ஒருபள்ளியின் நடைபெற்ற ஆண்டுவிழாவில்தான் இந்த கருத்துக்களைக் கூறினார்கள்.
குழந்தைகளைப் படிக்கச் சொல்லிவிட்டு டி.வி. பார்க்கும் பெற்றோர்களைப் பற்றியும் நாம் பார்க்கும் காட்ட்சிகள் நம்மை எப்படி ஆளுமை செய்கின்றன என்பது பற்றியும் அருமையாகக் கூறினார்கள்.
முதல் வரிசையில் வரிசைகளில் இருப்பவர்களை மட்டும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர். பின் வரிசையில் இருப்பவர்களை சாட்சியாக வைய்த்துக் கொண்டனர்.
அனைவரையும் ஆட்டிக் காட்டிவிரலை உயர்த்திக் காட்டுமாறு கேட்டுக் கொண்டனர். அதே நேரத்தில் இந்த அறிவிப்பு செய்தவர் தனது கட்டைவிரலை உயர்த்திக் காட்டினார். முன் வரிசையில் அமர்ந்திருந்தவர்களில் பெரும்பாலோரும் தங்களது கட்டைவிரலையே உயர்த்திக் காட்டினர். கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஆட்காட்டிவிரலை உயர்த்திக் காட்டியவர்கள் வெகு சிலரே.. செயல்முறையிலேயே
நாம் என்னதான் நினைத்தலும் எவ்வளவுதான் அறிவை வள்ர்த்து வைத்திருந்தாலும் நாம் பார்க்கும் காட்சிகள்தான் நம்மை பெருமளவு ஆளுமை செய்கின்றன.என்பதை அழகாகக் காட்டினார்கள்...
.................................................................................................................................................