நாட்டில் எல்லோரும் ரொம்ப சீரியஸா யோசனை பண்ணிட்டு இருக்காங்க. சீரியஸா அப்படிங்கறத தீவிரமான்னு எழுதலாமான்னு யோசித்து பார்த்தால் தப்பா அர்த்தம் வந்திருந்தும் நினைச்சால் ஒரு வேளை அதையே மக்கள் அதுதான் சரி என்று சொல்லி விடுவார்கள் என்று சீரியஸா என்றே எழுதி விட்டேன்.
கொஞ்சம் மென்மையாக ஏதாவது எழுதலாம் என்று நினைத்த போது சில மென்மையான பாடலகள் நினைவுக்கு வந்தன. அதில் ஒரு பாடல்தான் இது.
கொஞ்சம் மென்மையாக ஏதாவது எழுதலாம் என்று நினைத்த போது சில மென்மையான பாடலகள் நினைவுக்கு வந்தன. அதில் ஒரு பாடல்தான் இது.
அதில் ஒரு பாடல்தான் இது. இந்தப் பாடல் என்ன ராகம் என்றெல்லாம் தெரியாது. ஆனால் இசைக் கோர்வைகள் தனித்தனியாக அசத்தும். அதைவிட பாடகர்கள் பாடுவதே மிக அழகாக வேறொருவரால் இப்படிக் கொண்டுவர முடியுமா என்பது போல நேர்த்தியாக வடிவமைத்திருப்பார்கள். படத்தின் பெய்ர் தெரியவில்லை. வா இந்தப் பக்கம், ஒரு ஊதாப் பூ கண் சிமிட்டுகிறது என்றெல்லாம் யூ ட்யூப் பக்கம் பேசி இருப்பார்கள். இந்தப் பாடல் பெரும்பாலானவர்களுக்கு புதிதாக் கேட்பதாகவே அமைந்திருக்கும்.
=======================================================================
இந்தப் பாடல் பதின்ம வயதில் கேட்டு இருந்தாலும் சமீபத்தில்தான் பார்க்க நேர்ந்தது. கமல்ஹாசனை மனதில் நிறுத்தியே அசைப்போட்டு வந்த பாடல். கேட்ட்கும்போதெல்லாம் ஒரு உலுக்கு உலுக்கும். கதாநாயகி பாண்டியனின் போலீஸ் அக்காதான்.
இந்தப் பாடலை கேட்கும்போதே அலைகள் ஆர்ப்பரிப்பதும் உள்ளத்தில் புயல் அடிப்பதும் படக்காட்சியைப் பார்க்காமலேயே நமது உள்ளத்தில் தோன்றும். அதுவும் அந்த கடைசி வரிகள். மீண்டும் ஒரு முறை இளைஞனாக மாறி களவு காதலைச் செய்யலாமா என்று தோன்ற வைக்கும். பாடலைப் பார்க்கும்போது குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் 2.50க்கு பின் வரும் நடன அசைவுகள் க்க்க்கிரேட்.,
=======================================================================
இந்தப் பாடல் சமீப கால அரசியலில் முதல் இரண்டு வரிகளுக்காக பாடப் பட்டு வந்த பாடல். சிவாஜி, ஸ்ரீபிரியா காதல் கோடிகளாக இந்தப் பாடலைப் பாடினாலும் கூட கதை தந்தை சிவாஜிக்கும், மகள் ஸ்ரீப்ரியாவுக்கும் இடையேயானது. தாயார் ஸ்ரீப்ரியா மகளை பெற்றவுடன் ஓய்வு பெற்றுவிடுவார். படம் முடியும் போது இதே பாடலை மகள் தந்தையைப் பார்த்து பாடுவார் என்றால் படத்தின் புரட்சியைப் புரிந்துதான் ஆக வேண்டும். இந்தப் படத்தோடு மூன்றாம் பிறை, மூன்று முகம் ஆகிய வெளியானதாக பேசிக் கொள்கிறார்கள்.
கடைசி வரியைப் பாடும்போது ஸ்ரீப்பிரியாவின் கண்களே தனிக் கவிதையாக ஒளிரும்.
டிஸ்கி:- இந்தப் பாடல்களில் இளையராஜாவின் பணி கலந்துள்ள பாடல்களை கேட்டதும் சொல்லுங்களேன்.