Thursday, June 6, 2013

சாமிக்கு விட்றா சர்வேசா........,

+2ல் கண்ணாபின்னாவென்று மக்கள் மதிப்பெண்கள் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். கற்கால மாணவர்கள் வெகுசிலரே நூற்றுக்கு நூறு வாங்கி வந்த சூழலில் ஒரே மார்க் மாணவர்கள் வெகுசிலரே இருந்தனர். அந்த கற்கால மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு என்ற கூடுதல் ஐட்டம் ஒன்று இருந்தது. அதில் பொது அறிவு கேள்விகளெல்லாம் வைத்து இருந்தனர். ஒரே மதிப்பெண்களில் வந்து நிற்பது வெகுசில மாணவர்களே இருந்தனர். பின்னர் அந்த பொது அறிவுக் கேள்விகளை கட் செய்ய அதிலும் மாணவர்க்ள் முழு மதிப்பெண்கள் எடுக்க ஆரம்பித்தனர். 

வெட்டியாக ஒரு கூடுதல் தேர்வாக இருந்த அந்த நுழைவுத் தேர்வை பின்னர் வெட்டி எடுக்க மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் வித்தியாசமும் குறைந்து ஒரே மதிப்பெண்களில் பலரும் வந்து குவிய ஆரம்பித்து விட்டனர்; அந்த பிரச்சனையை சமாளிக்க அறிமுகப் படுத்தப் பட்டதுதான் குலுக்கல் எண் (ராண்டம் நம்பர்). பொறியியல் நேர்காணலில் உபயோகப் படுத்தப் படும் முறை. 

 //பி.இ., சேர்க்கை செயலர் ரைமண்ட் உதிரியராஜ் பேசியதாவது:வரும், 12ம் தேதி, அனைத்து மாணவர்களுக்கும், "ரேங்க்&' பட்டியல் வெளியிடப்படும். இந்த பட்டியல் தயாரிக்க, ரேண்டம் எண்கள் உதவுகின்றன. ஒரே, "கட்-ஆப்&' மதிப்பெண்களில், 350 பேர் வரை வருவர்.
இவர்களிடையே, கணித மதிப்பெண் யாருக்கு அதிகம் என, பார்க்கப்படும். இதில், அனைவரும் சமமாக இருந்தால், இயற்பியல் பாடத்தில் பெற்ற மதிப்பெண் பார்க்கப்படும். இதுவும், சரி சமமாக இருந்தால், நான்காவது பாடத்தில் பெற்ற மதிப்பெண்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
இதுவும், ஒரே அளவு மதிப்பெண்களாக இருந்தால், மாணவர்களின் பிறந்த தேதி பார்க்கப்படும். இதிலும், "டை" வந்தால், இறுதியில், ரேண்டம் எண்களில், அதிக மதிப்புடைய எண்கள், யாரிடம் உள்ளதோ, அந்த மாணவர், முதலில் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார். இவ்வாறு ரைமண்ட் தெரிவித்தார்.//


ஏறக்குறைய இன்னபிற  தேர்வுகளிலும் அப்படித்தான்.   


இந்த குலுக்கல் முறையைவிட  தமிழ்பாட மதிப்பெண் மொத்த மதிப்பெண் போன்றவை உபயோகப் ப்டுத்தினால் தமிழுக்கு மரியாதை கொடுத்த மாதிரியும் இருக்கும்.  

சில பல பள்ளிகளில் மொழிப்பாடங்களுக்கு பெரிய முக்கியத்துவம் தராமல் நான்கு பாடங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து பாடம் எடுக்கிறார்களாம். நன்றாகப் படிக்கும் மாணவர்கள் என்பதால ஓரளவு படித்தாலே நல்ல மதிப்பெண்களை மொழிப்பாடத்தில் எடுத்து விடுகின்றனர். ,மற்றபடி அந்த பள்ளிகளுக்கு தமிழ், ஆங்கிலம் பாஸ் செய்தாலே போதும் என சாமி விடும் மனப்பாங்கே நிலவி வருகிறது.  இது போன்று ஒரு உத்தரவு வந்தால் ஓரளவு மொழிப்பாடங்களையும் மாணவர்கள் படிக்க ஆரம்பிப்பார்கள்.

1 comment:

  1. இந்த குலுக்கல் முறையைவிட தமிழ்பாட மதிப்பெண் மொத்த மதிப்பெண் போன்றவை உபயோகப் ப்டுத்தினால் தமிழுக்கு மரியாதை கொடுத்த மாதிரியும் இருக்கும்.

    சிறப்பான யோசனை ..!

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails