Showing posts with label சாமியார். Show all posts
Showing posts with label சாமியார். Show all posts

Sunday, March 7, 2010

வசிய மருந்து வைத்து காரியம் சாதிப்பது எப்படி?

சாமியார்கள் தொழில் நன்றாக நடக்க வேண்டும் என்றால் வசிய மருந்து செய்ய தெரிந்திருக்க வேண்டும். வசிய மருந்துகளை நன்றாக தயார் செய்து அதனை பக்த கோடிகளுக்குக் கொடுத்து பக்தர்களுக்கு தாங்கள் நினைத்தது நடந்துவிட்டால் கண்டிப்பாக பக்தர்கள் கூட்டம் உங்கள் பக்கம்தான்.

ஏற்கனவே பேயோட்டும்தொழில் வெற்றிகரமாக நடத்த வழிமுறைகள் பார்த்தோம். இந்த இடுகைகள் வசிய மருந்து வெற்றிகரமாக கொடுப்பது பற்றி ஆராய்வோம்.

கிராமத்திலிருந்து ஆரம்பித்து வருவதால் கிராமத்தில் வசிய மருந்து எவ்வாறு செய்து கொடுத்து வெற்றி பெறுவது என்பது பற்றி பார்ப்போம். சிறுநகரத்திற்கும் இது பொருந்தும்.  பெரு நகரத்திற்கு கொஞ்சம் தில்லாலங்கடி வேலை செய்ய வேண்டும் அவற்றைப் பின்னர் பார்க்கலாம்.


வசிய மருந்து கேட்டு வருபவர்களை  வகைப் படுத்த வேண்டும். கணவன் தன்னிடம் அன்பாக இல்லை. மனைவி அன்பாக இல்லை என்றும் அவர்களை வசியப் படுத்த மருந்து கேட்டு வருபவர்கள் ஒரு கூட்டம்.

புகுந்த வீட்டுக்காரர்களின் அன்பைப் பெற முயற்சித்து வசிய மருந்து கேட்டு வருபவர்கள் ஒரு கூட்டம்.

தான் நினைத்திருக்கும் இளைஞன், இளைஞி க்கு  மருந்து கொடுத்து மயக்க நினைக்கும் கூட்டம் ஒன்று.

பக்கத்து வீட்டுக்காரனையோ அவனது மனைவியையோ மயக்க நினைக்கும் கூட்டம் அடுத்தது.

பெரும்பாலான வசிய மருந்து பார்ட்டிகள் இந்த வரையறைக்குள் வந்து விடுவார்கள்.


முதல் இரண்டு வகையினரை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களது பிரச்சனை ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்காமல் இருப்பது. யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்தால் கூட பிரச்சனை தீர்ந்து விடும். யார் விட்டுக் கொடுப்பது என்ற ஈகோவில் தான பிரச்சனை வளர்ந்து கொண்டே போகும். குறிப்பிட்ட காலத்தில் இரு சாரரும் எதை வேண்டுமானாலும் இழக்க தயாராக இருப்பார்கள். நிம்மதி மட்டும் கிடைத்தால் போதும் என்ற சூழலில் இருப்பார்கள்.  ஆனால் கணவனிடமோ, மனைவியிடமோ அல்லது புகுந்த வீட்டினரிடமோ  விட்டுக் கொடுப்பது என்பதை மட்டும் அவர்களது ஈகோ அனுமதிக்காது.


ஒருவர் விட்டுக் கொடுத்தால் மற்றவர் தானே வழிக்கு வந்து விடுவார். ஆனால் விட்டுக் கொடுக்க மாட்டார்.


வசிய மருந்து சாமியாராகிய உங்களிடம் இது போன்ற ஆட்கள் வந்தால் உங்கள் பாடு கொண்ட்டாட்டம்தான்.  நீங்கள் அவர்களுக்கு தேன், தினைமாவு போன்ற ஏதாவது ஒரு பொருளைக் கொடுத்து பூஜை செய்து இதை சம்பந்த பட்டவர்களிடம் இந்த பவுர்ணமி முதல் அமாவாசை வரை கொடுத்து வரச் சொல்லுங்கள்.

மனைவி தினமும் குளித்து , பூ முடித்து இனிப்புப் பலகாரங்கள் செய்து கொடுத்தால் எந்த ஆண்மகனும் வீழ்ந்து விடுவான்.

அதேபோல கணவனும் தினமும் பூ, அல்வா வாங்கிக் கொடுத்து வந்தால் மனைவி சுலபமாக மடங்கி விடுவாள். இந்த பலகீனத்தை வசிய மருந்து சாமியாராகிய நீங்கள் உபயோகப் படுத்திக் கொள்ள வேண்டும்.  நீங்கள் கொடுத்த வஸ்து வால்தான் பிணக்கு நீங்கியது என பெயர் எடுத்துக் கொள்ளலாம். அதேபோல் மாமனார் மாமியாருக்கும் தினமும் பூஜை செய்யச் சொன்னால் வயதான அவர்கள் மிகச் சுலமாக அல்வாவில் வீழ்ந்து விடுவார்கள்.

அப்படிநீங்கள் கொடுத்த வசிய மருந்தில் மயங்க வில்லை என்றால் கவலைப் படவேண்டியதில்லை.  யாரோ செய்வினை வைத்திருப்பதாகச் சொல்லி நீண்டகால பூஜையை செய்யச் சொல்லலாம். கண்டிப்பாக நீண்டகாலம் வாழ்க்கைத்துணைகளில் ஒருவர் அடுத்தவரின் அன்புக்காகப் போராடினால் வெற்றி கிடைத்தே தீரும்.  

அதை வசிய மருந்துதான் காரணம் என்று கூறி  நீங்கள் நன்றாகப் பைசாப் பார்த்துக் கொள்ளலாம். உங்களுக்கு பக்தர்கள் கூட்டமும் அதிகரித்துக் கொண்டே போகும்.

அடுத்ததாக காதலன், காதலி, அடுத்தவன் மனைவிக்கு வசிய மருந்து கொடுத்தல்

இது கொஞ்சம் சிக்கலான பிரச்ச்னை போல் தெரிந்தாலும்  வசிய மருந்து செய்து கொடுக்கும் தொழிலுக்கு வந்து விட்டால் சவாலை ஏற்றுத்தான் ஆக வேண்டும்.  முதலில் மேற்கண்ட ஆட்களிடம் நேரிடையாக இந்த மருந்தினைக் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதித்துவிடுங்கள்.

(சமீபத்தில் கூட ஏ என்ற நபருக்காக பி என்ற நபர் ஒரு பெண்ணிடம் வசிய மருந்து கொடுக்க பி என்ற நபருக்கு பெண் செட் ஆகிவிட பிரச்சனை கொலையில் முடிந்த கதை செய்தித்தாள்களில் வந்தததல்லவா.., அவற்றை அவர்களிடம் சொல்லிவிட வேண்டும்)

இவர்களுக்கும் அதே போல்தான். உங்களிடம் இருக்கும் தேன், தினைமாவு அல்லது அங்காடிகளில் கிடைக்கும் குழந்தை உணவுகளில் ஏதாவது கொஞ்சம் கொடுத்து சம்பந்தப் பட்ட நபரிடம் கொடுக்கச்சொல்ல வேண்டும்.

இங்கேதான்  ஒரு தொழில் நுணுக்கத்தை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். யாரென்றே தெரியாத எந்த நபரிடமும் யாரும் வாங்கிச் சாப்பிட மாட்டார்கள். உணவுப் பொருட்களை வாங்கிச் சாப்பிட ஆரம்பித்தாலே தவறுக்கு முதல் படி ஆகிவிடும். மற்றவைகளை காரியம் சாதிக்கும் நபர் முடித்துக் கொள்வார்.  ஆனால் உங்கள் வசிய மருந்தால்தான் வீழ்த்தியதாக நினைத்து புலகாங்கிதம் அடைவார்.

இதுபோன்ற எளிய முறைகள் மூலம் 95 % சதவீத வசிய மருந்துகள் வெற்றியடைய வைத்து விடலாம். மீதமுள்ளவர்களுக்கு முழு நம்பிக்கைய்ப்ப்டு கொடுக்க வேண்டும். அப்போதுதான் பலிக்கும் என்று சொல்லி காலந்தாழ்த்தலாம்.  கிரக நிலைகள் சரியில்லை என்று சொல்லி காலந்தாழ்த்தலாம்.   அல்லது கேரள் சாமியார், இமயமலை சாமியாரின் வசிய சக்தி ஏற்கனவே அங்கு செயல் கொண்டு இருப்பதால் தனது சக்தி பலிக்கவில்லை என்று சொல்லலாம்.

இது போன்று ஒப்புக் கொள்ளும்போது உங்களது நேர்மை பக்தர்கள் மத்தியில் மேலும் உயர்வடையும்.  நீங்கள் சொல்வதை அப்படியே கேட்க ஆரம்பித்து விடுவார்கள். வசிய மருந்து கொடுப்பதில் நீங்கள் புகழ்பெற்றுவிட்டால் உங்கள் தொழில் பண மழை கொட்ட ஆரம்பிக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம்.

Tuesday, March 2, 2010

சுவாமி நித்யானந்தா விவகாரம்- பதிவர்களுக்கு கண்டனம்

சுவாமி நித்தியானந்தாவைப் பற்றி வலைஞர்கள் வளைத்து வளைத்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலானோர்  சன் டி.வி. செய்தியை அடிப்படையாக வைத்து சுருக்கமாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள் . நான் படித்தவைகளில் வால்ப்பையனின் இடுகை மட்டும் கொஞ்சம் விவரித்து எழுதப் பட்டு இருந்தது. வேறு யாரேனும் விவரித்து  இருந்தால் படித்துவிடலாம். நக்கீரன் செய்தியும் கூட சுருக்கமாக எழுதப்பட்டு இருந்தது.

அனைத்திற்கும் ஆதாரம் சன் டி.வி. செய்திகள் மற்றும் அதில் வந்த குறும்படம். தமிழ் பதிவுலகம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். என்னைப்போல நிறையப் பேர் 10.00மணிக்கு மேல் வீடு திரும்புவர்கள் நிறையப் பேர் இருப்பார்கள். சன் டி.வி.யில் மறு ஒளிபரப்பு இருந்தாலும் குழந்தைகள் தூங்குவதால் டி.வி . தடை செய்யப் பட்டவர்களும் நிறைய இருப்பார்கள்.  அமெரிக்காவில் அலுவல்கத்தில் இருப்பர்வர்களும் இருப்பார்கள்.

நாங்கள் எப்படி இதை நம்புவது? பிளாக்கர் கணக்கில் ஏற்றி இருக்க வேண்டாமா? குறைந்த பட்சம் யூ ட்யூபிலாவது சேர்த்திருக்க வேண்டாமா? அல்லது ஸ்நாப் ஷாட் மட்டுமாவது கொடுத்திருக்க வேண்டாமா?

மின்னல் வேகத்தில் விடுபட்ட பகுதிகளையெல்லாம் நமது பார்வைக்கு கொண்டுவந்திருக்க வேண்டாமா? 

நாங்கள் பார்த்தால் மட்டுமே இதுபோன்ற நிகழ்வுகளை நாங்கள் நம்புவோம். எனவே நாங்கள் இந்த நிகழ்ச்சிகளைப் பார்க்க உடண்டியாக ஏற்பாடு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யத்தவறும் அனைத்துப் பதிவர்களுக்கும் எனது கண்டனத்தை இங்கு பதிவு செய்து கொள்ளவிரும்புகிறேன்.

என்னோடு சேர்ந்து கண்டனத்தை பதியவிரும்புவர்கள் வந்து பதிந்து விடுங்கள்

செந்தழலின் தளம் இங்கே

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails