Showing posts with label எம்.ஜி.ஆர். Show all posts
Showing posts with label எம்.ஜி.ஆர். Show all posts

Wednesday, January 12, 2011

நடிகை கண்ணாம்பாவின் கதாபாத்திரத்தில் நடிகை சோனா

வெகுநாட்களுக்கு பிறகு குறுந்தகட்டின் உதவியுடன் ஒரு திரைப்படம் பார்க்க நேர்ந்தது. எம்.ஜி.ராம்சந்தர் என்ற பெயர் எடுத்துப்போடும்போது தென்பட்டது. கதாநாயகன் பெயரோடு சேர்ந்து  கீழே கடைசியில் தென்பட்டது. திரைப்படத்தின் துவக்கத்திலேயே தட்சசீலத்தை வென்றுவிட்டு  நாயகன் நாடுதிரும்புகிறார். அவரது புகழை பறைஅறிவிப்பவர் சொல்லும்போதெல்லாம்  குதிரை திரையின் ஒருபக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு ஓடுகிறது,

நாயகன் குணாளன் நேராக சென்று நாட்டின் பேரரசர் சாம்ராட் அசோகரைச் சந்திக்கிறார்.  அசோகர் கலிங்க போருக்குப் பின் சண்டையே போட்டதில்லை என்று சொல்கிறார்கள். கரீனா கபூரின் கண்ணீருக்குப் பின்னர் அவர் புத்தமதத்தைத் தழுவி விட்டதாக ஷாருக்கான் எங்களுக்குச் சொல்லிக் கொடுந்திருந்தார். இருந்தாலும் எம்.கே.தியாகராஜ பாகவதர் தட்சசீலத்தில் கலகக் காரர்களை ஒடுக்கி திரும்புவதாக ஒரு வசனத்தை பின்னர் வைக்கிறார்கள்.

குணாளன் தனது தந்தையைச் சந்தித்த உடன் தந்தை மணமகிழ்ச்சியுடன் அவரை வரவேற்று அவருக்கு அவரது சிற்றன்னையை அறிமுகப்படுத்துகிறார், குணாளன் போரில் இருந்த நேரத்தில் அவரது தந்தை மகாச் சக்கரவர்த்தி அசோகர் மணம்புரிந்து கொண்டாராம். அந்த சித்தியின் பெயர் மனத்தில் நிற்கவில்லை,. ஆனால் அவரை அழைக்கும்போதெல்லாம் த்ரிஷா என்ற உச்சரிப்பே எனது காதில் விழுந்தது. தந்தையின் மனைவியாக கண்ணாம்பா நடித்திருந்தார்,  கண்ணாம்பா என்றதும் மனோகரா கண்ணாம்பா உங்களுக்கு நினைவுக்கு வந்திருக்கலாம். ஆனால் நினைவிற்கு வரவேண்டியவர்  மனோகரா டி.ஆர் ராஜகுமாரி. அவரைவிட தளுக்கும் குளுக்கும் நிறைந்த ( வர்ணனை உதவி:- வசனகர்த்தா இளங்கோவன்)  உடல்மொழியுடன் கண்ணாம்பா வலம்வருகிறார்.

அவருக்கு பார்த்த உடனேயே எம்.கேடி.யை பிடித்துப் போய்விடுகிறது. அவரை அடையத்துடிக்கிறார், பலானபலான திட்டங்கள் போடுகிறார். சிறப்பாக அலங்கரித்துக்கொள்கிறார். அசோகரின் மூலமாக குணாளனை அந்தப் புரத்திற்கு அழைத்துவந்து பாடச் சொல்கிறார், தந்தையின் முன்பாக மகன் சிற்றன்னையின் அந்தப் புரத்தில் பாட்டுப் பாடுகிறார். கடவுள் வர்ண்ணை மாதிரி பாடுகிறார்.  அதில் கண்ணாம்பா மிகவும் மனம் உருகிவிடுகிறார்.

அவசர வேலை காரணமாக தந்தை அசோகர் வெளியே கிளம்ப மகன் குணாளன் அந்தப் புரத்தில் பாடுவதை தொடருகிறார்.

உன்னை கண்டு மயங்காத பேர்களுண்டோ....,

இந்தப் பாடல்கூட கடவுள் பக்தி பாடல்தானாம்.

சிற்றன்னை சொக்கிப் போய் நடனமும் ஆடுகிறார். இந்தப் பாடல் முடிந்த உடன் எம்.கே.டியை வழிக்குக் கொண்டு வர கண்ணாம்பா பல இலக்கிய விவாதங்களில் ஈடுபடுகிறார்.  இந்தப் படத்தை இப்போது ரீமேக் செய்தால் சோனா பத்துக்கு பத்து மதிப்பெண்கள் பெற்றுவிடுவார்.

ஆனால் சோனாவால் இவ்வளவு பெரிய இலக்கிய விவாதத்தில் ஈடுபடமுடியுமா என்று தெரியவில்லை.

எம்கேடி அறிவுரை கூறிகிறார், இந்த நிலையில் அசோகர் அந்தப்புறத்தில் நுழைய குணாள் குற்றம்சாட்டப் பட்டு நாடுகடத்தப் படுகிறார்.

இளவரசன் குணாளுக்கு  ஆதாரவாக ஒரு பிட்சு பேசுகிறார், அவரை எண்ணெய் கொப்பரையில் போடுமாறு  உத்தரவிடுகிறார். புத்தபிட்சு எண்ணெய் கொப்பரையில் போட்ட உடன் தாமரையாய் மாறி தப்பிவிடுகிறார், இதை கேட்ட அசோகர் பிட்சு மகான் என்பதாக உணர்ந்து படுத்தபடுக்கையாகிவிடுகிறார்.


இவருக்கு வைத்தியம் பார்க்க வரும் வைத்தியரின் மகனாக இளம்வைத்தியராக என்.எஸ்.கிருஸ்ணன் வருகிறார், அவரை கண்ணாம்பாவின் அந்தரங்க தோழி மதுரம் ஆசைப் படுகிறார், அவரை தன்வழிக்கு கொண்டுவர அவரிடம் குழைந்து குழைந்து பேசுகிறார்,  அவரது பேச்சு சன் ம்யூசிக் நிகழ்ச்சிகளிடையே வரும் வாயாடிகளின் குழைவிற்கு நிகராக அமைந்திருக்கிறது. அதுவு,ம் காதல் நோயால் தான் வாடுவதாக இளம்வைத்தியரிடம் சென்று மருந்து கேட்க அவர் பல ஓலைச்சுவடிகளை எடுத்துப்படிக்க அவரது கைகள் மிகச் சிறப்பாக நடித்திருக்கும்.

எம்.கேடி.யின் மனைவி காஞ்சனை தனது சின்ன மாமியாரைப் பார்த்து தனது கணவனை மீட்க உதவி கேட்க செல்கிறார். இவருக்கு சின்னமாமியாருக்கு முன்பே திருமணம் ஆகியிருக்கும்.  அங்கு தன் கணவன் மேல் சின்ன மாமியார் ஆசைப் படுவது புரிந்து நாட்டைவிட்டு வெளியேறிவிடுகிறார்.

மகேந்திரனிடம் அடைக்கலமாகி இருக்கிறார் குணாள். அவருக்கு சில கடிதங்கள் வருகின்றன. மகேந்திரனாக நடித்திருப்பவர் எம்.ஜி.ராம்சந்தர். அதாவது பிற்கால எம்.ஜி.ராமச்சந்திரன் (எ) எம்.ஜி.ஆர் அவர்கள்.

குணாளின் மனைவி மூன்று மாத கர்ப்பம் மற்றும் கடும் ஜூரம் என்று கடிதம் வர யாருக்கும் தெரியாமல் நாடுதிரும்பி தனது மனைவியைப் பார்க்க அந்தப் புரத்திற்குள் நுழைகிறார். அந்தப் புரத்தில் அவரது சிற்றன்னை ஒரு முன்னேற்பாட்டுடன் உள்ளே தங்கியிருக்கிறார்.

-----------------------------------------------------------------------------

இந்தக் காட்சியில் மின்சாரம் போய்விட்டதால் படத்தை தொடர்ந்து பார்க்கமுடியவில்லை. வாய்ப்புக்கிடைக்கும்போது படத்தைப் பார்த்துவிட்டு மீதவிமர்சனத்தை எழுதிவிடுகிறேன்.

இதன் தொடர்ச்சி இங்கே உள்ளது

Saturday, January 8, 2011

பணம் இல்லாத லைஃப்பும் பர்சனாலிட்டி இல்லாத வைஃப்பும்

 பணம் இல்லாத லைஃப்பும்
பர்சனாலிட்டி இல்லாத வைஃப்பும் போர்
மேல்  நாட்டு ஞானி சொன்னதாக ஒரு நகைச்சுவை நடிகர்

இன்று வீட்டிற்குள் நுழையும்போது ஆதித்யா ஓடிக் கொண்டிருந்தது.  எம்.ஜி.யார் படம் போல .  எம்.ஜி.ஆர் படம் ஓடிக் கொண்டிருந்தது.  எம்.ஜி.ஆர்  மேஜர் சுந்தர் ராஜனிடம் அவரது வீட்டில் வைத்துத்தான்  விவாதித்துக் கொண்டிருந்தார்.  தான் கட்ட மறுத்த அபராதத்தை ஏன் கட்டினீர்கள்?அபராதம் கட்டியதால்  தான் தவறு செய்யததாக ஏற்றுக் கொண்டதாக ஆகிவிடுமே என்று சொல்கிறார். அதற்கு நீதிபதியான மேஜர்  சட்டம் உன்னை குற்றவாளி என்றதால் உனக்கு தண்டனை  கொடுத்தேன். நீ நிரபராதி என்று எனது மனசாட்சி சொன்னதால் உனக்கான அபராதத்தை நான் கட்டினேன் என்கிறார்.

எனக்கு இதில் சில குழப்பங்கள் ஏற்படுகின்றன.  நீதிமன்றங்களில் குற்றங்களை ஆராயும்போது சந்தர்ப்ப சாட்சியங்கள் அடிப்படையில் மட்டுமே நோக்கப் படுகின்றனவா? 

அதில் நீதிபதிகளின் சுய எண்ணங்கள் கருத்துக்களின் அடிப்படையிலான பார்வைகள் கொடுக்க மாட்டார்களா?

சட்டங்கள் , சாட்சியங்கள், வாதங்கள், பிரதிவாதங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளப் படுகின்றன என்றால்  ஒரே பென்ச்சில் இருக்கும் மூன்று நீதிபதிகளில்  ஒருவர் வேறுகருத்து கொள்வது எப்படி?  மூவரில் இருவர் ஆளுக்கொரு கருத்து கொள்கிறார்கள் என்றால் மூன்றாமவர் சொல்லும் கருத்துதான் தீர்ப்பாக அமையுமா?  மூன்றாமவர் என்ன முடிவு எடுத்தாலுமே அது சட்டட்த்துக்கு உட்பட்டுத்தானே அமையும்.  அப்படி என்றால் குற்றவாளிக்கு  ஆதாரவான  நிலையை மூன்றாம் நபர் எடுத்துவிட்டால் குற்றவாளி விடுதலை அடைந்து விட மாட்டார்களா? 


அதாவது வாதங்கள் , பிரதிவாதங்கள் சாட்சிகளின் அடிப்படையில்தான் முதலாமவர் குற்றவாளி என சொல்லுகிறார். ஆனால் மற்ற இருவரும் அதே அடிப்படையில் அவரை நிரபராதி என்று கருதிவிட்டால் நீதியின் நிலை என்ன ஆகும்.      பலநேரங்களில் பென்ச்சுகளில் இந்த கருத்து மாறுபாடுகள் ஏற்படுகின்றன. 

அப்படியென்றால் குற்றவாளிக்கு அதிர்ஷ்ட்டக் காற்று அடித்தால் அவனுக்கு ஆதரவான எண்ணங்களைக் கொண்ட நீதியாளர்கள் வந்தால் விடுதலையாகிவிடலாமா?

======================================================================

மேலே சொன்ன தத்துவம் இடம் பெற்றிருந்த படம் ரிக்‌ஷாக்காரன், ஐசரிவேலன், சோ அவர்களிடம் சொல்லுவதாக காட்சி அமைந்திருந்தது.  நீதிபதி கூட ரிக்‌ஷாகாரன் படத்தினைச் சேர்ந்தவர்தான்.


http://icdn.raaga.com/catalog/cd/T/T0000766.jpg

Thursday, July 30, 2009

விஜயகாந்த் Vs எம்.ஜி.ஆர்

பொதுவாக திரைப்படம் பார்ப்பவர்களில் சிலர் தங்கள் காலத்துப் படங்களைப் பார்ப்பார்கள்;ஒரு சிலர் எல்லாக் காலத்துப் படங்களையும் பார்ப்பார்கள்; ஒரு சிலர் எத்தனை வயதானாலும் புதுப் படங்களை மட்டுமே பார்ப்பார்கள். எல்லாவித ரசனை உள்ளவர்களையும் ஒரு முறையேனும் பார்க்கவைக்க முடியும் ஒரு சில பாடல்களில் இதுவும் ஒன்று. இதில் பாடல்வரிகள் மிகவும் கிளர்ச்சியூட்டுவதாக அமைந்திருப்பதாக சிலர் கூறுவார்கள்.





இன்பமே.. உந்தன் பேர் பெண்மையோ
என் இதயக் கனி நீ சொல்லும் சொல்லில் மழலைக்கிளி
என் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி..
இன்பமே உந்தன் பேர் வள்ளலோ..
உன் இதயக் கனி நான் சொல்லும் சொல்லில்மழலைக்கிளி
உன் நெஞ்சில் ஆடும்பருவக்கொடி..
(இன்பமே)


சர்க்கரைப் பந்தல் நான் தேன்மழை சிந்த வா
சந்தன மேடையும் இங்கே சாகச நாடகம் எங்கே
தேனொடு பால் தரும் செவ்விளனீர்களை
ஓரிரு வாழைகள் தாங்கும்
தேவதை போல் எழில் மேவிட நீ வர
நாளும் என் மனம் ஏங்கும்
(இன்பமே)


பஞ்சணை வேண்டுமோ நெஞ்சணை போதுமே
கைவிரல் ஓவியம் காண
காலையில் பூமுகம் நாண
பொன்னொளி சிந்திடும் மெல்லிய தீபத்தில்
போரிடும் மேனிகள் துள்ள
புன்னகையோடொரு கண்தரும் ஜாடையில்
பேசும் மந்திரம் என்ன
(இன்பமே)


மல்லிகைத் தோட்டமோ வெண்பனிக் கூட்டமோ
மாமலை மேல் விளையாடும்
மார்பினில் பூந்துகிலாடும்
மங்கள வாத்தியம் பொங்கிடும் ஓசையில்
மேகமும் வாழ்த்திசை பாடும்
மாளிகை வாசலில் ஆடிய தோரணம்
வான வீதியில் ஆடும்
(இன்பமே)

...........................................

நம் எல்லோருக்குமே நமக்கு பிடித்த பாட்லகளைப் பாடும் ஆசை இருக்கும். சிலர் உரத்த குரலில் பாடுவார்கள், சிலர் குளிக்கும் போது மட்டும் பாடுவார்கள்.

இவரும் ஆடிப்பாடுகிறார், ரீமிக்ஸ் செய்திருக்கிறார்கள்; உங்கள் கற்பனையை கொஞ்சம் அழிப்பது போல தோன்றலாம்

பிடித்தவர்கள் மட்டும் பார்க்கவும். பிடிக்காதவர்கள் நீங்களே ஆடிப்பாடுவதாக கற்பனை செய்து கொள்ளுங்கள்

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails