Tuesday, March 17, 2009

டி.வி. ரைட்ஸ் வாங்கப் படாத ஒரு முழு நீள தமிழ்த்திரைபடம்

தமிழ்திரைப்படங்களில் அதுவும் வெளிவந்து சில ஆண்டுகள் ஆன திரைப்படங்களில் தொலைக்காட்சி உரிமை வழங்கப் படாத சில படங்களில் இதுவும் ஒன்று. ஒரு திரைப்படம் வெறும் பொழுது போக்கு அம்சமாக மட்டும் இல்லாமல் பல நடைமுறை வாய்ப்புகளையும் மக்கள் மத்தியில் பேச வைத்த திரைப் படங்களில் இதுவும் ஒன்றாகத்தான் இருக்கும்.




ஒரு இயக்குநர் நினைத்தால் எந்த கதையையும் சுவாரசியமாக வழங்க முடியும் என்பதற்கு இந்தத் திரைப்படம் ஒரு உதாரணம். அவரே தயாரிப்பாளராக இருப்பது இன்னொரு வசதி. அதில் அவரே நாயகனாக நடிப்பது ஒட்டு மொத்த அறுவடையும் அவரே எடுத்துக் கொண்ட திறமை.




கண்ணதாசன் போன்ற வளரும் எழுத்தாளரின் முழுதிறமையையும் உபயோகப் படுத்திக் கொண்ட திறமை. முக்கிய கட்டத்தில் நாயகியைத் தூக்கிவிட்டு புதிய நாயகி அறிமுகப் படுத்திய மனவலிமை. ஒரு பெரிய தீவையே நீரில் மூழ்கடித்த கிளைமாக்ஸ் காட்சி சுனாமி பற்றி இந்தியாவில் பேச படுவதற்கு 50 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப் பட்டிருப்பது போன்றவை இயக்குநரின் திறமைக்கு சான்றாக அமைகின்றன




கீழே தோன்றும் காட்சியைப் பாருங்கள், தொழில் நுட்பம் எவ்வளவு உபயோகப் படுத்தப் பட்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்






நாடோடி மன்னன்: கம்யூனிச சித்தாத்தங்களை எனக்கு அறிமுகப் படுத்திய படம். "நீங்கள் மாளிகையில் இருந்து மக்களைப் பார்க்கிறீர்கள், நாங்கள் மக்களோடு இருந்து மாளிகையைப் பார்க்கிறோம்". படத்தின் மொத்தக் கதையை ஓரே வரியில் சொல்லும் வசனம்.
[nm_1.jpg]


அரச சபையில் வரும் ஒரு விவாதம் "அப்படியென்றால் நாட்டில் பணக்காரர்களே இருக்க மாட்டார்கள். அப்படித்தானே? தவறு. பணக்காரர்கள் இருப்பார்கள் ஏழைகள் இருக்க மாட்டார்கள்" கம்யூனிசத்தினை பாமரனுக்கும் கொண்டு செல்லும் முயற்சி. (ஆனால் இன்னும் நெறய பேருக்கு புரிந்தபாடில்லை)

"இந்த அரியாசனத்திற்கு தேவை நான் சொன்னதைக் கேட்கும் நடமாடும் ஒரு பொம்மை"
சர்வாதிகாரத்தின் குரல். அதைதான் இன்று நெறய பேர் தொடர்ராங்க.
'
கூரில்லாக் கலப்பை, அதிகாரமில்லா பதவி"
கடைசியாக படம் முடியும்போது வீராங்கன் மன்னரை எழுப்பி 'மன்னா மகாராணி குற்றமற்றவர்" என்று சொல்லிவிட்டு போவார். ஒரு action படத்தில் கடைசி வசனம் கூட கதைசொல்ல வைக்கும். ஆனால் மொழி புரியாவிட்டாலும் படம் புரியும்.

இது எனது தொடக்க காலப் பதிவு. அக்டோபர் 26,2008ல் எழுதியது.






டிசம்பர்-5,2008ல் பதிவர் முரளிக்கண்ணன் எழுதிய

1958ன் அபூர்வ படங்கள் இடுகையில் நாடோடி மன்னன் பற்றியும் எழுதியிருந்தார். அதில் நான் கொடுத்திருந்த பின்னூட்டங்கள்:-

//
SUREஷ் said...
மன்னனாவதற்கு தேவை, செங்கோல் தாங்கும் கை, மகுடம் தாங்கும் த்லை, ஆரணங்குகளை மயக்கும் அழகு, இவை எனக்கும்தான் இருக்கிறது. அதோடு சிந்தனை செய்யும் சக்தியும் எனக்கிருக்குறது. ந்ம்பியாரின் வசனம் இது.
//
SUREஷ் said...
நாடோடி மன்னன் படம் கூட நான்கு மணி நேரம் ஓடக் கூடியதே. இளவரசியி உடலில் உடை மாற்றும்போது மச்சத்தினை கண்டுபிடிப்பார்கள் இருளைப் போக்கும் விளக்கிற்கு தன் நிழலைப் போக்கும் சக்தி கிடையாது. மன்னன் அழிக்கும் மானியத்தில் நானும் பங்கு கொள்கிறேன். வாழ்விலந்த மகளிருக்காகவும், மருத்துவ மனைக்காகவும் என் சொத்தில் நானும் பாதியை கொடுக்கிறேன்.(ராணி பேசுவது) நம் மன்னர் குடிகாரரா.......... கடைசிக் காட்சியில்... மன்னா, மகாராணி குற்றமற்றவர் நாடோடி,, மன்னனிடம் கூறவதும் கூறும் தோணியும்...
//
SUREஷ் said...
படத்திற்கு துளி கூட சம்பந்தம் இல்லாமல் இரண்டு பாடல்கள் படத்தில் உண்டு மற்ற தத்துவ பாடல்களுக்கு ஏதாவது தொடர்பு இருக்கும் கீழ்கண்ட பாடல்களுக்கு திரைக்கதையில் ஒரு தொடர்பும் இருக்காது. ஆனால் படத்தின் கதைப் போக்கே அவைதான். எங்கும் இந்தப் பாடல்களை வெட்டுவதில்லை. அதில் இயக்குனர் வெற்றி பெற்றிருப்பார். உழைப்பதிலா உழைப்பை கொடுப்பதிலா இன்பம் உண்டாவதெங்கே சொல் என் தோழா உழைப்பவரே உரிமை பெறுவதிலே இன்பம் உண்டாகும் என்றே சொல் என் தோழா பட்டத்திலே பதவி உயர்வதிலே இன்பம் கிட்டுவதே இல்லை என் தோழா உனை ஈன்ற தாய் நாடு உயர்வதிலே இன்பம் உண்டாகும் என்றே சொல் என் தோழா ........... தினம் கஞ்சி கஞ்சி என்றால் பானை நிறையாது சிந்திச்சு முன்னேற வேணுமடி வாடிக்கையாய் வரும் துன்பங்களை இன்னும் நீடிக்க செய்வது மோசமன்றோ இருள் மூடிக் கிடந்த மனமும் வெளுத்து சேகரித்தால் இன்பம் திரும்புமடி நல்லவர் ஒன்றாய் இணைந்துவிட்டால் மீதம் உள்ளவரின் நிலை என்ன மச்சான் நாளை வருவதை எண்ணி எண்ணி அவர் நாழிக்கு நாழி தெளிவாரடி எல்லாமே பாஸிடிவ் அப்ரோச் உடன் அமைக்கப் பட்டிருக்க்கும்.
//
SUREஷ் said...
நானே போடப்போறேன் சட்டம் பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம் நாடு நலம் பெறும் திட்டம் நன்மை புரிந்திடும் திட்டம் நாடு நலம் பெறும் திட்டம் 58லேயே இப்படி பாடியிருப்பார்//

எனக்கு வந்த பின்னூட்டங்களும், கருத்துப் பரிமாற்றங்களும்:-

முரளிகண்ணன் சொன்னது…
நல்ல பகிர்வு

பெயரில்லா சொன்னது…
Communism views are interesting to talk. It is not practical. It failed in all countries where communism is tried. Nehru tried socialism and that is the main reason for all the subsidies and other handnouts plaguing the country today. Look around. Communism countries are poor and Capitalistic countries are rich. That should tell you something.

நசரேயன் சொன்னது…
அருமை

SUREஷ் சொன்னது…
நன்றி முரளி கண்ணன் சார். நசரேயன் சார், மற்றும் அனானி சார். கம்யூனிசத்தைப் பற்றி அந்தப் படத்தில் தெளிவாக கூறியிருப்பார்கள் //பணக்காரர்கள் இருப்பார்கள் ஏழைகள் இருக்க மாட்டார்கள்// அதைப் பலரும் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டனர். வேலைக்கேற்ற ஊதியமே சரியான கொள்கை. ஆனால் ஒரு டீகடையில் வேலை செய்யும் ஆயாவுக்கும் டீ மாஸ்டருக்கும் சம்மான ஊதியம் என்னும்போது வேலை செய்யும் எண்ணம் குறைந்து அந்த நாடுகளின் வள்ர்ச்சி பாதிக்கப்பட்டது என்பதெ உண்மை

புருனோ Bruno சொன்னது…
//Nehru tried socialism// Nehru's ideas are 100 times better than the American Economy, the failure of which is for every one to see

பெயரில்லா சொன்னது…
//Nehru's ideas // Could you give me specific examples of Nehru's ideas. He followed Russsian model and introduced licenseing for everything killing free market. He protected indian industries by closing the country to outside investment. Result - Companies with outdated technology no way of surviving in open competetion and consumers are forced to pay more for substandard products. //are 100 times better than the American Economy, the failure of which is for every one to see// This is not the first economic crisis US faced and wont be the last one. Beauty of capitalism is it survives and in few years time no one will be talking about this crisis.







19 comments:

  1. ப்லாக் & வொய்ட் படத்த ஈஸ்ட்மென் கலர்ல்ல எடுப்பாங்களே அது மாதிரியா

    அல்லது

    அதையே கடும் கிராஃபிக்ஸ் வைத்து விளையாடுவாங்களே அது போலவா!


    (டேய் பதிவ படிச்சிட்டு பின்னூட்டம் போடுடா!)

    ReplyDelete
  2. \\கூரில்லாக் கலப்பை, அதிகாரமில்லா பதவி\\

    O!

    ReplyDelete
  3. ஜமால் அண்ணா நீங்க இவ்ளோ வேகமானவரா..

    ReplyDelete
  4. தமிழ்மணம், தமிழிஷீக்கு அனுப்பி முடிக்கும் முன்பே படுவேகமாக பின்னூட்டம் இட்ட நட்புடன் ஜமால் அவர்களுக்கு நன்றி

    ReplyDelete
  5. வசனம் கவியரசு கண்ணதாசன் என்பதை குறிப்பிட மறந்து விட்டீர்கள் .

    மக்கள் திலகத்தின் மகத்தான படம்.

    ReplyDelete
  6. வாங்க ஜோ...

    பதிவைனை மேலும் மேம்படுத்தியமைக்கு நன்றி

    ReplyDelete
  7. இது நல்ல முயற்சியாக இருக்கிறது. மீண்டும் தொகுத்துப் பார்க்கும் போது சுவையாக இருக்கிறது.

    சுரேஷ்,

    டெம்பிளேட் நன்றாக இருக்கிறது. ஆனால் இடையில் வரும் பேனர் சில சமயம் சதி செய்கிறது

    ReplyDelete
  8. வாங்க மு.க. அவர்களே..

    இடையில் வரும் பேனர் செய்யும் சதி என்றால்... எனக்குப் புரியவில்லை.

    எப்படி அதை சரிசெய்வது என்று கூறினீர்கள் என்றால் சரி செய்து விடுகிறேன்

    ReplyDelete
  9. வந்துட்டோமில்ல!கச்சேரிய நாடோடிமன்னனிலிருந்து ஆரம்பிக்கலாமா:)

    ReplyDelete
  10. வாங்க ராஜ ராஜன்; நண்பர்கள் எப்போதும் வரவேற்கப் படுகிறார்கள்

    ReplyDelete
  11. :))))

    எனக்கு பிடித்த படம் சுரேஷ்! உங்கள் பதிவு அருமை..

    ReplyDelete
  12. கம்யூனிசம் பற்றி பெயரில்லா சில விடயங்களை சொன்னார். முதலில், கம்யூனிசம் ஒவ்வொரு தனி மனிதனில் இருந்தும் வரவேண்டியது. அதை சட்டமாக்குமோது அது தோல்வியடைந்தது.

    உதாரணமாக, காதல் என்பதும் தனி மனைதனில் இருந்து வரவேண்டியது. அதை சட்டமாக்கி, எல்லாரும் காதலித்து தான் கல்யாணம் செய்யவேண்டுமென்றூ ஆணையிட்டால் நிச்சயம் அது தோற்றுவிடும்

    ReplyDelete
  13. தலைவர் படத்தை எத்துண தடவை வேண்டுமானாலும் பாக்கலாம்

    அருமையான பதிவு நல்ல தொகுப்பு

    ReplyDelete
  14. //சென்ஷி said...

    :))))

    எனக்கு பிடித்த படம் சுரேஷ்! உங்கள் பதிவு அருமை..
    //

    நன்றி தலைவரே..,

    ReplyDelete
  15. //அருண்மொழிவர்மன் said...

    காதல் என்பதும் தனி மனைதனில் இருந்து வரவேண்டியது. அதை சட்டமாக்கி, எல்லாரும் காதலித்து தான் கல்யாணம் செய்யவேண்டுமென்றூ ஆணையிட்டால் நிச்சயம் அது தோற்றுவிடும்//

    அற்புதம் தலைவரே..,

    ஒரு தத்துவத்தை மிக எளிமையாக விளக்கிவிட்டீர்கள் நன்றி

    ReplyDelete
  16. //Starjan ( ஸ்டார்ஜன் ) said...

    தலைவர் படத்தை எத்துண தடவை வேண்டுமானாலும் பாக்கலாம்

    அருமையான பதிவு நல்ல தொகுப்பு
    //

    நன்றி

    ReplyDelete
  17. அண்ணா
    "அப்படியென்றால் நாட்டில் பணக்காரர்களே இருக்க மாட்டார்கள். அப்படித்தானே? தவறு. பணக்காரர்கள் இருப்பார்கள் ஏழைகள் இருக்க மாட்டார்கள்" கம்யூனிசத்தினை பாமரனுக்கும் கொண்டு செல்லும் முயற்சி. (ஆனால் இன்னும் நெறய பேருக்கு புரிந்தபாடில்லை)

    "இந்த அரியாசனத்திற்கு தேவை நான் சொன்னதைக் கேட்கும் நடமாடும் ஒரு பொம்மை"

    சர்வாதிகாரத்தின் குரல். அதைதான் இன்று நெறய பேர் தொடர்ராங்க.

    அருமை
    வாங்க வந்து நல்லதா நாலு வார்த்தை சொல்லிட்டு போங்க

    ReplyDelete
  18. நாடோடி மன்னனை மிக அழகா ஞாபக படுத்தி உள்ளீர்கள். மீண்டும் பார்க்கவேண்டும்.வசனம் கண்ணதாசன் என்பது இப்பதான் தெரியும்.

    நல்ல பதிவு.

    Karthick (biopen)

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails