Thursday, January 28, 2010

சுமித்ராவின் சரித்திரம் பக்கம் 6

சுமன் மடியில் படுத்திருந்த சுமித்ராவை பார்த்தவுடன் எங்களுக்கு கொடைக்கானல் நிகழ்ச்சிகள் நினைவுகளில் வந்தது. ஏனோ மறக்க நினைத்தாலும் அதன் தொடர்ச்சியும் சேர்ந்து மூளையின் ஒரு மூலையில் ஓட ஆரம்பித்தது.

==================================================

கதையின் முதல் பகுதி "அடப்பாவி மணமேடையில்கூட


இரண்டாம் பகுதி நண்பர்கள் என்றும் சொல்லலாம்

மூன்றாம் பகுதி இந்தப் பூனையும் பால் குடிக்குமா?

நான்காம் பகுதி ஃபிகர் இல்லடா.., ஃபிகர் மாதிரி

ஐந்தாம் பகுதி ஒருத்திக்கு எத்தனை பேர்டா லவ் லெட்டர் கொடுப்பீங்க

சுட்டிகளைப் பயன்படுத்தி படித்துவிடுங்கள்

========================================================

நாங்கள் அடுத்த கட்ட நடவடிக்கைக்காக ஆட்களையெல்லாம் சேர்த்துவிட்டு சுற்றுலாவைத் தொடர ஆரம்பித்தோம். சேட்டைக்கார மாணவர்கள் வேறு வந்திருந்தார்கள் அல்லவா... அவர்களைப் பற்றிய ஒரு அறிமுகம் இந்தச் சுட்டியில் உள்ளது. அவர்கள் பாட்டுக்கு பாட்டு விளையாட ஆரம்பித்திருந்தனர். ஏறக்குறைய பயணம் தொடங்கி பனிரெண்டு மணிநேரம் ஆகியிருந்ததால் ஓரளவு மாணவ, மாணவியரிடம் ஒரு கூச்சம் விலகியிருந்தது. அது ஒருசிலரிடம் மட்டும்தான்.

சேட்டை3 உரத்த குரலில் பாட ஆரம்பித்தான்..

மடிமீது தலைவைத்து விடியும்வரை தூங்குவோம்

உடனே அடுத்தவன் பாட ஆரம்பித்தான். மறுநாள் எழுந்து பார்ப்போம்.

உண்மையில் பாடல் வரிகள் அப்படித்தான் இருக்கும். ஆனால் அவர்கள் பாடிய ராகம்தான் கொஞ்சம் வேறு மாதிரி இருந்தது. அதுவும் மறுநாள் எழுந்து பார்ப்போம் என்று பாடிவிட்டு எழுந்துநின்று எட்டிப் பார்த்துவிட்டு

இன்னும் பார்த்துக் கொண்டிருந்தால் என்னாவது?

இந்தப் பார்வைக்குத்தானா பெண்ணானது?


போன்ற பாடல்களையும் பாட ஆரம்பித்திருந்தனர்.

போட்டியின் விதிக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத பாடல்கள் வந்த போதிலும் எதையும் ரசிக்கும் மனநிலையில் இருந்த சகாக்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை. உண்மையில் அந்த குழுவில் இருந்த பல மாணவிகளுக்கு இப்படியெல்லாம் பாடல்கள் தமிழில் வந்திருக்கின்றதா? என்று கூடத்தெரியாது.

எங்கள் வகுப்புத்தலைவர் ராஜஸ்ரீயின் ரசிகராக இருந்தகாரணத்தால் ராஜஸ்ரீ நடித்த சிலபடங்கள் பேருந்தில் இருந்த சின்னத்திரையில் ஓடவிட்டிருந்தார். (இந்தியன் படமும் பாடல்களும் உச்சத்தில் இருந்த காலகட்டம் அது) ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த மக்கள் காதலிக்க நேரமில்லை படத்தின் நகைச்சுவையில் கொஞ்சம் லயித்திருந்தகாரணத்தாலும் மற்றும் சிலர் கடலை சாகுபடியில் குதித்திருந்த காரணத்தாலும் மற்றும் சிலர் பாட்டுப் போட்டியில் களம் இறங்கியிருந்தகாரணத்தாலும் அந்தப் படம் அது பாட்டுக்கு ஓடிக்கொண்டிருந்தது.

அப்படியே பாட்டுப் போட்டி திசைமாறி வார்த்தை விளையாட்டாக மாறியிருந்தது. தொடர்ச்சியாக இரண்டுநிமிடம் தமிழில் பேசும் போட்டி அது. ஒருவார்த்தையை மூன்றுமுறை உபயோகப் படுத்தக் கூடாது. ஆங்கில வார்த்தை உபயோகப் படுத்தக் கூடாது போன்ற பல கடினமான விதிமுறைகளைக் கொண்ட போட்டியாக அது இருந்தது. ஆனால் சேட்டைக் குழாமில் இருந்த மாணவர்கள் எந்தமாதிரி தலைப்புகளைக் கொடுத்தாலும் மடியில் தலைவைத்துப் படுப்பதைப் பற்றியே பேச ஆரம்பித்தனர். இந்தப் போட்டி பயங்கர சூடாக அமைந்த காரணத்தால் மற்ற கடலை கோஷ்டிகளும் இதைப் பற்றியே பேச ஆரம்பித்திருந்தனர்.

இதையெல்லாம் சட்டை செய்யாத சுமித்ரா அவள்பாட்டுக்கு தொடையில் தலைவைத்து படுத்து ஏறக்குறைய தூங்கியதுபோலவே வந்தாள். சுமன் அதற்காகவே ஜென்மம் எடுத்தது போல் அவளைத்தாங்கிக் கொண்டு காதலிக்க நேரமில்லை படத்தைப் பார்த்துக் கொண்டுவந்தான்.

மடியில் படுத்திருப்பதைப் பற்றியும், முதல் சுற்றுலாவில் இருவரும் சேர்ந்து சைக்கிள் ஓட்டியது பற்றியும் வார்த்தை விளையாட்டில் வந்தபோது நக்மா பொங்கி எழுந்தாள். நக்மா எங்கள் கல்லூரியின் பெண்ணீய வாதிகளில் ஒருத்தி அவளையும்கூட ஒருநண்பன் காதலித்துக் கொண்டிருந்தான். அவனுடன் நக்மாவும் சேர்ந்து சைக்கிள் ஓட்டியிருக்கிறாள். எங்களின் கண்ணில் நக்மாவும் நக்மாவின் நண்பனும் எங்கள் கண்களில் தட்டுப் படவே இல்லை. எங்கள் கண்ணில் மட்டுமல்ல.. சேட்டைகளின் கண்களில் கூட தட்டுப் படவில்லை.

நக்மா பொங்கிஎழுந்த உடன் அவளோடு சேர்ந்து சில பெண்களும் சேர்ந்து வார்த்தை விளையாட்டுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தனர். பெண்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் ஆபாசமாக பேசுவதாகவும் குற்றங்களை அடுக்க ஆரம்பித்தனர். வார்த்தை விளையாட்டில் ஏற்கனவே ஈடுபட்டு வந்த பெண்களும் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க நக்மா கூட்டம் மேலும்மேலும் பெரிய குரலில் சண்டையிட ஆரம்பித்தனர். அவர்களுக்குள் சமாதானம் வராத சூழலில் நாங்கள் த்லையிட்டு அமைதிப் படுத்தினோம்.

ஒரு வழியாக பேருந்து பெங்களூருவை அடைந்தது. அங்கே மதிய வேளையில்
பெங்களூருவில் லாக்பாக் தோட்டத்தை சென்றடைந்தோம்.

வழக்கம்போல் நாங்கள் கெம்ப கௌடாவைப் பற்றியும் ஹைதர் அலி புராணம் பற்றியும் கிடைக்கும் துண்டு பிரசுரங்களையும் குட்டிப் புத்தகங்களையும் வாங்கி வைத்துக் கொண்டு கடலை போடுவதற்கான குறிப்புகளை எடுக்க ஆரம்பித்தோம். எங்கள் கல்லூரி வாழ்க்கை இவ்வாறு குறிப்பெடுப்பதிலேயே கழிந்தது. கடலை என்பது கானல் நீராகவே அமைந்து விட்டது என்பது சென்ற நூற்றாண்டில் பொன்னெழுத்துக்களால் எழுதப் பட்டுவிட்ட ஒரு சரித்திரம் என்பதையும் இங்கே குறீப்பிட்டாக வேண்டும். தலைவர் டயபாலிக் அவர்கள் எல்லோரையும் நான்கு மணிக்குள் பேருந்துக்குள் வந்துவிட வேண்டும் என்று உத்தரவு போட்டிருந்தார்.

நாங்கள் அந்த தோட்டத்துக்குள் சென்றவுடன் கெம்பே கவுடாவும், ஹைதர் அலியும் எங்கள் நினைவுகளிலிருந்து மறைந்துவிட்டனர். அங்கெ இருந்த இயற்கை அழகை ரசிக்க ஆரம்பித்தோம். ஆங்காங்க மக்கள் இயற்கை காட்சிகளை தங்கள் கொண்டுவந்திருந்த புகைப் படக் கருவியில் பதிவு செய்ய ஆரம்பித்திருந்தனர்.நிறைய இயற்கை காட்சிகள் இயற்கையாகவே காணப் பட்டன. கோயமுத்தூரில் இது போன்ற இயற்கைக் காட்சிகள் தென்படாது என்ற சூழலில் மக்களின் ஆர்வம் மிக அதிகமாக இருந்தது. கடலை போட வைத்திருந்த குறிப்புகளை நாங்கள் சுத்தமாக மறந்துவிட்டிருந்தோம். சில மணிநேரங்கள் ரசித்த பின்னர் டயபாலிக் இன் உத்தரவுக்குப் பணிந்து நாங்கள் அனைவரும் பேருந்துக்கு திரும்பியிருந்தோம்.

புற்ப்படும் சூழலில்தான் தெரிந்தது சுமித்ரா உட்பட இரண்டு பெண்களைக் காணவில்லை. கொஞச நேரம் காத்திருந்தோம். நக்மா எழுந்து தான் போய் தேடிவருவதாக தனது தோழியுடன் கிளம்பினாள். ஏற்க்குறைய 250 ஏக்கர் பரப்பளவும் பல இடங்களில் வாசல்களும் கொண்டது லால்பாக் பூங்கா..

பதினைந்து இருபது நிமிடம் போயிருக்கும். சுமித்ரா மற்றும் தோழியும் திரும்பவில்லை. நக்மா மற்றும் தோழியும் திரும்பவில்லை.

பேருந்துக்குள் இருந்த இரண்டு எள் களும் எண்ணெய்களுக்காக காய ஆரம்பித்தன..,

======================================================

தொடரும்.... தொடரும்..................................

19 comments:

  1. ஓட்டுரிமை கட்டாயமயமாக்கப் படுகிறது

    ReplyDelete
  2. தல,

    //எங்கள் கல்லூரி வாழ்க்கை இவ்வாறு குறிப்பெடுப்பதிலேயே கழிந்தது. கடலை என்பது கானல் நீராகவே அமைந்து விட்டது என்பது சென்ற நூற்றாண்டில் பொன்னெழுத்துக்களால் எழுதப் பட்டுவிட்ட ஒரு சரித்திரம் என்பதையும் இங்கே குறீப்பிட்டாக வேண்டும்.// என்ன கொடும இது தல.

    ReplyDelete
  3. //ஓட்டுரிமை கட்டாயமயமாக்கப் படுகிறது// சூப்பர் தல.

    ReplyDelete
  4. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி தல.., தமிழ்மணத்திலும் ஓட்டுப் போட்டுவிடுங்கள்

    ReplyDelete
  5. ரெண்டு ஓட்டும் போட்டுவிட்டேன்!!

    ReplyDelete
  6. என் தளத்துக்கு லின்க் கொடுத்துள்ளீர்களே! அது எப்படி?

    ReplyDelete
  7. //thevanmayam said...

    ரெண்டு ஓட்டும் போட்டுவிட்டேன்!!
    //

    நன்றி சார்..,

    ReplyDelete
  8. //thevanmayam said...

    என் தளத்துக்கு லின்க் கொடுத்துள்ளீர்களே! அது எப்படி?
    //

    எப்படி என்று தெரியவில்லை சார், பல முறைபல்வேறு தளங்களுக்கு இவ்வாறு இணைப்பு இருந்திருக்கிறது. அங்கே சென்று பார்த்தால் அவர்களது வலைப் பூவில் எதாவது ஒரு வகையில் எனது இடுகைக்கு ஒரு தொடுப்பு இருக்கிறது. ஏதாவது தானியங்கி முறை இருக்கும் என்று நினைக்கிறேன்

    ReplyDelete
  9. இந்தக் கொடுமையையும் கேளுங்கள். எனது இந்த இடுகைக்கு என்னால் ஓட்டளிக்க முடியவில்லை. நேற்றைய இடுகைக்குப் போட்டுவிட்டேன். இன்று மோசமான கையெழுத்து என்று வருகிறது.

    வருபவர்களில் பாதிப் பேர் ஓட்டளித்தாலே நம்ப றக்கை விண்ணில் பறக்குமே.,

    ReplyDelete
  10. //ஓட்டுரிமை கட்டாயமயமாக்கப் படுகிறது//

    இஃகிஃகி!! இது நல்லா இருக்கு....

    ReplyDelete
  11. //பழமைபேசி said...

    //ஓட்டுரிமை கட்டாயமயமாக்கப் படுகிறது//

    இஃகிஃகி!! இது நல்லா இருக்கு....
    //

    அப்படியே ஓட்டுக்கள் போட்டுச் சென்றதற்கு நன்றி தல..,

    ReplyDelete
  12. //பேருந்துக்குள் இருந்த இரண்டு எள் களும் எண்ணெய்களுக்காக காய ஆரம்பித்தன..,//

    நான் ஓட்டு போட்டேன் இந்த வரிக்கு

    ReplyDelete
  13. தல,

    வோட்டு போட்டாச்சு..

    ReplyDelete
  14. கதை நல்லா இருக்கு. வாக்கு போட்டாச்சுங்க.

    ReplyDelete
  15. //நசரேயன் said...

    //பேருந்துக்குள் இருந்த இரண்டு எள் களும் எண்ணெய்களுக்காக காய ஆரம்பித்தன..,//

    நான் ஓட்டு போட்டேன் இந்த வரிக்கு
    //

    நன்றி தல

    ReplyDelete
  16. //vinoth gowtham said...

    தல,

    வோட்டு போட்டாச்சு..
    //

    நன்றிதல

    ReplyDelete
  17. //குறும்பன் said...

    கதை நல்லா இருக்கு. வாக்கு போட்டாச்சுங்க.
    //

    நன்றி தல

    ReplyDelete
  18. தல இத எப்போதான் முடிக்கிறதா உத்தேசம்???

    கல்யாணம் ஆயிருச்சா இல்லியா??

    ReplyDelete
  19. //கடைக்குட்டி said...

    தல இத எப்போதான் முடிக்கிறதா உத்தேசம்???

    கல்யாணம் ஆயிருச்சா இல்லியா??
    //

    முதல் பாகம் படித்துப் பாருங்கள் தல.., முதல் காட்சியிலேயே

    சுமித்ராவின் திருமணத்திற்கு எல்லோரும் சென்றிருந்தோம். மணமக்களுக்குப் பரிசுகளை நாங்கள் கொடுத்தபோது சுமித்ராவின் கணவர் சுமன்குமாரைப் பார்த்து கேட்ட கேள்விதான் எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

    "ஏன் இந்தப் பையன் மட்டும் இவ்வளவு சோகமாய் இருக்கிறான்?" என்று கேட்டார்.

    "அடப்பாவி மணமேடையில்கூட என் வாழ்க்கையில் விளையாடுகிறாயா" என்று சொன்னாள் சுமிதரா.



    அதன் பிற்குதான் இவ்வளவு கதை..

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails