Monday, December 21, 2009

தெலுங்கானா பற்றிய சில தேவையற்ற கேள்விகள்

Telungana....some stupid questions 


என்ற ஆங்கில் வலைப்பூ பக்கம்  போக நேர்ந்தது. பின்னே ஃபாலோவர் என்றால் போய் படித்துவிடுவோமே..,  அதில் இருந்த சில கேள்விகளை மொழிபெயர்த்திருக்கிறேன்.

1. இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து இன்றுவரை தெலுங்கானா மாவட்டங்களிலிருந்து வந்த மக்கள் பிரதிநிதிகள் எந்த ஊரிலிருந்து வந்தனர்?  மாஸ்கோ அல்லது நியூயார்க் நகரைச் சேர்ந்தவர்களா? அவர்கள் தேர்ந்தெடுத்த மக்களுக்கு என்ன செய்தனர்?


2.ஒருவேளை தெலுங்கானா என்று ஒரு மாநிலம் கொடுக்கப் பட்டால் அப்போது அங்கிருக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப் படும் மக்கள் பிரதிநிதிகள் எந்த ஊரைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்? 

இப்போது தெலுங்கானா பகுதியில் இருக்கும் சோமாலியன் நிலப்பிரபுக்களும் உகாண்டாவைச் சேர்ந்த புரட்சிக்காரர்களும் தூக்கி யெறியப் படுவார்களா?


3. ஒருவேளை அப்படி ஒரு மாநிலம் கொடுக்கப்பட்டால் அங்கு ஆட்சி புரிய எந்த கட்சிகள் வருவார்கள்? காங்கிரஸ்,தெலுகுதேசம், தெலுங்கானா ராஸ்ட்ரீய சமிதி,பிரஜா ராஜ்யம்?   இத்தனைநாள் தெலுங்கானா முன்னேற்றத்திற்கு உதவாத கட்சிகளிடம் இனிமேல் எப்படி எதிர்பார்க்கமுடியும்?


==============================================

இவை தவிர மேலும் பல கேள்விகளை கேட்கப் போவதாகச் சொல்லி இருக்கிறார்.

==================================================

இவர் தவிர இவர் மகனுக்கும் பல  சந்தேகங்கள் தோன்றுவதுண்டு.. குறிப்பாக வேட்டைக்காரன் படம் பார்த்தபின் தோன்றிய சந்தேகங்கள் அர்த்தமுள்ளவை. ஒரு எட்டுவேண்டுமானால் போய் படித்துவாருங்கள்.

The incomplete man

15 comments:

  1. கேள்விகள் உண்மையிலேயே முட்டாள்தனமாகத்தான் இருக்கின்றன.

    ReplyDelete
  2. // முகிலன் said...

    கேள்விகள் உண்மையிலேயே முட்டாள்தனமாகத்தான் இருக்கின்றன.//

    நீங்கள் அந்த வலைப்பூவின் உரிமையாளர் வைத்த தலைப்பை மொழி பெயர்த்து இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்..,

    கேள்வி எப்படி யிருந்தாலும் பதில்கள் கொஞ்சம் நெளிய வைக்கின்றனவே நண்பரே..,

    ReplyDelete
  3. //கேள்வி எப்படி யிருந்தாலும் பதில்கள் கொஞ்சம் நெளிய வைக்கின்றனவே நண்பரே..,
    //
    உண்மைதான் டாக்டர். நெளிய வைக்கும்படியான கேள்விகள் கேட்பது யாருக்கும் சுலபம். குறிப்பாக உண்மையான பிரச்சனை என்று தெரியாதவர்களால்.

    ReplyDelete
  4. ஹா ஹா ஹா ஹா.. மிகச்சரியான கேள்விகள்.. ஒரு சர்க்கரை வியாதிக்காரர் விட்டமின்கள் உதவியுடன் டையட்டில் இருந்தால் அது உண்ணாவிரதமாம்...

    உண்மையாகவே தெலுங்கானா பகுதி வளர்ச்சியடையவில்லை எனில் அதற்கான தீர்வு தனி மாநிலம் அல்ல தனிக்கவனமே..

    ReplyDelete
  5. //முகிலன் said...

    உண்மைதான் டாக்டர். நெளிய வைக்கும்படியான கேள்விகள் கேட்பது யாருக்கும் சுலபம். குறிப்பாக உண்மையான பிரச்சனை என்று தெரியாதவர்களால்.//

    மீண்டும் ஒருமுறை தளத்திற்கு வந்து பின்னூட்டமும் கொடுத்ததற்கு நன்றி தலைவரே..,

    அந்த இடுகையின் மூல ஆசிரியர் கேட்கும் கேள்விகளை மீண்டும் பாருங்கள்.., பதில்களை யோசித்துப் பாருங்கள்.


    தெலுங்கானா தனி மாநிலம் ஆனாலும் அங்கிருக்கும் நிலச் சுவாந்தார்க்களும், தொழிலதிபர்களும் அங்கேயேதங்கள் தொழிலைப் பார்க்கப் போகிறார்கள். அவர்கள் வழக்கம்போல் தங்கள் லாபத்திற்காகத்தான் தொழில் நடத்துவார்கள் (எல்லோரையும் போல)

    புரட்சிக்காரர்கள் அங்கேயே இருக்கப் போகிறார்கள்.

    அதே கட்சிகள்தான் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடப் போகின்றன, அந்த கட்சிகளில் இருக்கும் அதே ஆட்கள் தான் மீண்டும் போட்டியிருவார்கள்.

    அப்புறம் ஏன் தனி மாநிலம் ஆக வேண்டும்?

    ReplyDelete
  6. //குறை ஒன்றும் இல்லை !!! said...

    உண்மையாகவே தெலுங்கானா பகுதி வளர்ச்சியடையவில்லை எனில் அதற்கான தீர்வு தனி மாநிலம் அல்ல தனிக்கவனமே..//

    நன்றி தல..,

    ReplyDelete
  7. என்ன திடீர்னு ஆந்திர அரசியல் பக்கம் போயிட்டு திரும்பி வேட்டைக்காரன்ல குதிச்சிட்டீங்க....

    நாம பிரிவினை சரியா தப்பான்னு பேசி என்ன ஆகப் போகுது...நம்ம சொல்றதை எல்லாம் யார் கேக்கப் போறாங்க...!

    ReplyDelete
  8. தலைவரே, அந்த வேட்டைக்காரன் பதிவையும் மொழிபெயர்த்து போட்டிருக்கலாம், குறிப்பா அந்த கடைசி வரி :))

    ReplyDelete
  9. தெலுங்கானா பின் தொடர்பவர்கள் பட்டியலென அருமையாக இருக்கு உங்க பதிவு சுரேஷ்

    ReplyDelete
  10. // ஸ்ரீராம். said...

    என்ன திடீர்னு ஆந்திர அரசியல் பக்கம் போயிட்டு திரும்பி வேட்டைக்காரன்ல குதிச்சிட்டீங்க....

    நாம பிரிவினை சரியா தப்பான்னு பேசி என்ன ஆகப் போகுது...நம்ம சொல்றதை எல்லாம் யார் கேக்கப் போறாங்க...!//


    கேட்பாங்கன்னு எதிர்பார்க்க முடியாது.., ஆனா அதே கோணத்தில் பேசுவதற்கு வாய்ப்பு இருக்கிறது..,

    ReplyDelete
  11. // சங்கர் said...

    தலைவரே, அந்த வேட்டைக்காரன் பதிவையும் மொழிபெயர்த்து போட்டிருக்கலாம், குறிப்பா அந்த கடைசி வரி :))//

    அவர் தளத்திற்கு சென்று படித்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும்..,

    ReplyDelete
  12. // thenammailakshmanan said...

    தெலுங்கானா பின் தொடர்பவர்கள் பட்டியலென அருமையாக இருக்கு உங்க பதிவு சுரேஷ்//

    நன்றி தல..,

    ReplyDelete
  13. Nanri nanbargale...my point was not to hurt anybody's feelings...read my reply in my blog about the history and geography....what if Telangana is given a state status and doesnt develop even after another 50 years..Bihar is a living example...then will they start a separate state movement for Warangal, Adilabad, Khammam, Mahabubnagar, Nalgonda, Rangareddy, Karimnagar, Nizamabad, Medak until they reach separate statehood for individual houses...

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete

Life at a Primary Health Centre - பொது சுகாதாரமும் மருத்துவமும்

படத்தை அழுத்துங்கள்

LinkWithin

Related Posts with Thumbnails