Tuesday, May 12, 2009

சுமித்ராவின் சரித்திரம்- பக்கம்3

சுமிதராவும் சுமனும் ராசியாகி விட்டதால் அவர்களுக்கிடையேயான மெல்லிய பெயர் தெரியாத உறவை பிரித்த குற்ற உணர்ச்சி எங்களுக்கு விலகி இருந்தது. இருந்தாலும் அவர்களுக்கிடையே என்ன உறவு என்று தெரிந்துகொள்ள மிகவும் ஆவலுடன் இருந்தோம்.
=============================================

சுமித்ராவின் திருமணத்தன்று நடந்த நிகழ்ச்சிகளையும் பின்னோக்கிச் சென்று கதையின் துவக்கத்தினையும் தெரிந்து கொள்ள இந்தச் சுட்டியைச் சொடுக்குங்கள்.

======================================================

முதலாமாண்டு சுற்றுலா முதல் முதலாமாண்டு தேர்வுவரை நடந்த கதையை தெரிந்து கொள்ள இந்தச் சுட்டியைப் பயன்படுத்துங்கள்

=====================================================

முதலாமாண்டு முடிந்து அடுத்த ஆண்டில் நுழைந்தபொது எங்களுக்கு சுமன் சுமித்ரா விஷயம் மறந்து போயிருந்தது. சில நாட்களில் புதிய முதலாமாண்டு மாணவர்கள் வரத் தொடங்கினர். புதிய மாணவிகள் பலரும் எங்களுக்கு அழகாகத் தெரிய ஆரம்பித்திருந்தனர். ( ஒவ்வொரு ஆண்டும் அதே எண்ணம் தோன்றியது பிற்காலச் சரித்திரம்)

இரண்டாம் ஆண்டு மாணவர்கள் (பாடத்திட்டப்படி first senior) தலையை அறுத்து பாகங்களைக் கற்றுக் கொண்டிருந்தபோது புதிய முதலாமாண்டு மாணவர்கள் பாதத்தைக் கிளித்து நரம்புகளை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது சுமன்,சுமத்ரா 10வது மேசையிலும் நான் பதினொன்றாவது மேசையிலும் இருந்தபோது ஏழாவது மேசையில் செயல்வழிக் கற்றலில் இருந்தவ நண்பன் லேசாக சைகை செய்தான். ஏதோ கொஞ்சம் புரிவது தோன்றினாலும் முழுவதும் புரியவில்லை. தலையை பக்கத்து மேசையை நோக்கித் திருப்பியதில் சுமனின் பார்வை பனிரெண்டாவது மேசையை நோக்கி பார்வையை வீசிக் கொண்டிருந்தான். பக்கத்தில் சுமித்ரா என்னவோ படித்து சொல்லிக் கொண்டிருக்க இன்னொரு நண்பன் கழுத்தை அறுத்து நரம்புகளையும் சதைகளையும் ஒவ்வொன்றாகப் பிரித்துக் காட்டிக் கொண்டிருந்தான்.

ஒன்றும் விழங்கவில்லை. ஒருவேளை அந்த மேசையைத் தாண்டியிருக்கும் விரிவுரையாளர்கள் ,பேராசிரியர்களின் அறையையே பார்க்கிறானோ என்றுதான் நினைத்தோம். இருந்தாலும் எங்களது கண்காணிப்பு பிரிவுக்குள் சுமன் வந்தான். அப்படியே சுமித்ராவும் எங்களது கண்காணிப்புக்குள் வந்தாள். அறுவை அறையில் நிரம்பி இருந்த மாணவர்களுக்கு மத்தியில் நாங்கள் அவர்களை கண்காணிப்பது பெறும்பாலும் அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

முதல் நாளில் எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. சுமித்ராவும் சுமனும் எங்கேயும் தனியே சந்தித்தது போல தோன்றவில்லை.

இரண்டாம் நாள் மதிய இடைவேளை நேரம் அலுவலகம் நோக்கி சுமன் சென்றுகொண்டிருட்ந்தான். அவனைப் பின் தொடர்ந்தோம். அவன் அறியாமல்..,

நேராக ஜூனியர் மாணவர்களுக்கு வகுப்புகள் நடந்து கொண்டிருந்த இடம் நோக்கிச் சென்று கொண்டிருந்தான். ராக்கிங் போன்ற விஷயங்களிலெல்லாம் ஈடுபடும் மனோவலிமை அவனுக்கு கிடையாது. அப்படியே இருந்தாலும் அவன் தனியே போவது...,


போனவன் சற்று தயங்கி நின்றான். நாங்களும் அவனுக்கு ஒரு பத்தடி தள்ளி அங்கிருக்கும் செடிகளையும் இந்தப்பக்கத்தில் உடைந்து கொண்டிருக்கும் சுவற்றுச் சுண்ணாம்பினையும் ரசிக்க ஆரம்பித்தோம்.

அப்போது அவனை நோக்கி ஒரு பெண் நடந்து வர ஆரம்பித்தாள். நாங்களும் எங்களை தாண்டிவந்த ஒரு ஜூனியர் மாணவனை மடக்கி நிறுத்தினோம். அந்தப் பெண் சுமனுடன் பேச ஆரம்பித்தாள் ஒரு ஜூனியர் மாணவி சீனியர் மாணவனுடம் பேசுவது போல் தோன்ற வில்லை. இந்தப் பூனையும் பால் குடிக்குமா? எங்களுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.

எங்களிடம் சிக்கிய மாணவனிடம் விசாரித்த போது இது கடந்த ஒரு வாரமாக நடப்பதாகத் தெரிந்தது. அந்தப் பெண்ணின் பெயர் ஊர் ஆகியவற்றை விசாரிப்பதற்கும் புதிய மாணவன் என்னை ஒன்னும் பண்ணாதீங்க சார் என்று அழ ஆரம்பித்து விட்டான். இத்தனைக்கும் அவனிடம் சுமனின் திருவிளையாடலை மட்டுமே ஒரு தகவல் சேகரிக்கும் நோக்கில் ஒரு கெஞ்சலுடனேதான் விசாரித்தோம். அதற்குள் ராக்கிங் பயத்தில் அவன் அழ ஆரம்பித்தான். பேராசிரியர்கள் யாராவது பார்த்துவிட்டால் வம்பாகிவிடுமே என்று அவனை அனுப்பி விட்டோம்.

மறுநாள் உடல்கூறு அறுவை அரங்கிற்கு வந்த உடனே அந்த பெண்ணைத் தேடியதில் அவள் பனிரெண்டாம் மேசையில் இருந்த பிணத்தின் காலினை கத்தியை வைத்து கிழித்துக் கொண்டிருந்தாள். அப்போதே எனது மேசையில் இருந்த இளையோனிடம் அந்தப் பெண்ணைக் காட்டி விசாரிக்க ஆரம்பித்தோம். சுமன் பார்த்துவிட்டோலும் பிரச்சனைதான். யாராவது பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பார்த்தாலும் தொல்லைதான் என்ற சூழ்நிலையில் நாங்கள் அவனிடம் விசாரித்தது ஏதோ முதலாமாண்டு மாணவன் முதல் நாள் வகுப்பு அறைக்குள் நுழைந்தது போல் இருந்தது.

அப்படி இப்படி பார்த்துக் கொண்டே விசாரித்துக் கொண்டிருந்த நேரத்தில் சுமித்ரா எங்களையே பார்த்துக் கொண்டிருந்தாள். என்னையும் அந்த ஜூனியர் பெண்ணையும் மாறி மாறிப் பார்த்தாள்.

எனக்குக் கொஞ்சம் வியர்க்க ஆரம்பித்தது.

======================================================

அடுத்த பகுதி
ஃபிகர் இல்லடா.., ஃபிகர் மாதிரி சுட்டியை தட்டி படித்து மகிழலாம்

7 comments:

 1. தல.. இந்தப் பகுதியில விறுவிறுப்பு கொஞ்சம் கம்மி தல...

  ReplyDelete
 2. //கடைக்குட்டி said...

  தல.. இந்தப் பகுதியில விறுவிறுப்பு கொஞ்சம் கம்மி தல...
  //

  உண்மைதான் தல.., இந்தப் பகுதிக்கு நான் நினைத்தவரை செல்லமுடியவில்லை. இரண்டுகாட்சிகள் எழுதியம்துமே மிகப் பெரியதாக வந்துவிட்டதால் மூன்றாவது காட்சி ஒன்றை எழுதி தொடரும் போட்டுவிட்டென். அதனால் கொஞ்சம் சுவாரசியம் குறைவாகத் தோன்றும் அடுத்த பகுதி விரைவில் வந்து விடும்.

  ReplyDelete
 3. திருட்டுப் பூனைFriday, January 22, 2010 5:15:00 PM

  //இந்தப் பூனையும் பால் குடிக்குமா? //

  குடித்ததா? குடிக்கவில்லையா?

  ReplyDelete
 4. தல பின்னூட்டம் தப்பா போட்டுட்டேன்.

  கதை நல்லாருக்கு.

  ReplyDelete
 5. //திருட்டுப் பூனை said...

  //இந்தப் பூனையும் பால் குடிக்குமா? //

  குடித்ததா? குடிக்கவில்லையா?//

  மற்ற பகுதிகளையும் படித்துவிடுங்கள் பூனை..,

  ReplyDelete
 6. //அக்பர் said...

  தல பின்னூட்டம் தப்பா போட்டுட்டேன்.

  கதை நல்லாருக்கு.//


  நன்றி தல..,

  ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails