இது என்னோட மானப் பிரச்சனை, சுமித்ராவோட துப்பட்டா என் கைக்கு வந்தாகணும்; அந்த இத்துப்போன அட்டுக்கு நான் யாருன்னு காட்டியாகணும்.
இங்கிலீஷ் குப்பன் ஆக்ரோசமாக உரை நிகழ்த்திக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் ஒரு அதி பயங்கர தீவிரம் இருந்தது. சுமித்ராவிடம் விட்ட சவாலில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற எண்ணமும் பட்டொளிவீசி பறந்து கொண்டிருந்தது.
----------------------------------------------------------------------------------
ஏற்கனவே கெட்ட வார்த்தை பேசியதால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அறியாதவர்களுக்கு இந்தச் சுட்டி.
சுமன் - சுமித்ரா சவாலையும் அப்போது ஏற்பட்ட சண்டையும் அறிய இந்தச் சுட்டி.
கதையின் முந்தைய பகுதிகளுக்குப் போக இந்தச் சுட்டி
--------------------------------------------------------------------------------------------------
ரொம்ப சிம்பிள்டா.., ஆண்கள் விடுதிக்கும், பெண்கள் விடுதிக்கும் ஒரே சலவை தொழிலாளிதான். அவரை நாம கரெக்ட் பண்ணிடலாம். நிகழ்ச்சி நடக்கும்போது துப்பட்டா நம்ம கைக்கு வந்துவிடும்.
நண்பர் ஒருவர் ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்.
அதெல்லாம் நான் பத்து நாட்களுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டேன். இன்றுவரை அந்த அன்கோண்டா துப்பட்டாவ சலவைக்குப் போடவே இல்லை.
சலவைத் தொழிலாளி நம்மள ஏமாத்துறாரா?
அப்படி ஒன்னும் தெரியலயேடா... நான் தினமும் பைனாக்குலர் மூலமா துணி காயப் போடும் இடத்தை தினமும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.
-----------------------------------------------------
இதைக் கேட்டுக் கொண்டிருந்த சுமித்ராவுக்கெ நெஞ்சு அடைப்பது போல ஆகிவிட்டது. சவால் விட்டிருந்தாலும் கூட அதற்கு இவ்வளவு மும்மரமாக இங்கிலீஷ் குப்பன் முயற்சி எடுத்துக் கொண்டிருப்பான் என்று அவள் துளிகூட நினைத்துப் பார்க்கவில்லை. அதுவும் பெண்கள் விடுதியின் துணி காயப் போடும் பகுதியை பைனாக்குலர் கருவி மூலம் தினமும் கண்காணிக்க முடியும் என்ற செய்தி அவளது வயிற்றில் புளியைக் கறைத்தது. பாதுகாப்பான பகுதி என்று நினைத்துக் கொண்டிருக்கும் தங்கள் இருப்பிடத்தை தினமும் சிலர் பார்க்கிறார்கள் என்றால்.. , எந்த பெண்ணிற்குத்தான் அச்சம் வராது.
-------------------------------------------------------------------------------------------
சரி வேற என்னடா வழி இருக்கு,
டேய் நம்ம பெண்தோழிகள் மூலமா ராத்திரியோடு ராத்திரியா அவ துப்பட்டாவ எடுத்திட்டு வரச் சொல்லிடலாமா!
அதெல்லாம் முடியாது. எனக்கு எந்த பொண்ணோட உதவியும் தேவையில்லை. வேணும்னா அவ ரூம்ல எங்க வச்சிருக்கான்னு கேட்டுச் சொல்லுங்கடா........., நானே போய் எடுத்துக் கொண்டு வந்து விடுகிறேன்.
இங்கிலீஷ் குப்பன் உறுதியுடன் சொன்னான்
-------------------------------------------------------------------------------------
தனது அறைக்கே வந்து துப்பட்டாவை எடுப்பானாமா? நினைக்கும்போது சுமித்ராவின் கால்கள் தரைக்கு கீழே நழுவ ஆரம்பித்தன. அவளுக்கு குப்பனின் செயல்கள் நன்கு தெரியும் . அவன் சொன்னால் எதையும் செய்வான். பெண்கள் விடுதிக்குள்ளே வருமளவு துணிந்து விட்டவனை எப்படிச் சமாளிப்பது?
அவளோடு இதைக் கேட்டுக் கொண்டிருந்த சுமனை எரிப்பது போலப் பார்த்தான். ஏதோ கொஞ்சநேரம் கடலை போடலாம் என்று நினைத்து சுமித்ராவுடன் வந்த சுமன் இந்த திட்டத்தை ஒட்டுக் கேட்டபின் இந்தப் பகுதிக்கு ஏன் வந்தோம் என்ற எண்ணம்தான் வந்தது.
இருந்தாலும் சுமித்ராவுக்கு கொஞ்சம் ஆறுதல் சொல்லிவிட்டு, துப்பட்டாவை பெட்டியில் வைத்து பூட்டிவிடும்படி சொல்லி விட்டு இருவரும் அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர்.
--------------------------------------------------------------------------------
சுமன் - சுமித்ரா இருவரும் ஒரு ஓரமாக நகர்வதை கண்ட சில மூத்த மாணவர்கள் அவர்களது அறிவுப் பூர்வமான ஆலோசனைகளைக் கேட்க நினைத்து அவர்களைப் பின் தொடர்ந்து வந்திருந்தனர். அவர்கள் இந்த நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு சுமித்ரா ஒட்டுக் கேட்ட செய்தியையும் இங்கிலீஷ் குப்பன் மற்றும் தோழர்களிடம் தெரிவித்தனர்.
அந்தக் கோடாரிக் காம்ப என்ன செய்கிறேன் பார்
இங்கிலீஷ் குப்பன் கொதிக்க ஆரம்பித்தான். அவன் அவ்வப்போது இலக்கிய உவமை சொல்லிக் கொண்டு சண்டை போடுவான்.
-----------------------------------------------------------------------------
மறுநாள் கல்லூரி சுவர்களில் இங்கிலீஷ் குப்பனை ஆதரித்து சுவரொட்டிகள் பளிச்சிடத் தொடங்கின. பிற ஆண்டு மாணவர்களும் இங்கிலீஷ் குப்பனின் சவாலை ஆதரித்து அவரவர் பங்கிங்கிற்கு ஒரு பிரசுரம் போட்டார்கள். ஒட்டு மொத்தத்தில் இங்கிலீஷ் குப்பனுக்கு மறைமுகமாக அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தனர். சுமித்ராவிற்கும் தான்........
பெண்கள் மத்தியில் சுமித்ராவிற்கு ஆதரவு பெருகியது . சுவரொட்டிகளில் சுமித்ரா பெயர் இல்லாவிட்டாலும் அவள்பெயரும் சேர்ந்தே பேசப்பட்டது
-------------------------------------------
கல்லூரி விழா அன்று பல்சுவை நிகழ்ச்சியில் ஒரு பகுதி
மாணிக் ஃபாத்திமா..
மாணிக் ஃபாத்திமாவாக இங்கிலீஷ் குப்பன் நடித்திருந்தான். துப்பட்டாவால் முகம் மூடி இங்கிலீஷ் குப்பன் நடந்து வந்த உடனேயே மாணவ மாணவியரின் கரகோஷம் கட்டிடத்தையே அதிரச் செய்தது.
அதில் ஒரு காட்சி
காட்சி முன் சுருக்கம்:-
மாணிக் ஃபாத்திமா தமிழகத்தின் முதலமைச்சர். தண்ணீர் கொடுக்க மறுக்கும் அண்டை மாநில முதல்வருடன் பேச்சுவார்த்தைக்காகச் செல்கிறார் ( பாஷா படத்தில் தங்கைக்கு சீட் வாங்க ரஜினி போவாரல்லவா.. அதன் பாதிப்பில் உருவாக்கப் பட்ட காட்சி)
மாணிக் ஃபாத்திமா :- அண்ணே எம் பேரு ஃபாத்திமா...., மாணிக் ஃபாத்திமா
வேற்று மாநில முதல்வர்:- நீ யாரா இருந்தா என்னம்மா.. தண்ணீர் கொடுக்க முடியாது . முதல்ல நடையக்கட்டு.
மாணிக் ஃபாத்திமா:- அண்ணே தண்ணீ இல்லேன்னா இல்லைன்னு சொல்லி இருக்கலாம். ஆனா அதுக்கும் ஒரு இது இருக்கு.. நீங்க பேசறது தப்புண்ணே
வே. மா. முதல்வர்:- அதுதான் கெளம்பு அப்பிடிணாச்சில்ல கிளம்பும்மா.., எனக்கு நெரயா வேலை இருக்கு
மாணிக் ஃபாத்திமா:- அண்ணே எம் பேரு ஃபாத்திமா...., மாணிக் ஃபாத்திமா
வே.மா.முதல்வர்:- ஐ.. ஐ... யே யாரும்மா நீ.. திரும்ப திரும்ப அதையே சொல்லிட்டு...... கிளம்பும்மா
மாணிக் ஃபாத்திமா:- எனக்கு இன்னொரு பேரும் இருக்கு
வே. மா.முதல்வர்:- (வித்தியாசமாக பார்க்கிறார்)
மாணிக் ஃபாத்திமா:- சுமித்ரா..
சுமித்ராவின் பெயரைச் சொன்னதுமே பய்ங்கரமான கைத்தட்டலுடன் மாணவர்களிடமிருந்து விசில் சத்தமும் வர ஆரம்பித்தது.
வே.மா. முதல்வர்:- ஐயோ.. சுமித்ராவா.. அக்கா எல்லா தண்ணீயும் நீங்களே எடுத்துக்கங்க.. இந்த ஆறு குளம், அணைக்கட்டு எல்லாமே உங்களோடதுதான்...
என்று கதற ஆரம்பித்தார்... ஏற்கனவே கைத்தட்டிக் கொண்டு இருந்த மக்கள் இன்னும் உற்சாகமாகத் தட்டிக் கொண்டே இருந்தனர்.
இத்தோடு இந்தக் காட்சியை முடிந்திருந்தால் சுமித்ரா கூட ஓரளவு மகிழ்ச்சி அடைந்திருப்பாள். ஆனால் அதற்கடுத்து வந்த வசனம் தான் சுமித்ராவை வெறுப்பின் உச்சத்திற்கு கொண்டு போனது.
பய்ந்து நடுங்கிய முதல்வர். எல்லாத்தையும் எடுத்துக்கங்க என்று கதறியதோடு அல்லாமல் தயவு செய்து முகத்தை காட்டீராத.., தயவு செய்து முகத்தை காட்டீராத என்றும் சேர்த்து சொல்லிக் கொண்டே ஓட ஆரம்பித்தார்.
சுமித்ரா வெறுப்பின் விளிம்பிற்கே போக ஆரம்பித்தாள்.
துப்பட்டா எப்படி அவனுக்கு கிடைத்தது என்ற கேள்வி கூட அவள்து மனதில் எழவில்லை. எப்படி பதிலடி கொடுப்பது என்பதில் தனது சிந்தனையைப் பரவவிட்டாள்
தொடரும்.........................................................................................
மேற்கொண்டு படிக்க
http://kanavukale.blogspot.com/2009/10/blog-post_19.html
அழுத்துங்கள்
மறக்காம தமிழீஷ், தமிழ்மணங்களில் ஓட்டுப் போட்டுவிடுங்கள்
இதுக்கு முன்னாடி வந்திருக்கிற சில காலேஜ் பதிவுகள் தான் படிச்சிருக்கிறேன். இது நல்லாயிருக்கு! நாடகம் ரொம்ப நல்லாயிருக்கு தல!
ReplyDeleteதல, இந்த பதிவுதான் படிக்க முடிஞ்சுது. மத்ததையும் படிச்சுட்டு வந்து ஃபுல்லா கமெண்டுறேன்.
ReplyDeleteஇத மட்டும் தனியா படிக்கும் போது ஒரு பொண்ண ரொம்ப டீப்ப்ப்பா கலாய்க்கற மாதிரி இருக்கு!
அடங்கி போறவன் இல்ல..
ReplyDeleteஅடிச்சிட்டு போறவன்!!
// ஜெகநாதன் said...
ReplyDeleteஇதுக்கு முன்னாடி வந்திருக்கிற சில காலேஜ் பதிவுகள் தான் படிச்சிருக்கிறேன். இது நல்லாயிருக்கு! நாடகம் ரொம்ப நல்லாயிருக்கு தல!//
நன்றி தல..,
// இளைய பல்லவன் said...
ReplyDeleteதல, இந்த பதிவுதான் படிக்க முடிஞ்சுது. மத்ததையும் படிச்சுட்டு வந்து ஃபுல்லா கமெண்டுறேன். //
எதிர்பார்க்கிறோம் தல
//இளைய பல்லவன் said...
ReplyDeleteஇத மட்டும் தனியா படிக்கும் போது ஒரு பொண்ண ரொம்ப டீப்ப்ப்பா கலாய்க்கற மாதிரி இருக்கு!//
கற்பனைதான் தல..,
ஏன்ணே லேட்..
ReplyDeleteமாணிக் ஃபாத்திமா முகம் மேட்டர் சூப்பர்..
// ஆப்பு said...
ReplyDeleteஅடங்கி போறவன் இல்ல..
அடிச்சிட்டு போறவன்!!//
நீங்க நல்லவரா.. கெட்டவரா...,
தொடர் இப்போ சூடு பிடிச்சிருச்சு.அனலடிக்குது.
ReplyDelete// முரளிகண்ணன் said...
ReplyDeleteதொடர் இப்போ சூடு பிடிச்சிருச்சு.அனலடிக்குது.//
நன்றி தல..,
இங்கே வந்து பெற்று கொள்ளுங்கள்
ReplyDeletehttp://priyamudanvasanth.blogspot.com/2009/07/blog-post_15.html
//பிரியமுடன்.........வசந்த் said...
ReplyDeleteஇங்கே வந்து பெற்று கொள்ளுங்கள்
http://priyamudanvasanth.blogspot.com/2009/07/blog-post_15.html//
நன்றி தல ..,
பெற்றுக் கொள்கிறேன்
தமிழ்மணத்தில் இன்னும் ஒரு ஓட்டு வாங்கினால் பரிந்துரை பகுதிக்கு வந்து விடும் என்று நினைக்கிறேன்
ReplyDeleteஓட்டு போட்டாச்சு, பாதி படிச்சேன் மீதி ரீடர்ல படிச்சிக்கறேன்
ReplyDeleteதல இத்தனை சுவாரஸ்யமாகவா கல்லூரி வாழ்க்கை சென்றது.
ReplyDeleteநல்ல விறுவிறுப்பு.
ம்ம். நடத்துங்க...
தல ஓட்டு போட்டா சேரவே மாட்டேன் என்கிறது.
ReplyDeleteஏதாவது வழி சொல்லவும்.
இவரின் ஆதங்கத்தையும் பாருங்க தல
ReplyDeletehttp://sakthivelpages.blogspot.com/2009/07/blog-post_7180.html
பதிவர்கள் அவரை கும்மியதையும் இந்த பதிவில் பார்க்கவும்.
http://sakthivelpages.blogspot.com/2009/07/blog-post_15.html
என்ன நடக்குது இங்கே.
// குடுகுடுப்பை said...
ReplyDeleteஓட்டு போட்டாச்சு, பாதி படிச்சேன் மீதி ரீடர்ல படிச்சிக்கறேன்//
நன்றி தல..,
நல்லாயிருக்கு,.. ஓட்டும் போட்டாச்சு
ReplyDeleteஐய், என் ஓட்டும் சேர்த்தாச்சு தல
ReplyDelete//jothi said...
ReplyDeleteநல்லாயிருக்கு,.. ஓட்டும் போட்டாச்சு//
நன்றி தல..,
// அக்பர் said...
ReplyDeleteஐய், என் ஓட்டும் சேர்த்தாச்சு தல//
நன்றி தல..,
நானும் ஒட்டு போட்டேன்! ஸாரி ஓட்டு போட்டுட்டேன்!
ReplyDeleteபதிவை அப்பாலிக்கா வந்து படிச்சிக்கிறேன்!
ஹிஹி!
மாணிக் ஃபாத்திமா:- எனக்கு இன்னொரு பேரும் இருக்கு
ReplyDelete//
ஹா ஹா.. இதுதான் தி பெஸ்ட் இந்த தொடர்ல...
செம சீன் தலீவா...
தொடருங்கோவ்,..
// நாமக்கல் சிபி said...
ReplyDeleteநானும் ஒட்டு போட்டேன்! ஸாரி ஓட்டு போட்டுட்டேன்!
பதிவை அப்பாலிக்கா வந்து படிச்சிக்கிறேன்!
ஹிஹி!//
கண்டிப்பா படித்துவிடுங்கள் தல..,
// கடைக்குட்டி said...
ReplyDeleteமாணிக் ஃபாத்திமா:- எனக்கு இன்னொரு பேரும் இருக்கு
//
ஹா ஹா.. இதுதான் தி பெஸ்ட் இந்த தொடர்ல...
செம சீன் தலீவா...
தொடருங்கோவ்,..//
வாங்க தல.., வாங்க...,
டக்கர் நைனா......நான் உன் தொடரின் ரசிகன்
ReplyDeleteNice post.
ReplyDeleteநல்ல எழுதுறீங்க
ReplyDelete@கிறுக்கன்
ReplyDelete@Muniappan Pakkangal
@Several tips
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே..,