குணாளின் வாழ்க்கையில் இதற்கு முன் என்ன நடந்தது என்பதை அறிய இந்தச் சுட்டியைப் பயன்படுத்துங்கள்
குணாளின் தன் மனைவியின் படுக்கையறையில் தனது தந்தையின் இளம்மனைவி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார். இனிமேல் உன்முகத்தையே பார்க்க மாட்டேன் என்று சபதம் போட்டுவிட்டு வெளியேறிவிடுகிறார்.
அசோகர் புத்திர சோகத்தில் ஆழ்ந்து கிடக்கிறார். நாடு கடத்தப்பட்ட மகனை திரும்ப அழைக்கும் விதமாக கடிதம் எழுதச் சொல்லி அதில் கையெழுத்திடுகிறார், ஆனால் அந்த கடிதத்தில் குணாளின் கண்களை குடுடாக்கும்படி எழுதி அதை தட்ச சீலத்திற்கு அணுப்புகிறார் அசோகரின் இளம் மனைவி. தட்ச சீலத்தின் பொறுப்பில் இருக்கும் மகேந்திரர் இந்த கடிதத்தை குணாளிடம் காட்ட குணாள் ஐந்து நிமிடங்கள் வசனம் பேசுகிறார், பின்னர் தனது தந்தையின் சபத்தை நிறைவேற்ற தனது கண்களை தானே குருடாக்கிக் கொண்டு தட்ச சீலத்தைவிட்டு வெளியேறுகிறார்,
அப்போது புத்த துறவி அவருக்கு வழிகாட்டுகிறார். நாட்டைவிட்டு வெளியேறிய குணாளின் மனைவி தனது கணவனின் பாடலைக்கேட்டு அவரைக் கண்டுபிடித்துவிடுகிறார். இருவரும் ஒரு கிராமத்தில் பிச்சை எடுத்து பிழைக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறக்கிறது. ஒருநாள் பிச்சை எடுத்து வரும்போது குழந்தை இறந்துவிடுகிறது, அது தெரியாமலேயே குணாள் தாலாட்டுப் பாடுகிறார்.
பின்னர் வேறொரு நகரம் நோக்கிச் செல்கிறார்கள். அந்த நகரத்திற்கு அசோகச் சக்க்ரவர்த்தி வந்திருக்கிறார், அவருக்கு புத்த பிட்சுவின் பாடல் கேட்கிறது,. அசோகர் புத்த பிட்சுவை அழைத்துவரச் சொல்கிறார். காவலர்கள் குணாளனை அழைத்துவருகிறார்கள். குருடர்களை அரசர் பார்க்கக்கூடாது என்பதற்காக அவரை திரைச்சீலைக்கு பின்னாள் இருந்து பாடச் சொல்கிறார்கள் . குணாள் அந்தப் பழைய பாடலைப் பாட அசோகர் அவரைக் கண்டு பிடித்துவிடுகிறார்.
பின்னர் தன் மகனின் கண்கள் குருடான விதத்தினை அறிந்து பொங்கி எழுகிறார், அப்போது பழைய புத்த பிட்சு வந்து புத்தர் கோவிலுக்கு அழைத்துச் சென்று அங்கே ஒரு பாட்டைப் பாட குணாளின் கண்கள் திறந்து கொள்ள
சுபம்.
அதில் இடம் பெறிருந்த சில பாடல்கள்
-------------------------------------
பூமியில் மானிட ஜென்மமடைந்துமோர்
புண்ணியமின்றி விலங்குகள்போல்
பூமியில் மானிட ஜென்மமடைந்துமோர்
புண்ணியமின்றி விலங்குகள்போல்
காமமும் கோபமும் உள்ளம் நிரம்பவே
காமமும் கோபமும் உள்ளம் நிரம்பவே
காலமும் செல்ல மடிந்திடவோ
காலமும் செல்ல மடிந்திடவோ உத்தம மானிடராய்ப் பெரும் புண்ணிய
நல் வினையால் உலகில் பிறந்தோம்
உத்தம மானிடராய்ப் பெரும் புண்ணிய
நல் வினையால் உலகில் பிறந்தோம்
சத்திய ஞான தயாநிதியாகிய
சத்திய ஞான தயாநிதியாகிய
புத்தரைப் போற்றுதல் நம் கடனே
புத்தரைப் போற்றுதல் நம் கடனே
உண்மையும் ஆருயிர் அன்பும் அஹிம்சையும்
இல்லையெனில் நர ஜென்மமிதே
உண்மையும் ஆருயிர் அன்பும் அஹிம்சையும்
இல்லையெனில் நர ஜென்மமிதே
மண்மீதிலோர் சுமையே பொதி தாங்கிய
பாழ் மரமே வெறும் பாமரமே
மண்மீதிலோர் சுமையே பொதி தாங்கிய
பாழ் மரமே வெறும் பாமரமே
-------------------------------------
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ?
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ?
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ?
வடிவழகிலும் குணமதிலும் நிகரில்
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ?
வடிவழகிலும் குணமதிலும் நிகரில்
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ?
அண்டரிலே அண்டரிலே நில மண்டலமேல்
அண்டரிலே நில மண்டலமேல் பல
எண்டிசை ஆடவர் பெண்டிரில் தேவா
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ?
தீரத்திலே தீரத்திலே உயர் கம்பீரத்திலே
தீரத்திலே உயர் கம்பீரத்திலே கொடை
உதாரத்திலே நடை ஒய்யாரதிலே
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ?
தானத்திலே தானத்திலே சொல் நிதானத்திலே
தானத்திலே சொல் நிதானத்திலே
கலை ஞானதிலே சரச கானத்தில் தேவா
உனைக் கண்டு மயங்காத பேர்களுண்டோ
வடிவழகிலும் குணமதிலும் நிகரில்
உன்னைக் கண்டு மயங்காத பேகளுண்டோ?
மேலும் இந்தப் படத்தின் பாடல்களுக்கு இங்கே செல்லுங்கள்.
இது நாம் இருவர் படமா ...
ReplyDeleteஇது நாம் இருவர் படமா ...
ReplyDelete//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
ReplyDeleteஇது நாம் இருவர் படமா ..//
படத்தின் பெயர் அசோக் குமார் தலைவரே.., அதாவது அசோகச் சக்கரவர்த்தியின் குமாரர்
அருமை
ReplyDeleteMKT படங்கள் எல்லாமே அருமையான பாடல்களைக் கொண்டவைதான். ஹரிதாஸ், சிவகவி முதலிய படங்கள் என்னைக் கவர்ந்தவை.
ReplyDeleteபடம் எவ்வளவு போருன்னு தெரியும் ஆனா அதை போரடிக்காம விமர்சனம் பண்ணியிருக்கிங்க தல
ReplyDeleteதல அருமையான பதிவு..
ReplyDelete@தியாவின் பேனா
ReplyDelete@பெயர் சொல்ல விருப்பமில்லை
@அக்பர்
@வினோத்கெளதம்
வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி நண்பர்களே..,
//அக்பர் said...
ReplyDeleteபடம் எவ்வளவு போருன்னு தெரியும் ஆனா அதை போரடிக்காம விமர்சனம் பண்ணியிருக்கிங்க தல//
படம் விறுவிறுப்பான படம்தான் தல..,
பாடல்கள் மட்டுமே கொஞ்சம் நிதானித்துச் செல்கின்றன. ஆனால் அவைதான் அந்த கால கட்ட ரசிகர்களின் விருப்பம் என்பதால் தவிர்க்க இயலாத விஷயமாகப் படுகிறது.
படத்தோட பேரு என்ன தல? என்று கேட்க நினைத்தேன்.. அப்புறம் பாத்தா... அசோக்குமார் என்று இருக்கிறது! நிஜமாவா???
ReplyDeleteப்கிர்வுக்கு நன்றி டாக்டர்
ReplyDelete///ஜெகநாதன் said...
ReplyDeleteபடத்தோட பேரு என்ன தல? என்று கேட்க நினைத்தேன்.. அப்புறம் பாத்தா... அசோக்குமார் என்று இருக்கிறது! நிஜமாவா???///
ஆமா தல
//ஆ.ஞானசேகரன் said...
ReplyDeleteப்கிர்வுக்கு நன்றி டாக்டர்//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல..,
பிரமாதமான விமர்சனம். நான் இந்தப் படத்தைப் பார்த்ததில்லை. காரணம் படம் வெளிவந்தபோது எனக்கு 6 வயது. சிவகவி படம்தான் லேசாக ஞாபகம் இருக்கிறது. அட்டகாசமான விமர்சனம்.
ReplyDelete