Sunday, February 21, 2010

நான் ஒண்ணுமே பண்ணலயே (புனைவுதான், அனுபவமல்ல)

வயதுப் பெண் ஒருத்தி, கல்லூரி மாணவி, அதுவும் தீஃபக் குமாருடன் சூடான கிசுகிசுவில் இருப்பவள் பேசிக்கொண்டே மயக்கம் போட்டு விழுந்தவுடன்  சவீதாவுக்கு ஏதேதோ நினைவுகள் வந்தன. உங்கள் நினைவுக்கு ஒன்றும் தோன்றவில்லை என்றால் இந்தச் சுட்டியைத் தட்டுங்கள் ஏதாவது தோன்றும்.

சே.., சே அதெல்லாம் இருக்காது.

சவீதாவுக்கு சுமித்ராவின் மீது நம்பிக்கை இருந்தாலும் தீஃபக் குமாரின் மீது இல்லை. என்னடி பண்ணலாம்.

எனக்கு தீஃபக் குமாரைப் பத்தித் தெரியும். இதுலயெல்லாம் அவன் நல்ல தற்காப்போட தான் இருப்பான்.இது தோழி.

தோழியை ஒரு மாதிரியாகப் பார்த்துக் கொண்டே சுமித்ராவின் முகத்தில் தண்ணீரைத் தெளித்தாள். (ஏற்கனவே சுமித்ரா மயக்கம் போட்ட கதையை அறிந்து கொள்ள இந்தச் சுட்டி உதவும்.)


மயக்கம் தெளிந்த சுமித்ராவின் கண்கள் கலங்கியிருந்தன. தெளித்திருந்த தண்ணீரின் புண்ணியத்தில் முகம் முழுவதுமே நீர் திவளைகள் தேங்கியிருந்தன.

என்னடி இப்படிப் பண்ணிட்ட.., இது சவீதா


அப்படியெல்லாம் ஒண்ணும் பண்ணியிருக்க மாட்டாடி  நீ கொஞ்சம் சும்மா இருக்கியா...............,

நான் ஒண்ணுமே பண்ணிலடி.

நான் சொல்லல, இவ ஒன்னும் தெரியாத பாப்பாடி

இவர்கள் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று சுமித்ராவிக்கு புரியாவிட்டாலும் சவீதாவிற்கும் சவீதாவின் தோழிகளுக்கும் நன்றாகவே புரிந்துதான் இருந்தது.

அந்த ஆளு கூட நான் ஃபோட்டாவெல்லாம் எடுத்துக்கவே இல்லடி.  நெஜமாவே நீங்கெல்லாம் பாத்தீங்களாடி.

இப்போதும் சவீதாவுக்கு சுமித்ரா மயக்கம் போடும் முன் நடந்து கொண்டிருந்த பேச்சுக்கள் நினைவுக்கு வந்தன, அதே நேரத்தில் மீண்டும் அவளுக்கு அதன் தொடர்ச்சியும் எண்ண ஓட்டத்தில் வந்துகொண்டேதான் இருந்தது.

நீங்க ரெண்டுபேரும்  அன்றைக்கு பொருட்காட்சியில் சுத்துனது எல்லோருக்கும் தெரியும். பொருட்காட்சியில்தான் நீங்கள் இருவரும் ஜோடியாக உரசிக்கொண்டு நடந்து வருவது படத்தில் நன்றாகத் தெரிகிறது.

நாங்க ஜோடியாவெல்லாம் போகலப்பா..,

அவன பொருட்காட்சி வாசல்லதான் பார்த்தேன். பொருட்காட்சி எப்படி போகுது?  கலெக்சன் எப்படி? எந்த ஸ்டால் நல்லாயிருக்கும்னு பொத்தாம் பொதுவா கேட்டுகொண்டு இருந்தான். நம்ம ஸ்டால் முடிஞ்ச பிறகு நான் நம்ம ஸ்டால்லயே இருந்திட்டேண்டி.உருகும் மனிதன், பேசும் தனித்தலை  
நிகழ்ச்சி முடியும்வரை நான் அங்கேயேதான் இருந்தேன் இது எல்லோருக்கும் தெரியும்.

சரி சரி.., நீ நடந்துவந்த கொஞ்ச நேரத்தில அந்த புகைப்படம் எடுத்து இருப்பாங்க போல.., அப்புறம் ஏண்டி அந்த உரசு உரசிக்கிட்டு வர்ர..,

உரசிட்டு எல்லாம் வரலேப்பா..,  கூட்டத்தில பேசுனது கேட்கல அதுனால் கொஞ்சம் பக்கத்தில நடந்து வந்தேன். என்னப் பத்தி உனக்குத் தெரியாதா?

படத்தில பார்க்க அப்படியெல்லாம் தெரியல.., ரெண்டு பேரும் நெருக்கமாக கொஞ்சிக்கிட்டு வர்ரமாதிரி இருந்துச்சு..,

நெருக்கமாக என்று சொல்லும்போதே தோழியின் குரல் ஒரு உருக்கம் காட்டியது,

இப்ப என்னடி பண்றது?

ஒண்ணும் பண்ண முடியாது.

பேசாம   டீன் கிட்ட கம்ப்ளைண்ட் பண்ணிடலாமா?

பண்ணலாம்,  ஆனால் எல்லோரும் அந்த புகைப்படத்தை அப்படியே நம்புவாங்க, நீதான் காதலிச்சு ஏமாத்திறேன்னு சொல்லுவாங்க,,

ஏண்டி யர்ருக்குமே மனசாட்சி இருக்காதா?

ஆமா மனசாட்சி இருக்கிறதா சொல்றவங்க எல்லாம் நீதான் தீபக்குமாரை ஏமாத்தினதா சொல்லிட்டு இருப்பாங்க..,   

தீபக் குமார்தான் ரொம்ப மோசம்னு எல்லோரும் சொல்றாங்களே.., யாருமாடி என்ன நம்ப மாட்டாங்க..,

அவ்வளவு மோசமான ஆளையே காதலிச்சு பழம் கொடுத்த ஆளுன்னுதான் உண்னப் பேசுவாங்க

இப்ப என்னதான் செய்யறது?

யோசிப்போம், மரத்தை வச்சவன் தண்ணி ஊத்தாம போய்டுவானா?  அதுதான் உன் மூஞ்சியப் பார்த்தாலே தெரியுதே..,

தொடரும்====================>>>>>>>>>>>>>>>>


முந்தைய பாகங்களுக்கு இந்தச் சுட்டி
======================================================



=========================================================

7 comments:

  1. கதை சூடு பிடிக்குது...லிங்க் குடுத்து விளக்கியது அருமை அண்ணே...
    தொடரட்டும்...வாழ்த்துகள்..

    ReplyDelete
  2. விஜய் பாட்டை கிளிக் செய்த உடனே பவன் கல்யான் பாட்டை கிளிக் செய்து சேர்ந்தார்போல் பாருங்கள் வித்தியாசமான அனுபவம் இருக்கும்..,

    ReplyDelete
  3. // seemangani said...

    கதை சூடு பிடிக்குது...லிங்க் குடுத்து விளக்கியது அருமை அண்ணே...
    தொடரட்டும்...வாழ்த்துகள்..//

    நன்றி தல..,

    ReplyDelete
  4. தல கதை அருமை. தொடர்ச்சியை தொடர்ந்து எழுதுங்க.

    ReplyDelete
  5. தல கதை ரொம்ப இன்ரஸ்டிங்கா இருக்கு ..

    ம்ம்ம் .. கிளப்புங்கள் பட்டையை

    ReplyDelete
  6. //அக்பர் said...

    தல கதை அருமை. தொடர்ச்சியை தொடர்ந்து எழுதுங்க.//

    நன்றி தல..,

    ReplyDelete
  7. // Starjan ( ஸ்டார்ஜன் ) said...

    தல கதை ரொம்ப இன்ரஸ்டிங்கா இருக்கு ..

    ம்ம்ம் .. கிளப்புங்கள் பட்டையை//

    நன்றி தல

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails