Sunday, March 13, 2011

வயசுப் பொண்ணு வாந்தி எடுத்தா இவன சும்மாவா விடுவாங்க?

பட பட வென்று தட்டப் பட்ட சத்தத்தில் கல்லூரி விடுதி முழுவதுமே விழித்துக் கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும். சுமன் எப்போது தைரியமான ஆளாக இருந்தாலும் முக்கியமான காலகட்டங்களில் இவன் வெறொரு இடத்தில் இடத்தில் இருப்பான். அவனது ராசி அப்படி என்று சிலர் சொல்லுவார்கள். அந்த நேரத்தில் எஸ்கேப்..............    என்று ஓடி விடுவான் என்றும் சிலர் சொல்லுவார்கள்.

ஆனால் கல்லூரி விடுதியின் அறைக்கு ஒரே கதவு என்பதாலும் ஜன்னல் வழியாக வெளியே செல்ல பயமாக இருந்தாலும் அவன் திறக்காமலேயே இருந்தான். என்ன இருந்தாலும் விடுதிக் கதவுகள் அதற்குரிய பலத்தில் தானே இருக்கும். அடித்த அடியில் கதவுகள் உடைந்து விடும் முன்னரே திறந்து விடலாம் என்று திறந்தாலும்    தைரியசாலி போல முகத்தை வைத்துக் கொண்டு  யார்ரா இது இந்த நேரத்தில்  என்று சொல்லிக் கொண்டே கதவைத் திறந்தான் சுமன்.

வெளியே  தீஃபக்கின் நண்பர்கள்.  கையில் ஸ்டம்ப் , பேட் போன்ற அதிபயங்கர ஆயுதங்களுடன்  வாசலில் நின்று கொண்டிருந்தனர்,


அதற்குள் சத்தம் கேட்டு  விடுதியில் இருந்த பெரும்பாலான மாணவர்கள் கூடி விட்டிருந்தனர்.


 எல்லோரும் வந்து விட்டதால் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்ட சுமன்,
என்னடா இந்த நேரத்தில்.......,  அவன் கேட்கும்போது அவன் மிரட்டுகிறானா? இல்லை பயப் படுகிறானா? என்றே தெரியவில்லை.

”தீபக் குமாரை தூக்கிட்டு போய்ட்டாங்க”

என் ரூம்ல செக் பண்ண போரியா.. ,  பண்ணுங்கடா, பண்ணுங்க...,   இப்போது தைரியமாகவே சொன்னான் . சுமன்.

”பொண்ணு வாந்தி எடுத்தா இவன சும்மா விட்டுவாங்களா”

என்னடா இங்க பிரச்சனை.

இங்கிலீஷ் குப்பனும் வந்து சேர்ந்தான். இங்கிலிஸ் குப்பனைப் பற்றி தெரியாதவர்கள் இந்த சுட்டியைத் தட்டுங்கள்.

இங்கிலிஷ் குப்பன் வந்த உடன் இன்னுமேட் தைரியம் ஆனான் சுமன்.


சுமத்ரா மயங்கி விழுந்த கதையையும் , அதன் பின்னர் நடந்த நிகழ்வுகளையும் சுருக்கமாக குப்பனிடம் சொல்லப் பட்டன. சச்சின், அஜித் போன்றவர்களும் வந்து சேர்ந்தனர்.

சுமத்ரா மயங்கி விழுந்த கதை  தெரியாதவர்கள்  இந்த   சுட்டியத் தட்டுங்கள்.


குப்பன் எப்போது  பிரச்சனைகளை வித்தியாசமாக கையாளுபவன்.  சுமித்ராவின் ஊரைச் சொல்லி நேரா அங்க போயி விசாரிங்கடா என்று சொன்னான்.



சுமன் அறைக்கு ஆயுதங்களுடன் வந்தவர்கள், கிராமத்திற்கு செல்லச் சொன்னதும் பயந்தே போனார்கள். சற்று சோர்வுடனேயே  தீபக்க எப்படி திரும்பிக் கொண்டு வருவது என்று பேச ஆரம்பித்தனர். 

எப்படிடா இதெல்லாம் வீட்டுக்குப் போச்சு?

சுமித்ரா மயங்கி விழுந்த நிகழ்ச்சிக்குப் பின் நடந்த நிகழ்ச்சிகளையும்  சுமித்ரா மிகுந்த மன உழைச்சலுக்கு உள்ளானதால் மிகவும் சோர்ந்து எந்த நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி ஒதுங்கி இருந்ததால் தோழிகளில் ஒருத்தி வீட்டுக்குத் தகவல் கொடுத்ததாக தோழிகளின் தோழன் ஒருவன் சொன்னான்.

சரி வா.,  நாம சுமித்ரா ஊருக்குப் போய் பேசிப் பார்ப்போம்.

போலிசுக்குப் போலம்டா..,  தீபக் குமாரின் நண்பன் ஒருவன் சொன்னான். வேண்டாம்டா பேப்பர்ல வந்தா ரொம்ப அசிங்கம். தவிரவும் சுமித்ராவோட குடும்ப செல்வாக்கு முன்னாடி போலிஸ் ஒண்ணும் பண்ண முடியாது இது டேஞ்சர் டயபாலிக்.  டயபாலிக் பற்றி தெரியாதவர்கள் இந்த சுட்டியைத் தட்டவும்.

குப்பன், டயபாலிக்,சுமன் போன்றவர்கள் சுமித்ராவின் ஊருக்குக் கிளம்பினார்கள். 


சச்சின்னுக்கு திடீரென்று ஒரு சந்தேகம்.

ஏண்டா சுமித்ராவுக்கு தீஃபக் குமாரை பிடிச்சு கல்யாணம் பண்ணி செச்சிரும்பாங்களாடா?  அந்த ஊரில அரிவாள் மனை கல்யாணம் சகஜம்டா..,

அரிவாள் மனைக் கல்யாணம்  என்பது அரிவாள்மனை முனையில் பெண்ணுக்கு தாலிகட்ட வைப்பது.


என்ன நடக்குதுன்னு யாருக்குத் தெரியும்?  நம்ம போயி பார்த்திட்டு வரும். அவ்வளவுதான்.


ஏண்டா தாலி கட்ட மாட்டேன்னு சொன்ன என்னடா பண்ணுவாங்க


வெட்டிடுவாங்கடா..,


தலையன்னு நினைக்காதடா ...,


கொஞ்சம் திகிலுடனே கிளம்பிப் போணார்கள்.



தொடரும்............................................


முந்தைய பாகத்தினைப் படிக்க இந்தச் சுட்டியைத் தட்டுங்கள்







Enjoy the climax of 'Siva' by istream

1 comment:

  1. வித்தியாசமா இருக்கே .. கொஞ்சம் பெருசா எழுத முயற்சி பண்ணுங்க

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails