Sunday, August 9, 2009

அங்க is போடு இங்க was போடு

இன்னும் சில வாரங்களில் கல்லூரியில் மாதாந்திரத் தேர்வு நடை பெற திட்டமிடப் பட்டிருந்தது. இதில் வாங்கும் மதிப்பெண்களின் அடிப்படையில்தான் இண்டெர்னல் மதிப்பெண்கள் வழங்கப் படும் என்பதால் மாணவர்கள் மும்மரமாகப் படித்துக் கொண்டிருந்தனர்.

இந்தத் தேர்வுகளில் மதிப்பெண் வாங்குவதில் முட்டைத்தோசை கில்லாடி. நூறு மதிப்பெண்களுக்கு நடக்கும் தேர்வில் 30 தேர்ந்தெடுத்து எழுதுக அடிப்படையிலான கேள்விகள் அதில் 25க்கும் மேல் மதிப்பெண் வாங்கி விடுவான். சராசரியாக 60 எடுப்பது என்பதே பெரிய சாதனையாக அமையும் தேர்வில் இந்தப் பகுதியிலேயே அவன் 25 எடுத்து விடுவதால் அவனுக்கு படிப்ஸ் பட்டம் தன்னால் அமைந்திருந்தது. அதற்கு அவன் வகுப்புகளில் எடுக்கும் குறிப்புகள்தான் என்ற பேச்சு பரபரப்பாக இருந்தது. அதனால் மற்ற மாணவர்கள் இரண்டு வழிகளைப் பயன் படுத்தினர்.

ஒன்று முட்டைத்தோசையின் குறிப்புகளைப் படித்துச் செல்வது. அல்லது அவனது குறிப்புகளை எடுத்துச் செல்வது. ( reduced xerox மூலமாகத்தான்)

இந்த இரண்டு வழிகளில் எதாவது ஒன்றைபின் பற்றத் தொடங்கியிருந்தனர்.

இப்போது படித்துக் கொண்டிருந்த போது லிச்சா வந்தாள் அவளோடு அவள் தோழியர் சிலரும். முட்டைத் தோசையின் குறிப்புகளைக் கேட்டனர். முட்டைத்தோசை மறுத்துவிட்டான்.

எண்டா கொடுத்திருக்கலாமில்ல.., பிரதி எடுத்திட்டு திருப்பிக் கொடுத்திருவாளுகல்ல..,

ஆமா, ஆமா, திருப்பிக் கொடுக்கும்போது அங்க is போடு இங்க was போடு இங்கு ing சேர்த்த கூடாது இங்க has been போட்டு எழுதணும். அப்படி இப்படின்னு பெரிய விளக்கம் கொடுப்பாளுக. குறிப்புகளுக்கு எதுக்கு அதெல்லாம். தவிரவும் எனக்கு தெரிந்த ஆங்கிலம் அவ்வளவுதான். இவளுக அமெரிக்காவில படிச்சிருந்தா அத என்ன்கிட்ட காட்டனுமா! அதுதான் கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டேன்.

போடா.., உங்கிட்ட இல்லேன்னா வேற யார்ட்டயாவது அவள் வாங்கி பிரதி எடுத்துக்குவா...

என்னமோ பண்ணிக்கட்டும், என் மூஞ்சியில முழிக்காதவரைக்கும் எனக்குக் கவலையில்லை

---------------------------------------------------------------------

பார்த்தியா, முட்டை தோசை குரூப்புக்கு எவ்வள்வு கொழுப்புன்னு, நீ போய கேட்டும் கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டானுக பார்த்தியா! அவனுக ஆட்டம் தாங்க முடியல..,

ஜில்லட்டின் குமார் பெரிய அளவில் விளக்கம் கொடுத்துக் கொண்டு இருந்தான். இப்போது அந்தக் குழுவில் சேர்ந்து படிப்பதற்கு இன்னும் சில மாணவர்களும் மாணவிகளும் சேர்ந்து இருந்தனர்.

இவனுகளுக்கு இருக்குது ஆப்பு...,
முக்கியத் தீர்மானமாக முன் மொழியப் பட்டது.

==========================================================
சிலநாட்களுக்கு முன்
------------------------------------


குப்பன் மிகவும் நம்பிக்கையுடன் கூறினாலும் கல்லூரி முழுவதும் மிகப் பெரிய புயல் உள்ளுக்குள்ளேயே அடித்துக் கொண்டுதான் இருந்தது.

குப்பனின் சபதத்திற்கு ஆதரவாக அல்லது குப்பனை தூண்டி விடும் வகையில் போஸ்டர் ஒட்டிய மாணவர்கள் தம்தம் தோழியருடன் சுமித்ராவை புகார் கொடுக்க விடாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன்ர்.

வழக்கமாக சண்டை போடுபவர்கள்தான் பதட்டத்துடன் இருப்பார்கள். இங்கு சாட்சி என்று அழைக்கலாம் என்று எதிர்பார்க்கப் படுபவர்கள் பதட்டத்துடன் சுற்றிக் கொண்டிருந்தனர். ஏதாவது எக்குத்தப்பாக நடந்து பெற்றோருக்கு தகவல் கொடுத்துவிட்டால் வீட்டில் இருக்கும் நல்ல பெயர் கெட்டுப் போய் விடுமே என்ற பயத்தாலும் அதனால் வீட்டிலிருந்து கிடைக்கும் மானியம் குறைந்து போய்விடுமோ என்ற தொலை நோக்குச் சிந்தனையாலும் பெரும்பாலான மாணவர்கள் செயல்பட்டுக் கொண்டிருந்தனர்.

லைலா, ரேகா போன்ற மாணவிகள் இங்கிலீஷ் குப்பனின் கொட்டத்தை அடக்கியே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தப் பிரச்சனையை கல்லூரி முதல்வரிடம் கொண்டு சென்றே தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.

என்ன பிரச்சனை என்று தெரியாதவர்கள் இந்தச் சுட்டியைத் தட்டுங்கள்

லைலா, ரேகா ஆகியோருக்கு ஜில்லட்டின் குமார் உறுதுணையாக இருந்தான்

இந்த அரிபரி எதைப் பற்றியும் கவலைப்படாமல் இங்கிலீஷ் குப்பன் அமைதியாக உலாவந்து கொண்டிருந்தான். சுமித்ரா விடுமுறைக்குப் போனவள் திங்கள் கிழமையும் வரவில்லை. செவ்வாய் கிழமையும் வரவில்லை. அவள் உறவினர் ஒருவர் அமைச்சராய் இருப்பதாகவும் அவர் மூலமாக இந்தப் பிரச்சனை கொண்டுச் செல்லப் படுவதாகவும் பரவலாகப் பேசிக் கொண்டிருந்தனர். எப்படி யாரைப் பிடித்துச் சமாதானம் செய்வது என்ற பேச்சே நாள் முழுவதும் இருந்தது.

சுமிதராவும் வந்தாள்... வந்தபின்..........,

தொடரும்.............................................

-----------------------------------------------------------------------------------------

முந்தைய பாகங்களுக்கு

கதையின் முதல் பகுதி "அடப்பாவி மணமேடையில்கூட

இரண்டாம் பகுதி நண்பர்கள் என்றும் சொல்லலாம்

மூன்றாம் பகுதி இந்தப் பூனையும் பால் குடிக்குமா?

நான்காம் பகுதி ஃபிகர் இல்லடா.., ஃபிகர் மாதிரி

ஐந்தாம் பகுதி ஒருத்திக்கு எத்தனை பேர்டா லவ் லெட்டர் கொடுப்பீங்க

ஆறாம் பகுதி நான்கு பெண்களைக் காணவில்லை.

ஏழாம் பகுதி நெஞ்சுக்கு நடுவில் தொங்கிய வாக்மேன்

எட்டாம் பகுதி மறந்தே போச்சு ரொம்ப நாளாச்சு; மடிமேல் விளையாடி...

ஒன்பதாம் பகுதி தமிழ் இந்தி ஒற்றுமையை வளர்த்த ரங்கோலிப் போட்டி

பத்தாம் பகுதி இது ராக்கிங்கிற்கு ஆதரவான இடுகை அல்ல

பதினொன்றாம் பகுதி மாணிக் ஃபாத்திமாவின் துப்பட்டா

பனிரெண்டாம் பகுதி பெண்ணுரிமை காக்க வந்த ஆபத்பாந்தவன்

படித்துக் கொள்ளலாம்

16 comments:

 1. சுவாரசியமா இருக்குது தலைவரே! முட்டைத்தோசை பெயரே சும்மா சுகுரா இருக்கு. இத்தொடரின் பழைய பகுதிகளைப் படிக்காமப் போய்ட்டேனே! கொஞ்சம் கொஞ்சமாப் படிச்சிடுறேன்! அப்புறம் முக்கியமான ஒண்ணு, தம்பி ஜெகநாதன் இடுகையில நீங்க ஃபாலோவர்ஸ் விட்ஜெட்டுக்கு வழி சொல்லியிருக்கிறதுக்கு நன்றி சொல்லணும். சென்ஷி, என்னைய அதைச் சேர்க்கச் சொல்லிக் கேட்டிருந்தாரு! கொஞ்சம் முயற்சி பண்ணிப் பார்த்து விட்டுட்டேன். இப்ப உங்க வழியை முயற்சி செய்து பார்க்கிறேன். மீண்டும் நன்றி.

  ReplyDelete
 2. முயன்றதில் வேலை செய்து விட்டது. மீண்டும் மிக்க நன்றி. தலைவர் சென்ஷி ரொம்ப சந்தோஷப்படுவார்!

  ReplyDelete
 3. பனிரெண்டு பாகங்களா?
  வாழ்த்துக்கள்
  சுரேஷ்!!!

  ReplyDelete
 4. //சங்கா said...

  சுவாரசியமா இருக்குது தலைவரே! முட்டைத்தோசை பெயரே சும்மா சுகுரா இருக்கு. //

  நன்றி தலைவரே.., முழுவதும் படித்துவிடுங்கள்

  ReplyDelete
 5. //தேவன் மாயம் said...

  பனிரெண்டு பாகங்களா?
  வாழ்த்துக்கள்
  சுரேஷ்!!!//


  இது படிமூன்றாவது பாகம் அண்ணாச்சி,,

  ReplyDelete
 6. // சங்கா said...

  சுவாரசியமா இருக்குது தலைவரே! முட்டைத்தோசை பெயரே சும்மா சுகுரா இருக்கு. //

  பெயர்காரணம் பத்தாம் பகுதியில் உள்ளது..,

  ReplyDelete
 7. எல்லாவற்றையும் படிச்சுட்டு வரேன்

  ReplyDelete
 8. @குறை ஒன்றும் இல்லை !!நன்றி தல
  @T.V.Radhakrishnan நன்றி தல

  ReplyDelete
 9. கலக்கலாதான் இருக்கு

  ReplyDelete
 10. //ஆ.ஞானசேகரன் said...

  கலக்கலாதான் இருக்கு//

  நன்றி தல..,

  ReplyDelete
 11. இன்னைக்குத்தான் எல்லாப் பகுதியையும் படித்து முடித்தேன். இங்கிலீஸ் குப்பன் கதை, சு. சு. லவ் கதை எப்படிப் போகும்னு வெயிட்டிங். ஒருவேளை இ.கு.தான் சுவோட கணவனாயிட்டாரோ?!

  ReplyDelete
 12. இது நல்லாருக்கே...கன்னித் தீவு டெக்னிக்கா?

  ReplyDelete
 13. // சங்கா said...

  இன்னைக்குத்தான் எல்லாப் பகுதியையும் படித்து முடித்தேன். இங்கிலீஸ் குப்பன் கதை, சு. சு. லவ் கதை எப்படிப் போகும்னு வெயிட்டிங். ஒருவேளை இ.கு.தான் சுவோட கணவனாயிட்டாரோ?!//

  கதை ஃப்ளாஷ் பேக்காகத்தான் வருகிறது தல..,

  ReplyDelete
 14. // ஸ்ரீராம். said...

  இது நல்லாருக்கே...கன்னித் தீவு டெக்னிக்கா?//

  அட நல்ல ஐடியாவா இருக்கே...,

  ReplyDelete
 15. தலாஆஆஆ....

  இன்னுமா இந்தக் கதைய சனங்க படிக்கிறாய்ங்க????

  உங்க கட்டுப்பாட்ட இந்தக் கதை இழந்து பல மாசம் ஆச்சே தல...

  நான் 6 ஓட நிக்குறேன்.. கண்டிப்பா எல்லாத்தையும் படிச்சுட்டு வர்றேன்..

  ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails