"அடப்பாவி மணமேடையில்கூட என் வாழ்க்கையில் விளையாடுகிறாயா" என்று சொன்னாள் சுமிதரா.
==========================================================
என்னதான் நடந்து கொண்டிருக்கிறது? ஏன் அவ்வாறு சுமித்ரா நடந்து கொண்டாள்? முதல் பகுதியைப் படிக்க .....இங்கே சொடுக்குங்கள்
=============================================================
முதலாமாண்டு சுற்றுலாவில் மாணவர்கள்
சுமன் இங்க வாடா.................. உன்சீட் ரெடி....................
என்று உற்க்க சப்தமிட்டனர்.
சுமன் வந்த உடன் சுமித்ரா கூறினாள் உன்னையும் என்னையும் தப்பா பேசுறாங்க நீ வேற சீட்டுக்குப் போ.......
===========================================================
இனி அடுத்த பாகம்........,
சுமித்ரா அவ்வாறு கூறிய உடன் சுமன் நகர்ந்து வேறு இருக்கைக்குச் சென்றுவிட்டான். எதையோ எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு அவன் அமைதியாக இடத்தை மாற்றிச் சென்றது கொஞ்சம் ஏமாற்றமாகத்தான இருந்தது. சிறிது நேரம் பேருந்தில் கடும் அமைதி நிலவியது.
பேருந்து புறப்பட்ட உடன் ரங்கீலா பாடல்கள் கேட்க ஆரம்பித்தன. வட நாட்டு மாணவியர் ஆட ஆரம்பித்த உடன் அனைவரும் கைதட்ட தொடங்கினர். இரண்டு இருக்கைகள் தள்ளி மற்ற மாணவர்களும் ஆடத்துவங்க சூழ்நிலை மாறியது.
சுமன் சுமித்ரா விஷயம் மற்றவர்கள் நினைவுகளிலிருந்து மறந்து போனது. அவ்வப்போது சுற்றுலா பற்றியும் அதில் செட்டில் ஆனவர்கள் பற்றியும் வரும்போது பழம் வாங்கியவர்கள் பட்டியலில் சுமன் பெயரும் அடிபடும். வாங்கிக் கொடுத்ததாக எங்களையும் சொல்லும் போது லேசான குற்ற உணர்ச்சி ஒன்று எட்டிப் பார்க்கும். மற்ற நேரங்களில் அந்த நிகழ்ச்சியே எங்கள் நினைவிலிருந்து மறந்து போனது. பொங்கல் விடுமுறை முடிந்து நாங்கள் படிக்க ஆரம்பித்தோம்.
anatomy physiology புத்தகங்களும் மார்க்கர் பேனாக்களும் எங்களின் வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகித்தன. அதில் மிளிரும் மைகொண்டு புத்தகம் பூராவும் கோடு போட்டு படித்ததாக காட்டிக் கொண்டிருந்தோம். புத்தகத்தில் கோடு போடாத பகுதி என்பதே தேடிக் கண்டுபிடிக்கும் படியாக அத்தனை வரிகளும் அடிக் கோடு அல்லது அதன்மேலேயே கோடு போட்டுப் படிக்கப் பட்டன.
தேர்வு நாட்களில் காதலர்களைப் பற்றியும் மாணவிகளைப் பற்றியும் எந்தவித ஆராய்ச்சியும் இல்லாமல் காலங்கள் ஓடியது. அநேகமாக இந்த ஆராய்ச்சிகள் இல்லாத தேர்வுக்கு முந்தய விடுப்பு காலம் அதுவாகத்தான் இருக்கும். தேர்வுக்கு ஆங்காங்கே மாணவர்கள் படிக்கும்போது அவ்வப்போது பொழுதுபோகாமல் செய்த ஆராய்ச்சிகளில் சில இந்த கதையில் சொல்லப் பட்டுள்ளது.சொடுக்குப் படித்துக்கொள்ளூங்கள்
தேர்வு நாட்கள் வந்தது. எங்களுக்குள் கதை எழுதும் திற்மையும் ஆங்கிலத்தில் வாக்கியம் அமைக்கும் திற்மையும் நிறையவே மறைந்திருக்கிறது என்பதை தேர்வு நாளன்று எங்களுக்குப் புரிய ஆரம்பித்தது. தேர்வறையில் எழுத ஆரம்பித்திருந்தோம். ஒரு மணிநேரத்திற்குப் பிறகு திடீரென சிந்தனையில் ஒரு அடைப்பு. கருத்துக்கள் வெளியே வரமால் தடுமாறியபோது பக்கத்தில் யாரிடமாவது உதவி கிடைக்குமா என்று ஆராந்தபோது சுமித்ராவும் சுமனும் அந்தக் கால கங்கூலியும் டெண்டுல்கரும் போல கூட்டணி அமைத்து தேர்வெழுதி கொண்டிருந்தனர். சுமித்ராதான் கங்கூலி என்பது எங்களுக்கு பின்னாளில் தெரியவந்தது.
உச்சத்தலையில் இறங்கிய அந்த அதிர்ச்சியில் ஒரு அரை மணிநேரம் தேர்வெழுதவே முடியவில்லை. தேர்வறை மேற்பார்வையாளரே வந்து தேர்வறையில் தூங்கக் கூடாது என்றுகூறி தேநீர் குடிக்கச் சொல்லி ஒருவழியாக வெளியே வந்தேன்.
தேர்வறையைவிட்டு வெளியே வந்த போது ஒரே பிணத்தை அறுத்துக் கற்றவர்களும், ஒரே மேசையில் சோதனைகள் செய்தவர்களும் தேர்வுக் கேள்விகளுக்கு பதில்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டபோது அது சாதாரண நிகழ்வாகவே தோன்றியது. இருந்தாலும் சுற்றுலாவில் அநாகரிமாக நடந்து இருவருக்குமிடையே இருந்த மென்மையான உறவை ( நட்பு???) உடைத்த குற்ற உணர்வு விலகி இருந்தது போல் இருந்தது.
சாதாரண நண்பர்களாக சுமித்ராவும் சுமனும் இருப்பார்கள் என்றுதான் நினைத்தோம். அடுத்த ஆண்டில் உஷா வரும்வரை.............
===================================================
தொடரும்.
மூன்றாம் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்
அண்ணே டிபெள்ட்டை மாத்துங்க படிக்க முடியல ஒரே டிரேன்ஸ் பரண்ட் :-(
ReplyDeleteவாசிக்க கஷ்ட்டமா இருக்கு...
ReplyDelete:)))
//எங்களுக்குள் கதை எழுதும் திற்மையும் ஆங்கிலத்தில் வாக்கியம் அமைக்கும் திற்மையும் நிறையவே மறைந்திருக்கிறது என்பதை தேர்வு நாளன்று எங்களுக்குப் புரிய ஆரம்பித்தது//
ReplyDeleteஆமாமா.. நான்கூட இன்னைக்கி ஒன்னு எழுதிட்டுத்தான் வர்றேன்.. மத்தவங்க எப்பிடி புரிஞ்சுக்குறாங்களோ இல்லயோ.. எனக்கு புரியுது தல...
தல அனுஷ்கா வெறி ஜாஸ்தியாயிடுச்சு போல...
ReplyDeleteடெம்ப்ளேட் ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது தல.
வேற எதாவது டார்க் கலர் ஃபோட்டோ போடுங்க.. (எனக்குத் தெரியும் அதுவும் அனுஷ்கா தான்..)
ReplyDeleteநாட்டாமை!! டெம்ப்ளேட்டை மாத்துக!!
ReplyDeleteஓட்டு குத்திவிட்டேன்!!
ReplyDeleteசபையோரின் வேண்டுகோளுக்கிணங்க வார்ப்புரு மாற்றப் படுகிறது. சிரமத்திற்கு மன்னிக்கவும்
ReplyDeleteசுட்டிக் காட்டியமைக்கு நன்றி
//Suresh said...
ReplyDeleteஅண்ணே டிபெள்ட்டை மாத்துங்க படிக்க முடியல ஒரே டிரேன்ஸ் பரண்ட் :-(//
வருகைக்கும் சுட்டிக்காட்டியமைக்கும் நன்றி,
சரிசெய்துவிட்டேன். இப்போது சிரமங்கள் இருக்காது என்று நினைக்கிறேன்
//வழிப்போக்கன் said...
ReplyDeleteவாசிக்க கஷ்ட்டமா இருக்கு...
:)))
//
கஷ்டத்தைக்கூட மகிழ்ச்சியுடன் சொன்னதற்கு நன்றி தல.., இப்போது சரி செய்துவிட்டேன்
//கடைக்குட்டி said...
ReplyDelete//எங்களுக்குள் கதை எழுதும் திற்மையும் ஆங்கிலத்தில் வாக்கியம் அமைக்கும் திற்மையும் நிறையவே மறைந்திருக்கிறது என்பதை தேர்வு நாளன்று எங்களுக்குப் புரிய ஆரம்பித்தது//
ஆமாமா.. நான்கூட இன்னைக்கி ஒன்னு எழுதிட்டுத்தான் வர்றேன்.. மத்தவங்க எப்பிடி புரிஞ்சுக்குறாங்களோ இல்லயோ.. எனக்கு புரியுது தல...
//
தேர்வுதானே தல..,
//கடைக்குட்டி said...
ReplyDeleteவேற எதாவது டார்க் கலர் ஃபோட்டோ போடுங்க.. (எனக்குத் தெரியும் அதுவும் அனுஷ்கா தான்..)
//
டார்க் கலர் போட்டால் எழுத்துக்கள் வெள்ளையாக்க வேண்டும் தல. பொதுவாக பின்புலம் வெண்மையாக இருந்தால் வித்தியாசம் இருக்காது என்று நினைத்தேன்.
சபையோரின் உத்தரவுக்கு இணங்க வேறுமாதிரி அமைத்துவிட்டேன்
//thevanmayam said...
ReplyDeleteஓட்டு குத்திவிட்டேன்!!
//
நன்றி தல
தல,
ReplyDeleteஎன்ன கொடுமை இது?
ரெண்டு நாள் ஊர்ல இல்லன்ன உடனே நாலு பதிவை அப்லோட் செய்து விடுவதா?
கிங் விஸ்வா.
Carpe Diem.
தமிழ் காமிக்ஸ் உலகம்
//King Viswa said...
ReplyDeleteதல,
என்ன கொடுமை இது?
ரெண்டு நாள் ஊர்ல இல்லன்ன உடனே நாலு பதிவை அப்லோட் செய்து விடுவதா?
//
வாங்க தல.., வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி
மூன்றுதான் செய்யப்பட்டிருக்கிறது தல..., 50களில் அண்ணா படத்தை தனியே இணையச் செய்துவிட்டேன்
ReplyDelete// சுமித்ராதான் கங்கூலி என்பது எங்களுக்கு பின்னாளில் தெரியவந்தது.//
ReplyDeleteகாப்டனுங்கிறீங்களா ???
1997 (சச்சின் காப்டனாக இருக்கும் போது கனடாவில் விளையாடிய) கங்குலியா
2004 கங்குலியா
//புருனோ Bruno said...
ReplyDelete// சுமித்ராதான் கங்கூலி என்பது எங்களுக்கு பின்னாளில் தெரியவந்தது.//
காப்டனுங்கிறீங்களா ???
1997 (சச்சின் காப்டனாக இருக்கும் போது கனடாவில் விளையாடிய) கங்குலியா
2004 கங்குலியா
//
அந்தந்த வ்ருடங்களில் அந்தந்த கங்கூலி..,
வருகைக்கும் மக்களுக்கு இந்த உண்மையை எடுத்துச் சொன்னதற்கும் நன்றி தல..,