Saturday, May 1, 2010

மானஸ்தன் மகள்

அந்த நாய் வீட்டிக்கெல்லாம் பொண்ணக்கொடுக்க முடியாது உறுதியாக இருந்தார் குப்புசாமி செல்லக்கிளியின் தந்தை

செல்லக்கிளிக்கு திருமணப் பேச்சு ஆரம்பித்திருந்தார்கள். அவள் விருப்பப்படியே அவளது மாமன் மகன் சின்னராசுவையே மணமுடிக்கவேண்டும் என்று அவளது தாயார் நினைத்தார். ஆனால் செல்லக்கிளியின் தந்தைக்கு இதில் துளிகூட விருப்பம்மில்லை.

ஆனால் குப்புச்சாமியின் பேச்சு சபையேறவில்லை. அப்படியே சபையேறினால் கூட தாயம்மாவால் அந்த சபையே கலைத்துவிடப் படக்கூடிய அளவில் இருந்தது.

நீங்க பண்ணுனக் கூத்துக்கு எங்கண்ணந்தான் பொண் எடுக்க கூச்சப் படணும். அவரே அதப் பத்தி கவலைப் படாம பொண்ணுக் கேட்டு வரேண்ணு சொல்லிட்டார். தவிரவும் அவர மீறி நம்ம இனத்தான் எவனும் பொண்ணுக் கேட்டு வர மாட்டான். தெரியுமில்ல.

தாயம்மாவின் ஆதிக்கம்கொஞ்சம் அதிகம்தான்.

இதிலயே தெரிஞ்சிக்கடி. நம்ம பொண்ணு வாழ்க்கைய சீறழிக்கணும்னே திரியறானுகடி  குப்புச்சாமி குமுறினான்

வாய மூடுய்யா, எங்கண்ணூட்ல உம்பொண்ண தங்கம் போல வைச்சு பார்த்துக்குவாங்க நீ ஓரமா கிட

ஒரே அடக்காய் அடக்கிவிட்டாள் தாயம்மா

தாயம்மாவுக்கு குப்புச்சாமியின் அப்பா, அம்மா, தம்பி, அக்கா அனைவரும் ஆதரித்தனர். தவிரவும் செல்லக்கிளிக்கு பிடித்த மாப்பிள்ளையாதலால்  அனைவருக்கும் மகிழ்ச்சியே.

ஒரு சுபயோக சுப தினத்தில்  செல்லக்கிளியின் கழுத்தில் மூன்று முடிச்சுப் போட்டான் தங்க ராசு. அன்றைய தினத்தில் பற்பல சடங்குகள் நடந்தேறின. ஒரே ஊர் என்பதாலும் அந்த ஊரைச் சுற்றியே அனைத்துச் சொந்தங்களும்   இருந்ததாலும் மிகப் பெரிய கும்பல் கூடி  குலாவிக் கொண்டிருந்தது குப்புச்சாமியைத் தவிர.

மாலை மயங்கும் நேரம்.  செல்லக் கிளியின் கண்களில் மையிட்டு மையலுக்கு தயார் படுத்திக் கொண்டிருந்தனர்.  பூச்சூடி புதுவாழ்வு பூக்க தயாராகிக் கொண்டிருந்தாள்.

செல்லக்கிளி உங்கப்பன் உங்கிட்ட ஏதோ பேசணுமாம். அப்பத்தாக்கிழவி சொன்னாள். புடிக்காத கல்யாணமா இருந்தாலும் குப்புச் சாமி பாசக்காரண்டி. கடைசில மகள் பின்னாடியே சுத்தி சுத்தி வரான் பாருடி. கிழவு குப்புச் சாமிக்கு ஆதரவு அறிக்கை வாசித்துக் கொண்டிருந்தாள்.

பெத்த மனம் பித்து,.பிள்ளை மனம் கல்லுண்ணு சும்மாவா சொன்னாங்க,  நேரத்துக்கு ஒரு சொலவடை சொல்லியே தீரவேண்டிய கட்டாயத்தில் இருந்த ஒரு பெண்மணி வாய்ப்பை உபயோகப் படுத்திக் கொண்டாள்

உங்கப்ப போதையில இருக்காண்டி. அவன் கோபத்தை கிளறிறாத! கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிட்டு உடனே வந்துடு. விவரமான ஒரு கிழவி யோசனை சொல்லி அனுப்பினாள்.

அந்த தோட்ட வீட்டின் ஒரு ஓரத்தில் மரத்தடியில் குப்புச்சாமி அமர்ந்திருந்தான்.  அவனைப் பார்த்ததும் செல்லக்கிளி  குமுறிக் குமுறி அழ ஆரம்பித்தாள்.





https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgXiubYDTFe8lBUabQx2AJHr8fzEvTNOkzybwsKuHce4xW3bifCFPF9H-i3nM5d0EbBy5z4llkJlo_v-QbHihiHdwFEWZd_JxhZidzA8OqFVK8pemIyZ9WsH_GvbNEWi-vMe8Cw-_sSepY/s400/Sangeetha-Bridal-Designer-Saree.jpg


ஏம்மா, நான் அவ்வளவு தூரம் சொல்லியும் என்னை மதிக்காத வீட்டுக்கு போகப் போறியாமா?

அப்பா, மாமன் ரொம்ப நல்லதுப்பா

அப்ப நான் கெட்டவனா, உன்ன வேற யாரும் பொண்ணுகேட்டு வரவிடாம தடுத்து வைச்சிருந்தானுகம்மா

இல்லப்பா! யார் வந்திருந்தாலும் நான் கல்யாணத்துக்கு ஒத்திட்டு இருந்திருக்க மாட்டேன்ப்பா

அப்ப என்னைய மதிக்காத வீட்டுக்கு நீ போகத்தான் போறியா!

செல்லக்கிளி அமைதியாக நின்றிருந்தாள். அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

சடாரென்று ஒரு பாட்டிலை எடுத்து முன் வைத்தான் குப்புச்சாமி .

அது கொடிய விஷம்

அந்த வீட்டுக்கு போன நிமிஷமே இத குடிச்சிடுவேன். என் காரியத்துக்கு கூட நீ வர க்கூடாது.

முழு போதையும் பிடிவாதமும் நிறைந்த தன் தந்தை என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடியவன் என்பதை தெரிந்த செல்லக்கிளியின் உடல் முழுவதும் நடுங்க ஆரம்பத்தது.

சற்று நேரம் நடுங்கியவள் சட்டென்று அந்த பாட்டிலை திறந்து முழுவிஷத்தையும் ஒரே மடக்கில் குடித்தாள் செல்லக்கிளி.

குடித்த சில வினாடிகளில் மயங்கிச் சரிந்தாள்

செல்லக் கிளியின் கால்களைப் பிடித்துக் கொண்டு ஓ.............வென கதறி அழ ஆரம்பித்தான் குப்புச் சாமி. அவன் அலறலைக் கேட்டு அந்த ஊரே அவன் பக்கம் திரும்பியது

=========================================

இந்தக் கதை இத்தோடு முடிவடைய வேண்டும் என்று நினைப்பவர்கள் நேராக ஓட்டுப் போடும் இடத்திற்கு சென்று விடுங்கள்.  ஆனால்  தொடர்ந்து படிக்க விரும்புவர்கள் மேற்கொண்டு  படிக்கலாம் . கடைசியில் டிஸ்கியையும் படித்துவிடுங்கள்

=====================================================


அந்த ஊர் வளர்ந்தும் வளராத ஒரு இயற்கை கொஞ்சும் ஒரு சிற்றூர். அந்த ஊரில் ஒரு மருத்துவர் குடியிருந்து வந்தார்.  அவர் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றிவந்தார், ஓரளவு வசதியும் நல்ல இயற்கைச் சூழலும் இருப்பதால்  அந்தக் கிராமத்திலேயே தங்கி வந்தார்.  அவருடன் அவரது வயதான பெற்றோரும் தங்கி இருந்தனர்,

அன்றைய் இரவுப் பொழுதில் சாப்பிட்டு விட்டு அப்போது தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார்.. அப்போது வீட்டு வாசலில் சில இளைஞர்கள் டாக்டர் சார், டாக்டர் சார்,  தளபதி சூர்யா ஸ்டைலில் கூப்பிட்டுக் கொண்டிடுந்தனர்.

சார் இந்த பொண்ணு விஷம் சாப்பிட்டுட்டா ஒரு ஊசியப் போடுங்க

அந்தப் பெண்ணைப் பார்த்த உடனேயே தெரிந்துவிட்டது,  ஏறக்குறைய ஆழ்மயக்க நிலைக்கு சென்று விட்டாள். ஏதாவது சகல வசதிகளும் நிறைந்த மருத்துவமனைக்கு போனால் மட்டுமே காப்பாற்றுவது சாத்தியம்

ரொம்ப மோசமான நிலைமைல இருங்காங்க,
உடனே டவுனுக்கு கூட்டிட்டு போகணும்.

நீங்க எதாவது பண்ணுங்க டாக்டர்.
 உங்க கிளினிக்குக்கூட போயிடலாம்.   வாங்க டாக்டர்.

அங்க அவசரத்துக்கு பார்க்கறமாதிரித்தான் மருந்து இருக்கு. இது டாக்டர்

டாக்டர் இதுதான் அவசரம். டவுன் போற்துக்குக் கூட தாங்குமான்னு தெரியலயே

கொஞ்சம் சுயநினவு இருந்தாக்கூட வயிறு கழுவலாம் இப்ப அதக்கூட பண்ண முடியாது, உடனே டவுனுக்குப் போனா ஏதாவது பண்ணலாம். கிழம்புங்க.

டாக்டர் ஏதாவது பண்ணுங்க.

போலீஸ் கேசெல்லாம் ஆகாதுங்க . நீங்க ஊசி போடுங்க டாக்டர்.

இந்த அம்மாவுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவுல வைச்சு வைத்தியம் பார்க்கணும். அதுக்கு வழி செய்யுங்க இது டாக்டர்.


நாங்க இவ்வளவு கெஞ்ச்சிட்டு இருக்கோம். நீங்க எதுவும் காதுலயே வாங்க மாட்டீங்கறீங்க


இவர் இப்படியெல்லாம் கேட்டா ஒண்ணும் செய்ய மாட்டார்.நாம வேற வழிக்குத் தான் போகணும்,  அடிங்கடா


அந்த வாடகைவீட்டின் முகப்பு மற்றும்சில பணியாளர்கள் தாக்கப் பட்டனர்.


சற்று நேரத்தில் கோபம் அடங்கிய மற்றவர்கள் விஷம் குடித்த பெண்ணை தூக்கிக் கொண்டு ஓட ஆரம்பித்தனர். . ஆனால் வழியிலேயே அந்தப் பெண்ணின் உயிர் பிறிந்தது,


டிஸ்கி;-   இந்தக் கதையை ஒன்றாகப் படிப்பவர்கள் படிக்கலாம். இரண்டாகப் பிரித்து இரண்டு கதையாக படிப்பவர்களும் படிக்கலாம். தேவைப் பட்டால் நமக்கென்ன என்று மூன்றாவது கதையை கண்டுபிடித்து படிப்பவர்கள் படித்துக் கொள்ளலாம்

டிஸ்கி:- இதை படித்த பின்னர் ஓட்டுப் போடலாம், பின்னூட்டம் போடலாம் ஏதாவது ஒரு வாய்ப்பு அல்லது இரண்டு வாய்ப்பையுமே உபயோகப் படுத்திக் கொள்ளுங்கள்

9 comments:

  1. கதைதான், இருந்தாலும் அந்தப்பொண்ணுக்கு புத்தி பத்தாது.

    ReplyDelete
  2. //Dr.P.Kandaswamy said...

    கதைதான், இருந்தாலும் அந்தப்பொண்ணுக்கு புத்தி பத்தாது. //

    வாங்க சார், கிராமத்து பிடிவாதங்களும் உணர்ச்சி வேகத்தில் எடுக்கப் படும் பைத்தியக் கார முடிவுகளும் என்னைவிட உங்களுக்கு நன்றாகவேதெரியும்.

    பெண்ணின் தந்தை ஏன் இவ்வளவு முரண்டு பிடித்தார் என்பதை விளக்கினால் கதை நீண்ண்ண்டு விடுமே என்று தான் அப்படியே விட்டுவிட்டேன்

    ReplyDelete
  3. கதை வித்தியாசம்.. போட்டாச்சு ஓட்டு...

    ReplyDelete
  4. //அஹமது இர்ஷாத் said...

    கதை வித்தியாசம்.. போட்டாச்சு ஓட்டு... //

    நன்றி தல

    ReplyDelete
  5. //T.V.ராதாகிருஷ்ணன் said...

    ஓட்டு போட்டாச்சு //

    நன்றி தல

    ReplyDelete
  6. /* கிழவு குப்புச் சாமிக்கு ஆதரவு அறிக்கை வாசித்துக் கொண்டிருந்தாள். */
    /* நேரத்துக்கு ஒரு சொலவடை சொல்லியே தீரவேண்டிய கட்டாயத்தில் இருந்த ஒரு பெண்மணி வாய்ப்பை உபயோகப் படுத்திக் கொண்டாள் */
    சொலவடைகள் நன்றாக இருந்தன...

    ReplyDelete
  7. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தலை

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails