மிகச் சுலபமாக பணம், புகழ், பெண் சேர்த்துக் கொள்ள எளிமையான வழியாக சாமியார் வேலை இருப்பதால் இளைஞர்களின் பார்வை இதில் அதிகமாக இருக்கிறதாம்.
டிஸ்கி:-
நடுக்காட்டில் அமர்ந்து கொண்டு உடல் முழுவதும் புற்று வளர தவம் செய்யும் சாமியார், தனது உடலைத் திரியாக மாற்றி விளக்கேற்றிய சாமியார் ஆகும் தொடர் அல்ல இது. முழுக்க முழுக்க கமர்சியல் சாமியார் ஆகும் ஒரு தொடர்.
முதலில் உங்கள் தேவை என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
தினமும் வயிறு முட்ட சோறு , பீடி வாங்க கொஞ்சம் காசு என்றால் பேசாமல் ஏதாவது ஒரு கோவில் வாசலில் உட்கார்ந்து கொள்ளலாம்.
பணம், புகழ் வேண்டும் என்றால் கொஞ்சம் சிரமப் பட வேண்டும்.
உங்கள் தேவை தினமும் நாட்டு சரக்கு அடிப்பது என்றால் நீங்கள் பேய் ஓட்டும் சாமியாராக மாறினால் போதுமானது.
பேயோட்டும் சாமியாராக மாற கொஞ்சம் பயிற்சி எடுத்துக் கொண்டால் போதுமானது.
அடிப்படையில் நீண்ட கூந்தல், பெரிய மீசை, வைத்துக் கொள்ள வேண்டும்.. உடுக்கை அடிக்க கற்றுக் கொள்ள வேண்டும். உடுக்கை பழக முடிய வில்லை என்றால் கவலைப்பட தேவையில்லை. நன்றாக சத்தம் வரும் ஏதாவது ஒரு வாத்தியத்தை கற்றுக் கொண்டால் போதும். தென்னை ஓலையில் செய்யும் விசில் கூட சாமியாருக்கு உதவும். ஆனால் இரவு முழுவதும் வாசிக்க உடுக்கைதான் வசதியான வாத்தியம்.
அடுத்ததாக தெலுங்கு அல்லது மலையாளப் பாட்டு ஒன்றைக் கற்றுக் கொள்ள வேண்டும் . இதை நாம் ஜெமினி, அல்லது சூர்யா டிவி மூலமே கற்றுக் கொள்ளலாம். அந்தப் பாட்டை பழைய எம்,ஜி,ஆர் அல்லது சிவாஜி பாட்டு மெட்டில் பாடினால் போதும். குறிப்பாக அந்த ஊர் மக்களுக்கு பாட்டு புரியக் கூடாது, அதாவது தெலுங்கு பேசும் மக்களுக்கு தெலுங்குப் பாட்டு ஆகாது.
உங்கள் நண்பர் யாராவது வசிக்கும் ஒரு கிராமத்திற்குச் சென்று அங்குள்ள புற்ம்போக்கு இடத்தில் ஒரு குடிசையை கட்டிக் கொள்ள வேண்டும். உங்கள் நண்பர் மூலமாக மக்களிடம் ஒரு பில்-டப் கொடுக்க வசதியாக இருக்கும். அந்த இடத்தின் அருகிலுள்ள மரங்களை கணக்கெடுத்துக் கொண்டு ஊர் மக்களிடம் அள்ளி விட வேண்டும்.
உதா. என் கனவில் ஆடு காத்த ஆண்ட்ரியா ஆத்தா வந்து வடக்கில் மூன்று கொய்யா மரமும் தெற்கே தென்னை மரமும் இருக்கும் இடத்தில் தனது சக்தி பொங்கு வருவதாகவும் அங்கு போய் அந்த ஊர் மக்களை காப்பாற்றுமாறு சொன்னதாக சொல்ல வேண்டும்/ கொய்யாமரத்திற்கு பதில் அங்கே உள்ள மாமரம், புளிய மரம் எது அங்கிருக்கிறதோ அதைச் சொல்லலாம். அதனால்தான் இந்த இடத்தில் கோயில் கட்டி இருப்பதாகச் சொல்ல வேண்டு,ம்.
அந்த ஊரில் கடந்த சில ஆண்டுகளில் இறந்தவர்கள், அகால மரணம் அடைந்தவர்கள் பற்றிய விவரங்களைச் சேகரித்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு போய் உட்கார்ந்து இருந்தாலே போதும் சில தினங்களில் பேய் ஓட்டுவதற்கு ஏதாவது ஒரு பெண்மணியை அழைத்து வந்து விடுவார்கள். உடனே பேய் ஓட்ட ஒத்துக் கொள்ளக் கூடாது. அமாவாசை, அஷ்டமி, நவமி இப்படி ஏதாவது சொல்லி அந்த நாளீல்தான் ஓட்ட ஆரம்பிக்க வேண்டும்.
ஓட்ட ஆரம்பிக்கும்போது அந்த பெண்ணின் ஐ.க்யூ வைப் பார்த்துக் கொள்ளவேண்டும். உள்ளூர் தாண்டாத பெண்ணாக இருந்தால் அந்த ஊரில் சமீபத்தில் இறந்தவர்கள் பெயரைச் சொல்லிவர அந்தப் பெண் பெரும்பாலும் ஒத்துக் கொள்வார். சில தினங்கள் ஆடிவிட்டு மலையேறி விடுவார்.
அவ்வாறு மலையேறவில்லை என்றால் கவலைப் பட வேண்டியதில்லை. இன்னும் இரண்டு அல்லது ஐந்து பேய் இருப்பதாகச் சொல்லி ஓட்டிக் கொண்டே இருக்க வேண்டியது தான்.
அப்படியும் அடங்க வில்லை என்றால் அடுத்த மாவட்டத்தில் அகால மரணம் அடைந்த வர் பெயரை சொல்லி ஓட்ட வேண்டியதுதான், அவர் பெயரை சரி பார்க்க யாரும் முனைய் மாட்டார்கள் . ஓட்டும் காலம் முழுவதும் நாட்டுச் சரக்கு வாங்கி வரச் சொல்லிவிட்டால் போதும். திகட்ட திகட்ட நாட்டுச் சரக்கு கிடைக்கும். புதிதாக சூடாகக் காய்ச்சித் தரச் சொன்னாலும் தருவார்கள்.
அப்படியும் பேய் இறங்கவில்லையென்றால் அதற்கும் கவலைப் பட வேண்டிய அவசியமில்லை. இருக்கவே இருக்கிறது கேரளா. கேரளாவில் உள்ள தங்கள் குருநாதரிடம் சென்று ஒரு கயிறு மந்தரித்து வரவேண்டும். தலைச்சன் ஆண்குழந்தை பெற்ற ஒரு ஆள் தன்னுடன் வந்தால் கயிறு வாங்கி வரலாம் என்று அழைத்தால் யாரும் வர மாட்டார்கள். அப்படியே வந்தாலும் போகும்போது நல்ல ஓட்டல்களில் சாப்பிட்டுவைட்டு வரும் போது பாடாவதி ஓட்டலில் சாப்பிட்டு அழைத்துவந்தால் அவருக்கு உடல் நலம் கெட்டுப் போகும். அது பேயின் செயல் என்று கூறிவிடலாம்.
வரமறுத்தால் ஒரு கட்டுச் சேவலை அழைத்துச் சென்று சொந்த ஊரில் கொஞ்ச நாள் ஓய்வெடுத்துத் திரும்பிச் செல்லலாம். சில நாட்களுக்கு சேவலுக்கு உணவே போடாமல் விட்டால் சேவல் நோஞ்சானாய் மாறிவுடும். அதற்குக் காரணம் பேய் என்று சொல்லிவிடலாம்.
இவ்வளவு பூஜைகளும் செய்துவிட்டால் அந்தப் பேய்பிடித்த பெண்ணே பேய் போய்விட்டதாகச் சொல்லிவிடுவார்.
அப்புறம் என்ன ! உங்கள் பாடு கொண்டாட்டம்தான்.
டிஸ்கி:- உங்களுக்கு எந்த வகைச் சாமியார் வேண்டுமென்று சொன்னால் முன்னுரிமை அடிப்படையில் இடுகை வெளியிடப் படும்
ஆஹா...பேஷ்...அற்புதம்...
ReplyDeleteஅண்ணே....
என்னே உன் லீலை....
நந்தாவுக்கு முன்னாடி என்ன போட்டுக்கலாம்???
அத மட்டும் சொல்லிவிடவும்....
ஆஹா... ரொம்ப நல்லா இருக்கே. இந்த தலைப்பில் புத்தகம் போடும் உரிமையை வாங்கிவச்சுடுங்க, யாராவது முந்திடப் போறாங்க
ReplyDeleteGilma Samiyar????
ReplyDeletetime wast. idu allam anna kirukku padhiu.
ReplyDeleteஓம் நிதியானந்தாய நம ஹ !
ReplyDelete//seemangani said...
ReplyDeleteஆஹா...பேஷ்...அற்புதம்...
அண்ணே....
என்னே உன் லீலை....
நந்தாவுக்கு முன்னாடி என்ன போட்டுக்கலாம்???
அத மட்டும் சொல்லிவிடவும்....//
ஆனந்தா வைத்தானே சொல்றீங்க..,
பேய் ஓட்டுவதற்கு கவர்ச்சியான பெயர் ஒன்றும் தேவையில்லை, சாமிக்கு மட்டும் பெயர் போட்டால் போதும். உதாரணப் பெயர் இடுகையிலேயே உள்ளது
// இராகவன் நைஜிரியா said...
ReplyDeleteஆஹா... ரொம்ப நல்லா இருக்கே. இந்த தலைப்பில் புத்தகம் போடும் உரிமையை வாங்கிவச்சுடுங்க, யாராவது முந்திடப் போறாங்க//
வாங்கிடுவோம்..,
// King Viswa said...
ReplyDeleteGilma Samiyar????//
இதற்காக தனிப் பாடப் பிரிவு ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை,.
அதெல்லாம் தானாக வரவேண்டும் என்றே நினைக்கிறேன்,
நாட்டில் ஒரு பொன்மொழி சொல்வார்கள், ஒருசாரார் பணம் புகழைக் கொண்டு கில்மாவைத்தேடுவார்கள். சிலர் கில்மாவைக் கொண்டு பணத்தைச் சம்பாதிப்பார்கள்.
// Anonymous said...
ReplyDeletetime wast. idu allam anna kirukku padhiu.//
நீங்கள் முயற்சித்துப் பாருங்களேன்..,
// என் நடை பாதையில்(ராம்) said...
ReplyDeleteஓம் நிதியானந்தாய நம ஹ !//
இது நம் உழைப்பில் உருவாகும் இடுகை அல்லவா..,
ஜே கில்மானந்தா ரவ...!
ReplyDeleteஇவர் தான் என் குரு.....
// ஜெட்லி said...
ReplyDeleteஜே கில்மானந்தா ரவ...!
இவர் தான் என் குரு.....//
உங்கல் குருவின் போதனைகளையும் இடுகையில் சேர்த்துவிடுங்கள். சுவை கூடும்..,
Super. ஆனால் அந்த list " பணம், புகழ், பெண் " அல்ல. "பணம், புகழ், பெண்கள்" .
ReplyDeleteதல, புது முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள்.
ReplyDeleteநம்ம பக்கம் உங்க தரிசனத்தை கொஞ்ச நாளா காணோம். ஏதோ பார்த்து செய்யுங்க.
// Anonymous said...
ReplyDeleteSuper. ஆனால் அந்த list " பணம், புகழ், பெண் " அல்ல. "பணம், புகழ், பெண்கள்" .//
:))
//அக்பர் said...
ReplyDeleteதல, புது முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள்.//
நன்றி தல.,
சாமியாருக்கே குருவா நீங்க.:)))
ReplyDeleteஅவ்வ்வ்வ்....
// நிகழ்காலத்தில்... said...
ReplyDeleteசாமியாருக்கே குருவா நீங்க.:)))
அவ்வ்வ்வ்....//
ஹி.., ஹி...,
எப்படி இப்படில்லாம் உங்களால யோசிக்க முடியுது தல.. கலக்குறீங்க..
ReplyDeleteஏன் இந்தக் கொலை வெறி? By the by, புது போஸ்ட் போட்டு இருக்கேன் பாஸ்.வந்து குமுறிட்டு போங்க.
ReplyDeletehttp://illuminati8.blogspot.com/2010/03/my-little-bride-review.html
//Dr.ராம் said...
ReplyDeleteஎப்படி இப்படில்லாம் உங்களால யோசிக்க முடியுது தல.. கலக்குறீங்க..//
நன்றி தல..,
//ILLUMINATI said...
ReplyDeleteஏன் இந்தக் கொலை வெறி? By the by, புது போஸ்ட் போட்டு இருக்கேன் பாஸ்.வந்து குமுறிட்டு போங்க.
http://illuminati8.blogspot.com/2010/03/my-little-bride-review.html//
இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் தல..,
நீங்கள் கொடுக்கும் முன்பே வந்து பின்னூட்டம் போட்டுவிட்டேன்..,
ஆஹா...அற்புதம்
ReplyDelete//உங்கள் தேவை தினமும் நாட்டு சரக்கு அடிப்பது என்றால் நீங்கள் பேய் ஓட்டும் சாமியாராக மாறினால் போதுமானது.//
ReplyDeleteசுரேஷ் முடியல சிரிச்சு சிரிச்சு வயித்து வலியே வந்துருச்சு
//T.V.ராதாகிருஷ்ணன் said...
ReplyDeleteஆஹா...அற்புதம்//
//thenammailakshmanan said...
//உங்கள் தேவை தினமும் நாட்டு சரக்கு அடிப்பது என்றால் நீங்கள் பேய் ஓட்டும் சாமியாராக மாறினால் போதுமானது.//
சுரேஷ் முடியல சிரிச்சு சிரிச்சு வயித்து வலியே வந்துருச்சு//
நன்றி நண்பர்களே..,