Thursday, October 29, 2009

எத்தனை தாவணி? ஒரு புலனாய்வு

ஒரு ஊரில ஒரு சின்னப் பையன் இருந்தான். அவன் சின்னப் பையனாக இருக்கும்போதே நற்பணி மன்றம் ஒன்றில் உறுப்பினராக இருந்து வந்தான்.

Wednesday, October 28, 2009

பொதுவில் ஒரு மறுமொழி

http://tvrk.blogspot.com/2009/10/5_28.html   
தளத்தில் ஒரு பாடலும் பொருளும் அழகாகக் கொடுத்துள்ளார் நமது திரு. T.V.Radhakrishnan  அவர்கள்.

Sunday, October 25, 2009

உருகும் மனிதன், பேசும் தனித்தலை

கோயமுத்தூரில் அரசுப் பொருட்காட்சி காந்திபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகில் நடைபெறும். தொடர்குண்டுவெடிப்பிற்கு முந்தைய கால கட்டத்தில் கதை நடைபெறுகிறது என்பதை மனதில் வைத்துக் கொண்டு படியுங்கள் நண்பர்களே..., மாலை நேரத்தில் கோவை மருத்துவகல்லூரி சார்பாக இரண்டு ஸ்டால்கள் போடப்படும்.

Monday, October 19, 2009

பதினெட்டு பூர்த்தியாகிவிட்டது

25வது வாரமாக ஒரு தொடர்கதை போய் கொண்டு இருக்கிறது. கோவை மருத்துவக் கல்லூரி பின்புலத்தில் ஏப்ரல் 28நாள் நான் எழுதத் தொடங்கிய இந்தத் தொடர்கதை உங்கள் அனைவரின் ஏகோபித்த ஆதரவுடன் பதினெட்டு பகுதிகளை தாண்டிச் சென்றுக் கொண்டிருக்கிறது. ஒரு முழுமையான கற்பனைக்கதைக்கு உற்சாகப் படுத்திக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி.

கதையின் முதல் பகுதி "அடப்பாவி மணமேடையில்கூட


மணமக்களுக்குப் பரிசுகளை நாங்கள் கொடுத்தபோது சுமித்ராவின் கணவர் சுமன்குமாரைப் பார்த்து கேட்ட கேள்விதான் எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

"ஏன் இந்தப் பையன் மட்டும் இவ்வளவு சோகமாய் இருக்கிறான்?" என்று கேட்டார்.


இரண்டாம் பகுதி நண்பர்கள் என்றும் சொல்லலாம்


ஒரு மணிநேரத்திற்குப் பிறகு திடீரென சிந்தனையில் ஒரு அடைப்பு. கருத்துக்கள் வெளியே வரமால் தடுமாறியபோது பக்கத்தில் யாரிடமாவது உதவி கிடைக்குமா என்று ஆராந்தபோது சுமித்ராவும் சுமனும் அந்தக் கால கங்கூலியும் டெண்டுல்கரும் போல கூட்டணி அமைத்து தேர்வெழுதி கொண்டிருந்தனர். 

மூன்றாம் பகுதி இந்தப் பூனையும் பால் குடிக்குமா?

எங்களிடம் சிக்கிய மாணவனிடம் விசாரித்த போது இது கடந்த ஒரு வாரமாக நடப்பதாகத் தெரிந்தது. அந்தப் பெண்ணின் பெயர் ஊர் ஆகியவற்றை விசாரிப்பதற்கும் புதிய மாணவன் என்னை ஒன்னும் பண்ணாதீங்க சார் என்று அழ ஆரம்பித்து விட்டான்.

நான்காம் பகுதி ஃபிகர் இல்லடா.., ஃபிகர் மாதிரி


மறுநாள் அன்று அந்த ஜூனியர் மாணவன் முழு பயோ டேட்டாவுடன் வந்து நின்றான். எனக்கே ஆச்சரியமாய் இருந்தது. சீனியர் மாணவர் கேட்டார் என்று ஏறக்குறைய மிரட்டி முழு விவரங்களும் வாங்கிக் கொடுத்துவிட்டான். பின்னாளில்தான் தெரிந்தது சீனியர் கேட்டார் என்றே நிறைய மாணவிகளின் முழுவிவரங்களையும் வாங்கி வைத்திருக்கிறான். எத்த்னை பேருக்கு என்னைக் காட்டி விவரங்கள் வாங்கினானோ தெரியவில்லை.


ஐந்தாம் பகுதி ஒருத்திக்கு எத்தனை பேர்டா லவ் லெட்டர் கொடுப்பீங்க

ஒரு குழுவாக நடு இரவில் கால்பந்து மைதானத்தின் நடுவில் அமர்ந்து ஆலோசனை செய்து கொண்டிருந்தனர். கால்பந்து மைதானத்தில் அமர்ந்து மந்திர ஆலோசனை செய்வதில் பல வசதிகள் இருந்தன. எத்தனை பேர் வேண்டுமானாலும் அமரமுடியும். பேசும் விஷயங்களை யாரும் ஒட்டுக் கேட்க முடியாது.

Sunday, October 18, 2009

சிரிப்பொலி தொலைக்காட்சியின் குசும்பு

சிரிப்பொலித் தொலைக்காட்சியில் பொதுவாக நகைச்சுவைக் காட்சிகள் போடுவார்கள். அந்தக் குழுமத்தில் நகைச்சுவைக்கான அலைவரிசை இது. சில நேரங்களில் திரைப்படங்களும் போடுவார்கள். பொதுவாக நகைச்சுவைப் படங்களே வரும்.

இன்று தேவர் மகன்

இது காசு படைத்த இரு அண்ணன் தம்பிகளின் குடும்பங்கள் எப்படி வெட்டி கவுரவத்திற்காக  ஊரை இரண்டு படுத்தி நாசமாக போகிறார்கள் என்பதைக் கதையாக படைத்திருப்பார்கள்

Friday, October 16, 2009

விடுமுறை தின சிறப்பு இடுகை 17/18.10.2009

எண்ணைக் குளியல்
அழைத்தான்

வந்தாள்

சொன்னான்

செய்தாள்

அவள் வந்தால்

நிதானமா?

போனால்தான்

வேகமா?

எதற்கோ

அழைத்து

ஏனோ

போகச் சொல்லி...

அவளை என்ன

ராகுல் டிராவிட் என்று

நினைத்துக் கொண்டார்களா?

=====================================================================

சிறப்புப் படையல்

இது எத்தனையோ யுகங்கள் தாண்டி நடக்கும்வகையிலான கதை. அதனால் கொஞ்சம் கற்பனைக் குதிரையில் ஏறி இந்தக் கதையைப் படித்தல் நலமாக அமையும்.

அந்த யுகத்தில் நமது கதைக்கு இரண்டு நாடுகள் தேவைப் படுகின்றன. ஒரு நாட்டினை ஜி தேசம் எனவும், மற்றதை ஏதேசம் எனவும் அழைப்போம்.

தொழில்நுட்பங்கள் மிகக் கடுமையாக வளர்ந்துவிட்டிருந்த காலம் அது. மிக நவீன ஆயுதங்கள் போர்களத்தில் பயன்படுத்தப் பட்டுவந்தன. மனித உடலிளேயே  ஆயுதங்களை இயக்கும் மென்பொருட்களை இனைத்திருந்தனர்.   அதற்கான தனி தொழிற்நுட்பப் பிரிவு ஒவ்வொரு நாட்டிலும் செயல்பட்டுவந்திருந்தது.

ஏதேசத்தின் தலைவன் திருவாளர் எம்.  பலபல போர்களை ஜிதேசத்தின் மீது பல் வெற்றிகளைக் குவித்துக் கொண்டிருந்தார். இதனால் மனம் வெறுத்துப் போன ஜிதேசத்தவர்களின் உயர்மட்டக்குழுவினர் அதைப் பற்றிய ஆலோசனைகளை செய்து கொண்டிருந்தனர்.

ஏற்கனவே ஜிதேசத்தவர்கள்  ஏதேசத்தவர்களை ஏமாற்றி அழியாவண்ணம் ஒருமென்பொருளை தங்கள் உடலில் பொறுத்தியிருந்தனர். இப்போது திருவாளர்.எம் மை எப்படி அழிப்பது என்பது பற்றி ஆய்வு மேற்கொண்டபோது அவரது உடலில் இருந்த ஆண்டி-வைரஸ் பற்றிய தகவல்கள் அம்பலமானது . அவரது உடலில் இருந்த ஜீன்கள், புரதங்கள், அமினோ அமிலங்கள் போன்றவை மிகக் கடுமையாக ஆராயப் பட்டன. அந்த ஆண்டி வைரஸை அழிக்க வேண்டுமானால் அவர்மீது தாக்குதல் நடத்துபவரின் உடலில் Y குரோமோம் இருக்கவே கூடாது என்றவகையில்

Sunday, October 11, 2009

யார் கை மாறினாலும் ஜக்குபாய் ஜக்குபாய்தான்

ஏற்கனவே ரஜினிக்காக ஜக்குபாய் என்ற பெயரில் ஒரு படத்திற்கு பூஜை போட்ட கே.எஸ்.ரவிக்குமார் அதே பெயரில் சரத் குமாரைவைத்து, அவருக்காக இயக்கும் படமாக ஜக்குபாய் வர இருக்கிறது. ரஜினிக்கு பூஜை போட்ட கதைதான் இதுவா. அதே கதைதான் என்றாலும் திரைக்கதை அதேதானா, என்றெல்லாம் நமக்குத் தெரியவில்லை.

காதல் வானிலே

உன் பெயர்

Tuesday, October 6, 2009

குருதி சிந்தி குடிமக்களைக் காப்பாற்றிய கொங்கு நாட்டுத்தங்கம்

சக மாணவி மூக்கில் ரத்தம் ஒழுக மயங்கிக் கிடந்தால் என்ன தோன்றும்? இருந்தாலும் மாணவர்கள் எழுப்பிக் கொண்டே இருந்தனர் .

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails