Saturday, January 1, 2011

பெண்ணுரிமை காக்க வந்த ஆபத்பாந்தவன்

ஆண்கள் , பெண்கள் விடுதி மாணவர்கள் மதியம் தாண்டியும் தூங்கிக் கொண்டு இருந்தார்கள்.
முன்னிரண்டு நாட்களில் நடந்த கல்லூரி விழாவுக்காக விழிந்திருந்த அலுப்பும், முதல்நாளில் இரவில் நடந்த இசை இரவினை ரசித்த களைப்பும், விழாவில் சாதித்த ஒரு திருப்தியுமாக அனைவரும் தூங்கிக் கொண்டு இருந்தனர். விழாக்காலங்களில் கூட தங்கள் கடமை தவறாத மாணவ மாணவிகள் புத்தகங்களுடன் வீட்டுக்குச் சென்று விட்டதால் அப்போது விடுதிகளில் இருந்த அனைத்து மாணவ மாணவிகளும் விழாவில் பங்கெடுத்தவர்களாகவே இருந்தனர்.

எல்லோரும் எதாவது ஒரு போட்டியில் வென்ற இருந்தனர். சிலர் மேடை ஏறி பரிசு வாங்கி இருந்தனர். சிலர் முறைசாராப் போட்டிகளில் பரிசு வாங்கி இருந்தனர். முறை சாரா போட்டிகள் என்பது சற்று வித்தியாசமான போட்டிகள். வழக்கமான மேடை போட்டிகளுக்கு நடுவே போட்டி நடத்துபவர்கள் பார்வையாளர்களுக்கு நடுவே வந்து சில கேள்விகள் கேட்பார். அந்த கேள்விகள் பாட சம்பந்தமாக இருக்கலாம்.அல்லது முந்தைய போட்டியின் போட்டியாளரின் கருத்தில் இருக்கலாம், பார்வையாளருக்கு முன்னால், பின்னால் அமர்ந்திருக்கும் சக பார்வையாளரின் சட்டை, அல்லது புடவை வண்ணத்தை கூட கேட்பார்கள். மிகவும் எளிமையான கேள்வி அல்லது போட்டியாக அமையும். பொதுவாக கேட்கப் படும் பார்வையாளர் பரிசு பெறும் நோக்கிலேயே அந்த போட்டிகள் அமையும். எனவே எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

இதிலெல்லாம் கலந்து கொண்டு களைப்பில் உறங்கிக் கொண்டிருந்த மாணவர்கள் மாலை நேரத்தில் ஒவ்வொருவராக எழுந்து தேநீர் குடித்துவிட்டு வெளியே வந்து நடைபயில ஆரம்பித்திருந்தனர். அன்றைய தினம் சிறப்பு விடுப்பாக முதல்வரால் அறிவிக்கப் பட்டிருந்தது.

நடைபயிலும்போதே எல்லோருடைய கால்களும் பிள்ளையார் கோவிலை நோக்கியே அமையும். அது நடைமுறைச் சட்டம் ஆதலால் அவ்வாறாகவே நடந்து கொண்டிருந்தனர்.

அப்போது பிள்ளையார் கோவிலில் நண்பர் ஜில்லட்டின் குமார் ஒரு கூட்டத்தினைக் கூட்டி பேசிக் கொண்டிருந்தார். பேச்சின் சாராம்சம் இதுதான்.
இங்கிலீஷ் குப்பனின் கொட்டம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. சகமாணவிகளை மதிப்பதில்லை. பெண்களுக்கான அடிப்படை உரிமைகளைக் கூட கொடுப்பதில்லை. எல்லோரும் ரசிக்கும் கலை நிகழ்ச்சிகளைக்கூட தனிநபர் தாக்குதல்களுக்கு உபயோகப் படுத்துகிறான். சமீபத்தில் நடந்த மாணிக் ஃபாத்திமாவின் துப்பட்டா நிகழ்ச்சியில் கூட பெண்களை மிக மோசமாக சித்தரிக்கிறான். இதை வளரவிட்டால் நம் கல்லூரியில் பெண்களின் நிலை மிகவும் மோசமான நிலையை அடைந்து விடும். நாமெல்லாம் கூடி பெண்ணுரிமையை காத்தே தீர வேண்டும்.

அவனது அந்தப் பேச்சினை அங்கே இருந்த சில பெண்கள் கேட்டுக் கொண்டு இருந்தனர். இதனை கண்டிப்பாக தட்டிக் கேட்டே தீர வேண்டும். என்பதில் எல்லோரும் உறுதியாக இருந்தனர். அந்தப் பெண்களில் சுமித்ராவோ போட்டிகளில் கலந்து கொண்டிருந்த பெண்களோ யாரும் இல்லை. ஆனாலும் ஜில்லட்டின் குமாரின் பேச்சிற்கு ஆட்கள் சேர்ந்து கொண்டிருந்தன்ர்.

-----------------------------------------------------------------------------------------------

குப்பன் கடந்த பல நாட்களாக தூங்காமல் இருந்ததால் மிகவும் அசந்து தூங்கிகொண்டு இருந்தான். இரவு எட்டுமணி அளவில் நண்பர்கள் எழுப்பினர்.

அரைதூக்கத்தில் இருக்கும்போதே சொல்ல ஆரம்பித்தனர்.

சுமித்ராவின் துப்பட்டாவை திருடிவிட்டதாக கல்லூரி முதல்வரிடம் புகார்கொடுக்க போறாளாம். சாட்சிக்கு நடன அரங்கில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த பெண்கள் , அவன் சபதம் செய்தபோது அருகில் இருந்த மாணவர்கள், அவனை ஆதரித்து போஸ்டர்கள் ஒட்டியிருந்த சீனியர் மாணவர்கள், மாணிக் ஃபாத்திமா நாடகத்தினைப் பார்த்த ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரையும் சாட்சிகளாகச் சொல்ல போகிறாளாம்.

இப்ப என்னடா செய்யறது?

தூக்கக் கலக்கத்திலேயே குப்பன் சொன்னான்..,

"நடக்கறது நடக்காம இருக்காது; நடக்காம இருக்கறது நடக்காது"


..............................................................................................................



தொடரும்


இதன் முந்தைய பகுதிகளுக்கு இந்தச் சுட்டியையோ அல்லது அருகில் உள்ள சுட்டிகளையோ பயன் படுத்துங்கள்.

19 comments:

  1. கொசுவத்தி நல்லாவே சுத்துறீங்க. எப்படி நேரம் கிடைக்கிறது என்று தான் புரியவில்லை. நம்மளால முடியாதுடா சாமி :)

    ReplyDelete
  2. ஒரு துப்பட்டாவுக்குள்ள இவ்வள்வு மேட்டர் எப்படிங்க

    ReplyDelete
  3. //இங்கிலீஷ் குப்பனின் கொட்டம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது.// குப்பன் ​​கொட்டம் மட்டுமா? //எல்லோருடைய கால்களும் பிள்ளையார் கோவிலை நோக்கியே அமையும்// புதுசா இருக்கே? சம்பவங்கள் அத்தனையும் உண்னனமையா தல?

    ReplyDelete
  4. // எட்வின் said...

    கொசுவத்தி நல்லாவே சுத்துறீங்க.//

    நன்றி தல..,

    ReplyDelete
  5. // Anonymous said...

    ஒரு துப்பட்டாவுக்குள்ள இவ்வள்வு மேட்டர் எப்படிங்க//

    நன்றி அனானி

    ReplyDelete
  6. // ஜெகநாதன் said...

    குப்பன் ​​கொட்டம் மட்டுமா? //

    புரியவில்லையே தல..,

    ReplyDelete
  7. //ஜெகநாதன் said...

    எல்லோருடைய கால்களும் பிள்ளையார் கோவிலை நோக்கியே அமையும்// புதுசா இருக்கே?

    பெரும்பாலான கல்லூரிகளில் முன்பகுதியில் பிள்ளையார் கோவில் உண்டு.

    நாங்கள் படிக்கும் காலங்களில் கல்லூரி வாசலில், சுவற்றில் மாணவர்கள் அமர்ந்திருப்பார்கள்.

    மாணவிகள் பிள்ளையார் கோவிலில் சாமி கும்பிட வருவார்கள்;சில மாணவர்களும் கூட வருவது உண்டு.

    ஆக பெரும்பாலானவர்கள் கால்கள் பிள்ளையார் கோவிலை நோக்கியே...,

    ReplyDelete
  8. "நடக்கறது நடக்காம இருக்காது; நடக்காம இருக்கறது நடக்காது"

    :)

    ReplyDelete
  9. தொடரும்..

    ரைட்டு ..

    ReplyDelete
  10. //பேருந்துக் காதலன் said...

    "நடக்கறது நடக்காம இருக்காது; நடக்காம இருக்கறது நடக்காது"

    :)//

    தங்கள் வரவு நல்வரவாகுக

    ReplyDelete
  11. // சூரியன் said...

    தொடரும்..

    ரைட்டு ..//

    நன்றி தல..,

    ReplyDelete
  12. ம்ம் தொடரட்டும் ஜி....

    ReplyDelete
  13. // ஜெட்லி said...

    ம்ம் தொடரட்டும் ஜி....//

    கண்டிப்பாக தல...,

    ReplyDelete
  14. \\\ "நடக்கறது நடக்காம இருக்காது; நடக்காம இருக்கறது நடக்காது" ///


    சூப்பர் பஞ்ச்

    இது சுரேஷ் பஞ்ச்

    ReplyDelete
  15. //Starjan ( ஸ்டார்ஜன் ) said...

    \\\ "நடக்கறது நடக்காம இருக்காது; நடக்காம இருக்கறது நடக்காது" ///


    சூப்பர் பஞ்ச்

    இது சுரேஷ் பஞ்ச்//


    முத்து வசனத்தின் பாதிப்புதான் தல..,

    ReplyDelete
  16. யாரு தல அந்த இங்கிலீஷ் குப்பன்.

    எவ்வளவு பிரச்சனை வந்தாலும் சமாளிக்கிறார்.

    ReplyDelete
  17. //"நடக்கறது நடக்காம இருக்காது; நடக்காம இருக்கறது நடக்காது"///

    ம்ம்ம்ம் நல்லா இருக்கு

    ReplyDelete
  18. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    அக்பர்,புருனோ,ஆ.ஞானசேகரன் அவர்களே...,

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails