Showing posts with label எந்திரன். Show all posts
Showing posts with label எந்திரன். Show all posts

Monday, August 2, 2010

எந்திரன் பாடல்களுக்கு பின் சில சிந்தனைகள் 2.8.10

நாம் எழுத ஆரம்பித்த காலத்திலிருந்தே சீரான இடைவெளியில் எந்திரன் பற்றிய பதிவுகளை போட்டுக் கொண்டு இருக்கிறோம்.  பாடல் வெளிவந்த பிறகு நிறையப் பதிவர்கள் எந்திரன் பதிவுகளைப் போட ஆரம்பித்துவிட்டார்கள். இப்போது பதிவு போட வில்லை என்றால் எந்திரனை வைத்துத்தான் கல்லா கட்டுகிறோம் என்ற பாராட்டுப் பத்திரத்தை பிடுங்கி விடுவார்களோ என்ற பயத்தாலும் நாமும் எந்திரன் புயலில் குதிக்கிறோம்.

================================================================
எந்திரன் சில சிந்தனைகள்

சிந்தனை எண் 1.  ரஜினி படத்தில் ரஹ்மானுக்கு உள்ள சுதந்திரத்தில் பாதி கூட ஷங்கர் படத்தில் ரஹ்மானுக்கு இருப்பது போல தெரியவில்லை.  முத்து, படையப்பா படங்களில் தெரிந்த கட்டுடைத்தல் இசை இதில் இருப்பது போல தெரியவில்லை. அவையெல்லாம் அதற்கு முந்தைய ரஜினி படங்களுலிருந்து கொஞ்சம் விலகியது போல தோன்றும். இந்தப் பாடல்கள் முந்தைய சங்கர் படங்கள் போலவே உள்ளனவே

சிந்தனை எண் 2.  பாடல்கள் எல்லாம் எந்திரனுக்கே வருவதாகத் தோன்றுவதால் ஒருவேளை எந்திரனுக்கு ஜோடிதான் ஐஸ்வர்யாவா?  அப்போ  ராவணன் கதை மாதிரி விஞ்ஞானியிடமிருந்து ஐஸ்ஸை கடத்திக் கொண்டு போய் எந்திரன் லவ் பண்ணுவாரா?  அல்லது விஞ்ஞானிதான் வில்லனா? பத்து வருட உழைப்பின் பலன் ஒன்றும் இருப்பது போல தெரியவில்லை என்று புலம்ப வேறு செய்கிறார்.

சிந்தனை எண் 3: தமிழில் பெயர் வைத்தால் வரிச் சலுகை என்று அறிவித்ததால் ரோபோ எந்திரனாக மாறியது போல தமிழில் கதாபாத்திரங்கள் பெயர் வைத்தால்  தயாரிப்புச் செலவில் பத்து சதம் மானியம்,  வசனங்கள் தமிழில் இருந்தால்  பத்து சதம் மானியம்,  பாடல்கள் தமிழில் இருந்தால் பத்து சதம் மானியம்,  வேற்று மொழிகளில் டப்பிங் செய்யும்போது தமிழில் சப் டைட்டில் கார்டு போட்டால் பத்து சதம் மானியம்,  தயாரிப்புக் கம்பனியின் பெயரை தமிழில் வைத்துக் கொண்டால் இருபத்தைந்து சதம் மானியம் கொடுக்கலாமே, சமீபத்தில் வந்த ஒரு படத்தில் மூலம் எந்திரன் தயாரிப்பாளர் அடைந்த நஷ்டத்திற்கு ஒரு ஆறுதலாக இருக்கும்.  இதன் மூலம் தமிழை வளர்த்தது போலவும் இருக்கும். அதிகமான தயாரிப்புச் செலவு என்று புலம்பும் நபர்களுக்கு உதவுவது போலவும் இருக்கும்.

சிந்தனை எண் 4; பன்னாட்டு கம்பனிகளிலிருந்து வாங்கி தமிழனின் மானம் காத்த தயாரிப்பாளர்களைப் பற்றி ஏன் யாருமே பாராட்ட மறுக்கிறார்கள்?

சிந்தனை எண் 5 : ரஜினியை சின்னப் பையனாகக் காட்டத்தான் ஐஸ்வர்யாவை ஜோடியாகப் போட்டு இருக்கிறார்களாமே உண்மையா ? பல காட்சிகளில் ரஜினி தம்பி போல தெரிவாராமே? அது உண்மையா? சில நாட்கள் பொறுத்திருப்போம்





இதற்கு முன் நாம் எழுதிய் எந்திரன் இடுகைகளுக்கு இங்கே செல்லவும்

Thursday, January 14, 2010

எந்திரன் படத்திற்கு விளம்பரம் செய்வது எப்படி?

தமிழ் திரையுலகத்தில் மிகப் பெரிய பட்ஜெட்டை தன்னுள் எடுத்துக் கொண்டு வரும் படமாக எந்திரன் வர இருக்கிறது. எந்திரன் பட்ஜெட் ஏறக்குறைய தமிழ்திரையுல பட்ஜெட்டாகவே அமைகிறது, தமிழ் திரையுலகத்தினர் நல்வாழ்வு என்பது தமிழ்மக்களின் நல்வாழ்வோட்டு பின்னிப் பினைந்து இருப்பதால் எந்திரன் வெற்றிபெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. எந்திரன் வெற்றிக்கு உழைக்க வேண்டிய அவசியம் ஒவ்வொரு குடிமகனுக்கும் இருப்பதால் ஏதோ நமக்குத் தோன்றும் சில யோசனைகளை இங்கு பதிவிட விரும்புகிறேன்.

பாபா, ஆளவந்தான், கஜேந்திரா போன்ற மாபெரும் சரித்திர படங்களின் வரிசையில் எந்திரன் இடம் பெற்றுவிடுமோ என்ற அச்சம் தமிழ் மக்கள் ஒவ்வொருவரின் நெஞ்சிலும் இருந்து கொண்டேதான் இருக்கிறது.  போட்டிக்கு குருவி, ஏகன் போன்ற படங்கல் ரீ ரிலீஸ் ஆகிவிடுமோஎன்ற அச்சமும் சிலரின் நெஞ்சில் இல்லாமல் இல்லை. பாபா படம் வெளியான போது திருப்பூரில் 500 ரூபாய் கொடுத்து நண்பர் ஒருவர் படம்பார்த்தார்.

இப்போது  திண்டுக்கல் சாரதி, காதலை தேடினேன் போன்ற படங்களையே மாபெரும் வெற்றிப் படம் ஆக்கிய சன் டி.வி.க்கு நாமும் சில யோசனைகளைக் கூறுவோம். விடுபட்டுப் போயிருந்தால்  பின்னூட்டங்களில் நீங்களும் கூறுங்களேன்.

யோசனை 1:-

படத்தின் ஸ்டில்களை ஊர் பெரிய மனிதர்களிடன் காட்டி  படத்தைப் பற்றி ஒரு கருத்தினை வாங்கி சன் டி.வி.யில் ஒளிபரப்பலாம். மக்கள் ஸ்டில் என்பதை திரைப்படம் என்று நினைத்துக் கொண்டு படம் பார்ப்பார்கள்.  இணையத்தில் வந்திருக்கிறதா என்பதை தேட ஆரம்பிப்பார்கள் பயங்கர விளம்பரம் கிடைக்கும்.

யோசனை 2=

சன் டி,டிஎச் சில் நேரடியாக ஒளிபரப்பு செய்யலாம். ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு ரகசிய எண் கொடுத்து அதற்கான கட்டணமாக குறைந்த பட்சம் 5000 வசூல் செய்யலாம். அதன் நடுவே  பத்துக்கு பத்து என்ற விகிதத்தில் விளம்பரங்கள் ஒளிபரப்பி பணத்தை அள்ள முடியும். அதில் இரண்டு நிமிடங்கள் எந்திரன் விளம்பரமே போட்டால் படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கும் ஆசை அனைவரின்ன் மனதிலும் துளிர்விட்டு வளர ஆரம்பிக்கும்.

யோசனை 3=

இப்போது பிரிண்ட் போடுவதற்கு ரூ 50,000 தான் செலவாகிறதாம். தமிழ் நாட்டில் உள்ள அனைத்து திரையரங்கிலும் ரீலீஸ் செய்தால் படத்தைப் பற்றிய பேச்சு வருவதற்குள் பெரிய அளவில் காசு பார்த்து விடலாம். காசுக்கு காசும் ஆச்சு கின்னஸுக்கு கின்னஸும் ஆச்சு.

யோசனை 4=

படம் வெளியாகும் திரையரங்கின் இடைவேளையின் போது சூப்பர் ஸ்டாரை ஹெலிகாப்டரில் அழைத்து சென்று கையைக் காட்டச் சொல்லலாம். ரசிகர்கள் திரையரங்க வாசலில் குவிந்து இருப்பார்கள். நான் எப்ப வருவார் எப்படி வருவார்னு தெரியாட்டியும் கரெக்ட்டா வந்து கையாட்டுவார் என்ற நம்பிக்கை ரசிகர்களுக்கு இருக்கும் கண்டிப்பாக படம் பார்க்க வந்து விடுவார்கள்.

யோசனை 5=

படம்பார்க்க வரும் ரசிகர்கள் டிக்கெட்டின் பாதியை அனுப்பச் சொல்லலாம். அதில் தேர்ந்தெடுக்கப் படும் ரசிகர்களின் வீட்டிற்கு ஐஸ்வர்யாவை அனுப்பி பொங்கல் வைக்கச் சொல்லலாம். தமிழர் புகழை நிலைநிறுத்திய பெருமை கிடைக்கும்.

யோசனை 6=

ஒரு நாள் எந்திரனின் வசூலை திருட்டி டிவிடியால் பாதிக்கப் பட்ட மக்கள் நிவாரண நிதியாகக் கொடுத்தால் அகில உலக திரையுலகமும் எந்திரன் வெற்றிக்காக பாடுபடும்.

யோசனை 7=

படத்தில் சாம் ஆண்டர்சனை கவுரவ வேடத்தில் நடிக்க வைத்தால் பதிவுல நண்பர்கள் புகழ்ந்து எழுத படம் கண்டிப்பாக வெற்றி பெற்றுவிடும்.

யோசனை 8=

அமிதாப் வழியை பின்பற்றும் ரஜினி இந்தப் படத்தின் வெளியீட்டின்போது குதா கவா படம் வெளிவந்த போது அமிதாப் கடைபிடித்த வழியை பின்பற்றலாம். ஒரு அருமையான ஒற்றுமை. அந்தப் படத்தின் நாயகி அப்போதைய மூத்த நாயகியான ஸ்ரீதேவி.

யோசனை 9=

படம் பூஜை போட்டு இரண்டு ஆண்டுகள்  நிறைவடைந்ததை முன்னிட்டு ஓராண்டுக்கு மேல் திருட்டு டி.வி.டி வைத்திருப்பவர்களின் உரிமையை ஓரளவு கட்டணம் பெற்றுக்கொண்டு உண்மை என்று அறிவித்துவிடலாம். இதன்மூலம் ஓரளவு வருமாணமும் விளம்பரமும் கிடைத்துவிடும்.

யோசனை 10=

எந்திரன் படம்  injar  என்ற ஃபெரென்ஞ் படத்தின் ரீமேக் என்று ஒரு வதந்தி கிளப்பி விட்டு   injar  என்ற பெயரில் எந்திரனை டப் செய்து வெளியிட்டு உலக அளவில் பணத்தை அள்ளி விடலாம்

டிஸ்கி:-மீள்பதிவுதான்

Saturday, August 22, 2009

எந்திரன் விமர்சனம்.

1. ஏற்கனவே மலைக்கள்ளன், குரு, சிவாஜி என்ற பல பெயர்களில் வந்த எம்.ஜி.ஆர், சிவாஜி,ரஜினி, கமல் போன்ற பலரும் நடித்த கதை,திரைக்கதை, வசனம்.

2.ஏற்கனவே ஆங்கில்ம், இந்தி, தெலுங்கு கொஞ்சம் மலையாளம் போன்ற மொழிகளில் வந்த பிண்ணனி மற்றும் முண்ணனி இசைக் குவியல்

3.வில்லன் மாதிரியான் கதாநாயகி, பல இடங்களில் அவரால்தான் ஹீரோவுக்கு பிரச்சனை

4.துவக்கக் காட்சி அப்படியே ஆங்கிலத்தில், இந்தியில், பழைய ரஜினி படத்தில் வந்த காட்சி, அடுத்த அடுத்த காட்சிகளும் அப்படியே

5. தேவையில்லாத நகைச்சுவை நடிகப் பட்டாளம்

6. நல்ல நடிகர், மிஷின் மாதிரி உழைத்திருக்கிறார்.

7. 20 ஆண்டுகளுக்கு முன் ஹாலிவுட்டில் பரபரப்பாக பேசப் பட்ட கிராஃபிக்ஸ் காட்சிகள்

8.போலீஸுக்கு தெரியும் ஆனால் பிடிக்க மறுக்கும் காரணங்கள்தான் தெரியவில்லை.

9.மாறு வேடத்தில் இருப்பவர்க்கு எதற்கு இன்னொரு மாறுவேடம் என்றுதான் தெரியவில்லை

10. விஜய், அஜித் படங்கள் ஓடுவதுபோல் இதுவும் ஓடும்

பின்குறிப்பு:- கந்தசாமி வெளிவருவதற்கு முதல்நாள் இந்த விமர்சனத்தைப் போட வேண்டும் என்று நினைத்திருந்தேன். எனக்குத் தெரியாமலேயே படம் வெளிவந்துவிட்டது என்பதை பதிவுகளின் மூலம் உணர முடிந்ததால் அதனால் இந்த விமர்சனத்தையே எந்திரன் படத்துக்கும் வைத்துக் கொள்ளுமாறு முன் கூட்டியே ரசிகர்களை கேட்டுக் கொள்க்கிறேன்.

டிஸ்கி:- மீள்பதிவு, எந்திரன் விமர்சனத்தை முதலிலேயே போட வேண்டும் என்ற தனியாத தாகத்தில் போட்டது

Tuesday, April 7, 2009

அருந்ததி பாணியில் எந்திரன்

அ டி யே பொ ம் மா யி............

சமீப காலமாய் இளைஞர்களை தொல்லைப் படுத்திக் கொண்டிருக்கும் அருந்ததி படத்தின் விளம்பரங்களிலேயே ஆயிரம் சந்திரமுகி ஒன்றாய் வந்தது போல என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். திரையரங்கிற்கு ரசிகர்களை இழுக்கும் படங்களில் ரஜினி படங்கலுக்கு நிகராக அருந்ததி படம் ஓடிக் கொண்டிருக்கிறது. அதைப் பற்றி நாம் ஏற்கனவே எழுதிவிட்டோம்.

அதே பாணியில் ரஜினிக்கு ஒரு கதை யோசித்தபோது தான் நாம் ஏற்கனவே எழுதிய கதை நினைவுக்கு வந்தது. அதை உங்களின் பார்வைக்கு மீள்பதிவாகக் கொடுக்கிறோம். துளி கூட மாற்றி அமைக்காமல் அப்படியே ஒரு மீள்பதிவு.
==========================================================



எந்திரன் புத்தம்புதிய கதை

சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாள் பரிசாக இந்த பொற்காவியத்தை அவரது காலில் சமர்க்கிறோம்.

யந்திரன் entirely different entertainment

முதல் காட்சியில் நாயகன் சங்கராயனிலிருந்து இறங்கி வருகிறார். நாட்டிலேயே முதல்முறையாக பெரிய பெரிய படிப்பெல்லாம் படித்து விட்டு வருகிறார்.

அவரது பெற்றோர் அவருக்கு திருமண்த்திற்கு பெண் பார்க்கிறார்கள். இந்திய கலாச்சாரத்திற்கு தகுந்த பெண்ணாய் பார்க்கிறார். கேரளாவிற்குச் செல்கிறார். போகும் வழியில் பொள்ளாட்சி ரோட்டில் ஒரு பாட்டு. உடன் ஆட ஸ்ரேயா..


கேரளாவில் அவரை வில்லன் கூட்டத்தினர் கடத்தி விடுகின்றனர். தலமை மந்திரவாதி திலகன்,, தலைவரின் உடலில் ஒரு யந்திர தகட்டை வைத்து விடுகிறார். யந்திர தகடு உடலில் சேர்ந்த உடன் தலைவர் வில்லன் கூட்டத்தின் சொல்படி நடக்க ஆரம்பிக்கிறார்.

வில்லன் கூட்டத்தினர், உலகில் உள்ள பெரும்தலைகள் பலரை கொண்று குவிக்க ஆணையிடுகின்றனர். முதலில் ரஷ்யத் தொழில் அதிபரை கொல்கிறார். அதனை ஒரு அழகி விடியோ எடுத்து விடுகிறார். அடுத்து ஜெர்ம்னிக்குச் செல்கிறார்.


இந்த நிலையில் தலைவர் யந்திரத்தின் கட்டுப்பாட்டில் இருப்பது அவரின் குடும்பத்திற்கு தெரிந்துவிடுகிறது. உடனே இமயமலையில் 1000ஆண்டுகள் வாழ்ந்திருக்கும் மகான் அமிதாப்ஜியிடம் செல்கின்றனர். அவர் தனது தவ வலிமையால் தலைவரின் ஆன்மாவைத்தனியாக பிரித்து தலைவரைக் காப்பாற்ற அனுப்புகிறார். தலைவரின் ஆன்மா மனித உருக் கொண்டு தலைவரை காப்பாற்றச் செல்கிறார்.

இந்த நிலையில் எந்திரத் தலைவர் அமரிக்கா செல்கிறார். கடல் கடந்து செல்லும் சக்தியை அமிதாப்ஜி தராததால் ஆத்ம சக்தி திரும்பி விடுகிறார்.


கடல் கடந்து செல்லும் சக்தியை ஆதித்ய கணேசச் சித்தரிடம் தான் இருக்கிறது. அவர் விண்ணுலகம் பார்க்கும் ஆசையில் மண்ணுலகம் நீங்கிவிட்டார். அவரை வரவைக்க சிறப்பு வழிபாடுகள் செய்ய வேண்டும் என்கிறார். அந்த பூசைகளை அவர் திருமணம் செய்து கொள்ளும் பெண்தான் செய்ய வேண்டும் என்கிறார்.

ஐஸ்வர்யா பூஜைகள் செய்து வருகிறார். இந்த சூழ்நிலையில் ஜெர்மானிய தொழிலதிபரைத் தலைவர் ஐ.நா. சபை வாசலில் வைத்துக் கொண்று விடுகிறார். அடுத்த கட்ட பூஜையாக இமயமலை பனிக்கு நடுவே பூங்குண்டம் அமைத்து அங்கே கிடைக்கும் இலைகளை ஆடையாக அணிந்து நடணம் ஆடி பூஜை செய்கிறார்.கூடவே ஐந்து இளம் கன்னிப்பெண்களும் ஆடுகிறார்கள். தலைவர் செய்த கொலையால் உலகமே பரபரப்பாகிறது. இந்தியாவின் மேல் போர் தொடுக்க அமரிக்கா திட்டமிடுகிறது.



அடுத்த கட்டமாக அமெரிக்க ஜனாதிபதியை முடிக்கும் பணி கொடுக்க்ப் படுகிறது. தலைவர் மறுத்து விடுகிறார். வில்லன் குரூப் மந்திர வாதிகள் அதீத கோபம் அடைகிறார்கள். ஐஸ்வர்யாவின் பூஜை காரணமாக ஆதித்ய கணேச சித்தர் தோன்றி பல ரகசியங்களைச் சொல்கிறார்.இந்த வலுவான பாத்திரத்தை சிவாஜி சாருக்கு கொடுக்கிறார்கள். முழுக்க கிராபிக்ஸ்.

தலைவரின் நாடி, நரம்பு, ரத்தம், சதை, நகம், பனியன், ஜட்டி எல்லாமே நல்ல எண்ணங்களும் நல்ல சிந்தனைகளும் இருப்பதால் தலைவர் என்றுமே தவறு செய்யமாட்டார். இதுவரை அவர் கொன்றவர்கள் எல்லாம் உலக பயங்கரவாதிகள். அவர் என்றுமே நல்லவர்களை எதிர்க்க மாட்டார். என்று கூறுகிறார். அடுத்த ரகசியத்தையும் கூறுகிறார். தலைவர் பிறந்த அன்றுதான் வானில் துருவ நட்சத்திரம் காணாமல் போனது. அத்னால் தலைவர்தான் துருவ நட்சத்திரம். இதை வெளியே சொல்லக் கூடாது என்று சத்தியம் வாங்குகிறார். ஆதம சக்தி அமெரிக்கா செல்லும் சக்தியைக் கொடுக்கிறார்.


வில்லன் கோஷ்டி யெந்திரனை அடைத்துவைத்து விட்டு இந்தியா முழுவதும் குண்டு வைக்கின்றனர். ஆத்ம சக்தி அமெரிக்கா சென்று விட்டு, யெந்திரனை விடிவித்து இந்தியா அனுப்பிவிட்டு அங்கே அவர் தங்கிவிடுகிறார். தலைவர் அனைத்து இடங்களிலும் குண்டுகளை எடுக்கிறார். அங்கே அமெரிக்க ஜணாதிபதியைக் காப்பற்றும் பொறுப்பை ஆத்மாவும். இந்தியாவில் நடக்கும் மயிர் கூச்செரியும் சாகஸங்களை யெந்திரனும் செய்கிறார்கள். கூடவே ஐஸ்ஸும் போய் மிகவும் உதவி செய்கிறார். அங்கே தலைவர்க்கு பிரபல டென்னிஸ் வீராங்கணை உதவி செய்கிறார்.


கடைசியில் அமெரிக்காவையும் இந்தியாவையும் தலைவர் காப்பாற்றீவிடுகிறார். இந்த நிலையில் வெளி கிரகங்களீலிருந்து இரண்டு வாகண்ங்கள் வருகின்றன. அதில் இருந்து இறங்குபவர்கள் தாங்கள் ரஜினி ரசிகர்கள் என்று சொல்லிவிட்டு

யூனிவர்ஸ் முழுவதும் உன்னை வென்றிட யாரு...
பிரபஞ்ச நாயகனே ........

பாட்டுடன் படம் முடிவடைகிறது.


டாங்கர் வண்டியில் துரத்தும் படைகளைப் பார்த்து தலைவரின் வசனம்..

யெந்திரனுக்கே யெந்திரமா........



தலைவர் ஒவ்வொருவரையும் போட்டுத்தள்ளும்போது பேசும் வசனம்

நான் ஒருத்தனக் கொண்ணா நூறு பேரை கொண்ண மாதிரி


அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் டக் டக் என்று பயணம் செய்துவிட்டு

ஆண்டவன் சொன்னான் அமெரிக்கா வந்தேன்

ஆண்டவன் சொன்னான் அமெரிக்காவிலிருந்து வந்தேன்


சொல்லி பல வகைகளில் கலகல்ப்பாக்கலாம்.



பின்குறிப்பு:-
வழ்க்கமாக ரஜினி படமென்றால் பழைய ரஜினி படங்களீன் சாயல் இருந்தே தீர வேண்டும். அதனை ஓரளவே நிறைவேற்ற முடிந்தது.

========================================================

நாம் எழுதிய பிற எந்திரன் கதைகளை இங்கே.

அடுத்ததாக இங்கே நீங்கள் படிக்கலாம்

========================================================

முதலிலேயே எழுதிவிட்டதாலும் அதிலும் தமிழுக்காக எழுதியதாலும் அருந்ததி அளவுக்கு ரத்தம் சேர்க்கப் படவில்லை.

Sunday, January 25, 2009

எந்திரன் உங்களுக்காக ஒரு பழைய கதை

ஊழல் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் தனது முகங்களைக் காட்டி வளர்ந்துகொண்டே இருக்கிறது. கல்தோன்றி மண்தோன்றிய காலத்திலிருந்தே பல்வேறு விதமான மோசடிகள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன. அதனடிப்படையில் பல்வேறுவிதமான இலக்கியங்களும் இதிகாசங்களும் உருவாகிக்கொண்டேதான் இருக்கின்றன.

நவீன கால படைப்பாளிகளில் ஷங்கர் மிகவும் முக்கியமானவர். நாட்டில் நடக்கும் பல்வேறு ஊழல்களை வெளிப்படுத்தி மக்களை விழிப்புணர்வு கொண்டுவருவதில் ஷங்கரின் படங்களுக்கு தனி இடம் உண்டு. அதைப் போன்ற ஒரு கதைதான்


கம்ப்யூட்டர் ஊழலுக்குள் எந்திரன்.


முன்குறிப்பு: இந்தக்கதையில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே. இதில் வரும் பாத்திரங்களும் சம்பவங்களும் யாரையும் குறிப்பிடுவன அல்ல.


சிறுவன் ரஜினி கூட்டல் கணக்குப் போடுவதற்கு பாசிமணிகளை உபயோகப் படுத்துவதிலிருந்து படம் துவங்குகிறது. அடுத்த காட்சியில் எல்லோரும் வாய்ப்பாடு உபயோகப் படுத்தும் போது சிறுவன் ரஜினி கால்குலேட்டர் உபயோகப் படுத்துகிறார்.

கல்லூரிக்குச் செல்லும்போது பைக் ஓட்டுவதற்கு நவீன சாதனம் ஒன்றை உபயோகப் படுத்துகிறார். தனியாக ஒரு கம்ப்யூட்டர் கம்பெனி துவக்குகிறார். அப்போது கார் ஓட்ட தனி சாதனம் ஒன்றை உபயோகப் படுத்துகிறார். அதில் பல்வேறு நவீன வசதிகளை வைத்திருக்கிறார். ஒரு சூப்பர் கம்ப்யூட்டராக அதை உருவாக்கி உபயோகப் படுத்துகிறார். ஆட்டோ அப்டேட் வசதியை உருவாக்கி வைக்கிறார்.

அவரது கம்ப்யூட்டர் கம்பெனி உலக அளவில் மிகப் பெரிய இடத்தைப் பிடிக்கிறது. உலகத்தில் உள்ள பல்வேறு நாடுகளில் பல்வேறு ஊர்களை தேர்ந்தெடுத்து தன் சொந்த செலவில் கழிப்பிட வசதிகள் செய்து கொடுக்கிறார். உலக மக்கள் அனைவரும் ரஜினிகாருவை புகழ்ந்து விழா எடுக்கிறார்கள்.
"சத்தியமே லட்சியமாய் கொள்ளடா"
பழைய பாட்டை ரீமிக்ஸ் போட்டு ஆடுகிறார்கள்.

பாட்டு முடிந்ததும் ரஜினிகாரு கைதுசெய்யப் படுகிறார். அவர்மீது சரமாறியாக ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப் படுகின்றன. கழிப்பிடம் கட்ட குழிதோண்டியதில் கிடைத்த மண்ணை நாடுவிட்டு நாடுதாண்டி கொட்டியதாக கணக்குக் காட்டி பலகோடி ரூபாய்கள் வருமான வரி ஏய்ப்பு செய்த்தாக குற்றம் சாட்டப் படுகிறது. அவர் கைது செய்யப் பட்டதால் அவரது கம்பெனியின் ஷேர் மதிப்புகள் குறைந்து கொண்டே வருகின்றன. அதனால் அப்பாவி கிராமத்து மாணவர்கள் பொங்கி எழுகிறார்கள்.

ரஜினியின் வீட்டை சூறையாடுகிறார்கள். அவரது தானியங்கி சூப்பர் கம்ப்யூட்டர் சாதனம் தூக்கி குப்பை வண்டிக்குள் போடப் படுகிறது. குப்பை வண்டியில் போகும் சாதனம் ஆட்டோ அப்டேட் ஆகிறது. மனித உருவத்தைப் பெருகிறது. குப்பை வண்டிக்குள் இருந்து ரஜினியைப் போலவே உருவ அமைப்பைக் கொண்ட எந்திரன் வெளியே வருகிறார். ( ஜீன்ஸ் படத்தைவிட அற்புதமாக வரவேண்டும் என்பதால் கிராபிக்ஸ் காட்சிகள் அனிமேசன் காட்சிகள் அமெரிக்காவில் உள்ள நானோஹார்டு கம்பெனியில் செய்து வருகிறார்கள். இவர்கள் பில்கேட்ஸுடன் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)

எந்திரன் ரஜினி வெளியே வந்தவுடன் துப்பறியும் பணியில் ஈடுபடுகிறார். பிபாசா பாசுவின் நடனம் பார்ப்பதற்காக ஒரு ஹோட்டலுக்குச் செல்கிறார். அங்கே அவருக்கு ஒரு உண்மை தெரிகிறது.

அமெரிக்க ஜனாதிபதியின் தூண்டுதல் காரணமாக இந்த நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன என்ற உண்மையை அவர் கண்டறிந்த உடனேயே பிபாசா கடத்தப் படுகிறார். பிபாசாவைப் பின் தொடர்ந்து எந்திரன் செல்கிறார். பிபாசாவை அமெரிக்காவுக்குக் கொண்டு சென்று அமெரிக்க ஜனாதிபதிமுன் நிறுத்துகிறார்கள். ( அமெரிக்க ஜனாதிபதி பாத்திரம் தமிழ்திரையில் வருவது இந்த ஆண்டில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது).

அங்கே பிபாசா மீண்டும் நடணம் ஆடுகிறார். அந்த நடனத்தைக் காண அவரின் பால்ய நண்பர்களும் வருகிறார்கள். அவர்களைப் பார்த்த எந்திரன் அதிர்ச்சியடைகிறார். அவர்களில் ஒருவர் வினுசர்க்கரவர்த்தி. கதையில் அடுத்த திருப்பம் வருகிறது.

..........................................................................................................

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ரஜினி கல்லூரியில் படித்துவருகிறார். உலக அளவில் நடக்கும் அறிவியல் வினாடிவினால் வெற்றி பெற்றுவிட்டு விமானத்தில் வருகிறார். அப்போது ஒருபெண் அவரைப் பார்த்த உடன் காதல் கொண்டு பாட்டு பாடுகிறார். ரஜினியிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொள்கிறார்.
நான் தான் மிஸ். வேர்ல்டு.
என்பதைக் கேட்ட ரஜினி தனக்கே உரிய சிரிப்பை உதிர்த்துவிட்டு திரும்பி விடுகிறார். ரஜினி படிக்கும் கல்லூரிக்கு வேலைக்கு சேர்ந்து விடுகிறார் ஐஸ்வர்யா . ரஜினியை துரத்தி துரத்தி காதலிக்கிறார்.

பணம் அதிகமாய் இருந்தால் ராத்திரி தூக்கம் வராது
பொண்டாட்டி
அழகாயிருந்தால்

எப்போமே தூக்கம் வராது
என்று சொல்லிவிட்டு தன் மாமன் மகளை திருமணம் செய்து கொள்கிறார். கம்ப்யூட்டர் நிறுவனத்தைத் துவக்கி உலக அளவில் பெரிய தொழிலதிபர் ஆகிறார். அவர் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவர் மனைவி சமைத்துக் கொடுத்த உணவையே சாப்பிடுகிறார்.

ரஜினி திருமணம் செய்து கொள்ளமுடியாத ஐஸ்வர்யா கிராமத்தில் போய் தவம் செய்யத்தொடங்குகிறார்.

..................................................................................................

ஐஸ்வர்யாவின் தந்தைதான் வினுசர்க்கரவர்த்தி. தன் மகள் சாமியார் ஆக காரணமாய் இருந்த ரஜினியைப் பழிவாங்க தனது பால்ய நண்பன் அமெரிக்க ஜனாதிபதியை அனுகிறார். அவரது செல்வாக்கினைப் பயன்படுத்தி ரஜினியின் கம்ப்யூட்டர் கம்பெனியில் பல ஊழல் குற்றச் சாட்டுகளை சுமத்தி சிறையில் அடைக்கிறார்கள்'

அமெரிக்க ஜனாதிபதியை தனியே சந்தித்த எந்திரன் நடந்த உண்மைகளைச் சொல்ல ஜனாதிபதி திருந்திவிடுகிறார். ரஜினியைக் கொல்ல வினுச் சர்க்கரவர்த்தி ஆட்களை அனுப்புகிறார். அவரைக் காப்பாற்ற எந்திரன் பறந்து வருகிறார். வான் வழியிலேயே அவரைத்தடுக்க முயற்சிகள் நடக்கின்றன். பலத்த சண்டைக்குப் பின்னர் முதலாளி ரஜினியும் எந்திரன் ரஜினியும் ஐஸ்வர்யாவின் கிராமத்திற்கு செல்கின்றனர். சண்டை நடக்கிறது. ஐஸ்வர்யா தவம் கலைந்து எழுந்து விடுகிறார். ரஜினியைப் பார்த்து
இன்னும்
கல்லூரி மாணவன் மாதிரித்தான் இருக்கறீங்க
என்று சொல்கிறார். அதற்கு ரஜினி
நீ 94ல தான் மிஸ். வேர்ல்டு

நான் எப்பவுமே மிஸ்டர். வேர்ல்டு


என்று கூறுகிறார். மனம் திருந்திய ஐஸ்வர்யா ரஜினி ரசிகர் மன்றத்தில் சேர்ந்து சேவை செய்ய ஆரம்பிக்கிறார்.

சத்தியமே லட்சியமாய் கொள்ளலடா
பாட்டுடன் கதை நிறைவடைகிறது.

Wednesday, December 24, 2008

ரஜினிக்கு உதவும் ஐஸ்வர்யா

சூப்பர் ஸ்டார் படங்கள் என்றாலே தனி மதிப்பு நம்மிடம் இருந்து கொண்டே இருக்கிறது। அவரது படங்களின் மீது நமக்கு என்றும் ஒரு கண் இருந்து கொண்டே இருக்கும்। அவரது நிகழ்காலப் படங்களும் எதிர்காலப் படங்களும் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நமக்கு இருந்து கொண்டே இருக்கும்।
அந்த வகையில் கதை எண் 1 பெரிய பொழுது போக்கு சித்திரமாக அமைந்தது।

இப்போது எந்திரனை கல்லூரியில் வைத்துப் பார்க்கும் நம்முடைய சின்ன ஆசை।


ரோபோ ஒரு கல்லூரி மாணவன்। இரண்டாம் ஆண்டு எந்த நேரமும் புத்தகம் கையுமாக இருப்பவர்। வம்பு தும்பு எதர்க்கும் போகாதவர்। (சூப்பர் ஸ்டாரின் இளமையான தோற்றத்திற்காக இருபது கோடி செலவிடப் படுகிறது)। அவரது அமைதியான அறிவான நடவடிக்கைகளாலும், கல்லூரியில் உள்ள எறும்புகளுக்கு கூட உதவும் எண்ணமும் இருப்பதாலும் கல்லூரியின் கனவுக் கன்னி ஐஸ்வர்யா அவர் மேல் காதல் கொள்கிறார்। [ஐஸ்வர்யாவின் இளமையான தோற்றத்திற்காக பத்துக் கோடி ஒதுக்கப் பட்டுள்ளது]। சூப்பர் ஸ்டார் ஒத்துக் கொள்ள மறுக்கிறார்। தனக்கு அதிகமான வேலைகள் இருப்பதாகவும் தன்னால் காதலில் எல்லாம் ஈடுபட முடியாது என்றும் கூறுகிறார்।
http://www.lankafocus.com/cinema/wp-content/uploads/2010/07/enthiran.gif
அதிர்ச்சி அடையும் ஐஸ்வர்யா தனது காதலில் என்ன குறை என்று ஆக்ரோஷமாக கேள்வி கேட்கிறார்। இன்றைய இளைஞர்கள் போல தான் ஒன்றும் டைம்பாசுக்காக காதலிக்க வில்லை என்றும் இரண்டுநிமிடங்கள் இடைவிடாது வசனம் பேசுகிறார்। இளைஞர்களைப் பற்றி பேசும்போது மட்டும் அவரது காது துடிக்கிறது। மற்றபடி அமைதியாக காதலிக்க முடியாது என்று கூறுகிறார்। கோபத்தின் உச்சிக்கே செல்லும் ஐஸ்வர்யா அந்தக் கேள்வியைக் கேட்டு விடுகிறார்


நீங்கென்ன மனுசனா? எந்திரனா? பேருதான் ரோபோன்னா ஆளும் ரோபா மாதிரி இருக்கீங்க।
கேட்டுக்கொண்டு இருக்கும் வானத்திற்கு பயங்கர கோபம் வருகிறது। மாநகரத்தின் ஓரத்தில் இருக்கும் கடலுக்கும் பயங்கர கோபம் வருகிறது। இடிமின்னல் கொந்தளிப்பு வருகிறது। ரஜினி அமைதியாக இருக்கிறார்। பக்கத்தில் ஓடும் ரயில் கூட தட தட வென்று ஓடுகிறது। ஐஸ்வர்யாவின் கண்களில் ரத்தம் வடிகிறது , அப்படியே மயங்கிசாய்கிறார்। அவரை ஒரு வயதானவர் தூக்கிகிறார்। மயக்கம் தெளிந்தவுடன் ஐஸ்வர்யாவைப் பார்க்கிறார்।


ரோபோ சாதாரண மாண்வன் இல்லைம்மா அவன நம்பி ஒரு நாடே இருக்கு। என்று சொல்லிக் கொண்டே ஃப்ளாஸ்பேக் போகிறார்।


இளமை கொஞ்சும் கிராமம்। அப்படியே வயல் வெளியிலேயேதான் ஊருக்குள்ளேயும் வெளியேயும் போகும்வழி, வரும்வழி। அதில்தான் பிரசன்னாவும் பிரியா மணியும் பள்ளிக் கூடம் போவதும் வருவதுமாக இருக்கிறார்கள்। தேர்வு முடிவுகள் வெளிவந்துவிட்டன। பிரசன்னாதான் பனிரண்டாம் வகுப்பில் முதல் மாணவன்। பிரியாமணி ஃபெயில்। நான் ஃபெயில் ஆனா என்ன நீதான் பெரிய படிப்பெல்லாம் படிக்க போறயே என்று பிரசன்னாவை வாழ்த்துகிறார்। மெடிக்கல், என்ஞ்னிய்ரிங், அக்ரி, டீச்சர், வக்கீல், போலீஸ் திருடன் என்று எல்லா படிப்புகளுக்கும் அப்ளிகேசன் போடுகிறார்। பிரியா மணியும் அதற்கெல்லாம் ஸ்டாம்ப் ஒட்டிக் கொடுத்துக் கொண்டே கேட்கிறார்। உனக்குத்தான் எதுவேனாலும் கெடைக்குமே ஏன் இப்படி டைம் வேஸ்ட் பண்ணிக் கொண்டு இருக்க, என்கிறார்। பிரசன்னா சிரித்துக் கொண்டே படிவங்களை அனுப்பிக் கொண்டே இருக்கிறார்। சிலநாட்கள் ஆட்டமும் பாட்டுமாக களிகிறது।

முதலில் மெடிக்கலில் இருந்து பதில் வருகிறது। சந்தோஷத்துடன் திறக்கிறார்। பிரசன்னா கடிதத்தை பிரித்த உடன் அப்படியே சோர்ந்து விடுகிறார்। வேகமாக ஓடி வந்து பார்க்கும் பிரியா மணி பிரசன்னாவின் முகத்தைப் பார்க்கும் விளிக்கிறார்। பிரசன்னாவின் விண்ணப்பம் மதிப்பெண்கள் இருந்தும் நிராகரிக்கப் பட்டு விடுகிறது। அடுத்து ஒவ்வொரு விண்ணப்பமும் நிராகரிக்கப் படுகிறது। எல்லா அலுவலகங்களுக்கும் சென்று காரணம் கேட்கிறார்கள் । எல்லா அலுவலகங்களிலும் காரணம் கேட்கிறார்கள்। எல்லா இடங்களிலும் ஒரே பதில்தான் நீ இந்த நாட்டின் குடிமகனே கிடையாது। இந்நாட்டின் குடிமக்களுக்கு மட்டுமே நாங்க இடம் கொடுக்க முடியும் மற்ற நாட்டு காரர்கள் உங்கள் தூதரகம் மூலமாகத்தான் வரவேண்டும் என்று சொல்லி விடுகிறார்கள்।


அப்போதுதான் அந்த உண்மை தெரிகிறது। பிரசன்னா பிறந்த கிராமம் இன்னும் சுதந்திரம் அடையவே இல்லை। அங்கே யுரேனியம் அதிகம் கிடைப்பதால் ஒரு ஐரோப்பிய நாட்டின் பிடியிலேயே இருக்கிறார்கள்।
பிரசன்னா எங்கெங்கோ அலைந்து திரிந்தும் அவருக்கு எந்தக் கல்லூரியிலும் இடம் கிடைக்க வில்லை। மனம் உடைந்து போகிறார்। கூடவே பிரியா மணியும் சுற்றுகிறார்। அப்போதுதான் அந்த முடிவு எடுக்கிறார்கள்। இருவரும் ஒன்று சேர்கிறார்கள்।
இந்த மண்ணில் குழந்தைபிறந்தால் அது இந்த நாட்டு குடிமகன் ஆகிவிடுவான்,
எனவே நமது குழந்தையை இங்கேயே பெற்றுக் கொண்டு லட்சியத்தை நிறைவேற்றுமாறு கூறிக் கொண்டு உயிரை விடுகிறார்। குழந்தையை பெற்றபின் பிரியாமணியும் உயிரை விடுகிறார்। எந்திரத்தனமாக உழைக்க வேண்டும் என்ற காரணத்தில் ரோபோ என்று பெயர் வைக்கிறார்கள்।


கதையைக் கேட்டவுடன் ஐஸ்வர்யா நெகிழ்ந்து போகிறார்।
எங்க அத்தை எங்க மாமனாருக்கு உதவியது போல நான் இவருக்கு உதவுவேன் என்று சொல்லிக் கொண்டே காஃபி போட்டுக் கொடுக்கிறார்।
வெற்றீக் கொடி நாட்டு பாடல் ஆரம்பம் ஆகிறது। பாடலின் ஒவ்வொரு பத்திக்கும் ரஜினி ஒவ்வொரு தேர்விலும் தேர்ச்சி அடைகிறார்। கடைசி வரி வரும்போது அவர் ஐ। ஏ। எஸ் தேர்விலும் தேர்ச்சி பெற்று விடுகிறார்।

அவர் நிறைய மதிப் பெண்கள் பெற்றதால் அவரை நேரடியாக உள்துறைச் செயலராக நியமிக்கிறார்கள் , ( இது இரண்டாவது முறையாக நிகழ்த்தப் படும் சாதனை। ஏற்கனவே தென்னவனில் விஜயகாந்த் குறைந்தவயதில் தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப் பட்டு இருக்கிறார்) ।



அலுவலகத்தில் கோப்புகளைப் பார்த்துக் கொண்டே வருகிறார்। அப்போது அதிர்ச்சிகரமான உண்மை வெளிவருகிறது। பிரசன்னா பிறந்த கிராமத்தை ஆளூம் ஐரோப்பிய மன்னராக ஐஸ்வர்யாவின் தந்தையே இருந்து வருகிறார்। அதனால் ஜோடிகளுக்கு நடுவே பிரச்சனை வருகிறது। தலைவர் சோகமாக முந்திரி தோப்பைச் சுற்றிவந்து பாட்டுப் பாடுகிறார்।

இப்படி ஒரு கிராமம் இருப்பது மந்திரி ஒருவருக்கு தெரிந்து விடுகிறது। அவர் உலக பயங்கரவாதிகளுடன் கூட்டணி அமைத்து ஐஸ்வர்யாவின் தந்தை நாட்டைக் கைப் பற்றிவிடுகிறார்। பிரசன்னாவின் கிராமத்தில் உள்ள யுரேனியத்தைக் கைப் பற்றி உலக அணுஆயுதங்களை வளர்த்த் முயற்சிக்கிறார்। இந்த தகவல்களை ஐஸ்வர்யா வந்து சொன்னவுடன் பொங்கி எழும் சூப்பர் ஸ்டார்। தனி ஆளாக ஐஸ்வர்யாவின் நாட்டிற்குச் சென்று அவரது தந்தையை விடுவிக்கிறார்।
பிரதான வில்லனான அமைச்சருடன் ஒத்தைக்கி ஒத்தை சண்டை போட்டு அழிக்கிறார்।


ஐஸ்வர்யாவை மணந்து கொண்டு தனது சொந்த கிராமத்திற்கு மன்னராக திரும்பி வருகிறார்।

சுபம்।

=================================================================

ஹி ஹி மீள்பதிவுதான்,

வெளிவந்துள்ள எந்திரன் பாடல்கள் இந்தக் கதைக்கு மிக அழகாகப் பொருந்துவதைக் கவனியுங்கள்

இந்தக் கதை பிடித்திருந்தாலும் பிடிக்காவிட்டாலும் மேல்நோக்கிய தமிழ்மணக் கட்டைவிரலிலும் தமிழீஷிலும் கிளிக் செய்து விடுங்கள்

Sunday, October 12, 2008

யந்திரன் entirely different entertainment

சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாள் பரிசாக இந்த பொற்காவியத்தை அவரது காலில் சமர்க்கிறோம்.

யந்திரன் entirely different entertainment

முதல் காட்சியில் நாயகன் சங்கராயனிலிருந்து இறங்கி வருகிறார். நாட்டிலேயே முதல்முறையாக பெரிய பெரிய படிப்பெல்லாம் படித்து விட்டு வருகிறார்.

அவரது பெற்றோர் அவருக்கு திருமண்த்திற்கு பெண் பார்க்கிறார்கள். இந்திய கலாச்சாரத்திற்கு தகுந்த பெண்ணாய் பார்க்கிறார். கேரளாவிற்குச் செல்கிறார். போகும் வழியில் பொள்ளாட்சி ரோட்டில் ஒரு பாட்டு. உடன் ஆட ஸ்ரேயா..


கேரளாவில் அவரை வில்லன் கூட்டத்தினர் கடத்தி விடுகின்றனர். தலமை மந்திரவாதி திலகன்,, தலைவரின் உடலில் ஒரு யந்திர தகட்டை வைத்து விடுகிறார். யந்திர தகடு உடலில் சேர்ந்த உடன் தலைவர் வில்லன் கூட்டத்தின் சொல்படி நடக்க ஆரம்பிக்கிறார்.

வில்லன் கூட்டத்தினர், உலகில் உள்ள பெரும்தலைகள் பலரை கொண்று குவிக்க ஆணையிடுகின்றனர். முதலில் ரஷ்யத் தொழில் அதிபரை கொல்கிறார். அதனை ஒரு அழகி விடியோ எடுத்து விடுகிறார். அடுத்து ஜெர்ம்னிக்குச் செல்கிறார்.


இந்த நிலையில் தலைவர் யந்திரத்தின் கட்டுப்பாட்டில் இருப்பது அவரின் குடும்பத்திற்கு தெரிந்துவிடுகிறது. உடனே இமயமலையில் 1000ஆண்டுகள் வாழ்ந்திருக்கும் மகான் அமிதாப்ஜியிடம் செல்கின்றனர். அவர் தனது தவ வலிமையால் தலைவரின் ஆன்மாவைத்தனியாக பிரித்து தலைவரைக் காப்பாற்ற அனுப்புகிறார். தலைவரின் ஆன்மா மனித உருக் கொண்டு தலைவரை காப்பாற்றச் செல்கிறார்.

இந்த நிலையில் எந்திரத் தலைவர் அமரிக்கா செல்கிறார். கடல் கடந்து செல்லும் சக்தியை அமிதாப்ஜி தராததால் ஆத்ம சக்தி திரும்பி விடுகிறார்.


கடல் கடந்து செல்லும் சக்தியை ஆதித்ய கணேசச் சித்தரிடம் தான் இருக்கிறது. அவர் விண்ணுலகம் பார்க்கும் ஆசையில் மண்ணுலகம் நீங்கிவிட்டார். அவரை வரவைக்க சிறப்பு வழிபாடுகள் செய்ய வேண்டும் என்கிறார். அந்த பூசைகளை அவர் திருமணம் செய்து கொள்ளும் பெண்தான் செய்ய வேண்டும் என்கிறார்.

ஐஸ்வர்யா பூஜைகள் செய்து வருகிறார். இந்த சூழ்நிலையில் ஜெர்மானிய தொழிலதிபரைத் தலைவர் ஐ.நா. சபை வாசலில் வைத்துக் கொண்று விடுகிறார். அடுத்த கட்ட பூஜையாக இமயமலை பனிக்கு நடுவே பூங்குண்டம் அமைத்து அங்கே கிடைக்கும் இலைகளை ஆடையாக அணிந்து நடணம் ஆடி பூஜை செய்கிறார்.கூடவே ஐந்து இளம் கன்னிப்பெண்களும் ஆடுகிறார்கள். தலைவர் செய்த கொலையால் உலகமே பரபரப்பாகிறது. இந்தியாவின் மேல் போர் தொடுக்க அமரிக்கா திட்டமிடுகிறது.



அடுத்த கட்டமாக அமெரிக்க ஜனாதிபதியை முடிக்கும் பணி கொடுக்க்ப் படுகிறது. தலைவர் மறுத்து விடுகிறார். வில்லன் குரூப் மந்திர வாதிகள் அதீத கோபம் அடைகிறார்கள். ஐஸ்வர்யாவின் பூஜை காரணமாக ஆதித்ய கணேச சித்தர் தோன்றி பல ரகசியங்களைச் சொல்கிறார்.இந்த வலுவான பாத்திரத்தை சிவாஜி சாருக்கு கொடுக்கிறார்கள். முழுக்க கிராபிக்ஸ்.


தலைவரின் நாடி, நரம்பு, ரத்தம், சதை, நகம், பனியன், ஜட்டி எல்லாமே நல்ல எண்ணங்களும் நல்ல சிந்தனைகளும் இருப்பதால் தலைவர் என்றுமே தவறு செய்யமாட்டார். இதுவரை அவர் கொன்றவர்கள் எல்லாம் உலக பயங்கரவாதிகள். அவர் என்றுமே நல்லவர்களை எதிர்க்க மாட்டார். என்று கூறுகிறார். அடுத்த ரகசியத்தையும் கூறுகிறார். தலைவர் பிறந்த அன்றுதான் வானில் துருவ நட்சத்திரம் காணாமல் போனது. அத்னால் தலைவர்தான் துருவ நட்சத்திரம். இதை வெளியே சொல்லக் கூடாது என்று சத்தியம் வாங்குகிறார். ஆதம சக்தி அமெரிக்கா செல்லும் சக்தியைக் கொடுக்கிறார்.


வில்லன் கோஷ்டி யெந்திரனை அடைத்துவைத்து விட்டு இந்தியா முழுவதும் குண்டு வைக்கின்றனர். ஆத்ம சக்தி அமெரிக்கா சென்று விட்டு, யெந்திரனை விடிவித்து இந்தியா அனுப்பிவிட்டு அங்கே அவர் தங்கிவிடுகிறார். தலைவர் அனைத்து இடங்களிலும் குண்டுகளை எடுக்கிறார். அங்கே அமெரிக்க ஜணாதிபதியைக் காப்பற்றும் பொறுப்பை ஆத்மாவும். இந்தியாவில் நடக்கும் மயிர் கூச்செரியும் சாகஸங்களை யெந்திரனும் செய்கிறார்கள். கூடவே ஐஸ்ஸும் போய் மிகவும் உதவி செய்கிறார். அங்கே தலைவர்க்கு பிரபல டென்னிஸ் வீராங்கணை உதவி செய்கிறார்.


கடைசியில் அமெரிக்காவையும் இந்தியாவையும் தலைவர் காப்பாற்றீவிடுகிறார். இந்த நிலையில் வெளி கிரகங்களீலிருந்து இரண்டு வாகண்ங்கள் வருகின்றன. அதில் இருந்து இறங்குபவர்கள் தாங்கள் ரஜினி ரசிகர்கள் என்று சொல்லிவிட்டு

யூனிவர்ஸ் முழுவதும் உன்னை வென்றிட யாரு...
பிரபஞ்ச நாயகனே ........

பாட்டுடன் படம் முடிவடைகிறது.


டாங்கர் வண்டியில் துரத்தும் படைகளைப் பார்த்து தலைவரின் வசனம்..


யெந்திரனுக்கே யெந்திரமா........



தலைவர் ஒவ்வொருவரையும் போட்டுத்தள்ளும்போது பேசும் வசனம்


நான் ஒருத்தனக் கொண்ணா நூறு பேரை கொண்ண மாதிரி


அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் டக் டக் என்று பயணம் செய்துவிட்டு


ஆண்டவன் சொன்னான் அமெரிக்கா வந்தேன்

ஆண்டவன் சொன்னான் அமெரிக்காவிலிருந்து வந்தேன்


சொல்லி பல வகைகளில் கலகல்ப்பாக்கலாம்.



பின்குறிப்பு:-
வழ்க்கமாக ரஜினி படமென்றால் பழைய ரஜினி படங்களீன் சாயல் இருந்தே தீர வேண்டும். அதனை ஓரளவே நிறைவேற்ற முடிந்தது.

பின்பின்குறிப்பு:-
பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் மேல்நோக்கிய தமிழ் மணக் கட்டைவிரலிலும் தமிழீஷிலும் க்ளிக் செய்து விடுங்கள்.

18 மாதங்களாக மீள்பதிவு வந்துகொண்டிருக்கிறது. படத்தைத்தான் காணோம்.
=====================
25 மாதங்களுக்கு பின் ஒருவழியாக பாடல்கள் வந்துவிட்டன.,

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails