Wednesday, March 16, 2011

இந்தியா உலகக் கோப்பையை வென்றால்...., (புதுசு)

டோனியின் பெருமைகளைப் பற்றி பேசிக் கொண்டே போகலாம். மகாபாரதத்தில் பாண்டவர்கள் எப்படி யுக்திகளை உபயோகப் படுத்தினார்களோ அதே போல இந்திய அணி கோப்பையை வாங்கிக் கொடுத்திருக்கிறார்.


கபில்தேவின் அணியைப் போல சிறந்த அணி கிடையாது  என்பதை ஊடகங்களும் ஒத்துக் கொண்டிருக்கின்றன. பதிவர்களும் ஒத்துக் கொண்டிருக்கிறார்கள்.  இருந்தாலும் கோப்பையை  வாங்கி இருக்கிறது. ஒரே காரணம் டோனிதான்.  சச்சின் சிறப்பாக பேட்டிங் செய்கிறார் என்றால் அதற்குக் காரணம் டோனிதான். மிக மிகச் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கால கட்டத்தில்கூட இரட்டைச் சதம் அடிக்காத சச்சின் டோனியின் தலைமையில்தான் அதுவும் டோனியுடன் களத்தில் இருக்கும்போதுதான் என்பது சரித்திரம். அதுவும் சச்சின் கொஞ்சம் நிதானமாக ஆடிய போது மிக வேகமாவும், அதே நேரத்தில் ஸ்ட்ரைக் ரொடேசன் கொடுக்காமல் ஆடுவது எபப்டி என்பதை களத்திலேயே ஆடிக் காட்டியவர் டோனி என்பது அந்த ஆட்டத்தைப் பார்த்தவர்களுக்குப் புரியும்.

கோலி, யூசுப் பதான் போன்றவர்களை இடம் மாற்றி இறக்கியது, நேஹ்ராவுக்கு கடைசி ஓவர் கொடுத்தது போன்று உலகக் கோப்பையின்போதே பல சோதனை முயற்சிகள் செய்ய கிளைவ் லாயிட், ஆலன் பார்டர், ஹன்ஸி குரோன்யே போன்ற தலைகள் கூட தயங்கி இருக்கிறார்கள். ஆனால் டோனி அதை செய்தவர். அந்த முயற்சிகள் அப்போது தோல்வி போல தெரிந்தாலும் பின்னர் தங்கள் தவறுகளை சரி செய்து கொள்ள வாய்ப்பு கொடுத்தவர் டோனி.


எங்கே தான் அதிக ரன்கள் குவித்தால் பின்னால் இருக்கும் வீரர்களுக்கு சரியான வாய்ப்புக் கிடைக்காதோ என்ற எண்ணத்தில் தனது ரன் குவிக்கும் தாகத்தை கட்டுப் படுத்திக் கொண்டு இருந்தவர் டோனி.  முக்கிய சீனியர் மட்டையாளர்களை  உள்வட்டத்துக்கும் நிறுத்தி மற்ற அணிகள் களத்தடுப்பு செய்து கொண்டிருக்க அவர்களை வெளியே நிறுத்தி அதிக அளவு வேலைகளை வெளிக் கொணர்ந்தவர் டோனி.


முதற்சுற்றில் தோல்விகள் அடைந்ததை ஊடகங்கள் பெரிது படுத்தி திட்டிக் கொண்டிருந்தன. ஆனால் அந்தத் தோல்விகளால்தான் இந்திய அணிக்கு வசதியான மைதானங்கள் அமைந்தன என்பது இன்னுமொரு சரித்திரம்.


ப்யூஷ் சாவ்லா என்றொரு ரகசிய ஆயுதத்தைக் காட்டியே பிற அணிகள் வயிற்றில் புளியைக் கரைத்தவர்  டோனி.  தான் ஏற்கனவே பந்து வீசிய காலங்களில் மிகக்குறைவான ரனகளை மட்டுமே கொடுத்திருந்த போதிலும்,  தற்பெருமை விரும்பாமல் மற்றவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்த வள்ளல் டோனி. 









எனவே இப்போது வென்றிருக்கும் கோப்பையை டோனிக்கு சமர்ப்பிப்பதோடு, பாரத ரத்னா விருதினையும் டோனிக்கு கிடைக்க இந்த வழிவகைகள் செய்ய வேண்டும்.


டிஸ்கி:=இந்திய அணி வென்றால் டோனி எப்படி பாராட்டி எழுதலாம் என்று ஒத்திகை பார்க்க எழுதப் பட்டது

டிஸ்கி2:=  வென்றால் இதைவிட இன்னும் மிகச் சிறப்பாக புகழ்ந்து எழுத நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails