Sunday, September 27, 2009

ரசிகன் 27.9.09

ரசிகர் மன்றம் ஏன்? யார் நடத்துகிறார்கள் ?

வளரிளம் வாலிபர்கள்தான் ரசிகர் மன்றத்தின் தூணாக விளங்குகிறார்கள். அவர்கள் ஏன் ரசிகர் மன்றத்தில் சேருகிறார்கள் என்று யோசித்து இருக்கிறீர்களா?

உண்மையில் அவர்கள் ஏதாவது சாதிக்கத் துடிக்கும் சிங்கங்ளின் சங்கமமாகவே இருக்கும்.

தமிழகத்தின் ஆரம்ப கட்ட ரசிகர்மன்றங்களை நோக்கிப் பார்த்தாலே தெரியும். ஒரு அமைப்பு தேவைப் படுபவர்கள், அந்த அமைப்பின் மூலம் பெயர் வாங்க நினைப்பவர்கள் நாடும் இடமாகவே ரசிகர்மன்றம் இருக்கிறது. ஓரளவு படிப்பும் வேலையும் இருப்பவர்கள் தங்கள் வேலை பார்க்கும் இடத்தில் சங்கம் மூலமாகவோ அமைப்பு மூலமாகவோ ஏதாவது செய்கிறார்கள்.

விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகள் 27.9.09

புதுமை.., புதுமை.., புதுமை...,


மணலுக்குள் வீரர்கள் புதைந்து ஒளிந்திருந்து தாக்குவது தமிழுக்க்கு புதியது

ஒளிந்திருக்கும் வீரர்கள் சுவாசிக்க சிறுகுழல்கள் பயன்படுத்துவது மிகவும் புதியது

இசைக்கலவைகளும் கோர்வையும் என்றும் புதியது

நல்லத கண்டா நமக்குப் பொறுக்காதே வசனம் என்றும் இளமையானது.

இசைக்கருவிகள் வைக்கும் இடமும் வாசிக்கும் முறையும் எப்போதுமே புதுமையானது.


..........................................................................

அநேகமாக நம் நண்பர்கள் இந்திப் படங்களை பார்க்க ஆரம்பித்தது இந்தப் படத்திற்கு பின்னராகத்தான் இருக்க வேண்டும்.

மேலே பார்த்த பாடல்போன்ற காட்சி அமைப்புதான். சில ஆண்டுகள் கழித்துவந்த படம். வில்லன் கூடாரத்தில் இசைவிருந்து. வார்த்தைகளில் பெரிய அளவில் மாறுதல்களுடன்..,
என்ன இருந்தாலும் தமிழ் முதலிடம்தானே..,


..........................................................................

சிவாஜி கணேசன் அவர்களின் பல படங்களின் காட்சிகளின் தொகுப்பு இது
கூடவே சில பெரிய மனிதர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்..........................................................................

கிரிக்கெட் பார்த்திருப்ப்பீர்கள். அதில் சில சுவாரசியமான ஆட்டமிழத்தல்கள்.........................................................................

காந்தியை ஏன் கைது செய்யக் கூடாது?

Tuesday, September 22, 2009

ஒரிஜினல் காமன் மேன்

காமன் மேன் யாரு எப்படி இருக்க வேண்டும் என்று எல்லோரும் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.பதிவுகளைப் படிக்கும்போது நானும் கூட பாமரத்தன்மையுடன் கூடிய நடிகர் யார்? என்று யோசித்துப்பார்த்தேன்.

அப்போது எழுந்த சந்தேகம் பாமர மனிதன் தான் காமன் மேனா? கொஞ்சம் குழப்பம் ஏற்பட்டது. ஒருவேளை சராசரி மனிதன் தான் காமன் மேன் என்பவனா? அப்போது அவரேஜ் மேன் என்பவன் யார்? காமன் மேன் தான் அவரேஜ் மேனா... இல்லை ஆவரெஜ் மேன் தான் காமன் மேனா? காமன் மேன் அபவ் ஆவரேஜ். இல்லை பிலே ஆவரேஜ்.?

Monday, September 21, 2009

விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சிகள் 21.9.09

பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டு தங்களின் இன்றைய பொழுதினை பக்தியில் களிக்கும் நண்பர்களுக்கு இன்றைய பொழுது போதாமல் இருக்கும்.

ஆனால் இன்று வெறும் விடுமுறை மட்டும் எடுத்துக் கொண்டு வீட்டில் இருப்பவர்களுக்கான சிறப்பு இடுகை. முழுக்க முழுக்க பொழுது போக்க மட்டுமே...

Saturday, September 19, 2009

மயங்கிச் சரிந்த மாணவர் தலைவி 19.9.09

ஆத்தா வையும், சந்தைக்குப் போகணும் காசு குடு
என்று பதினாறு வயதினிலே கமல் சொல்லுவது சுமித்ரா சொல்லிக் கொண்டிருந்தாள். ஏன் எதற்கு? என்று கேட்பவர்கள் sweet sixteen பகுதியைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்

நாளைக்கு நான் தான் கேஸ் பிரசண்ட் பண்ண போறேன். சீஃப் கிளாஸ். நான் போய் ப்ரிப்பேர் பண்ணனும். சுமித்ரா புலம்பிக் கொண்டிருந்தாள். கொஞ்ச நேரம் பேசிய பிறகு சொல்வதைக் கவனிக்க ஆரம்பித்தாலும் அவளுக்கு மறுநாள் புறநோயாளிகள் பகுதியில் துறைத்தலைவரின் முன்னிலையில் பேசப் போகும் நிகழ்ச்சியே அவள் மனதில் ஆக்கிரமித்திருந்தது.

Tuesday, September 15, 2009

மிட்நைட் மசாலா

நள்ளிரவில் இனிமேல் ஆபாச நிகழ்ச்சிகள் ஒலி,ஒளிபரப்பப் படலாம் என்று பேச்சு அடிபட்டுக் கொண்டிருக்கிறது.

சிலரெல்லாம் என்னென்னமோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். இனிமேல் தொலைக்காட்சிகளெல்லாம் இரவில் மட்டும் தான் இயங்கும். பகலில் ஒளிபரப்பு இருக்காது என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இதெல்லாம் ஆபாசம் இல்லை என்றுதானே தனியாக ஆபாசக் காட்சிகள் ஒளிபரப்பலாம் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். எனவே அதற்காக நமது சில் யோசனைகள்:-

Monday, September 14, 2009

அண்ணா வரைந்த ஓவியங்கள் சில 14.9.09
இந்த ஓவியங்கள் அறிஞர் அண்ணா தன் கைப்பட வரைந்தவை. இது தாய்தளமான இந்தத் தளத்திலிருந்து எடுக்கப் பட்டவை.படங்கள் முழுக்க முழுக்க அவர்களுக்கே சொந்தமானவை. அண்ணாவின் படைப்புக்களை பலரும் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற நல்ல நோக்கத்தின் அடிப்படையில் வெளியிட்டுள்ளேன். அறிஞர் அண்ணாவைப் பற்றி உங்களுக்குத் தெரிந்த ஆவணங்கள் தகவல்கள் ஏதும் இருந்தால் அவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள அந்தத் தளத்தை ஒரு சுற்றுச் சுற்றிவாருங்கள்

Sunday, September 13, 2009

தேவதையின் கடைக்கண் பார்வை என் மீதும்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjA3fK-fCPW4ISY-suqIyxs5fueekv_AypRFqrhWhVnQ-XpvoceSISPYiUXfBaeQDNU1Rmn-2ffx8VR0lvr38vEZsfMDTHC52APe2N0R5qAbYXZ2bdEqDBS9pcRtZx2IPDL8wUwy_6t-K4/s400/angel-59.pngஇந்த பதிவை எழுத அழைத்த அருமைத் தலைவர் சிங்கக் குட்டிக்கு நன்றி!!

எல்லாருக்கும் மிகப்பெரிய ஆசைகள் கனவுகள் இருக்கும் அது சில சமயம் நிறைவேறாமல் போயிருக்கலாம்.

அந்த ஆசைகளை நிறைவேற்றும் விதமாக உங்கள் கண் முன்னாடி ஏஞ்சல் எனும் தேவதை உங்களிடம் பத்து வரங்கள் தருகிறது . நீங்கள் அதனிடம் என்ன வரம் கேட்பீர்கள்?

Saturday, September 12, 2009

சமீபத்திய கேள்விகளுக்கு பதில்கள் 12.9.09

அண்ணா 11.9.09இடுகைக்கான பதில்கள்

1. ஒரு முதலமைச்சர் (சம்பவம் நடக்கும்போது அல்ல) ஒரு நாடகத்தில் மூன்று வேடங்களில் நடித்து இயக்கினார். அவர் யார்? அந்த நாடகம் எது? அந்த நாடகத்தை எழுதியவர் யார்?

அண்ணா - சில கேள்விகள் 12.9.09

1.அறிஞர் அண்ணா படித்த தொடக்கப் பள்ளியின் பெயர் என்ன?

2.அண்ணாவின் முதல் சிறுகதை எந்த ஆண்டு, அந்தப் பத்திரிக்கையில் வெளியானது?

3.அண்ணா, பெரியாரை எங்கு முதன்முதலில் சந்தித்தார்?

Friday, September 11, 2009

திருமண வயதை எட்டிய பிரபல பதிவர்

பிரபல பதிவர் ஒருவர் தனது 21வயதை வரும் செப்-12ல் பூர்த்தி செய்யப் போகிறார். ஓட்டுப் போடும் வயது என்று சொல்லியிருக்கலாம். காலத்தின் கட்டாயத்தால் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அந்த தகுதியை அவர் அடைந்துவிட்டார்.

அண்ணா 11.9.09

1. ஒரு முதலமைச்சர் (சம்பவம் நடக்கும்போது அல்ல) ஒரு நாடகத்தில் மூன்று வேடங்களில் நடித்து இயக்கினார். அவர் யார்? அந்த நாடகம் எது? அந்த நாடகத்தை எழுதியவர் யார்?

2.புதுக்கவிதைக்கு அண்ணா பயன்படுத்திய சொல் தெரியுமா?

Thursday, September 10, 2009

அரசியலுக்கு வர விஜய்க்கு உள்ள தகுதிகள்

1. விஜய் தமிழ்நாடு முழுவதும் தெரிந்த மிகச் சில மனிதர்களில் ஒருவர்.

2.அவரால் எந்த ஒரு இடத்திலும் ஒரு கூட்டத்தைக் கூட்ட முடியும்.

3.அவர் சொன்னால் ரத்தம் தானம் செய்யவும், நோட்டு புத்தகங்கள் வாங்கிக் கொடுக்கவும் நிறையப் பேர் இருக்கிறார்கள்.

Monday, September 7, 2009

வறண்ட தொண்டை

சேகருக்கு தலைகால் புரியாமல் நின்றான். பின்னே கௌதமன் சார் வீட்டுக்குப் போறதுன்னா.., கௌதம் சார் வந்த பிறகுதான் அவன் ஆங்கிலம் ஒழங்காக படிக்க ஆரம்பித்தான். வழக்கமாக சங்கர்தான் போவான். அங்கு போனால் சாரின் மனைவி குடிப்பதற்கு மோர் கொடுப்பாராம். அது தேன் போல தித்திக்குமாம்.

கௌதம் சார் என்றாலே சேகருக்கு மிகவும் பிடிக்கும். அவர்கள் பள்ளியில் ழ கரத்தை அழுத்தமாக உச்சரிக்கக் கூடிய ஆள் அவர்தான். அவரது வகுப்புகளை கவனிக்கும்வரை தாங்கள் எல்லோரும் ழ கரத்தைச் சரியாக உச்சரிப்பதாகத்தான் நினைத்துக் கொண்டிருந்தான்.

Sunday, September 6, 2009

கந்தசாமி ஏன் பதிவர்கள் மற்றும் இன்னபிற நண்பர்களுக்கு பிடிக்கவில்லை?

1.இணைய தள மக்களும் வலைப்பூ மக்களும் தங்கள் மின்னஞ்சல், மற்றும் தள முகவரிகள் எங்கே ஹேக் செய்யப் பட்டுவிடுமோ என்ற பய்த்தில் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருக்கும்போது கந்த சாமி ஒருவங்கிக் கணக்கையே ஹேக் செய்வது என்பது நமது வலைஞர்களாலே ஜீரணிக்க முடியாத ஒரு காரியமாக அமைந்துவிட்டது. அந்த ஒரு காரணத்தினாலேயே கந்த சாமியை வெறுத்துவிடலாம்.

2. தமிழக போலீஸ் ஒரு சி.பி.ஐ அதிகாரியை உண்மையை ஒப்புக் கொள்ள அவருக்கு பிடித்த பெண்ணை கற்பழிக்கும் அளவுக்கு போவார்கள் என்பதாக காட்சி அமைத்திருப்பது கோடாணு கோடி தமிழ் மக்களுக்கு பிடிக்கவில்லை

(சி.பி.ஐ.அதிகாரி அதை நம்புவதுபோலவும், கற்பழிப்பைத் தடுப்பதற்காக உண்மையை ஒப்புக் கொள்வது போலவும் காட்சி அமைத்திருப்பதால் இந்தமாதிரி வழக்கம் இருப்பதுபோல அழுத்தமாக கருத்தினை பதிவு செய்திருப்பதாகவே தோன்றுகிறது. ஆனால் இதற்கெல்லாம் மனசு விடவேண்டியதில்லை. இதைவிட அலைபேசி வெளிச்சத்தில் அறுவைசிகிச்சையை பார்த்தவர்கள் அல்லவா நாம்)

Friday, September 4, 2009

Thursday, September 3, 2009

கொஞ்சம் தைரியம் வந்து..,

நேற்று

கொஞ்சம் தைரியம்வந்து

உன்னிடம் பேச நினைத்தபோது

அருகில்வந்த

உன் தோழியைப் பார்த்து

கொஞ்சம்பயந்து

கொஞ்சம் நடுங்கி

திரும்பிச் செல்ல

நினைக்கையில்

எதிரே தென்பட்ட

பிள்ளையார்கோவில் பிரசாதம்

நாக்கில் எச்சில்

ஊரச்செய்து

அருகே அழைக்க

போய் கையை நீட்டி

வாங்கினேன்

பிரசாதத்தையும்

என்னவளின்

முதல்பார்வையையும்

Wednesday, September 2, 2009

கந்தசாமியின் வெற்றி எப்படி? ஒரு அலசல்

வலைப்பூவில் எழுதுவதில் நம்மைக் கவர்ந்த எழுத்தாளர்களின் சாயல் தென்படுவது இயல்பு. நமக்கு வலைப்பூவை அழைத்த எழுத்தாளாரை பின்பற்றியே எழுதிவருகிறார்கள். சமீபத்தில் பலதொடர்பதிவுகள் போட்டு நண்பர்கள் பலரையும அழைத்து தொடர்பதிவை எழுதச் சொல்கிறார். அதைப் படிப்பவர்கள் எல்லோரும் தொடர்பதிவாக அதைப் போடுகிறார்கள். பொதுவாக ஒத்த கருத்தைக்க் கொண்டவர்களே தொடர்பதிவுக்கு அழைக்கப் படுவதால் அதே போன்ற விமர்சனமே தொடர்ந்து கிடைக்கிறது.


ஒரு வலைப்பூவைப் படிக்கும்போது அதில் உள்ள கருத்து பிடிக்கவில்லை என்றால் அந்தக் கருத்தையும் யாரும் தொடர மாட்டார்கள். அந்தக் குறிப்பிட்ட வலைப்பூ பக்கமும் வர மாட்டார்கள். குறைந்தபட்சம் அந்த இடுகையின் பக்கம்.., இதில் விதிவிலக்காக அதிகம்பேர் படிக்கும் வலைப்பூ என்றால் எதிர்கருத்துடைய சில பதிவர்கள் மட்டுமே தொடர்ந்து எதிர்ப்பார்கள். மற்றபடி ஆதரித்து பின்னூட்டம் மட்டுமே பொதுவாக வரும். எதிர்கருத்துடைய பெரும்பாலானாவர்கள் அடுத்த வலைப்பூ பக்கம் சென்றுவிடுவார்கள்

கந்தசாமி விமர்சனம் கூட அந்த வகையில் பார்க்கலாம். முதல்நாளிலியே ஏறக்குறைய இருபத்தைந்துக்கும் மேற்பட விமர்சன இடுகைகளை வாசிக்க நேரிட்டது. பலரும் அடுத்த நாளும் பார்த்துவிட்டு மறக்காமல் விமர்சனம் எழுதுவதிலேயே குறியாக இருந்தனர். இதற்கு முன் வந்த விஜய். அஜித் தின் படங்களுக்கெல்லாம் வராத எண்ணிக்கையில் விமர்சனங்கள் இந்தப் படத்திற்கு வந்தன. முதல் சில நாட்கள் வந்த ஒட்டுமொத்த விமர்சங்களை இந்த இடத்தில் பார்க்கலாம்

படம் சரியில்லை என்று நாம் மிகவும் மதிக்கும் பதிவர் எழுதிய பின்னரும் கூட மனசு கேட்காமல் அந்தப் படத்தை பார்த்தே தீர வேண்டும் என்ற மனநிலையில் பார்த்துவிட்டு அந்த ஏமாற்றத்தைக் கொட்டித் தீர்க்கிறார்கள் பதிவர்கள்.

எனக்கென்னவோ அதே தியரி அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் வேலை செயகிறதோ என்று தோன்றுகிறது. பெரும்பாலான ரசிகர்கள் படம் பார்த்துவிட்டு நன்றாக இல்லை என்று சொன்னாலும் கூட அடுத்த ஆளும் பார்த்துவிட்டு

ஆமாம் படம் சரியில்லை என்று சொல்லிக் கொண்டிருப்பது போலவே ஒரு பிரமை தோன்றுகிறது.

அதுவும் படம் சரியில்லை என்று சொல்பவர்கள். விக்ரம் நன்றாக நடித்திருக்கிறார். ஷ்ரேயாவும் சிறப்பாக திறமை காட்டியிருக்கிறார் என்று சொல்லிவிட்டு படம் சரியில்லை என்று சொல்கிறார்கள்.

மற்றவர்களும் அந்த ஆசையிலேயே படம் பார்த்துவிட்டு படம் சரியில்லை என்று சொல்லிவிட்டு அவர்களின் பார்வையில் கூடுதலாக சில கருத்துக்களை அள்ளித் தெளித்துவருகிறார்கள்.

பார்ப்போம். நன்றாக இல்லை என்று சொல்லி வரும் ரசிகர்கள் மீண்டும் மீண்டும் படம்பார்த்து விட்டு மேலும் மேலும் குறைகளைச் சொல்லிக் கொண்டே இருப்பார்களோ என்னவோ!

இல்லை காக்க காக்க மாதிரி இந்தப் படமும் தோல்விப்படம் ஆகி அதன் நாயகனும் இயக்குநரும் திட்டுவாங்கியது போல இந்தப் பட ஆட்களும் திட்டு வாங்குவார்களோ!
=======================================================

கந்தசாமி தமிழ் கடவுள்
தமிழ் கடவுளை தோற்கடிக்க தமிழர்கள் விடமாட்டார்கள். திட்டியாவது வெற்றி பெறச் செய்து விடுவார்கள்

=======================================================

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails