Sunday, January 31, 2010

விஜய்க்க்கு கொடுக்கப் படாத அங்கீகாரம் 31-1-10

தமிழ் ப் படம் தமிழ் வலைஞர்களின் ஏகோபித்த ஆதரவுடன் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது. ஏதோ தமிழின் முதல் ஸ்பூஃப் படம் போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். கலைஞர் டிவியில் விளம்பரங்களும் பாடல்களும் அசத்திக் கொண்டிருக்கின்றன.

ஏற்கனவே சோ முதலான சிலர் சில படங்களை எடுத்திருந்தாலும் இந்த ஆண்டின் முதல் ஸ்பூஃப் படமாக வேட்டைக்காரனே (சில நாட்களுக்கு முன் வெளிவந்திருந்தால் கூட) அமைந்திருந்தது. ஏனோ அதை அங்கீரங்கரிக்க தமிழ் சமுதாயம் மறுக்கிறது.


படத்தின் ஆரம்பத்திலேயே  ஒரு போலீஸ் அதிகாரிக்கு கட் அவுட் வைப்பது, அவரது செய்திகளை சேகரிப்பது என்று முதல் காட்சியிலேயே அதகளம் பண்ணியிருப்பார்கள்,  அவரைப்போலவே 4 வருடம் ஃபெயில் ஆவது ரசிகர்களை கேலி செய்வது போல இருந்தாலும் படங்களில் வந்துள்ளது என்று பார்த்தால் பக்தி படங்களையும், அதில் வரும் சடங்களையும் கேலி செய்வது போல எடுத்துக் கொள்ளலாம்.

போலீஸாக ரயில் ஏறி சென்னை வருவது, அவர் போலவே ஆட்டோ ஓட்டுவது என்று ஒரு சினிமா தாகத்தில் ஓடி வருபவர்களை கேலி செய்வதாகவே படம் அமைகிறது.

பாஷா படத்தில் ஒரு அடியில் அடியாள் போய் மின் கம்பத்தின் உச்சியில்தான் விழுவார். ஆனால் வேட்டையன் அடித்தால் அந்த சிமிண்ட் கம்பமே இடியும் காட்சிகள். ஏனோ ரசிக கண்மனிகளுக்கு விளங்கவில்லை.

அடுத்ததாக தூக்குகுடியில் சாத்துக்குடி காட்சி..,

காதலுக்கு மரியாதை புத்தக காட்சியை இமிடேட் செய்தது ஏனோ நிறையப் பேர் ஒத்துக் கொள்ள மறுக்கிறார்கள்.

அனுஷ்கா சம்பந்தப் பட்ட அனைத்துமே பல எம்ஜியார், ரஜினி படங்களை இமிடேட் செய்யப் பட்டிருப்பதுதான். அதையும் யாரும் புரிந்து கொள்ளவில்லை.

படையப்பா படத்தில் ரஜினியை இளைமையாக காட்ட அவரது நண்பர்களாக ஓரளவு முத்திய நண்பர்களாக போட்டிருப்பார்கள். அதே போல் விஜயை இளமையாக காட்ட அனுஷ்காவை நாயகி ஆக்கி இருக்கிறார்கள்.

வில்லனின் கோட்டைக்குள் நாயகன் புகுந்து சவால் விடும் காட்சிகள் ஏராளமாக வந்து விட்டன.  வேட்டைக்காரனிலும் அப்படி ஒரு காட்சி வருகிறது.  விஜய் பேசி விட்டு வெளியேறியதும் ஜிந்தா அடியாளிடம் ஒரு கேள்வி கேட்பாரே..,

எல்லாரும் படம் பார்த்துவிட்டதால் வசனத்தையும் சொல்லிவிடலாம்.

ஏண்டா.., அவன் பேசிட்டு இருக்கும் போது என்னடா செஞ்சிட்டு இருந்தீங்க..,

இதைவிட அந்த காட்சிகளை கேலி செய்ய ஏதாவது செய்ய வேண்டுமா? என்ன!

வழக்கமாக விஜய் சட்டைக்கு பட்டன் போடாமல் இருப்பார். அதையும் கூட இதில் கேலி செய்து அதற்கு மேல் பட்டனே இல்லாத ஒரு மேல் சட்டை அணிந்திருப்பார். ( அனுஷ்காவை கடத்தும் காட்சி). பின்னர் அதையும் கழட்டி சண்டை போடுவார். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் அல்லவா..,!

கரப்பான் பூச்சி மருந்தடித்து விஜய் ஒரு படத்தில் வில்லனின் அடியாளை கொல்வார். இதில் போலிஸின் கண்ணை வில்லன் குருடாக்குகிறார்.

ஜாக்கி சான் ஷாப்பிங் காம்பளக்ஸில் போடும் சண்டைகளையும், துணியைப் பிடித்து குதிக்கும் காட்சிகளையும் விஜய் அதகளம் பண்ணிய விஷயமே  நமக்கு தமிழ் படம் பார்த்த பிறகுதான் புரிகிறது.

ஒரே பாடலில் பணக்காரன் ஆவது, ரவுடி பாஸ் ஆவது மாதிரி காட்சிகளை இவர்களும் செய்திருக்கிறார்கள். ஆனால் அடிவாங்கிய ஒரு ரவுடி மருத்துவமனையிலிருந்து வெளியேறுவ்வதற்குள் போலீஸ் ரவி பெரிய ஆள் ஆகிவிடுகிறார்.

விஜயிடம் நட்பின் பெருமையைப் பற்றி அவரது கிருதா நண்பர் பேசும்போது நடுநிலை ரசிகர்கள் சிரித்தே ஆகவேண்டும்.  அவ்வளவு இயல்பு..,

பெரிய ரவுடியாக வரும் நாயகனின் நண்பனாக ஒரு சாதா நண்பன் இருக்கும் காட்சி பல படங்களில் வந்திருக்கிறது. அதை கேலி செய்து இதில் சத்யனைப் போட்டிருப்பார்கள். மற்ற படங்களில் எல்லாம் வில்லனிடம் தப்பிவிடும் பாத்திரம் இதில் செத்தே போகிறது.

வில்லன்கள் பெண்களூடன் ஜலக்கிரீடை செய்யும் காட்சியும் இந்தப் படத்தில் இருக்கிறது.  ஆனால் தனக்கு நீச்சல் தெரியாது என்று  மகன் வில்லன் சொல்லும் காட்சியில் ஏனோ பில்லா ரசிகர்களுக்கு கூட கோபம் வரவில்லை.

இறுதிக் காட்சிக்கு முந்தைய காட்சியில்  வில்லனின் சாம்ராஜ்ஜியத்தை சிதைக்கும் காட்சியில் சிதைந்த படங்களை மீண்டும் பாஷாவிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.


இறுதிக்காட்சியில் ஜிந்தாவைக் கொல்லும் காட்சி, குறுக்கே யாரும் வராமல் ஒதுங்கும் காட்சி, கண்பார்வை இல்லாத நபருக்கு விஜய் குறிப்ப்புகள் கொடுக்கும் காட்சி போன்ற காட்சிகளில் கேலியை விட புத்திச் சாலித்தனமே தென்படுவதால் அவற்றை விட்டுவிடலாம்.

அதே போல் விஜய் அருவியில் குதிக்கும் காட்சி, அருவிக்கு சில அடி தூரத்தில் அருவியின் இழுவைக்கு கொஞ்சம் அசராமல் நங்கூரம் இட்டது போல நிற்கும் காட்சிகளும் ஏற்கனவே விஜய் படத்தில் வந்த காட்சிகள் தான் என்பதும் தனியாக சொல்ல வேண்டியது இல்லை.

ராவாக ஸ்பிரிட்டைக் குடித்து, அடிவயிற்றுக்குப் போன ஸ்பிரிட்டை மீண்டும் ஆயுதமாக மாற்றி எதிரியை அழிக்கும் காட்சிகளைக் கூட ஸ்பூஃப் ஆக எடுத்துக்கொள்ளாமல் சாதாரணமாக எடுத்துக் கொண்ட நண்பர்களை என்னவென்று சொல்வது.


இவ்வளவு கேலி, கிண்டல் செய்து எடுக்கப் பட்ட வேட்டைக்காரனை விட்டுவிட்டு தமிழ் ப் படத்தை இந்த ஆண்டின் முதல் கேலிச் சித்திரமாகச் சொல்வது விஜய் எதிரான சதி என்று சொல்லாமல் என்ன நினைப்பது..,

=====================================================================

வேட்டைக்காரன் விளம்பரம் சன் டி.வி யில் இன்னும் வந்து கொண்டிருந்தாலும் கலைஞர் டி.வி.யில் வரும் தமிழ் ப் படம் அளவிற்கு வலுவாக இல்லை என்பதும் ஒரு உண்மை

22 comments:

  1. ஹா ஹா கலக்கல்.... ஆம் நம் சமூகம் விஜயை புறக்கணிக்கிறது, என்ன காரனமாக இருக்கும்?

    ReplyDelete
  2. /நம் சமூகம் விஜயை புறக்கணிக்கிறது, என்ன காரனமாக இருக்கும்?/

    வேறு யாராக இருக்க முடியும்? விஜய் தான்!

    :-))

    ReplyDelete
  3. எப்படிங்க... இப்படியெல்லாம்....

    வாழ்க விஜய்! வளர்க அவர் புகழ்!

    ReplyDelete
  4. யப்பா !முடியலை. :-)

    ReplyDelete
  5. //ஏனோ நிறையப் பேர் ஒத்துக் கொள்ள மறுக்கிறார்கள்//

    பதிவை படிச்சு முடிச்சதும் எனக்கும் இப்டிதான் கேக்கதொணுது அண்ணே...உண்மை

    ReplyDelete
  6. தலைவரே இதில் பெரிய காமெடி என்னன்னா இன்று கூட சன் டிவி டாப் 10 - ல் வேட்டைக்காரன் தான்
    முதலிடம்

    ReplyDelete
  7. தல ரொம்ப சூப்பர் ..

    அசத்திட்டீங்க ..

    ReplyDelete
  8. யப்பா முடியலை.

    தல எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க.

    இதைக்கூட நாங்க கவனிக்கலையேன்னு நினைக்கும் போது அழுவாச்சி அழுவாச்சியா வருது.

    தல இப்பதான் இன்னொன்னும் தோணுது.

    ரஜினியை விஜய் கிண்டல் பண்ண மாதிரி. விஜய் அஜீத்தை சிம்பு, பரத் , விஷால் எல்லாம் கிண்டல் பண்ணுறதை பார்த்தீங்களா.

    இதுல பரத் ஒரு படி மேலே போய் ( ஏணிப்படியை சொல்லலை ) படத்தை மட்டும் அல்லாமல், அவரோட பட்டத்தையும் கேலி பண்ணுறாரு (இளைய தளபதி, சின்ன தளபதி)

    ஒரே கதையை எல்லோரும் பண்ணுறதால இப்பல்லாம் இவங்கபட வில்லனை பார்க்க காமெடியா இருக்கு. இவங்களை பார்க்க அதை விட காமெடியா இருக்கு.

    எந்த படம் வந்தாலும், இதுக்கு அடுத்து இப்படி பண்ணுவான் பாரேன்னு சின்ன குழந்தை கூட சொல்லுற அளவுக்கு கதை மனப்பாடம் ஆகிடுச்சு. ஏன்னா ஒரே கதையை எல்லாப்படத்துலயும் பார்த்தா மனப்பாடம் ஆகாதா.

    ReplyDelete
  9. ஏனுங்ண்ணா, நீங்க நல்லவரா, கெட்டவரா? (நாயகன் படத்தில் வரும் வசனத்தை விஜய் கேட்பதுபோல் படிக்கவும்)

    ReplyDelete
  10. எப்படி தல உங்களால மட்டும் இப்படியெல்லாம்!?

    கலக்கல் :-) சும்மா அதிருது போங்க....

    ReplyDelete
  11. ஏற்கனவே ஒரு டாக்டர் பட்டம் தான் வாங்கியாச்சே, அடுத்து எந்தப் பட்டம் வாங்குவதற்காக இந்த ஆராய்ச்சி :))

    ReplyDelete
  12. ஏதோ சதி நடப்பதாகதான் எனக்கும் தோன்றியது..விசாரணைக் கமிஷன் வைக்கலாம்.

    ReplyDelete
  13. தல சூப்பர் .. எப்படி இப்படி எல்லாம்

    ReplyDelete
  14. எங்கள் காலப் படங்களில் துர்ஜயன், நாகராஜன் என்றுதான் பேர் வைத்திருந்தார்கள். வேட்டைக்காரனில் வேதநாயகம் என்று கவுரவமான பேர் வில்லனுக்கு கொடுத்திருக்கிறார்கள்

    ReplyDelete
  15. எப்படி இப்படி.....
    ஜோதில கலந்திட்டிங்க டாக்டர்...

    ReplyDelete
  16. வருகை மற்றும் கருத்துக்களைச் சொல்லிக் கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி நன்றி நன்றி..,

    ReplyDelete
  17. //வேட்டைக்காரன் விளம்பரம் சன் டி.வி யில் இன்னும் வந்து கொண்டிருந்தாலும் கலைஞர் டி.வி.யில் வரும் தமிழ் ப் படம் அளவிற்கு வலுவாக இல்லை என்பதும் ஒரு உண்மை //

    ப்கிர்வுக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  18. வருகை மற்றும் கருத்துக்களைச் சொல்லிக் கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி நன்றி நன்றி..,

    ReplyDelete
  19. அடடா, படத்துல இவ்வளவு உள்குத்து இருக்கா???? சும்மாவா குதுத்தாங்க முனைவர் பட்டம்.

    ரொம்ப நாளாச்சுங்க, இப்படி ஒரு பதிவு படிச்சு. வாழ்த்துகள்.

    ReplyDelete
  20. வழக்கமாக நண்பனுக்கு திருமணம் செய்து வைக்கும் காட்சிகளை கேலி செய்வது போலத்தான் இந்தப் படத்தில் சத்யனுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள்

    ReplyDelete
  21. /*மற்ற படங்களில் எல்லாம் வில்லனிடம் தப்பிவிடும் பாத்திரம் இதில் செத்தே போகிறது*/

    சத்யனை திரையில் காட்டியதுமே க்ளைமாக்சில் இதுதான் நடக்குமென புரிந்துக்கொண்டு பீல் பண்ணினேன்...

    /*சென்ற பின்னூட்டத்தில் இந்த இடுகை என்ற இடத்தில் தொடுப்பு கொடுக்கப் பட்டுள்ளது*/

    ரொம்ப கேவலப்படுத்துறீங்களே தலைவா... இதுகூட தெரியாதா...

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails