Thursday, June 4, 2009

மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு; மடிமேல் விளையாடி...

மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு;
மடிமேல் விளையாடி .....,

பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது, கல்லூரி விடுதிக்குள் சுற்றுலாப் பேருந்து நுழையும்போது.., கல்லூரியில் சில மாணவர்கள் இப்படித்தான், எந்த ஆண்டு வெளிவந்தது என்றே தெரியாத படங்களிலிருந்து பாடல்களை அவ்வப்போது கேட்டுக் கொண்டிருப்பார்கள். மூன்று நாள் சுற்றுலா சென்று வந்த பின் எங்களுக்கு மிகப் பெரிய அனுபவம் கிடைத்தது போல இருந்தது. உண்மையில் நாங்களும் சீனியர் மாணவர்களாக மாறிவிட்ட ஒரு உணர்வு சுற்றுலா சென்று வந்த பின் தான் வந்தது என்று சொல்லலாம்.

====================================================

இந்தக் கதையின் முந்தைய பாகங்களை

நெஞ்சுக்கு நடுவில் தொங்கிய வாக்மேன்


சுட்டியைச் சுட்டுவதன் மூலம் படித்துக் கொள்ளமுடியும்.
===========================================================

வந்த உடன் எங்களது மூட்டை முடிச்சுகளைக் கொண்டுவந்து இறக்கிவிட்டு படுக்கலாம் என்று நினைத்தோம். அப்போது மகளிர் விடுதியில் இருந்து தொலைபேசி அழைப்பு. பேருந்திலிருந்து இறங்கும்போது சக மாணவி ஒருவரின் கைப் பை தவறிவிட்டதாம். உடனடியாக அதனை மீட்டுத் தருமாறு கேட்டுக் கொண்டார். நாங்களும் அந்த தூக்கக் கலக்கத்தில் சக மாணவர் ஒருவரின் இருசக்கர வாகனத்தை கடன் வாங்கிக் கொண்டு பேருந்து வாடகைக்கு கொடுத்த நிறுவனத்தை அடைந்தோம். அங்கு பணிமனைக் காப்பாளர் தூக்கக் கலக்கத்தில் இருந்தார். அவரை எழுப்பி வந்த விஷயத்தைச் சொன்னோம். அவரும் உள்ளே விட்டார். உரிய நபர்களைச் சந்தித்து வந்த காரியத்தைச்சொன்னதும் நாங்கள் சென்ற வண்டியை சோதனையிட அனுமதித்தார்கள். பேருந்துக்குள் சென்று சல்லடையாக தேடிய பின் சக மாணவியின் கைப்பை கிடைத்தது.

அதனை பத்திரமாக ஆண்கள் விடுதிக்குக் கொண்டுவந்து சேர்த்தோம். மறுநாள் பெற்றுக் கொள்வதாக சகமாணவி சொல்லிவிட்டார்.

நாங்கள் மூட்டை முடிச்சுக்களுடன் தூங்கு விட்டோம். மதிய நேரத்தில் மருத்துவமனையிலிருந்து மாணவர்களை அழைத்துவரும் பேருந்து வந்து எங்களை துயில் எழுப்பியது. எழுந்து வந்து எங்களைப் பார்த்த சீனியர் மாணவர்கள் உற்சாக குரல் எழுப்பினார்கள் உறக்கமும் கலைந்தது.

அப்போது தான் இங்கிலீஸ் குப்பன் அந்த பெண்கள் கைப்பையைப் பார்த்தான். இதைப் போய் எங்கடா சுட்டீங்க.., பார்க்கவே கேவலமா இருக்கு..?

சக மாணவியுடைய்து . வண்டியில் தவற விட்டுட்டாளாம். போய் மீட்டுவந்திருக்கிறோம்.... என்று சொன்னதும்
"இது அதவிடக் கேவலமா இருக்கு" வெடித்தான் இங்கிலீஷ் குப்பன். பின்னே சுமித்ரா அவனைக் கெட்ட வார்த்தையில் திட்டியதைப் பொறுக்க முடியாமல் சண்டக்குக் கிளம்பியவன் ஆயிற்றே.., அவனைப் படாதபாடு பட்டு சமாதானப் படுத்திக் கூட்டிவந்தோம்.

வரவர பொண்ணுக என்னசொன்னாலும் ஆடுறீங்கடா..,

மொத்த சுற்றுலாவிலும் பெண்கள் எங்களிடம் பேசிய வார்த்தைகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். எங்கே தண்ணி கிடைக்கும்? பஸ் எப்போ புற்ப்படும்? நாங்க முன்னாடிப் போய் உட்கார்ந்துக் கொள்கிறோம். இது எந்த ஊர்? போன்ற வாக்கியங்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் எதுவுமெ பேசியதாகத் தோன்றவில்லை.

பேசிக் கொண்டே குப்பன் கைப்பையைத் திறந்தான். அதில் சீப்பு, கைக்குட்டை, மொத்தம் ஐம்பது ரூபாய்க்குள் வரும் அளவிற்கு ரூபாய் நோட்டுகளும் சில்லறைகளும் மற்றும் சில சாக்லெட் காகிதங்கள்..

ஏண்டா இந்த பொக்கிஷத்துக்கா நடுராத்திரில ஓசி வண்டி வாங்கிட்டு பொட்ரோல் போட்டுக்கிட்டு ஊர் சுத்துனீங்க..,
குப்பனின் வார்த்தைகளில் உண்மை ஊசலாடிக் கொண்டிருந்தது.
மாலை நேரத்தில் சுமன் அந்தப் பையைக் கொண்டு போய் மகளிர் விடுதியில் சேர்த்துவிட்டு நடுராத்திரில் காந்திபுரம் போய் சுற்றிய கதை, காவலரிடம் பேசிய வசனம், வண்டியில் தேடிய திரைக்கதை எல்லாவற்றையும் அளந்துவிட்டுக் கொண்டிருந்தான். இதெல்லாம் பிற்காலத்தில் எங்கள் கூடவே இருந்தும் கல்லூரியில் செட்டில் ஆன ஒரு ஜீவராசியின் இன்னொரு பாதியிடமிருந்து எங்களுக்குக் கசிந்தது.

சில மாதங்களில் கல்லூரியில் ஆண்டுவிழா நடந்தது. ஆண்டுவிழாவில் புதுமையாக முதலாமாண்டு மாணவர்களும் கலந்து கொள்ளவேண்டும் என்றும் அப்போதுதான் அனுமதி வழங்கப் படும் என்றும் முதல்வர் சொல்லிவிட்ட காரணத்தால் முதலாமாண்டு மாணவர்களும் கல்ந்து கொள்ள தயாராக இருந்தனர்.

விடுதி மாணவர்களான நாங்களும் முதலாமாண்டு மாணவர்களாக இருந்தபோது ஆண்டு விழாவில் கலந்து கொண்டோம். ஆனால் நாங்கள் அதில் வண்ணக் காகிதங்கள் ஒட்ட, மேசை நாற்காலிகள் நகர்த்திப் போட, குளிர் பானங்கள் உடைத்துக் கொடுக்க போன்ற மிக முக்கியமான விருந்தோம்பல் பணிகளைச் செய்து கொண்டிருந்தோம். அதே நேரத்தில் கலை நிகழ்ச்சிகளில் என்னவகையான நிகழ்ச்சிகள் எப்படி நடக்கின்றன என்பது போன்றவைகளை கூடவே இருந்து ரசித்ததில் ஒரு வகையில் எங்களுக்கு கொஞ்சம் கல்லூரி விழாஞானம் இருப்பதாகவே எங்களுக்குத் தோன்றியது.

மக்ளிர் குழுவில் எட்டு எட்டு பேராக மூன்று குழுவினர் குழு நடனம் ஆடுவதாக முடிவெடுத்திருந்தனர். அவர்களுக்கு எடுபிடி வேளை செய்ய அதைப் போல மூன்று மடங்கு ஆட்கள் சேர்ந்து கொண்டு நடன ஒத்திகை பார்க்க ஆரம்பித்தனர். பாட்டுக்குப் பாட்டு, பேச்சுப் போட்டி , ஆங்கில வகையறாக்கள் போன்ற மேடை போட்டிகளுக்கு மாணவர்கள் தயாராகிக் கொண்டிருந்தனர்.

அவை இல்லாமல் கோலப் போட்டி, ஓவியப் போட்டிகளும் , கதை , கட்டுரைப் போட்டிகளும் நடக்க இருந்தன.

விளம்பரம் உருவாக்கும் போட்டி, பல்சுவை நிகழ்ச்சிகளுக்கு இணையாக எங்கள் கல்லூரியில் நடைபெறும். ஒரு குறிப்பிட்ட தலைப்பு, அல்லது தயாரிப்பைக் கொடுப்பார்கள். அதற்கு பத்து நிமிடங்களுக்கு நாம் விளம்பரம் தயாரிக்க வேண்டும். எதுவும் இதுவரை வெளிவராத வகையில் மனம் கவரும் வண்ணம் இருக்க வேண்டும்.

அதி லொரு விளம்பரத்திற்கு ஒரு பெண்பாத்திரம் நடந்துவந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. நடன் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த பெண்களைக் கேட்டபோது தங்களுக்கு நடிப்பெல்லாம் ஒத்துவராது என்று கூறிவிட்டார்கள்.

பரவாயில்லை. உங்கள் துப்பட்டாவை மட்டும் கொடுத்தால் போதும் அதைவைத்து சமாளித்துக் கொள்வோம். என்று இங்கிலீஷ் மென்மையாகக் கேட்டுக் கொண்டு இருந்தான். வழக்கம்போல் புரட்சிப் பெண்கள் அதற்கு எதிர்ப்பைத் தெரிவித்துக் கொண்டிருந்தனர். பேசாமல் அந்த துப்பட்டாவை காசு கொடுத்தே வாங்கி இருக்கலாம்; சிக்கன நடவடிக்கையாகவோ அல்லது ஊழ்வினை காரணமாகவோ இங்கிலீஷ்குப்பன் அவ்வாறு கேட்டுவிட்டான்.

சுமித்ராவும் ஆட்டக் குழுவில் இடம்பிடித்து இருந்தாள். அவளது கருப்புக்கலரில் சற்றுப் பெரிய சைஸ் துப்பட்டாவை ஒரு ஓரமாக எடுத்துவைத்துவிட்டு நடன பயிற்சி மற்றும் ஒத்திகை பார்த்துக் கொண்டு இருந்தாள்.

விதி விளையாடியது. இங்கிலீஷ் ஓரமாக கிடந்த துப்பட்டாவை எடுத்துக் கொண்டு இதை எடுத்திட்டுப் போறேன்,. யாரோடதா இருந்தாலும் மறந்திடுங்க..

என்று அவனுக்கே உரித்தான பாணியில் சொல்லிக் கொண்டே அந்த துப்பட்டாவை எடுக்கப் போனான். கால்பந்து போட்டியில் கோல்விழாமல் தடுக்க ஓடிவரும் கோல்கீப்பரைப் போல சுமித்ரா ஓடிவந்து அவளது துப்பட்டாவை எடுத்துக் கொண்டு யார் துப்பட்டாவை யார் எடுப்பது என்று சொல்லிவிட்டு மிக பயங்கரமாக முறைத்தாள்.

அதைப்பார்த்த இங்கிலீஷ் கடுமையாக கோபம் கொண்டான். ஏற்கனவே இருவருக்கும் நடுவில் அணைப் போட்டு அடைத்து வைக்கப் பட்டிருந்த கோபவெள்ளம் போங்கி கொண்டுவந்தது. பலத்த வாக்குவாதங்களுக்குப் பின் இங்கிலீஷ் சபதம் போட்டான்.

யார் தடுத்தாலும் சரி.., எனது நிகழ்ச்சியில் இந்த கருப்புத் துப்பட்டாவை உபயோகப் படுத்தியே தீருவேன்.

இங்கிலீஷ்குப்பன் இவ்வாறு சபதம் எடுத்துக் கொண்டிருக்கும் போது

சுமன் தனியாக உஷாவிடம் கடலைப் போட்டுக் கொண்டிருந்தான்..,
==========================================================

தொடரும்>>>>>>>>>>>>>

=========================================================

முதல் பாகத்தில்

எங்களில் முதலில் திருமணம் ஆனது சுமித்ராவிற்குத்தான். இன்னும் பயிற்சிக் காலத்தில் நாங்கள் அனைவரும் இருந்ததால் சுமித்ராவின் திருமணத்திற்கு எல்லோரும் சென்றிருந்தோம். மணமக்களுக்குப் பரிசுகளை நாங்கள் கொடுத்தபோது சுமித்ராவின் கணவர் சுமன்குமாரைப் பார்த்து கேட்ட கேள்விதான் எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

"ஏன் இந்தப் பையன் மட்டும் இவ்வளவு சோகமாய் இருக்கிறான்?" என்று கேட்டார்.

"அடப்பாவி மணமேடையில்கூட என் வாழ்க்கையில் விளையாடுகிறாயா" என்று சொன்னாள் சுமிதரா.

--------------------------------------------------------------------------
இந்தக் கதை சுபமாகத்தான் முடியும். அதனால் தைரியமாகக் கதையை தொடர்ந்து படிக்கலாம்

வார்த்தைகளை புதிதாய் படிப்பவர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

6 comments:

  1. பெரிசாசா இருக்கு ஆனால் சுவாரிசியமாக இருக்கு நண்பா

    ReplyDelete
  2. //ஆ.ஞானசேகரன் said...

    பெரிசாசா இருக்கு ஆனால் சுவாரிசியமாக இருக்கு நண்பா
    //

    நன்றி நண்பரே.., சரி செய்ய முயற்சி செய்கிறேன்..,

    ReplyDelete
  3. அண்ணா
    பிரமாதம்
    வாங்க நம்ம பதிவுக்கு வந்து நல்லதா நாலு வார்த்தை சொல்லிட்டு போங்க

    ReplyDelete
  4. அப்புறம் என்ன ஆச்சு,
    சீக்கிரம் எழுதுங்க தல...

    ReplyDelete
  5. // இது நம்ம ஆளு said...

    அண்ணா
    பிரமாதம்//

    நன்றி தல..,

    ReplyDelete
  6. //அக்பர் said...

    அப்புறம் என்ன ஆச்சு,
    சீக்கிரம் எழுதுங்க தல...//

    சீக்கிரம் எழுதிவிடுகிறேன்

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails