Tuesday, May 14, 2019

CSK, NEET, இன்ன பிற போட்டித் தேர்வுகள்


IPL துவங்கும்போது உள்ளூர் கிரிக்கெட் வளர்ச்சிக்கு என்றார்கள். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடாத இரு வீரர்கள் கண்டிப்பாக இடம் பெறுவார்கள் என்றார்கள். தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ப ஏலத்தின் அடிப்படையில் சம்பளத்தை நிர்ணயித்தார்கள். வெளிநாட்டு வீரர்களுடன் விளையாடி நட்புறவு வளர்க்கவும் , விளையாட்டுத் திறனை வளர்க்கவும் ஒரு களம் என்றார்கள். எல்லாம் அப்படித்தான் துவங்கியது.
தற்போதைய நிலையில் போட்டிகளில் உள்ளூர் வீரர்கள் விளையாட வேண்டிய அவசியம் என்ற விதி இல்லாமல் போய் விட்டது. தகுதி திறமை என்ற அதே அளவுகோலில் உள்ளூர் ஆட்டக்காரர்கள் ஒதுக்கப் பட ஆரம்பித்தாயிற்று. தற்போதைய CSK அணியையே எடுத்துக்கொள்ளுங்கள். ஆர். அஸ்வினை வேண்டாம் என்று சொல்லிவிட்டது. அவரை பஞ்சாப் அணி வாங்கி கேப்டன் ஆக்கியது. ஒரு அணிக்கு கேப்டன் ஆகும் திறமை உள்ளவரையே ஒதுக்கும் காட்சிகள் அரங்கேறிவிட்டது. ஆர்.அஸ்வின் ஏற்கனவே தன்னை நிரூபித்து விட்டதால் அவரை பஞ்சாப் அணி வாங்கியது. இளம் வீரர் வாஷிங்டன் சுந்தர் டிஎன்பிஎல் போட்டிகளில் பல சாதனைகள் செய்தவர். அவரை பெங்களூரு அணி வாங்கி ஒரு ஓரமாகவே உட்கார வைத்து இருந்தது. தொடர் வாய்ப்பு கிடைத்திருந்தால் ஒருவேளை அடுத்த டெண்டுல்கராகவோ, கங்கூலியாகவோ வரக் கூடிய வாய்ப்பு உள்ள வீரர். ஒருவேளை தமிழக கேப்டன் சென்னையில் இருந்திருந்து வாஷிங்டன் சுந்தர் சென்னையில் இருந்திருந்தால் தொடர் வாய்ப்புகள் கிடைத்திருக்கும் (ரெய்னா போல, ராயுடு போல). அப்படித்தான் ஆர். அஸ்வின் தலைமையில் மு.அஸ்வினுக்கு வாய்ப்புகள் கிடைத்தன.
CSK வில் வாட்ஸனுக்கு பனிரெண்டு ஆட்ட்டம் நன்றாக விளையாட நிலையிலும் தன்னை நிரூபிக்க தொடர்வாய்ப்பு கொடுக்கப் பாட்டது. ஆனால் முரளி விஜய்க்கு வாய்ப்பில்லை. தமிழக வீரர் ஜெகதீசன் CSK வில் தேர்ந்தெடுக்கப்பட்டும் டோனி விளையாடாத போட்டியில் கூட கீப்பர் என்ற முறையிலும் கூட அவருக்கு வாய்ப்பில்லை. இறுதிப் போட்டியில் ஒரு தமிழக வீரரும் சென்னை அணியில் இல்லை.
முன்னர் கூறியது போல சம்பளமும் (ஏலத்தொகை) இவர்களுக்கு முழுமையாக வராது. விளையாடிய போட்டிகளின் அடிப்படையில் சதவிகிதக் கணக்கில்தான் வரும்,
தகுதி , திறமை என்ற அடிப்படையில் நீட் மற்றும் இன்னபிற போட்டித் தேர்வுகளிலும் எந்த கட்டுப் பாடும் இன்று வெளி மாநிலத்தவரை அனுமதித்தால் தற்போதைய தமிழக வீரர்களுக்கு CSK வில் நடந்ததைப் போன்ற ஒதுக்கப் படும் நிலைதான் தமிழக மாணவர்களுக்கும் நிகழும்.
ரெய்னாவிற்கும் வாட்ஸனும் நல்ல வாய்ப்புகள் பெறும் சுழலில் முரளி விஜய்யும் ஜெகதீசனும் வாய்ப்புகளை இழப்பார்கள். இந்த கட்டுப்பாடில்லாத வெளி மாநில மாணவர்கள் , பணியாளர்கள் உள் அனுமதியால் நடக்கும்.
வாஷிங்டன் சுந்தர், போன்ற மாணவர்கள் வெளி மாநிலங்களில் சென்று வாய்ப்பே வழங்கப்படாமல் டம்மி பீஸ் என்று பெயர் சூட்டப்பட்டு திருப்பி அனுப்பப் படுவார்கள்.
எங்கோ ஒரு சில மு.அஸ்வின்கள் ஆர். அஸ்வின்கள் போன்ற சீனியர்களால் வாய்ப்பு பெறலாம். ஆனால் அது வெகு அபூர்வமாகவே நிகழும்.
சென்னை என்ற பெயர் இருக்கும் ஒரே காரணத்தால் சென்னைக்கு ஆதரவு அளித்தவர்கள், தகுதி திறமை அடிப்படையில் டோனி, வாட்ஸன் கிடைத்ததை நினைத்து மகிழ்பவர்கள் தலையில் வைத்து கொண்டாடுபவர்கள், தோல்விக்காக அழுது புலம்புவரக்ள். CSK என்ற அணி பல தமிழக வீரர்களை புறகணித்து, வெளி மாநில வெளிநாட்டவர்களை வைத்து உருவாக்கப் பட்ட அணி என்பதை உணர வேண்டும்.
NEET மற்றும் கட்டுபாடில்லா வெளி மாநில பணியாளர்களை உள்ளே அனுமதித்தால் சிஎஸ்கே அணியைப் போல வெற்றி இருக்கும். ஆனால் உள்ளூர் அணி வீரர்கள் இருக்க மாட்டார்கள். வெளிமாநிலக் காரர்கள் உள்ளூர் பணியாளர்களாக இருக்கும் போது, முக்கியமாக தருணத்தில் தேவையற்ற ரன் அவுட், எல்பிடபிள்யூக்கள் நடக்கும். மொத்தத்தில்அணி வென்றாலும் தோற்றாலும் தமிழகத்திற்கு தோல்விதான் மிஞ்சும்.

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails