Wednesday, November 4, 2009

சாலமன் பாப்பையாவை வஞ்சம் தீர்த்துக் கொண்ட பதிவு

தொடர்பதிவு என்பது அல்வா சாப்பிடுவது மாதிரி ஒரு மகிழ்ச்சியான விஷயம். நாம் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் பின்னூட்டம் போடுவது போல இன்னொருவரின் கற்பனைக்கு நாம் ஒரு சட்டைப் போட்டு அனுப்பலாம். சட்டை ரசிக்கப் படும். பாராட்டப் படும். பரிசளிக்கப்படும். இப்போது  மாதவராஜ் அவர்களின் கற்பனை நான் ஒரு சட்டைப் போட்டு அனுப்புகிறேன். இந்த தொடர் விளையாட்டுக்கு அழைத்த   இனியவன்   லால்குடி என். உலகநாதன்,      
அவர்களுக்கு நன்றி.


1.அரசியல் தலைவர்
பிடித்தவர்:- விஜய டி.ஆர். ஆதரித்து பேசினாலும் எதிர்த்துப் பேசினாலும் ஆணித்தரமாக பேசுவார். சில நிமிடங்களில் தனது நிலையை மாற்றிக் கொண்டாலும் அதற்கான காரணத்தை மிக அழுத்தமாக மற்றவர் ஏற்றுக் கொண்டே தீர வேண்டும் என்ற வகையில் பேசுவார்.

பிடிக்காதவர்:- ரஜினிகாந்த் .  இவரை நம்பி அரசியல் பயணம் மேற்கொள்ள நினைத்தவர்களை நட்டாற்றில் விட்டவர். 


2.எழுத்தாளர்
பிடித்தவர்:  கல்கி
பிடிக்காதவர்: பாலகுமாரன்   அவரின் கதையை இவர் தொடர்வதாகச் சொல்லி எழுதிய காரணத்தாலேயே எனக்கு இவரைப் பிடிக்காது. தவிரவும் இவரது ரசிகர்கள் செய்யும் அலப்பரை மற்றும் ரசனை பற்றிய விமர்சனங்களாலும் எனக்கு இவரை பிடிக்காது

3.கவிஞர்

பிடித்தவர்: வாலி  எல்லா வகைப் பாட்டுகளையும் எழுதுவார்.


பிடிக்காதவர்:விஜய டி.ஆர்.



4.இயக்குனர்

பிடித்தவர்: எம்.ஜி.யார் தனது திரைப்படத்தில் தனது கருத்துக்களை படித்திற்கு சம்பந்தம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் திணிக்கத்தெரிந்தவர். பல வித நல்ல கருத்துக்களை பாமர மக்களையும் முணுமுணுக்க வைத்தவர்.  இவருக்கு அரசியல் சாயம், மற்றும் நாயகன் வேடம் இல்லாமல் இருந்திருந்தால் திரைப்படத்தின் மூலமே ஒரு சமூகப் புரட்சி நடந்திருக்கும். தான் நடிக்கும் படத்தில் ரீமேக் படத்தில் கூட சிகரெட் பிடிக்கும் காட்சி வைக்காதவர். தண்ணியடிப்பதை தவிர்த்தவர். உடற்பயிற்சியை கடைசிப் படம் வரை வலியுறுத்தியவர். மாற்றுக்கருத்து இருப்பவர்கள் கண்டிப்பாக இந்த திரைப்படத்தின் விமர்சனத்தைப் படித்துவிட்டு வரவும் 

பிடிக்காதவர்: விசு,   இவரது தம்பியின் மறைவுக்குப் பின் இவரது கற்பனை சுத்தமாக வரண்டுவிட்டது.


5.நடிகர்

பிடித்த நடிகர்:சிவாஜிக்கு அடுத்து தலைவாசல் விஜய் காதல் கோட்டை படத்திற்கு முன்பே ஆளவந்தான் கொலைவழக்கில் மிகச்சிறப்பாக நடித்திருப்பார்.

பிடிக்காத நடிகர்: சாலமன் பாப்பையா (இடுகையின் தலைப்பின் நாயகர்)


6.பிடித்த விளையாட்டு: கால்பந்து


பிடிக்காத விளையாட்டு: பெரிய சைஸ் பேக்கரி கம் கூல்டிரிங்க்ஸ் கடைகளில் பந்தை உருட்டி உருட்டி  விளையாடுவார்களே அந்த விளையாட்டு. இதே போல் புரியாத விளையாட்டுக்களும் நிறைய இருக்கின்றன.

7.பிடித்த பேச்சாளர்: அறிவொளி


பிடிக்காத பேச்சாளர்: ஐ.லியோனி


இத்தொடர் இடுகையின் விதிகள்:

1. நம் பிடித்தவர், பிடிக்காதவர் பட்டியலில் வருபவர் தமிழகத்தைச் சார்ந்த, பிரபலமாக இருக்க வேண்டும்.

2. இதைத் தொடர இரண்டு முதல் ஐந்து பதிவர்களை அழைக்க வேண்டும்

3. ஏழு முதல் பத்துக் கேள்விகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.


இதைத் தொடர  இளைய பல்லவன் மற்றும் ஸ்டார்ஜன் ஆகியோரை அழைக்கிறேன்.



 

33 comments:

  1. //பிடித்த நடிகர்:சிவாஜிக்கு அடுத்து தலைவாசல் விஜய் காதல் கோட்டை படத்திற்கு முன்பே ஆளவந்தான் கொலைவழக்கில் மிகச்சிறப்பாக நடித்திருப்பார்.

    பிடிக்காத நடிகர்: சாலமன் பாப்பையா (இடுகையின் தலைப்பின் நாயகர்)//

    தலயின் நக்கல் வாழ்க...

    ReplyDelete
  2. நன்றி தல!

    உடனே தொடர்ந்துடறேன்.

    ReplyDelete
  3. //
    பிரியமுடன்...வசந்த் said...

    //பிடித்த நடிகர்:சிவாஜிக்கு அடுத்து தலைவாசல் விஜய் காதல் கோட்டை படத்திற்கு முன்பே ஆளவந்தான் கொலைவழக்கில் மிகச்சிறப்பாக நடித்திருப்பார்.

    பிடிக்காத நடிகர்: சாலமன் பாப்பையா (இடுகையின் தலைப்பின் நாயகர்)//

    தலயின் நக்கல் வாழ்க...

    November 04, 2009 5:16 PM
    //

    நானும் இக்கருத்துடன் ஒத்துப் போகிறேன்

    ReplyDelete
  4. @பிரியமுடன்...வசந்த்
    @இளைய பல்லவன்
    @தியாவின் பேனா

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே..,

    ReplyDelete
  5. //இவரை நம்பி அரசியல் பயணம் மேற்கொள்ள நினைத்தவர்களை நட்டாற்றில் விட்டவர்.

    //

    ஏங்க அதுக்கு ரஜினி
    என்ன பண்ணுவாரு???

    ReplyDelete
  6. romba kevalama irukku unga rasanai..konjam maththikkanga pl

    ReplyDelete
  7. // ஜெட்லி said...

    //இவரை நம்பி அரசியல் பயணம் மேற்கொள்ள நினைத்தவர்களை நட்டாற்றில் விட்டவர்.

    //

    ஏங்க அதுக்கு ரஜினி
    என்ன பண்ணுவாரு???//

    அதனால்தான் அரசியல் தலைவராக எனக்கு அவரைப் பிடிக்கவில்லை.

    ReplyDelete
  8. // selva said...

    romba kevalama irukku unga rasanai..konjam maththikkanga pl//

    பிடிக்காத நடிகர் அவர்தான். இன்றைய இளம் நடிகர்கள் கூட தங்கள் இமேஜ்க்கு ஒத்துவராத பாத்திரங்களை மறுத்துவிடும்போது இவரும் அங்கவை, சங்கவை பாத்திரங்களை அறிமுகப் படுத்துவதை மறுத்திருக்க வேண்டும். பாஸ்கர் போன்ற காமடி நடிகர்கள் நடித்திருந்தால் எவ்வளவோ அபத்தங்களில் ஒன்றாகிப் போயிருக்கும். தமிழ் பேராசியரே அசிங்கப் படுத்திவிட்டாரே..., அதன் வெளிப்பாடுதான். பதிவு செய்ய ஒரு வாய்ப்பு பதிந்துவிட்டேன்.,

    சுட்டியமைக்கு நன்றி.

    இனிமேல் மாற்றிக் கொள்கிறேன்.

    ReplyDelete
  9. 7வது பதிலுக்கு சேம் பின்ச்.

    ReplyDelete
  10. //பிடிக்காத விளையாட்டு: பெரிய சைஸ் பேக்கரி கம் கூல்டிரிங்க்ஸ் கடைகளில் பந்தை உருட்டி உருட்டி விளையாடுவார்களே அந்த விளையாட்டு. இதே போல் புரியாத விளையாட்டுக்களும் நிறைய இருக்கின்றன.//

    நச்!

    காரணங்கள் அருமை.

    தல‌ திண்டுக்கல் லியோனி பேச்சு பிடிக்காதா.

    உங்கள் பாணியில் எழுதியிருக்கிறீர்கள்.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. தல இந்த விளையாட்டுல என்னையும் அழைத்ததுக்கு என் நன்றிகள் .

    பதிலகள் ரொம்ப அருமை ...

    இப்ப இப்பவே எழுதுறேன் .

    ReplyDelete
  12. விசு பற்றி நீங்க சொல்லியிருப்பது ஒரு புதுக் கோணம். ஒருவேளை நிஜம்தானோ?

    http://kgjawarlal.wordpress.com

    ReplyDelete
  13. @நாடோடி இலக்கியன்
    @ஆ.ஞானசேகரன்
    @அக்பர்
    @Jawahar

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே..,

    ReplyDelete
  14. // Starjan ( ஸ்டார்ஜன் ) said...

    தல இந்த விளையாட்டுல என்னையும் அழைத்ததுக்கு என் நன்றிகள் .

    பதிலகள் ரொம்ப அருமை ...

    இப்ப இப்பவே எழுதுறேன் .//

    காத்துக் கொண்டிருக்கிறோம்,

    ReplyDelete
  15. கலக்கல் தல :-)

    தொடர் பதிவுல உங்க ஸ்டைலே தனி தல..

    ReplyDelete
  16. //கலக்கல் தல :-)

    தொடர் பதிவுல உங்க ஸ்டைலே தனி தல..//

    நன்றி தல..,

    ReplyDelete
  17. அரசியல் தலைவர்

    பிடித்தவர்:- விஜய டி.ஆர். ஆதரித்து பேசினாலும் எதிர்த்துப் பேசினாலும் ஆணித்தரமாக பேசுவார். சில நிமிடங்களில் தனது நிலையை மாற்றிக் கொண்டாலும் அதற்கான காரணத்தை மிக அழுத்தமாக மற்றவர் ஏற்றுக் கொண்டே தீர வேண்டும் என்ற வகையில் பேசுவார்.

    பிடிக்காதவர்:- ரஜினிகாந்த் . இவரை நம்பி அரசியல் பயணம் மேற்கொள்ள நினைத்தவர்களை நட்டாற்றில் விட்டவர். //

    எல்லாமே வித்தியாசமான பார்வை. மேல உள்ளது யோசிக்கவைத்தது

    ReplyDelete
  18. வசந்த் சரியான சொன்னாரு... தொலைக்காட்சிகளக்கும் ஒரு வரைமுறை கண்டிப்பாக வேண்டும்.

    ReplyDelete
  19. வார்ப்புரு சூப்பரு

    ReplyDelete
  20. @நாஞ்சில் பிரதாப்
    @புருனோ Bruno

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே..,

    ReplyDelete
  21. தல தொடர்பதிவு எழுதியுள்ளேன்.

    ReplyDelete
  22. நீங்க பிடிக்காதவர்கள் என்று சொல்லியதில் பாதிபேர் எனக்கு ஆரம்பத்தில் பிடித்து பிறகு பிடிக்காமல் போனவர்கள்.
    எழுத்தாளர்-பாலகுமாரன்
    பேச்சளர-லியோனி
    அரசியல் தலவர்-ரஜினிகாந்த்
    Bowling நல்ல விளையாட்டுத்தாங்க ஹி .. ஹி ..ஹி..

    ReplyDelete
  23. @அக்பர்
    @வண்டிக்காரன்


    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே..,

    ReplyDelete
  24. ரஜினியால் அரசியல் பயணம் மேற்கொள்ளாமல் நட்டாற்றில் நிற்பவர் ஒருவரைக் காண்பியுங்களேன் சுரேஷ்...

    ReplyDelete
  25. //பிடிக்காதவர்:- ரஜினிகாந்த்//
    அவர் நடிகர் மட்டுமே. அரசியல் தலைவர் என்ற பிரிவுக்குள் எப்படி வருகிறார்?

    ReplyDelete
  26. நல்ல தெரிவுகள்

    ReplyDelete
  27. // அன்புடன்-மணிகண்டன் said...

    ரஜினியால் அரசியல் பயணம் மேற்கொள்ளாமல் நட்டாற்றில் நிற்பவர் ஒருவரைக் காண்பியுங்களேன் சுரேஷ்...//

    ரசிகர்கள் பலரும் அவர் கட்சி ஆரம்பிப்பார் என்ற நம்பிக்கையிலேயே பல கனவுகள் கண்டு கொண்டு இருந்தார்கள், இன்னும் இருக்கிறார்கள். அவர் தனிக் கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் இல்லை என்று வெகு முதலிலேயே சொல்லியிருந்தால் பல ரசிகர்கள் வேறு கட்சிகளுக்குச் சென்று இருப்பார்கள் (ரசிகர்மன்றத்தில் இருந்தால்கூட) . அவர் எப்ப வருவேன், எப்படி வருவேன் என்று யாருக்கும் தெரியாது, ஆனா கரெக்ட்டான நேரத்தில் கண்டிப்பா வருவேன்னும் சொல்லியே ஒரு போலி நம்பிக்கையை உருவாக்கி உருவாக்கி போய் கொண்டே இருக்கிறார்.

    இன்னும்கூட அது நடக்காது என்று தெரிந்தாலும்கூட நடக்காதா என்ற நப்பாசையில் இன்னும் பலரும் இருக்கிறார்கள்.

    ReplyDelete
  28. // Anonymous said...

    //பிடிக்காதவர்:- ரஜினிகாந்த்//
    அவர் நடிகர் மட்டுமே. அரசியல் தலைவர் என்ற பிரிவுக்குள் எப்படி வருகிறார்?//

    தமிழ் தினசரிகள் படிக்கிறீர்கள் தானே..,

    ReplyDelete
  29. // சந்ரு said...

    நல்ல தெரிவுகள்//

    நன்றி தல..,

    ReplyDelete
  30. suresh nandraaga ezhuthukireerkal en neengal unkal karuthukalai oru puthakamaaga veliyida koodathu

    ReplyDelete
  31. // prabakar.l.n said...

    suresh nandraaga ezhuthukireerkal en neengal unkal karuthukalai oru puthakamaaga veliyida koodathu//

    ரொம்ப நன்றி தல..,

    ReplyDelete
  32. Suresh,
    Ungalukku Mr.Balakurmaran pidikkatha. Ithai nan ethir parkkave illai. Avarudaiya Udaiyar kathaigalai patri solrengala Suresh.Kalkiyin ezhuthu nadai vera mathiri irukkum. Bala voda ezhuthu nadai vera mathiri irukkum. Kalaki fulla oru mathiri varnanai yave ezhuthi iruppar. But bala ellathayum critisize panni ezhuthi iruppar. Neenga avaroda ella ezhuthugalayum padichirukkengala.Suresh ungaludaiya pathilai aavaludan ethir parkkum
    BALA

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails