Saturday, June 19, 2010

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்.....,

1. சீதைக்கு ராவணன் மேல் காதல் வந்திருந்ததா? இல்லையா?

2.சூர்ப்ப நகை  ராம, லட்சுமணர்கள் மீது ஆசைப்பட்டாரா? இல்லையா?

3.வீரப்பனால் கடத்தப் பட்டவர்கள் அவனது உபசரிப்பு காரணமாக அவன்மேல் பற்றுக் கொண்டவர்களாக மாறி இருக்கிறார்களா? இல்லையா?

4.வசனம் எழுதுபவர்கள்  (இயக்குபவர்களும்கூட)  அந்த ஊர் மக்களிடையே போய் சில காலம் வசிக்க வேண்டும் என்று சட்டம் இயற்ற முடியாதா?

5.மனைவியை காஸ்ட்யூம் டிசைனராக போடுபவர்கள் எல்லாம் மனைவி கொடுக்கும் ஆடைகளைத்தான் அணிவார்களா?

6.புனைவு என்று சொல்லிக் கொண்டு எதை வேண்டுமானாலும் எடுக்கலாமா? இதை தமிழ்கூறும் நல்லுலகமும் பதிவுலகமும் ஆதரிக்கிறதா?

7.கீழ்த்தட்டு மனிதன் எளிதாக அடுத்தவன் மனைவி மேல் காதல் கொள்வானா? இல்லை அதை புணைந்தவர்களின் எண்ணப்படி காதல் கொள்கிறானா?

8.ஐஸ்வர்யாராய்க்கு உலக அழகிப் பட்டம் கொடுத்து பதினாறு ஆண்டுகள் ஆகிவிட்டது யாராவது கொண்டாடுவார்களா?

9.மேட்டுக்குடி, மேடல்லாத குடி பிரச்சனைக்கும் திருநெல்வேலிக்கும் உள்ள தொடர்பு சிலராலாவது பேசப்பட்டிருக்குமா?

============================================================
டிஸ்கி:- மேலும் உண்மை தெரியவேண்டுபவர்கள் பின்னூட்டங்களில் கேட்கலாம்.

28 comments:

 1. இதுதான் பண-வைரம் இயக்குனரின் மகா மொக்கையான படமா?

  பல நாட்களாக வராமல் இருந்த கனவுகளே சுரேஷ் சார் இந்த பதிவுக்கு வந்ததின் பின்னணி என்ன?

  அயல் நாட்டு சதி காரணமாக அவரின் இணையதள வருகை தடுக்கப்படுவதின் உண்மை என்ன?

  இந்த படத்தை சுரேஷ் சார் பார்துவிட்டாரா?

  அவரின் கருத்து என்ன?

  ReplyDelete
 2. தேசிய-ஒலக அளவில் படம் எடுக்கிறேன் என்று இன்னும் எத்தனை பேர் கிளம்புவார்கள்?

  செத்துப்போன பிணத்திற்கு இன்னும் எத்தனை நாள்தான் அழகான ஆடையை (இந்தமுறை மனைவியின் சாய்ஸ்) உடுத்தி அழகு பார்ப்பார்?

  அப்புறம், மிக முக்கியமான கேள்வி: இயக்குனருக்கு - இன்னமுமா இந்த ஊர் நம்பள நம்பிக்கிட்டு இருக்கு?

  ReplyDelete
 3. வாங்க தல..,

  //அயல் நாட்டு சதி காரணமாக அவரின் இணையதள வருகை தடுக்கப்படுவதின் உண்மை என்ன?//

  தொழிற்நுட்பக் கோளாறு

  //இதுதான் பண-வைரம் இயக்குனரின் மகா மொக்கையான படமா?//

  ஆனந்தம் என்ற பெயரில் ஆரம்பித்து ஐஸ்வர்யாராயை வண்டியில் வைத்து கீழே தள்ளுவது போலெல்லாம் காட்சிகள் எடுத்து படம்வெளிவந்த போது ஒரு முட்டுச் சந்தில் சாக வைத்தாரே, அந்தப் படத்திற்கு ஈடாகாது இந்தப் படம்.

  ReplyDelete
 4. பேசாமல் ஷோலே படத்தின் இரண்டாம் பாகம் என்று சொல்லி படத்தை வெளியிட்டிருக்கலாம். அசத்தலாய் இருந்திருக்கும். நமக்கும் இப்படியெல்லாம் எதுவும் தோன்றியிருக்காது.

  மெகபூபா பாட்டிற்கு பிபாஷாவை ஆட விட்டிருக்கலாம். அவரும் வந்து ஆட்டிவிட்டுப் போயிருப்பார்

  ReplyDelete
 5. //பேசாமல் ஷோலே படத்தின் இரண்டாம் பாகம் என்று சொல்லி படத்தை வெளியிட்டிருக்கலாம். அசத்தலாய் இருந்திருக்கும். நமக்கும் இப்படியெல்லாம் எதுவும் தோன்றியிருக்காது//

  தல அப்படி ஒரு கொடும ஏற்கனவே நடந்துடுச்சு தல. அண்ணன் ராம் கோபால் வர்மா அந்த வேலைய செஞ்சுட்டார்.

  //மெகபூபா பாட்டிற்கு பிபாஷாவை ஆட விட்டிருக்கலாம். அவரும் வந்து ஆட்டிவிட்டுப் போயிருப்பார்//

  தல, இதில் ஆடிவிட்டு என்றல்லவா இருக்கவேண்டும்? :)

  ReplyDelete
 6. //அண்ணன் ராம் கோபால் வர்மா அந்த வேலைய செஞ்சுட்டார்.
  //

  அந்தப்படம் ரீமேக்காம்,

  ReplyDelete
 7. பேசும்போது லே போட்டு பேசினால் அது திருநெல்வேலி பாஷை ஆகி விடுமா?

  அடுத்து சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், வளையாபதி, குண்டலகேசி எல்லாம் கூட படமா வருமா?

  இந்தியா பாகிஸ்தானை தோற்கடித்ததால் ஏதாவது நன்மை வருமா?

  ReplyDelete
 8. //சீவக சிந்தாமணி,//

  டி.ஆர். சிலம்பரசன் இயக்கத்திற்கு சூப்பரான கதை

  ReplyDelete
 9. வெற்றிக்களிப்பில் ஆடிய ஹர்பஜனிடம் இரண்டு விரலை காட்டியவாறு சோயப் அக்தார் கூறியது என்ன?

  ReplyDelete
 10. //இந்தியா பாகிஸ்தானை தோற்கடித்ததால் ஏதாவது நன்மை வருமா?//


  டோனியின் பதவி காப்பாற்றப்படும்

  ReplyDelete
 11. //டி.ஆர். சிலம்பரசன் இயக்கத்திற்கு சூப்பரான கதை//

  குறளரசன் தான் ஹீரோ - ஓக்கேவா?

  வசனம் - வழக்கம் போல வீடீஆர் தான், சரியா?

  ReplyDelete
 12. //வெற்றிக்களிப்பில் ஆடிய ஹர்பஜனிடம் இரண்டு விரலை காட்டியவாறு சோயப் அக்தார் கூறியது என்ன?//


  சானியா மாதிரி இரண்டாம்தாரம் ஏதாவது தேடியிருப்பாரோ!

  ReplyDelete
 13. //குறளரசன் தான் ஹீரோ - ஓக்கேவா? //


  பழைய விஜய், எஸ்.ஜே.சூர்யா அல்லது சிலம்பரசனே நடிக்கலாம்.


  ஹிட்ஸ்களை அதிகரிக்க சீவக சிந்தாமணிக்கு உரையெழுதும் யோசனை கூட நமக்கிருக்கிறது..,

  ReplyDelete
 14. //சானியா மாதிரி இரண்டாம்தாரம் ஏதாவது தேடியிருப்பாரோ!//

  தல,

  குடும்ப பிளாக்கில் (ராணி எப்படி குடும்ப பத்திரிக்கையோ, அதே மாதிரி உங்க பிளாக் குடும்ப பிளாக்) இப்படி எல்லாம் எழுதலாமா?

  ReplyDelete
 15. //வசனம் - வழக்கம் போல வீடீஆர் தான்,//


  உண்மை, கணகளில் நீர் வடிய எதுகை, மோனையுடன் செம்மொழியில் தீட்டிவிடுவார்.

  ReplyDelete
 16. //குடும்ப பிளாக்கில் (ராணி எப்படி குடும்ப பத்திரிக்கையோ, அதே மாதிரி உங்க பிளாக் குடும்ப பிளாக்) இப்படி எல்லாம் எழுதலாமா?//

  தனியாக ஒரு ப்ளாக் ஆரம்பித்து அதைப் படிக்க காசு வாங்கிக் கொண்டு சீவக சிந்தாமணியை எழுதி உலகத் தரம் வாய்ந்த ஒரு இலக்கியத்தை ரீ ரிலீஸ் செய்து விடலாம் என்று இருக்கிறேன்.

  ReplyDelete
 17. //தனியாக ஒரு ப்ளாக் ஆரம்பித்து அதைப் படிக்க காசு வாங்கிக் கொண்டு சீவக சிந்தாமணியை எழுதி உலகத் தரம் வாய்ந்த ஒரு இலக்கியத்தை ரீ ரிலீஸ் செய்து விடலாம் என்று இருக்கிறேன்//

  பே பெர் வியூ பிளாக்கா தல? வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 18. ஏற்கன்வே சீவக சிந்தாமணி நாவலை பதிவர் பினாத்தல் சுரேஷ் எழுதியிருப்பதாக
  http://ssankar.blogspot.com/2010/06/blog-post.html இடுகை சொல்லுகிறது

  ReplyDelete
 19. என்ன தல ஏன் ஏன்... ?

  படம் பார்த்த பாதிப்பா?

  தல அடுத்த படத்துல ஐஸ்வர்யா ராய் உண்டா இல்லையா.

  ReplyDelete
 20. //தல அடுத்த படத்துல ஐஸ்வர்யா ராய் உண்டா இல்லையா.//


  அரவிந்த சாமி கூட இப்படித்தான் இருந்தார்

  ReplyDelete
 21. தல... இப்பூட்டு கேள்விக்கெல்லாம் பதில் தெரியாது.. சாய்ஸ்ல விட்டுருவோமா..

  ReplyDelete
 22. தலை அசத்துறீங்கள் போங்கோ.. பதில் தெரியாத கேள்விகள் என்று இதைத் தான் சொல்வதோ?

  ReplyDelete
 23. ஆஹா கேள்விகள் என்றாலே நமக்கு ஆகாது . நான் அப்பறமாக வருகிறேன் .

  ReplyDelete
 24. நல்லா கேக்குறாய்ங்கய்யா கேள்விய.

  //"எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்.....,"//

  ... அடுத்த படத்துக்கு யாராவது டைட்டிலா வச்சிர போறாங்க... அவ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 25. // Starjan ( ஸ்டார்ஜன் ) said...

  தல... இப்பூட்டு கேள்விக்கெல்லாம் பதில் தெரியாது.. சாய்ஸ்ல விட்டுருவோமா..//

  எங்க ஊர்ல இப்படின்னு பண்றத சாமிக்கு விட்றதுண்ணு சொல்லுவாங்க

  ReplyDelete
 26. // தமிழ் மதுரம் said...

  தலை அசத்துறீங்கள் போங்கோ.. பதில் தெரியாத கேள்விகள் என்று இதைத் தான் சொல்வதோ?//

  நெஜமா உங்களுக்கு தெரியாதா தல

  ReplyDelete
 27. // !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

  ஆஹா கேள்விகள் என்றாலே நமக்கு ஆகாது . நான் அப்பறமாக வருகிறேன் .//

  கேள்விதானே தல பிடிக்காது, பதிலச் சொல்லுங்களேன்..,

  ReplyDelete
 28. //எட்வின் said.

  ... அடுத்த படத்துக்கு யாராவது டைட்டிலா வச்சிர போறாங்க... அவ்வ்வ்வ்வ்//


  இந்த வசனம் ஏற்கனவே பிரபலம் ஆனதுதான் தல

  ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails