Saturday, February 13, 2010

ஐ லவ் யூ சொல்லியே ஆகணுமே..........,

பிப்பிரவரி 14 வருது. எப்படி ஐ லவ் யூ சொல்லலாம்? எதாவது புதுசா யோசித்து செய்ய வேண்டும்.  ஆனால் ஒண்ணுமே புதுசா தோணவே மாட்டாங்குதே.

ஒரு நாள் பூரா யோசிச்சி பார்த்தாச்சி. ம்........   ஏதாவது புதுசா டிரஸ் வாங்கிக் கொடுத்து ஐ லவ் யூ சொல்லலாமா? ஏற்கனவே கலர் கலரா டிரஸ் வெச்சிருக்கா!

புடவையெல்லாம் ஒரு முறை கட்டினத ரெண்டாவது முறை கட்டுவாளான்னே தெரியல.  ஒரு வேளை வாடகைக்கு ஏதும்  டிரஸ் எடுக்கறாளோன்னு கூட தோணும்.  தவிரவும் கொஞ்சம் காஸ்ட்லியாவே தெரியும்.  அதையெல்லாம் விட விலையுயர்ந்த உடையா வாங்கி அது புடிக்கலேண்ணா என்ன பண்ணலாம்?

எங்காவது வெளிய கூட்டிட்டுப் போய் ஐ லவ் யூ சொல்லலாமா? யோசிச்சி பார்த்தாச்சி. சன்னமா கேட்டும் பார்த்தாச்சி. ம்  சாயங்காலம் ஏதோ ஒரு அவங்க ஊர் பக்கம் போகணுமாம்.  அப்படியே வெளிய போனாலும் 9 மணிக்கு மேலே வெளிய சுத்தமாட்டா..,  இரவுக் காட்சி சினிமாவுக்கு போவதெல்லாம் கெட்ட பசங்க செயலாம் அப்படித்தான் அவங்க அப்பா அம்மா சொல்லியிருக்காங்களாம். கெட்ட பசங்களுக்குன்னு தனியா ஏதாவது காட்சிகள் சேர்த்து ஓட்டுவாங்களா என்ன?

நமக்குன்னு வந்து ..,  பார்த்த அன்னைக்கே தலய திருப்பிட்டு போயிருக்கலாம். குத்துவிளக்கு அது இதுன்னெலாம் தோணி.., சே...,   ஜாலியா என் ஜாய் பண்ண வழியில்லாம போச்சு. 

தங்கத்தில ஏதும் வாங்கிக் கொடுத்து கரெக்ட் பண்ணிடலாமா?  சுத்தம் பெண்ணீய கும்பல் இது. வளையல் கூட எப்பவாவது தான் போடும்.   ம் ஒருநாள் ஏதோ விழாவுக்கு நகையெல்லாம் போட்டுட்டு வந்தாளே.., நகை ஸ்டாண்டு மாதிரி.., அவகிட்ட இல்லாத நகை ஏதாவது வாங்கிக் கொடுக்கலாமா?  ம் கல்யாண் ஜ்வல்லரிக் காரனுக்குக்கூட தெரியுமான்னு தெரியல

ஏதாவது பண்ணி ஐ லவ் யூ சொல்லணுமே .  பேசாம கூகிள் போய் பார்ர்க்கலாமா? ஒண்ணும் புதுசா தெரியலயே இரவு முழுவதும் யோசித்து யோசித்து  எப்ப தூங்கினேன்னே தெரியல........................................


ஏங்க எந்திரிங்க..., ஞாயிற்றுக் கிழமையும் அதுவுமா இப்படித்தூங்கிட்டு சீக்கிரம் எந்திரிங்க.., எவ்வளவு வேலை இருக்கு, மொதல்ல இந்த காஃபிய குடிச்சிட்டு ஒட்டடை அடிக்க ஆரம்பிங்க, வாரம் ஒருநாள் பண்றோம். அதையும் நேரங்காலத்தில பண்ண வேண்டாமா..,

வழக்கம்போல இந்த ஞாயிறும் கழியப் போகிறதா? ம் ஐ லவ் யூ சொல்ல ஒரு வழியும் தென்படவில்லை..,

41 comments:

 1. இத்தன வயசுக்கப்புறம் ஐ லவ் யூ சொல்ரதற்கு எனக்கு எங்கெ ஆள் கிடைக்கப்போகுது. அதனாலெ உனக்கு (உங்களுக்கு) ஐ லவ் யூ சொல்லிக்கறேன்.

  ReplyDelete
 2. வீட்டிலே சொல்ல முடியாது. வெளிப்பக்கம் போனாத்தான். எல்லார் வீட்டிலேயும் இதே கதைதான்.ஒண்ணும் வருத்த படாதீங்க

  ReplyDelete
 3. வாங்க மசக் கவுண்டன் சார்,

  வாங்க தாராபுர சார்,

  மனையாளிடம் ஐ லவ் யூ சொல்ல யோசிப்பதைத் தான் கதையாக எழுதியிருக்கிறேன். வெளியாளிடம் அல்ல..,

  ReplyDelete
 4. //ஐ லவ் யூ சொல்ல ஒரு வழியும் தென்படவில்லை.//

  உங்களுக்குமா !!!!!!!!

  ReplyDelete
 5. //தாராபுரத்தான் said...
  வீட்டிலே சொல்ல முடியாது. வெளிப்பக்கம் போனாத்தான்.
  //

  அஃகஃகா!

  ReplyDelete
 6. //SUREஷ் (பழனியிலிருந்து) said...
  வாங்க தாராபுர சார்,

  மனையாளிடம் ஐ லவ் யூ சொல்ல யோசிப்பதைத் தான் கதையாக எழுதியிருக்கிறேன். வெளியாளிடம் அல்ல..,
  //

  அதேதான் அவரும் சொல்றாரு.... வீட்ல சொல்லவே வராது... வெளீல சொன்னாத்தான் உண்டு... ஆனா, எதிர் விளைவுகளுக்கு பதிவர் சங்கம் பொறுப்பேத்துகாது.... ஆமா!

  ReplyDelete
 7. மனையாளிடம் சொல்வதற்கே இப்படியா?
  அடிக்கு பயப்படாமல் அவர்களிடமே கேட்டு விடுங்கள்.

  ReplyDelete
 8. //வழக்கம்போல இந்த ஞாயிறும் கழியப் போகிறதா? ம் ஐ லவ் யூ சொல்ல ஒரு வழியும் தென்படவில்லை.., //

  யார் கிட்டங்க?
  பேசாம தங்கமணி கிட்டேயே கேளுங்களேன் :))

  ReplyDelete
 9. மனைவிகிட்ட சொல்ல என்ன தயக்கம் தைரியமாக சொல்லுங்க..

  ReplyDelete
 10. நம்ம வீட்டிலேயும் அதே தான்

  ReplyDelete
 11. லவ்'ட் ஸ்பீக்கர் வச்சி சொல்லிப் பார்க்கலாமே...

  ReplyDelete
 12. //எந்திரிங்க.., எவ்வளவு வேலை இருக்கு, மொதல்ல இந்த காஃபிய குடிச்சிட்டு ஒட்டடை அடிக்க ஆரம்பிங்க, வாரம் ஒருநாள் பண்றோம். அதையும் நேரங்காலத்தில பண்ண வேண்டாமா..,//

  ஹா ஹா இதுதான் தல எதார்த்தம்...

  ReplyDelete
 13. ஹா ஹா ஹா .. உண்ம என்னன்னா நெறய கல்யானம் ஆனவங்க, ஐ லவ் யூ சொல்றதுன்னா வேற ஆள் வேனுன்னு நெனைக்கிறாங்க போல.. நீங்க தயங்காம நாளைக்காவது சொல்லுங்க...

  ReplyDelete
 14. தல... இந்த பதிவு யூத்ஃபுல் விகடனின் காதல் பக்கத்தில் வெளியாகியுள்ளமைக்கு வாழ்த்துக்கள்.
  http://youthful.vikatan.com/youth/Nyouth/feb14/index.asp

  ReplyDelete
 15. பேசாம லெட்டர் எழுதி கொடுத்துடுங்க ...

  ReplyDelete
 16. உங்க பீலிங் புரியுது தல.

  ReplyDelete
 17. // நசரேயன் said...

  //ஐ லவ் யூ சொல்ல ஒரு வழியும் தென்படவில்லை.//

  உங்களுக்குமா !!!!!!!!//

  same blood நிறையப் பேர் இருப்பாங்க போல இருக்கே..,


  // T.V.ராதாகிருஷ்ணன் said...

  :-))))//

  // மாதவராஜ் said...

  :-)))))))//

  நன்றி நண்பர்களே

  ReplyDelete
 18. //பழமைபேசி said..

  அதேதான் அவரும் சொல்றாரு.... வீட்ல சொல்லவே வராது... வெளீல சொன்னாத்தான் உண்டு... ஆனா, எதிர் விளைவுகளுக்கு பதிவர் சங்கம் பொறுப்பேத்துகாது.... ஆமா!//

  ஓ.கே.., ஓ.கே..,

  ReplyDelete
 19. // சுல்தான் said...

  மனையாளிடம் சொல்வதற்கே இப்படியா?
  அடிக்கு பயப்படாமல் அவர்களிடமே கேட்டு விடுங்கள்.//

  // கண்மணி/kanmani said...

  //வழக்கம்போல இந்த ஞாயிறும் கழியப் போகிறதா? ம் ஐ லவ் யூ சொல்ல ஒரு வழியும் தென்படவில்லை.., //

  யார் கிட்டங்க?
  பேசாம தங்கமணி கிட்டேயே கேளுங்களேன் :))//

  நல்ல ஐடியாவா இருக்கே..,

  ReplyDelete
 20. // மோகன் குமார் said...

  வித்யாசமா இருக்கு//

  // Sangkavi said...

  மனைவிகிட்ட சொல்ல என்ன தயக்கம் தைரியமாக சொல்லுங்க..//

  //ஜீவன்சிவம் said...

  நம்ம வீட்டிலேயும் அதே தான்//

  // ஸ்ரீராம். said...

  லவ்'ட் ஸ்பீக்கர் வச்சி சொல்லிப் பார்க்கலாமே...//

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே..,

  ReplyDelete
 21. //அபுஅஃப்ஸர் said...

  ஹா ஹா இதுதான் தல எதார்த்தம்...//


  // அன்புடன் அருணா said...

  ஹாஹாஹாஹா :)//

  // அண்ணாமலையான் said...

  ஹா ஹா ஹா .. உண்ம என்னன்னா நெறய கல்யானம் ஆனவங்க, ஐ லவ் யூ சொல்றதுன்னா வேற ஆள் வேனுன்னு நெனைக்கிறாங்க போல.. நீங்க தயங்காம நாளைக்காவது சொல்லுங்க...//


  // அத்திரி said...

  :)))))//

  // தத்துபித்து said...

  பேசாம லெட்டர் எழுதி கொடுத்துடுங்க ...
  //


  // அக்பர் said...

  உங்க பீலிங் புரியுது தல.//

  நன்றி நண்பர்களே..,

  ReplyDelete
 22. // எட்வின் said...

  தல... இந்த பதிவு யூத்ஃபுல் விகடனின் காதல் பக்கத்தில் வெளியாகியுள்ளமைக்கு வாழ்த்துக்கள்.
  http://youthful.vikatan.com/youth/Nyouth/feb14/index.asp//

  நன்றி தல..,

  நன்றி யூத்ஃபுல் விகடன் காதல் பக்கம்

  ReplyDelete
 23. நாமெல்லாம் யூத்து ,

  காதல் சொல்ல வந்தேன் .

  ReplyDelete
 24. ஒரு பெரிய காதல் கடிதம் கைப்பட எழுதி கொடுத்திருக்கலாம்...போக்கிஷமாவும்,சுவாரஸ்யமா இருந்திருக்கும்...

  ReplyDelete
 25. //மனையாளிடம் ஐ லவ் யூ சொல்ல யோசிப்பதைத் தான் கதையாக எழுதியிருக்கிறேன். வெளியாளிடம் அல்ல//
  மனையாளிடம் போய் இப்போ "I love you" சொன்னா இந்த மனுசனுக்கு கிறுக்குப்புடிச்சு போச்சாட்டம் இருக்கு, மந்திரிச்சு ஒரு தாயத்து கட்டோணும் அப்படீம்பா.

  ReplyDelete
 26. //Starjan ( ஸ்டார்ஜன் ) said...

  நாமெல்லாம் யூத்து ,

  காதல் சொல்ல வந்தேன் .//

  யெஸ் பாஸ்

  // seemangani said...

  ஒரு பெரிய காதல் கடிதம் கைப்பட எழுதி கொடுத்திருக்கலாம்...போக்கிஷமாவும்,சுவாரஸ்யமா இருந்திருக்கும்...//

  ஓ.கே.., ஓ.கே..,


  //மசக்கவுண்டன் said...

  இந்த மனுசனுக்கு கிறுக்குப்புடிச்சு போச்சாட்டம் இருக்கு, மந்திரிச்சு ஒரு தாயத்து கட்டோணும் அப்படீம்பா.//

  விவகாரம் பிடித்த வேலைதான் தல

  ReplyDelete
 27. HAHAHA

  nalla kanavu Suresh

  plz add the follower gadget to follow your blog SURESH

  ReplyDelete
 28. //thenammailakshmanan said...

  HAHAHA

  nalla kanavu Suresh

  plz add the follower gadget to follow your blog SURESH//

  பின்னூட்டங்களுக்கு கீழே பிந்தொடரும் பட்டியல் இருக்கிறது தல..,

  ReplyDelete
 29. இன்னும் டைம் இருக்கு தலைவரே.
  மனச தளர விடாம இன்னிக்கே சொல்லி முடிச்சுருங்க.

  காதலர் தின வாழ்த்துக்கள்

  ReplyDelete
 30. naaanthaan ungka 200 aa vathu follower SURESH..!!!

  ReplyDelete
 31. assoda pavam neenga , unga wife kittayavathu i love you sollidunga

  ReplyDelete
 32. assoda pavam neenga , unga wife kittayavathu i love you sollidunga

  ReplyDelete
 33. @அன்பரசன்
  @thenammailakshmanan
  @radhika

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே..,

  ReplyDelete
 34. உடம்புல ஒரு ஜிவ் வந்தாத்தான் அது லவ். அது போய் ஹி..ஹி... எப்டிங்க... மனையாள் கிட்ட... ஹி.. ஹி... ஆனாலும் நீங்க ரொம்ப ஹி... ஹி.... இது.


  http://kgjawarlal.wordpress.com

  ReplyDelete
 35. தல,

  உங்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள். நீங்க எத்தன தடவ ஐ லவ் யூ சொல்லி இருக்கீங்க தல?

  ReplyDelete
 36. Jawahar Vs வெடிகுண்டு வெங்கட்

  வாங்க நண்பர்களே

  ஒருவர் பின்னூட்டம் கேள்வியாக இருந்தால் அடுத்தவரது பதிலாகவும், அந்த பதிலே கேள்வியாகும்போது அடுத்தவரின் கேள்வி பதிலாக மாறும்வண்ணம் பின்னூட்டங்கள் அளித்திருப்பதற்கு மிகவும் நன்றி..,

  ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails