டி, பின்னூட்டமே ஒரு இடுகையாய்.. , ,
,என்னடா பாண்டி என்ன பண்ண​போற?

போன்ற இடுகைகள் மூலம் தனது கணக்கினை துவக்கிப் போய் கொண்டிருப்பவர். அவரது பூவுக்கும் சுவாரளியமான பூ விருதினை வழங்கி விடலாம்.

எல்லாரும் பிடிங்க......

இந்த படத்தை ரைட் க்ளிக் செய்து, காப்பி செய்து உங்கள் வலைப்பதிவில் போட்டுக்கோங்க. நீங்க சுவாரஸ்யமானவராக கருதும் வலைப்பதிவரை அறிமுகம் செய்யுங்க...ஆறுபேரை....

வாழ்த்துக்கள் நண்பர்களே......பிடிச்சுருந்தாலும் வச்சுக்கோங்க....பிடிக்கலன்னாலும் வச்சுக்கோங்க.....

தமிழ் மணத்தால் ஒதுக்கப் பட்ட இடுகை

தமிழ் மணத்தில் நான்கு ஓட்டுக்கள் வாங்கினாலே வாசகர் பரிந்துரையில் இடம்பெற்று விடுகின்றன. ஆனால் நான் எழுதிய இந்த இடுகை ஏழு ஓட்டுக்கள் வாங்கியும் வாசகர் பரிந்துரையில் இடம் பெறவில்லை. வழக்கமாக இரண்டு ஓட்டு மட்டுமே பெறும் ஆள் நான்.

தகவல் அனுப்பியும் பதில் இல்லை. இந்த ஏழில் நான்கு பேர் பின்னூட்டத்தில் ஓட்டுப் போட்டத்தை தெரிவித்து இருக்கின்றனர். மற்றொரு ஓட்டு என்னுடையது. இதில் கள்ள ஓட்டு குற்றச்சாட்டு என்பதும் இடம்பெற வாய்ப்பில்லை.

நான் எழுதியிருந்தது மிக மென்மையான ஒரு இடுகை. வேறு எப்படி வாசகர் பரிந்துரையில் இடம்பெறுவது.

Tuesday, July 14, 2009

ஸ்ரீதேவி என்னும் பூங்காற்றுதிரைப்படம் பார்க்க ஆரம்பித்த காலத்தில் நம்மைக் கவர்ந்த பாடல்களில் நினைவோ ஒரு பறவை மறக்க முடியாத பாடலாக அமைந்திருக்கும். சிவப்பு ரோஜாக்கள் படமும் நம்மில் பெரும்பாலானோர் பாத்திருப்போம். கமல் ஸ்ரீதேவி சிறப்பாக நடித்திருப்பார்கள்.

அதோ போல் சினிமா பாடல்களை நாம் ரசிக்க ஆரம்பித்த கால கட்டத்தில் இளமை எனும் பூங்காற்று பாடலும், சின்னப் புறா ஒன்று பாடலும் இடம் பெற்றிருக்கும்.


இளமை என்னும் பூங்காற்று பகலில் ஒரு இரவு என்று நினைக்கிறேன். இந்தப் படத்தில் தான் பொன்னாரம்.., பூவாரம்.., என்ற ரம் பாடல் இடம் பெற்றிருக்கும். நினைவோ ஒரு பறவை பாடல் போல படமாக்கியிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த எங்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றம். பாடலை சன் மியூசிக் உபயத்தில்தான் பார்த்தோம். எதிர்பார்த்தமாதிரி இல்லை என்பது ஒருவகையில் ஏமாற்றமாக இருந்தாலும் ஸ்ரீதேவியின் நடிப்பு அற்புதமாக இருக்கும். பாருங்களேன், அவரது காது மடல்..,அறுவை சிகிச்சை செய்யப்படாத மூக்கு, மூக்குத்தி.., அவிழ்ந்த கூந்தல் ஆகியவை கூட அற்புதமாக நடித்திருக்கும்..,

மண்டை உடைந்ததால் கட்டுப்போட தன் ஆடையைக் கிழித்ததன் விளைவே இந்தப் பாடல்....சின்னப் புறா ஒன்று பாடல்.., இதன் காட்சி அமைப்பில் பெரிய ஏமாற்றம் என்றெல்லாம் சொல்ல முடியாது. நாயகனை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அவ்வளவுதான். கதை பல முறை டி.ஆர் ஆல் வெற்றிப் படமாக்கப் பட்ட கதைதான். பாடலைன் நடுவில் கிராஃபிக்ஸ் காட்சிகள் வேறு இணைக்கப் பட்டு படுஅட்டகாசமான பாடாய் அமைந்திருக்கும் பார்த்து ரசியுங்களேன்.தமிழ்மணம், தமிழீஷில் ஓட்டுப் போடுங்க தல..,

Monday, July 13, 2009

வயிறு காத்திருக்காது

உனக்காக

நான்

எவ்வளவு

நேரம்

ஆனாலும்

காத்திருக்க முடியும்.

என்

வயிறு

காத்திருக்காது;

வெகுநேரம்

காத்திருக்க

வேண்டுமென்றால்

சொல்லிவிடு

என் கண்ணே-

வரும்போதே

கட்டுச் சோறு

கொண்டுவந்து

விடுகிறேன்

பழைய சோறு

http://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/9/93/Krishnabhakthi_1948.jpg/250px-Krishnabhakthi_1948.jpg


நவீனமான திரைப்படச் சுவரொட்டி:-

1.படத்தலைப்புடன் ஈர்ப்பு வாசகம் இடம்பெற்றுள்ளது.
யுக்தியே சகல சக்தியும் என்றவர்
சத்யமே நித்யம்.. என்கிறார்.ஏன்?

2.நாயகியின் படம் நடுவிலும் நாயகன் படம் ஓரத்திலும் உள்ளது. இத்தனைக்கும் நாயகன் சண்டைக் காட்சிகளிலும், நடிப்பு காட்சிகளிலும் வல்லவர். இவரது பாணி சண்டைக்காட்சிகளை எம்ஜியாரும், நடிப்புக்காட்சிகளை சிவாஜியும் எடுத்துக் கொண்டு தங்கள் பாணியில் பட்டைத்தீட்டிக் கொண்டதாக கூறுபவர்களும் உண்டு. (ஆனால் பி.யூ.சின்னப்பாவை விட தியாகராஜ பாகவதரே முண்ணனியி இருந்தார் என்று கூறுகிறார்கள்)

3.முக்கிய நடிக நடிகையரின் பெயர் இடம் (அதிலும் நான்கு ஜோடிப் பெயர்கள்) பெற்றுள்ளது. அதிலும் நடிகைகளின் பெயரே முதலில் இடம் பெற்றுள்ளது.

.............................................................

http://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/4/47/Manonmani_film.jpg/200px-Manonmani_film.jpg

இந்த சுவரொட்டியில் படத்தின் பெயரும் இயக்குநர் பெயரும் மட்டுமே இடம் பெற்றுள்ளன.

2.ஈர்ப்பு வாசகம் சிறந்த தமிழ்படம் 1942 என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.(இதே முறையில்தான் hit movie1995 வந்தது.

3.இயக்குநர் பெயர் ஆங்கிலத்தில்

4.நாயகனும் நாயகியும் கன்னத்தோடு கன்னம் உரசிக் கொண்டு இருக்கிறார்கள்


நன்றி:_http://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/4/47/Manonmani_film.jpg/200px-Manonmani_film.jpg

http://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/9/93/Krishnabhakthi_1948.jpg/250px-Krishnabhakthi_1948.jpg

Saturday, July 11, 2009

இது ராக்கிங்கிற்கு ஆதரவான இடுகை அல்ல

உஷாவின் கையை தடவிக் கொண்டிருந்த காட்சியைப் பார்த்த வேவு பார்க்கும் குழுவிற்கு உச்சியில் இருந்து உள்ளங்கால்வரை கொதிக்க ஆரம்பித்தது. நாடி நரம்பு ரத்தம் சதை எல்லாமே துடிக்க ஆரம்பித்தது.

பின்னே புத்தம் புதிய ஜூனியர் மாணவியின் சுண்டுவிரலை போட்டி என்ற பெயரிலும், காயம் ஏற்படுத்திய வஸ்துவை கண்டுபிடிக்கும் சாக்கிலும் எடுக்க முயற்சி செய்ததைப் பார்த்தால் என்னதான் செய்வார்கள்.

முட்டைத் தோசை இதைப் பார்த்த உடனே கத்திவிட்டான் டேய்........,

முட்டைத் தோசையின் பெயர் காரணம் மிகவும் அலாதியானது, அவர் புதிய மாணவராக கல்லூரியில் சேர்ந்த காலத்தில் விடுதியில் இருந்த மூத்த மாணவர் அவரை தமிழில் மட்டுமே பேசுமாறு பணித்திருந்தார். மூத்தவர் சாதாரணமாகக் கேட்ட ஏதோ ஒரு கேள்விக்கு அவர்
சார், நான் தமிழ் மீடியம் ஸ்டூடண்ட், எனக்கு இங்கிலீஷ் வராது
என்று பதில் கொடுத்ததால் அவருக்கு அந்த உத்தரவு

அந்த ஒரு கால கட்டத்தில் சாப்பிடும்போது ஆம்லேட்டைக் காட்டி
இதன் பெயர் என்ன?
என்று கேட்டபோது
முட்டைதோசை
என்று பதில் அளித்த காரணத்தால் அவரை எல்லோரும் முட்டைத் தோசை என்றே அழைக்க ஆரம்பித்தனர்.

சுமன்குமார் சற்று பயந்து கொண்டே ஆனால் அதை வெளிக்காட்டாமல் சமாளிக்க ஆரம்பித்தான். என்னடா கோலம் பார்க்க வந்தியா?

பார்த்தேன் நண்பா! பார்த்தேன்

இந்த அலங்கோலத்தை கண் நிறையும் வரைப் பார்த்தேன் நண்பா பார்த்தேன்

நண்பர் பரதன் வசனம் பேசினார். அந்த வசனம் முகராசி படத்தில் எம்ஜியார் பேசியதாம் பிற்காலத்தில் ஒருநாள் முகராசி படம் பார்க்கும்போது தெரியவந்தது.

ஏண்டா சின்னப் புள்ளைங்க ( கோயமுத்தூர் பாஷைல பெண்பிள்ளைகளைத்தான் புள்ளை என்பார்கள்) போடுற கோலத்தை டிஸ்கரேஜ் பண்ற..,

சரி., சரி நீயே ஊக்கு வி.. நாங்க அப்படியே ரவுண்ட்ஸ் போறோம்...

சொல்லிக் கொண்டே இடத்தை காலி செய்தார்கள்.

இருந்தாலும் நண்பர் முட்டை தோசை மனம் ஆறவே இல்லை

அவர் வேகமாக வெளியே வந்து இரண்டு ஜூனியர் மாணவர்களை அழைத்தார். டேய் உஷா தனியா கோலம் போட கஷ்டப் படறா.., போய் உதவி செய்யுங்கடா.., என்று உத்தரவு போட்டார்.

பொதுவாக நண்பர் முட்டைதோசைக்கு ஜூனியர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகம். அவர் குறித்து கொடுக்கும் கேள்விகள்தான் உள்ளுறைத்தேர்வுகளில் அதிகம் கேட்பார்கள். மற்ற மாணவர்கள் தலையணை அளவுள்ள புத்தகங்களைப் படித்து உள்ளுறைத்தேர்வுகள் எழுதப் போகும்போது முட்டைதோசை மிகக் குறைவான பகுதிகளை மட்டும் குறித்துக் கொடுத்து படிக்கச் சொல்லுவார். அதன் மூலம் அதிக மதிப்பெண் எடுக்க வைத்து விடுவார்.


அவர் குறித்துக் கொடுப்பதில் இருந்து கேட்கும் கேள்விகள் கேள்வித்தாளில் பாதிக்கு மேல் ஆக்கிரமித்து வருவதால் முட்டை தோசையை ஜூனியர் மாணவர்கள் எப்போது சுற்றிக் கொண்டிருப்பார்கள். முட்டைத்தோசை சொல்லும் எந்த வேலையையும் சிரமேற்கொண்டு செய்து முடிக்க தயாராக இருப்பார்கள்.

ஏண்டா உங்க பேட்ச் பொண்ணு ஒருத்தி தனியா கஷ்டப் பட்றா.., போங்கடா போய் ஹெல்ப் பண்ணுங்க

என்று முட்டைதோசை சொன்ன உடனே அவர்கள் கிளம்பி போய் உஷாவுடன் சேர்ந்து கொண்டணர். ரங்கோலி குழுப் போட்டியாதலால் அந்தக் குழுவில் இவர்கள் இணைவதில் ஒரு பிரச்சனையும் இருக்கவில்லை

கொதிப்பான சுமன் இடத்தை காலிசெய்து விட்டு தண்ணீர் குடிப்பதற்காக சென்றான். அப்போது நடனப் பயிற்சி செய்து கொண்டிருந்த சுமத்ராவும் வந்து கொண்டிருந்தாள்.
==========================================================
சுமன்_சுமித்ரா இடையேயான உறவு பற்றித் தெரியாதவர்கள்
கதையின் முதல் பகுதி "அடப்பாவி மணமேடையில்கூட

இரண்டாம் பகுதி நண்பர்கள் என்றும் சொல்லலாம்

மூன்றாம் பகுதி இந்தப் பூனையும் பால் குடிக்குமா?

நான்காம் பகுதி ஃபிகர் இல்லடா.., ஃபிகர் மாதிரி

ஐந்தாம் பகுதி ஒருத்திக்கு எத்தனை பேர்டா லவ் லெட்டர் கொடுப்பீங்க

ஆறாம் பகுதி நான்கு பெண்களைக் காணவில்லை.

ஏழாம் பகுதி நெஞ்சுக்கு நடுவில் தொங்கிய வாக்மேன்

எட்டாம் பகுதி மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு; மடிமேல் விளையாடி...

ஒன்பதாம் பகுதி தமிழ் இந்தி ஒற்றுமையை வளர்த்த ரங்கோலிப் போட்டி

படித்து தெரிந்து கொள்ளுங்கள்

============================================================

இருவரும் நின்று யாரும் கேட்காத குரலில் உலக விஷ்யங்களைப் பேசி அறிவை வளர்த்துக் கொண்டிருந்த போது சுவற்றின் மறு பகுதியில் பேசிக் கொண்டிருந்த விஷயங்கள் அவர்களுக்கு அப்படியே கேட்க ஆரம்பித்தது.

தனது சவாலில் வெற்றிப் பெறுவதற்காக எப்படி சுமத்ராவின் துப்பட்டாவை எடுப்பது என்பது பற்றி இங்கிலீஷ் குப்பனும் அவனது தோழர்களும் ஆலோசனை செய்து கொண்டிருந்தனர்.

தொடரும்.............................................

Friday, July 10, 2009

உன்னைப் பார்த்தபின்

காதலிக்க

ஆசைப் பட்டேன்

உன்னைப்

பார்க்கும் வரை..,உன்னைப்

பார்த்த பின்

காதலிக்கப் படவும்

ஆசை...,

Thursday, July 9, 2009

ஆடுங்கடா என்ன சுத்தி பாடுங்கடா என்ன பத்தி....

தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா பாட்டு
அதே பாட்டுக்கு அந்நிய தேசத்தவர் ஆடும் காட்சிஅந்நியன் பாட்டுக்கு மக்கள் திலகம் ஆடும் காட்சிமக்கள்திலகத்திற்கு பாப் திலகம்


நடிகர் திலகம் பார்த்த பாட்டுக்கு இளையதிலகம் ஆடும் ஆட்டம்ஆடுங்கடா என்ன சுத்தி பாடுங்கடா என்ன பத்தி....

விஜய் ஸ்டைலில் மைக்கேல் ஜாக்சன் வழ்ங்கிய பாட்டு; பிரபு தேவாவும் சேர்ந்துதானஎன்னடி முனியம்மா பாட்டுக்கு மைக்கேல் ஜாக்சன் ஆட்டம்இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது என்பதை தெய்வம் சொல்கிறார்

Monday, July 6, 2009

இதுக்கு கூட டிக்கெட்? அதில் இலவசம் வேறு இருக்கிறதாம்

உலகத்தில் எத்தனையோ விஷயங்கள் நடக்கின்றன.

சில நடப்புகளை விமர்சிக்கலாம், சில நடப்புகளை விமர்சிக்க முடியாது. அப்படி தயக்கம் காட்டக் கூடிய செய்திகளில் இதுவும் ஒன்று.

மைக்கேல் ஜாக்சனின் இறுதிச் சடங்கு செவ்வாய் கிழமை நடக்க இருக்கிறதாம்.

மைக்கேல் ஜாக்சனின் இறுதி சடங்குகளில் கல்ந்து கொள்ள 11,000 இலவச டிக்கெட்டுகள் போடுவதாக குடும்பத்தார் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் 17,000 பேர் இலவச டிக்கெட் கேட்டு விண்ணத்திருப்பதாக பத்திரிக்கைச் செய்திகள் சொல்லுகின்றன. செய்தி இங்கே

அப்படியென்றால் இலவச டிக்கெட்டுகள் போக மீதம்..?

இதற்கெல்லாம் டிக்கெட் போடுவார்களா.. ? என்ன?


========================================================
நம் நாட்டில் எத்தனையோ பெரியமனிதர்களுக்கு இறுதி யாத்திரை நடந்திருக்கிறது. எத்தனையோ பேர் அவர்களுக்காக மொட்டை அடித்து சடங்குகள் செய்திருக்கிறார்கள்.

இலவசமாக அனுமதித்த அந்த புண்ணிய ஆத்மாக்கள் வாழ்க! வளர்க அவர்தம் புகழ்

Sunday, July 5, 2009

தமிழ் மணக் கருவிப் பட்டையை கீழே கொண்டுவருவது எப்படி?

தமிழ் மணம் கருவிப் பட்டையை கீழே கொண்டு வந்து விட்டால் இடுகையைப் படித்த உடன் ஓட்டுப் போட வசதியாக இருக்கும் என்று பலரும் நினைத்துப் பார்த்திருப்போம்.

சில பதிவர்கள் அவ்வாறு வைத்தும் இருப்பார்கள்.

சென்ற தமிழ் மணத்தில் ஓட்டு வாங்கும் பதிவில் கூட மயாதி இதைக் கேட்டிருந்தார்.

சுலபமான வழி இதோ


வழக்கம் போல்

layout => Edit HTML => Edit template => expand widget template click செய்து கொண்டு
உள்ளே பார்த்தால்


tamilmaNam.NET toolbar code starts வரும் கொஞ்ச தூரம் நகர்ந்தால்

tamilmaNam.NET toolbar code for Blogger ends. Pathivu toolbar (c)2008 tamilmaNam.NET

என்ற பகுதி வரும்.

tamil maNam toolbar startsl ஆரம்பித்து ends .. NET வரை உள்ள பதியை cut செய்து தமிழீஷ் ஓட்டுப் பட்டை வைக்கும் இடத்தில் வைத்து விட்டால் தமிழ்மணக் கருவிப்பட்டை இடுகையின் கீழ்பகுதிக்கு வந்து விடுகிறது.

என்னைப் போல் copy paste செய்துவிட்டால் இரண்டு இடங்களிலும் வந்து விடுகிறது.

பின்குறிப்பு:- இரண்டாவது தொழில் நுட்பப் பதிவும் போட்டாச்சு..,

தமிழ் இந்தி ஒற்றுமையை வளர்த்த ரங்கோலிப் போட்டி

அது இனிய மாலைப் பொழுது. கல்லூரியில் ரங்கோலிப் போட்டி நடந்து கொண்டிருந்தது. கல்லூரியின் வகுப்பறைகளை ஒட்டியும் வராந்தா பகுதிகளிலும் மாணவர்கள் அழகழகான கோலங்கள் போட்டுக் கொண்டிருந்தனர். குழுப் போட்டியாக அது நடைப் பெற்றுவந்ததால் அதில் கல்ந்து கொள்ளும் நபர்கள் அதிகமாக இருப்பார்கள்.


வடக்கத்தி பாணி அதிகம் இருந்ததாலும், வடக்கத்தி பெண்கள் தனித்திறமை காட்டும் வண்ணம் இருப்பதாலும் வடக்கத்தி பெண்கள் அதிகம் கலந்து கொள்வர்ர்கள். கோலப் பொடி வாங்க உள்ளூர் ஆட்களின் உதவி தேவை என்பதாலும் கடைகளுக்கு ஓடி ஓடிச் சென்று வாங்க வேண்டிய சூழநிலையும் இருப்பதால் தமிழ் மாணவர்கள் பலரும் ரங்கோலி குழுவில் இருந்தனர்.

======================================================

இந்த கதையின் முந்தைய பகுதிகளைப் படிக்க

மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு; மடிமேல் விளையாடி ......


நெஞ்சுக்கு நடுவில் தொங்கிய வாக்மேன்

ஆகிய சுட்டிகளின் மூலம் அனுகுங்கள்

=======================================

மகளிர் விடுதியில் கூடுதல் நேரம் சிறப்பு அனுமதி வாங்கி இருப்பதால் மகளிர் அணியினர் சற்று நிதானமாகவே ரங்கோலிகளைப் போட்டுக் கொண்டு இருந்தன்ர்.

ஒவ்வொரு ஆண்டு மாணவர்களும் தனித்தனி அணியாகச் செயல்பட்டுக் கொண்டு இருந்தனர்.

சில மாணவர்கள் மற்றவர்கள் போடும் கோலங்களில் தென்படும் தனித்தன்மையை வேவு பார்த்துக் கொண்டு வந்து தங்கள் அணியினரிடம் ரகசியமாகச் சொல்லிக் கொண்டிருந்தனர்.

அப்படி வேவு பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு ஓரத்தில் அமைந்திருந்த அணியில் இருவர் மட்டும் இருந்தனர். அதில் மாணவியின் சுண்டு விரலை அந்த மாணவர் தடவி விட்டுக் கொண்டு இருந்தார்.

மாணவி உஷா.. மாணவர் அந்த அணியில் இல்லாதவரான சுமன் குமார்.

ரங்கோலி போடும் போது பொடியில் இருந்த ஏதோ ஒரு வஸ்து கையில் குத்தி விட்டதாக உஷா சிணுங்க சுமன் அவருக்கு ஆறுதல் கொடுத்து கொண்டிருந்தார்.

அதே நேரத்தில் சுமித்ராவின் துப்பட்டாவை எப்படி அபேஸ் செய்து கொண்டுவருவது என்பது பற்றியும் சுமித்ராவிடம் விட்ட சவாலில் எப்படி வெற்றி பெறுவது என்பது பற்றியும் இங்கிலீஷ் குப்பன் யோசித்துக் கொண்டிருந்தான்

Saturday, July 4, 2009

உன் மூச்சு கலந்த இடம்......,

நீ

யாரென்று

தேடிப் பார்த்தேன்.

நீ

சென்ற இடம்

சுற்றிப் பார்த்தேன்.

உன்

வாசம்

வீசுமிடம்

நடந்து பார்த்தேன்,

உன்

பேச்சு

இருக்குமிடம்

நிற்கப் பார்த்தேன்..,

உன்

மூச்சு

கலந்த இடம்

வாழப் பார்த்தேன்..,

கடைசியில்

உலகம்

உருண்டையென

உணர்ந்து கொண்டேன்...,

Friday, July 3, 2009

கலாச்சார மாற்றத்துடன் சில மாற்றங்கள்

நாளை நமதே:-

இதுவே இந்தியில் வந்த ஒரு படத்தின் ரீமேக்தான்.


முதல் காட்சியில்தான் ஒரு குடும்ப பாட்டு. பாட்டு முடிந்த உடன் பெற்றோர் இறந்துவிட அண்ணன் தம்பி மூன்று பேரும் பிரிந்து விடுகிறார்கள். ஒருவர் பயங்கர ரவுடியாகவும், இன்னொருவர் மென்மையான எண்ணங்கள் கொண்டவராகவும், இன்னொருவர் பாடகராகவும் மாறுகிறார்கள். கடைசி அரைமணிநேரத்தில் பழைய பாட்டை பாடி ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு கொள்கிறார்கள். மூத்தவர் ஒரு ஓரமாக நின்று உண்ர்ச்சி கொந்தளிப்பாக பார்த்துக் கொண்டு நிற்பார். வில்லனை பழிவாங்கி அனைவரும் ஒன்றுசேர சுபம்.


இதில் குறிப்பிடத்தக்க அம்சம், என்வழி தனி வசனம்.... மூத்த அண்ணன் பிரயோகப் படுத்தி இருப்பார். எதிரியையும் மன்னிக்கும் கொள்கை வேண்டும் என மூத்த அண்ணன் கடைசி காட்சியில் வலியுறுத்த விதி அவரையும் மீறி வில்லனைக் கொன்றுவிடும். இந்தியில் இது போன்ற நீண்ட வசனம் இருப்பதாக தெரியவில்லை.{ எனக்கு இந்தி தெரியாது}. இந்திப் படத்தில் மூன்று நடிகர்கள் செய்த பாத்திரங்களை இருவரே செய்திருப்பார்கள். முதல் இரண்டு பாத்திரங்களுக்கு ஒருவரே என்பதால் வித்தியாசப் படுத்திக் காட்ட மேக்கப் கடுமையாக உதவியிருக்கும்.

நீங்கள் கேட்டவை:-
1984ஆம் ஆண்டில் பாலு மகேந்திராவின் இயக்கத்தில் வந்தபடம். இதி கூட நாளைநமதே படத்தில் வந்தது போல முதலில் ஒரு குடும்ப பாட்டு.

பாட்டு முடிந்த உடன் விதவைத்தாய் கொல்லப் படுகிறார். பாட்டு முடிந்ததும் அண்ணன் தம்பி இருவரும் பிரிந்து விடுகிறார்கள். அதில் வந்த இரண்டாம் மூன்றாம் சகோதரர்களை ஒரே ஆளாக மாற்றி இருப்பார்கள். இதிலும் மூத்தவர்தான் பழிவாங்கும் எண்ணத்தோடு சுற்றிக் கொண்டே இருப்பார். அடுத்தவர் ஜாலியாகப் பாட்டுப் பாடிக் கொண்டு சில்க் உடன் சுற்றிக் கொண்டிருப்பார். அதில் நேரடியாக பாட்டுப் பாடும் போதே மூவரும் உணர்ந்து கொள்வார்கள். இதிலும் இரண்டாம் முறை பாட்டு உண்டு

அது பதிவு செய்து சண்டையின்போது டேப் ரிகார்டர் பாட ஆரம்பித்து ஒன்று சேர்வார்கள். தமிழ் சினிமாவில் இப்படி ஒரு புதுமை அப்படத்தில்தான் முதன்முறையாக புதுகுத்தப் பட்டது எனலாம்.
அந்தப் பாடலில் நடித்த நடிகரின் முகபாவங்கள் பலதலைமுறைக்கும் பேசப் படும்வகையில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. .

அடியேய் .. மனம் நில்லுனா நிக்காதடி.... {நன்றி :Thanjavurkaran } இன்னமும் கல்லூரிகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது என்பதே அந்தப் படத்தின் நீண்ட ஆயுளுக்கு எடுத்துக் காட்டாக அமைந்திருக்கிறது. கனவுகாணும்வாழ்க்கையாவும்.. பாட்டுக்கும்கூட ஆயுள் அதிகம்தான்.

முதல் படத்தில் ராஜஸ்ரீ சிறப்புத்தோற்றத்தில் வந்து பாட்டுப் பாடுவார். இரண்டாவது படத்தில் பூர்ணிமா ஜெயராம் வந்து பாட்டுப் பாடுவார்.

தெலுங்கில் கூட இந்தப் படங்கள் வந்துள்ளனமற்ற படங்களைப் போல இந்தப் படமும் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் மற்ற படங்களில் கடைசித் தம்பி டம்மியாயிருக்கும். அவரது முக்கிய வேலை முக்கியமான இந்தப் பாடலைப் பாடுவது தான். நீங்கள் கேட்டவையில் இரண்டு தம்பிகளையும் சேர்த்து ஒரே தம்பியாக்கி இருப்பார்கள். ஆனால் தெலுங்கு படம் எடுத்ததற்கு முக்கிய காரணமே கடைசித் தம்பிதானாம். அவருக்காகத்தான் இந்த படமே..,

கடைசித் தம்பி அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தம்பி, பெரிய அண்ணனுக்கு நெருங்கிய சொந்தக் காரர், யாரென்று தெரிந்தால் பின்னூட்டங்களில் சொல்லுங்களேன்?

இது ஒரு மேம்படுத்தப் பட்ட மீள்பதிவு. முதற்பதிப்பில் இல்லாத பல பகுதிகளும் படக்காட்சிகளுடனும் வெளியிடப் பட்டுள்ளது.

Thursday, July 2, 2009

முடிந்தாள் நண்பனின் மனைவி

ராஜூவிடம் அந்த வார்த்தையை எதிர்பார்க்கவில்லை முருகன். நானும் பூஜாவும் விவாகரத்து வாங்கலாம் ன்னு இருக்கோம்.

முருகனுக்கு பயங்கர அதிர்ச்சி. ஏண்டா...
......................................................
இந்தக் கதையைத் தொடங்கும் முன் நண்பனின் மனைவி பாகம்-1, பாகம்-2 படித்துவிட்டு வாருங்கள்.
....................................................

பிற்பகலில் ராஜு வீட்டுக்கு வந்த போது தன்னை வரவேற்றது கூட அவ்வளவு மகிழ்ச்சியாக தெரியவில்லை என்றுதான் முருகனுக்குத் தோன்றியது. ஊட்டிவரை போய்விட்டு வருவதாகக் கூறினான். இல்லை. இங்கேயே தங்கு. தோட்டங்களைப் பார்க்கலாம் நிறைய பேச வேண்டியுள்ளது என்றுதான் ராஜு முருகனைத தங்க வைத்தான். இப்போது தோட்டத்தில் உட்கார்ந்து கொண்டுதான் இதெல்லாம் பேசிக் கொண்டிருந்தனர்.
...........................................................

முருகன் கல்லூரிக் காலத்தை நினைத்துப் பார்த்தான். அன்றெல்லாம் முருகன் கூட்டம்தான் உற்சாக பானம் அருந்துவார்கள். ராஜு வெறுமனே ஒரு சிட்ரா பாட்டிலைக் கையில் வைத்துக் கொண்டு மற்றவர்கள் போதை மயக்கத்தில் பேசுவதை ஊக்குவித்துக் கொண்டிருப்பான். கல்லூரி நாட்களில் அவன் ஒரு போதும் குடித்ததே கிடையாது. இன்று தலை கீழாக இருக்கிறது. முருகன் பெப்சி பாட்டிலுடனும் ராஜு உற்சாக பானத்துடனும் இருக்கிறான். உற்சாக பானம் உற்சாகம் கொடுப்பதற்குப் பதிலாக அவனது துக்கத்தின் கரைகளை உடைத்துக் கொண்டு இருந்தது.

காதல் திருமணம் வேஸ்டுடா...

என்னடா பிரச்சனை..

பூஜா சொல்லியிருப்பாளே.. அவள் என்னைவிட நண்பர்கள்ட்டா தானே நல்லா பேசுவா..

போச்சு இனிமெல் வாயத்திறக்கக் கூடாது. இல்லடா ஒன்னும் சொல்லலியே... ஏன் இப்படியெல்லாம் பேசுர....

நீங்க ரெண்டு பேரும் எப்படி நெருங்கிய காதலர்களா சுற்றி வந்தீங்க...


இல்லைடா நாங்க ரெண்டு பேரும் நெருக்கமாவே இல்லை. அவளுக்கு நண்பர்கள்தான் எல்லாம். அவங்களுக்கு குற்ஞ்செய்தி அனுப்புற அளவிற்கோ பேசும் அளவிற்கோ என்னிடம் அவ பேசியதே இல்லை. சாயங்காலம் ஏதாவது ஒரு ஃபிரண்டு வாங்கி தந்ததுன்னு ஒரு கிஃப்டோட வந்து நிக்கறா.. என்கிட்ட கேட்டா வாங்கி தர மாட்டனா...

வீட்டுக்கு வந்தாலும் ஃபோனும் கையும்தான்.

ஏண்டா எங்காவது வெளியே கூட்டிட்டி போகவேண்டியதுதானே..

எங்கடா இப்பதான் ஹாஸ்பிடல் நல்லா போயிட்டு இருக்கு. அப்பாவுக்குன்னு நோயாளிகள் வந்தது போக இப்ப எங்களுக்கும் நோயாளிகள் வந்துட்டு இருக்காங்க...

அப்புறம் எப்படிடா விவாகரத்து வாங்குவீங்க?

விவாகரத்து வாங்கிவிட்டு திரும்பவும் ஒரே இடத்தில் வேளை செய்வீங்களா..

இப்ப என்னை என்னடா பண்ணச் சொல்ற...
.....................................................

பிரச்சனை ஓரளவு தெளிவானது. பூஜா கல்லூரியில் இருந்த மாதிரியே இன்னும் இருக்கிறாள். அன்று அதை ஏற்றுக் கொண்ட முருகனால் இன்று அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதன் தொடர்ர்சியாக ஏற்படும் வாக்குவாததில் பற்பல பிரச்சனைகள்.

.......................................................

கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்த பிறகு முருகன் ராஜுவுக்கு ஒரு ஏற்பாடு சொன்னான். பரவாயில்லை. விடுடா..

ஆளுக்கொரு வண்டி வைத்துக் கொண்டுதான ஒரே மருத்துவமனைக்கு போய்ட்டுவர்ரீங்க. இனிமேல் ஓரே வண்டில போய்ட்டுவாங்க.

பிறகு பாருங்க..

..........................................
சில நாட்கள் கழித்து ராஜுவிடம் இருந்து முருகனுக்கு அலைபேசி அழைப்பு. நன்றி மச்சி இப்பெல்லாம் பலவிஷயங்கள் நார்மல் ஆயிடிச்சு.
...................................................

இந்தக் கதை இப்போது முடிந்தது. மீள்பதிவுதான்; இருந்தாலும் ஓட்டுக்கள் வரவேற்கப் படுகின்றன

நண்பனின் மனைவி பாகம்-2

நண்பனின் மனைவி முதல் பாகம் படித்துவிட்டு இரண்டாம் பாகத்தினை தொட்ருங்கள்சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது. பூஜா மாதிரி ஆட்களுக்கு அழக் கூடத்தெரியுமா.. என்பதே முருகனால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. என்னேரமும் பேசிக் கொண்டே இருக்கும் பெண் அவள். இன்று சமுதாயத்தில் நல்ல நிலையில் இருப்பவள், காதலித்தவனையே திருமணம் செய்து கொண்டவள், எல்லாவற்றிற்கும் மேலாக அவள் நெருங்கிய நண்பனின் மனைவி. இப்போது என்ன செய்வது என்றே முருகனுக்குத் தோன்ற வில்லை. அமைதியாக நின்று கொண்டு இருந்தான்.

இப்பொழுதெல்லாம் ராஜு குடிக்கறார். சொல்லிக் கொண்டே அழுதாள். அழுதுகொண்டே சொன்னாள்.

இது அதிபயங்கர அதிர்ச்சியாக முருகனுக்கு அமைந்தது. முருகன் கல்லூரி நாட்களில் தண்ணியடித்திருக்கிறான். கல்லூரி விழாக்கள் முடிந்த பிறகு, நண்பர்களின் பிறந்த நாளில் என்று தேர்ந்தெடுத்த நாட்களில் நண்பர்கள் குடிப்பார்கள். ஆனால் அந்த நாட்கள் வாரா வாரம் வந்திவிடும். அந்த நேரத்தில் எல்லாம் ராஜு குடித்ததில்லை. சிகரெட் கூட உபயோகப் படுத்தியதில்லை. ஆனால் முருகன் உட்பட அவன் நண்பர்கள் யாருமே குடிப்பதில்லை. புகைப்பதில்லை. ஆனால் அப்போதெல்லாம் அமைதியாக இருந்த ராஜு குடிப்பது முருகனுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியாக அமைந்தது.

என்ன ஆச்சு?

தெரியல.. என்னை சந்தேகப் படற மாதிரி தெரியுது. ஆனால் என்கிட்ட ஏதும் கேட்க வில்லை.

எத்தனை நாளா குடிக்கறான்?

ஒரு வருஷமா.. சில நேரங்கள்ல டெய்லி கோட குடிக்கிறார்.

வேலைக்கு ஒழுங்கா போறானா?

அதெல்லாம் போறார். வீட்டுக்கு வரும்போது பெரும்பாலும் குடித்துவிட்டு வருகிறார். குடித்துவிட்டு வந்தாலும் குடிக்காவிட்டாலும் வந்ததும் நெட்டில் உட்கார்ந்துவிடுகிறார்.

அப்புறம் எப்படி சந்தேகப் படுறான்னு சொல்றே..

தோணுது. ஆனால் ஏன்னுதான்னு தெரியல...

கல்லூரித்தோழந்தான். ஆறுஆண்டுகள் ஒன்றாகப் படித்தவர்கள்தான். ஆனாலும் சில வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு அவனின் குடும்ப பிரச்சனையில் தலையிடுவது எப்படி குழம்பிப் போய் நின்றான்.

தொழிலில் ஏதும் பிரச்சனை மாதிரியும் தெரியவில்லை. சந்தேகப் படுவதாக வேறு சொல்கிறாள். அவன் சந்தேகப் படுகிறானா.. இவள் அவனை சந்தேகப் படுகிறாளா...

இந்த நேரத்தில் மகிழ்வுந்து ஒன்று வரும் சத்தம் கேட்டது.

அவர்தான் வருகிறார்.

கண்ணைத்துடைத்துக் கொண்டு பூஜா எழுந்தாள்.

ராஜு உள்ளே வந்தான். இருவரையும் பார்த்தான்.

தொடரும்.............. தொடரும்................... தொடரும்............................

அடுத்த பாகத்திற்கு இங்கே செல்லவும்

Wednesday, July 1, 2009

நண்பனின் மனைவி

பேருந்து அமைதியாக கோவையை நோக்கிச் சென்று கொண்டிருந்த்து. நண்பனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று மதியம் இருந்தது. ஒருநாள் கழித்து இன்னொரு நண்பனின் திருமணம் இரண்டிலும் கலந்து கொல்வதற்காக முருகன் சென்று கொண்டு இருந்தான். அநேகமாக ராஜுவின் வீட்டில்தான் தங்கலாம் என்ற முடிவில்தான் வந்து கொண்டிருந்தான். ராஜுவும், ராஜுவின் மனைவி பூஜாவும் அவனது வகுப்புத்தோழர்கள்.

ராஜு உள்ளூர்காரன் தான், ஆனால் அவன் பூஜாவைக் காதலிக்க ஆரம்பித்த பின் கல்லூரியின் விடுதியில்தான் தங்கிப் படித்தான். ராஜு எப்போதும் முருகன் கோஷ்டியுடன்தான் இருப்பான். ஆனால் மாலை வேலையில் எல்லா நாட்களுமே பூஜாவுடன்தான் இருப்பான். பூஜா எப்போதும் கலகல வென்று எல்லோருடனும் பேசிக் கொண்டே இருப்பாள்.

150ஏக்கர் பரவியுள்ள கல்லூரி வளாகத்தில் மாலைவேளையில் ஆங்காங்கே மாணவர்கள் அமர்ந்து படிப்பது வழக்கம். பல ஜோடிகள் தனியே அமர்ந்து படித்துக் கொண்டு இருப்பார்கள். 9மணிக்கு மாணவியர் விடுதி மூடிவிடுவதால் அதுவரை இவர்களது படிப்பு தொடரும். பின்னர் எல்லோரும் விடுதிக்குச் சென்று விடுவர்.

முருகன் மாதிரி ஆட்கள் படிக்க சோம்பல் ஏற்படும் நேரங்களில் அப்படியே மயில் வேட்டைக்குச் செல்வார்கள். அந்தக் கல்லூரியில் மயில்கள் நிறையச் சுற்றிக் கொண்டிருக்கும். மயில் பார்ப்பதாகச் சொல்லிக் கொண்டு ஆங்காங்கே காதலர்கள் படிக்கும் அழகை ரசித்துக் கொண்டு போவார்கள். அதுதான் மயில் வேட்டை. அப்படி செல்லும் போது ராஜு பூஜா ஜோடி கண்ணில் தட்டுப் பட்டால் ராஜுவைவிட பூஜாதான் அதிகமாக முருகன் குழுவினருடன் பேசுவாள். சிப்ஸ், பிஸ்கெட் போன்றவை வாங்கி வருமாறு தொல்லை படுத்திக் கொண்டே இருப்பாள். பூஜாவுக்குப் பயந்தே அவர்கள் இருக்கும் பகுதியை தவிர்த்துவிடுவார்கள். இருந்தாலும் அவர்கல் எந்த மூலையில் அமர்ந்து படிக்கிறார்கள் என்பது தெரியாத சூழலில் அடிக்கடி செலவு வைத்துவிடுவாள்.

ராஜு பூஜாவை விட்டுவிட்டு வந்துவிட்டால் பிறகு முருகன் குழுவினருடன்தான் இருப்பான். கோயமுத்தூரில் உள்ள பலநூறு கல்லூரிகளில் மாதமாதம் எதாவது ஒரு கல்லூரியில் கலைவிழா நடக்கும். அதற்கு முருகன் குழுவினர் போவர்கள். அதற்கான பயிற்சியில் ஈடுபடும்போது கூட மாலை வேலைகளில் பூஜாவைப் பார்க்க போய்விடுவான். பூஜாவே கூட்டி வந்தால்தான் வருவான்.

நேற்றே அலைபேசியில் ராஜுவுடன் பேசியிருந்தான். ராஜுதான் இங்கேயே தங்கியிருந்து இரண்டுதிருமணங்களிலும் கலந்து கொள்ளுமாறு யோசனை கூறியிருந்தான்.

நேராக திருமண வரவேற்பு நடந்த மண்டபத்திற்கு சென்றான் முருகன். அங்கே நண்பர்கள் கூட்டம் ஒன்றும் அதிகமாகத்தென்படவில்லை. இருந்த ஓரிருவருடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு புறப்பட நினைத்த போதுதான் பூஜ வந்தாள்.

சில ஆண்டுகளில் கொஞ்சம் குண்டாகியிருந்தாள். ஒப்பனைகளும் கூடியிருந்தன.

"ஃபோன் நம்பர் மாத்திட்டயாமே.. எங்களுக்கெல்லாம் சொல்ல மாட்டாயா"
கொஞ்சம் பயமுறுத்தும் வண்ணம்தான் பேசினாள்.

ராஜு வரலையா?

இல்ல.. அவர் கொஞ்சம் பிஸி. உன்னை வீட்டுக்கு கூட்டிவரச் சொன்னார்.

திருமண வரவேற்பு முடிந்து அவர்கள் வீட்டுக்கு புறப்படும்போது காரின் முன்பக்க கதவுகளை திறந்துவிட்டாள். முருகனுக்கு கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. கையில் இருந்த குழந்தைகளுக்கு வாங்கிய பரிசுகளை முன் இருக்கையில் வைத்துவிட்டு பின் இருக்கையில் அமர்ந்து கொண்டாண். கல்லூரி நாட்களில் சிலமுறை இருசக்கர வாகனத்தில் அவளை அழைத்துவந்திருக்கிறான். இன்று கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது.

படித்து முடித்த சிலகாலங்களில் இருவரும் திருமணம் முடித்துமேல்படிப்பு முடித்து ராஜுவின் தந்தை கட்டி வைத்த மருத்துவ மனையை கவனித்துக் கோண்டிருந்தார்கள். முருகன் அரசுப் பணி கிடைத்து ஒரு கிராமத்தில் வேலை செய்து வந்தான்.

நீ ஏன் ஃபோன் செய்யறதே இல்லை இது பூஜா

இல்ல கொஞ்சம் வேலை அதிகம்.

ஃபோன் நம்பர் மாத்தினதும் சொல்லவே இல்லை. அதினாலதான் உணக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பவே முடியவேயில்லை என்றாள் பூஜா..

உண்மைதான் முருகன் அலைபேசி வாங்கிய காலகட்டத்தில் பூஜாவிடம் இருந்து நிறைய குறுஞ்செய்திகள் வரும். புது எண் வாங்கிய பிறகு எல்லோரும் தெரியப் படுத்தவேண்டும் என்று அவனுக்குத் தோன்றவில்லை விட்டு விட்டான். ராஜுவுடன் அவ்வப்போது பேசுவான்.

வீட்டுக்குச் செல்லும் வழியில் கல்லூரிக்கு எதிரே உள்ள ஐஸ்க்ரீம் கடையில் ஐஸ்கிரீம் வாங்கிச் சாப்பிட்டாள். மாறவே இல்லை இந்தப் பூஜா..

பொதுவான விசாரிப்புகளுடனும் மற்ற நண்பர்களைப் பற்றிய விசாரிப்புகளுடன் மகிழ்வுந்து பூஜாவின் வீட்டுக்குச் சென்றார்கள். வீட்டுக்குள் நுழைந்தவுடன் பூஜா அழ ஆரம்பித்தாள்.

தொடரும்...... தொடரும்.......... தொடரும்..........

பின் குறிப்பு:- பச்சை நிறத்தில் பூஜா பேசுவதும்
நீல நிறத்தில் முருகன் பேசுவதும் இடம் பெற்றுள்ளன

நண்பனின் மனைவி இரண்டாம் பாகத்திற்கு இங்கே செல்லுங்கள்

இது ஒரு மீள் பதிவு. மீள்பதிவாக இருந்தாலும் ஓட்டுக்கள் வரவேற்கப் படுகின்றன...,

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails