பல நூற்றாண்டுகளுக்கு பின்னால் செல்லுங்கள். இல்லையேல் சில வருடங்களுக்கு முன் உங்கள் தாத்தா பாட்டியின் சொற்களை ஞாபகப் படுத்திக் கொள்ளுங்கள். அதுவும் போதாதென்றால் நீங்கள் படித்த அம்புலிமாமா, சிறுவர் மலர் எதையாவது ரெஃபரன்ஸ் புத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். இப்போது கதைக்கு வருவோம்.
.....................................................................................................................
அந்த மாபெரும் நாட்டின் இளவரசனுக்கு பெண் தேடுகிறார்கள். அண்ணன், தம்பி இருவருமே பலசாலிகள்..
முதலில் அண்ணனுக்குப் பெண் தேடுகிறார்கள்.
தம்பிக்கு பெண் கொடுக்க பலரும் தயாராக இருக்கிறார்கள். அண்ணனுக்கு எல்லோரும் தயங்குகிறார்கள்.
இந்தியத்துணைக்கண்டத்திலே ஏற்க்குறைய மேற்காசிய நாடுகளுக்குச் செல்கிறார்கள். பெண் கேட்கிறார்கள். மூத்த இளவரசனுக்கு பெண் கொடுக்க தயங்கி நிற்கிறார்கள். பெண்கேட்கச் சென்ற குடும்பப் பெரியவர், போருக்கு அழைக்கிறார். அந்நாட்டு இளவரசியின் அனைத்து அண்ணன்களையும் கொள்கிறார்கள். அந்நாட்டின் மன்னனையும் கொல்கிறார்கள். அந்த நாட்டையே அழித்து விட்டு திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில் அந்த நாட்டு இளவரசி வருகிறாள். நாட்டின் சண்டையை முடிவுக்கு கொண்டுவரவும், தனது சின்னத்தம்பியைக் காப்பாற்றவும் திருமணத்திற்குச் சம்மதிக்கிறார்.
ஆனால் இந்த கொடிய உலகத்தைக் காண சகிக்காமல் தனது கண்ணைக் கட்டிக் கொள்கிறார்.
அந்த இளவரசிதான் பாரதப் போரின் மகாராணி காந்தாரி அவர்கள்.
அவர் கண்ணைக் கட்டிக் கொண்டது பீஷ்மர் முதலானவர்களை பார்க்க விரும்பாமையா? இல்லை திருதிராஷ்டிரன் பார்க்காத உலகத்தை தானும் பார்க்க விரும்பாத ஒரு பாசத்தின் காரணமாகவா...............
..................................................................................................................
காந்தார தேசத்திலிருந்து தப்பி வரும் குட்டி இளவரன் சகுனி ஒரு சபதம் செய்கிறார். தனது நாட்டை சின்னா பின்னப் படுத்திய பீஷ்மரின் நாட்டையும் வம்சத்தையும் அழிப்பதாக சபதம் செய்கிறார். பின்னர் படிப்படியாக காய் நகர்த்தி பாரதப் போருக்கு காரணமாக அமைந்து கௌரவர்களையும் பாண்டவர்களின் மகன்களையும், ஏராளமான போர்வீரர்களையும் அழிக்கிறார். ஏறக்குறைய தனது சபதத்தில் வெல்கிறார்.
எதிர்மறை நாயகனாக பெருவாரியான வெற்றிகளைக் குவித்த சகுனி .. மகாபாரத்தின் நாயகனா? வில்லனா?
...........................................................................................................
மற்றுமொரு சுவாரசியமான ஒரு ஒற்றுமை... பாண்டவர்களுக்கு தந்தை ஐவர். ஐவருக்கும் மனைவியாக திரவுபதி...
.............................................................................................